த மியூசிக் ஸ்கூல்

த மியூசிக் ஸ்கூல், செழியன், த. மியூசிக் ஸ்கூல் பப்ளிகேஷன்ஸ், சாலி கிராமம், சென்னை, விலை 7000ரூ. திரைப்படங்களில் நடிகர்களோ நடிகைகளோ, தங்கள் இரு கைகளாலும் பியானோவோ, கீ போர்டோ வாசிக்கும்போது, பல சமயம் நாமும் அப்படி ஒரு கணம் வாசிப்பது போன்று சிறு பிரம்மை, நம்மில் பலருக்கு தோன்றி மறையும். அந்த இசையின் நாதமும் உணர்ச்சி வெளிப்பாடுகளும் அப்படி எண்ணவைக்கும். அந்த எண்ணத்தை நனவாக்கித் தர வந்திருக்கிறது தி மியூசிக் ஸ்கூலின் இந்த பத்து புத்தகங்கள். இசை உங்கள் வாழ்வில் என்னென்ன மாயங்கள் […]

Read more

இந்தியப் புதையல் ஒரு தேடல்

இந்தியப் புதையல் ஒரு தேடல், பால் ப்ரன்டன், தமிழில் புவனா பாலு, கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 520, விலை 300ரூ. புவியியல் வல்லுநர்கள் நிலங்களை, நாடுகளை, கண்டங்களை ஆராய்ந்தறிந்ததைப்போல, பால் ப்ரண்டன் இந்தியாவின் பாரம்பரியங்கள், அவற்றை நிலைநாட்டிய ஆன்மிகத் தலைவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்து ஒரு ஆன்மிக வரைபடத்தையே வரைந்து இந்தியாவை உலகிற்குக் காட்டியிருக்கிறார். 1900இல் இந்தியாவில் இரயில், கார், மாட்டு வண்டி பயணங்கள், போலிச்சாமியார்கள், கபட வேடதாரிகள், நல்லோர், உலகிற்கே தெரியாமல் வாழ்ந்த உண்மையான யோகிகள், யோக, தந்திரா ஆசான்கள், மக்களை […]

Read more

நடக்கட்டும் நாக்கு வியாபாரம்

நடக்கட்டும் நாக்கு வியாபாரம், ப. திருமாவேலன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 304, விலை 135ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-196-1.html ஆனந்த விகடன் மற்றும் ஜுனியர் விகடனில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. தமிழ்நாட்டில் அரசியல் கொந்தளிப்பான சூழல்களில் வெளியானவை. இன்றும்கூட அந்தத் தணல் அப்படியே கட்டுரைகளில் இருக்கிறது. திரைத்துறை சார்ந்த கட்டுரைகள் இரண்டு இருந்தபோதிலும் கட்டுரைகளின் உள்ளடக்கத்தை வைத்து இரண்டு பகுதிகளாகப் பிரித்துவிடலாம். ஒன்று ஜெயலலிதா, கருணாநிதி தொடர்பான கட்டுரைகள். இரண்டாவது இலங்கைப் பிரச்னை தொடர்பானவை. இதில் […]

Read more

அறிவியல் முதல்வர்கள்

அறிவியல் முதல்வர்கள், தேவிகாபும் சிவா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை 98, விலை 70ரூ. அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை கதைகளை மாணவர்களிடம் எளிமையாக அறிமுகப்படுத்தும்விதத்தில் எழுதப்பட்டிருககிறது இந்நூல். யூக்லிட்டில் ஆரம்பித்து ஸ்டீபன் ஹாக்கிங் வரை அறிவியல் வரலாற்றில் தடம் பதித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கியிருப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: இந்தியாடுடே, 26/3/2014.   —- வண்டாடப் பூ மலர, பேரா. முனைவர் ம.பெ. சீனிவாசன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 125ரூ. ஐம்பது கட்டுரைகளைக் கொண்ட கருத்துப் பெட்டகம் இந்நூல். […]

Read more

ஸ்ரீ ரமண மகரிஷி

ஸ்ரீ ரமண மகரிஷி, பாலகுமாரன், விகடன் பிரசுரம், சென்னை 2, விலை 160ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-512-0.html பாலகுமாரனின் கவித்துவ நடையில் வெளிவந்துள்ள இந்த நூலைப் படிக்கும்போது, இன்னும் சிலர் மீது பொறாமை உண்டாகிறது. வேங்கடராமனிடம் இரண்டரை அணாதான் இருக்கிறது என்று தெரிந்தபோது, சாப்பாட்டுக்கான விலை இரண்டு அணாவைப் பெற்றக் கொள்ளாமல் வேண்டாம், அந்த இரண்டனாவை நீயே வைத்துக்கொள் என்று சொன்ன புண்யாத்மாவான விழுப்புரம் ஹோட்டல்காரர்… கீழுர்க் கோவிலில், தம்முடைய பங்கான பட்டை சாதத்தை, அந்தச் சிறுவனுக்குத் […]

Read more

போதை ராஜ்யம்

போதை ராஜ்யம், ரா.கி.ரங்கராஜன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், இராயப்பேட்டை, சென்னை 14, விலை 70ரூ. பிரபல பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய ரா.கி. ரங்கராஜன் நக்கீரன் இதழில் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய தொடர்கதையின் புத்தக வடிவம். கொலம்பியாவின் போதைப் பொருள் கடத்தும் மாபியா கும்பல் பற்றிய இந்தக் கதையில் விறுவிறுப்பு, திகில், திருப்பங்கள் எல்லாம் உண்டு.   —-   இரத்த மிகை அழுத்தமும் உங்கள் இதயமும், நலவாழ்வு எல்லோருக்கும் அடையாளம், திருச்சி 621310, விலை 40ரூ. சர்வதேச அளவில் மருத்துவத் துறையில் புகழ்பெற்ற மேயோ […]

Read more

ஊழிக்காலம்

ஊழிக்காலம், தமிழ்க் கவி, தமிழினி. இறுதிப் போரின் சாட்சி ஈழப்போரின் இறுதி நாட்களில் நடந்தவை குறித்து நாம் அறிந்த செய்திகள் சொற்பம். மரணத்தை தொட்டுவிடும் தூரத்தில் கண்ட மக்களிடையே இன்னமும் துயரின் நெருப்பு மனதுக்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இத்தீயை நெஞ்சில் சுமந்து, நடந்தவற்றுக்கு சாட்சியாய் இருந்த 66 வயதுப் பெண்ணாகிய தமிழ்க்கவி எழுதிய தன்வரலாற்று நாவல் இது. ஈழப்போரின் இறுதிக்கால அவலம், துயரம், கோரம், கொடூரம் என்று ஒவ்வொருவருக்குள்ளும் இறுகிக் கிடக்கும் துயர நினைவுகளை தன் நாவலில் கசியவிட்டிருக்கிறார் தமிழ்க்கவி. போர்க் குற்றங்களுக்கு […]

Read more

கரைக்கு வராத மீனவத் துயரம்

கரைக்கு வராத மீனவத் துயரம், வறீதையா சான்ஸ்தத், உயிர் எழுத்து. துன்பக்கடல். இந்த நூல் விளிம்பு நிலை மக்களும் பழங்குடிகளை ஒத்தவர்களுமான மீனவர்களின் துயரங்களும் அவர்தம் பாடுகளும் குறித்து பதிவு செய்கிறது. சிறை, கைது, துப்பாக்கிக் குண்டுகள், படகு பறிமுதல், வலையறுப்பு, தொடர்த் தாக்குதல் என்று ஓயாமல் இலங்கை கடற்படையால் துன்பம் அனுபவிக்கும் மீனவ சமுதாயத்தின் வலிகளை பிரதிபலிக்கும் பல கட்டுரைகள் இந்நூலில் உள்ளது என இந்நூலை வெளியிட்டுள்ள உயிர் எழுத்து பதிப்பகத்தைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர். நன்றி: இந்தியாடுடே, 29/1/2014.   —-   […]

Read more

விட்டு விடுதலையாகி

விட்டு விடுதலையாகி, வாஸந்தி, கவிதா பப்ளிகேஷன், தபால்பெட்டி எண்-6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17. பாரதி தன் மனைவியைப் பார்த்துப் பாடியதாகக் கூறப்படும் பாடலின் தொடக்கம்தான் புதினத்தின் தலைப்பு. பல தலைமுறைகளுக்கு வேதனையும் அவமானமும் அனுபவித்த ஒரு குலத்தினரைப் பார்த்து, சிட்டுக்குருவியுடன் ஒப்பிட்டு பாரதி ‘விட்டு விடுதலையாகி நிற்பாய்’ என்று தார்மீக கோபத்துடன் ஆலோசனை கூறியிருக்கக்கூடும்தான். நாயகி கஸ்தூரி வாழ்வின் இறுதிக் கட்டத்தில் கிடக்கிறாள். அவங்க இறந்துட்டாங்கன்னா சாமி (இறைவன்) தீட்டு பார்க்கணும்கிறீங்களா? என்ற கோயில் காவலாளியின் கேள்விக்கு, ஆமாம் […]

Read more

மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி?

மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி?, மேயோ கிளினிக், அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், திருச்சி 6213130, விலை 40ரூ. உடல்நலக்கல்வி சார்ந்த நூல்களை நலவாழ்வு எல்லோருக்கும் எனும் பிரிவின் கீழ் வெளியிட்டு வரும் அடையாளம் பதிப்பகத்தின் இந்த சிறு புத்தகம் மன அழுத்தத்தை சமாளிக்கும் வழிகளை முன்வைக்கிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற மேயோ கிளினிக் வெளியிட்ட நூலின் தமிழாக்கம்.   —–   ருசியின் ரேகை, நா.நாச்சாள், ஓம் பதிப்பகம், 15, ஆற்காடு ரோடு, வளசரவாக்கம், சென்னை 87, விலை 30ரூ. கம்பு, சோளம், வரகு, சாமை, […]

Read more
1 2 3 4 5