வளமும் நலமும் அருளும் வலம்புரி இடம்புரிச் சங்கு பூஜைகளும் பயன்களும்

வளமும் நலமும் அருளும் வலம்புரி இடம்புரிச் சங்கு பூஜைகளும் பயன்களும், மு. இலக்குமணப்பெருமாள் நாயுடு, உலகத் தமிழ்ப் படைப்பாளர் நூல் வெளியீட்டகம், திருச்சி, பக். 656, விலை 490ரூ. எந்த வீட்டில் வலம்புரிச் சங்கு இருக்கிறதோ, தினசரி வழிபாடு செய்யப்படுகிறதோ, அந்த வீட்டில் செல்வத்திற்குக் குறைவு இருக்காது. சங்கு இருக்கும் வீட்டில் துர்சக்திகள், பில்லி, சூனியம், ஏவல் ஆகியவை அணுகாது. திருஷ்ட்டிகள் அகலும், திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல துணை கிடைக்கும், குடும்பத்தில் கடன் வாங்கும் சூழ்நிலை அமையாது, அவ்வாறு சூழ்நிலை அமைந்தாலும், கடன் சுலபத்தில் […]

Read more

கடமையைச் செய் பலன் கிடைக்கும்

கடமையைச் செய் பலன் கிடைக்கும், வாரண்ட் பாலா, கேர் சொசைட்டி, ஓசூர், பக். 376, விலை 200ரூ. சாதாரண மனிதர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சட்ட அறிவூட்டும் நூல்களை எழுதியுள்ள நூலாசிரியரின் மற்றுமொரு படைப்பு இந்நூல். நாம் நம் கடமையைச் செய்தால், நம்மைப் பின் தொடரும் நிழல்போல், கடமையின் விளைவான நமது உரிமைகளும், தானே நம்மைப் பின்தொடரும் என்கிறார் நூலாசிரியர். சேவை என்பது கடமை என்பதும் ஒன்றே என்று பலரும் கருதுகிறார்கள். இதற்கு ஏற்ப காசு வாங்காமல் செய்வது சேவை. காசு வாங்கினால் […]

Read more

மாற்றமுடியாதவை மகிழ்ச்சியின் மந்திரங்கள்

மாற்றமுடியாதவை மகிழ்ச்சியின் மந்திரங்கள், டேவிட் ரிகோ, தமிழில் அகிலன் கபிலன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, பக். 248, விலை 150ரூ. நமது வாழ்க்கையில் சில விஷயங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகின்றன. அவற்றை நாம் தவிர்க்கவும் முடியாது. அப்படிப்பட்ட விஷயங்களில், 1. எல்லாமே மாறுகின்றன, முடிவடைகின்றன. 2. எல்லாமே நினைக்கிறபடி நடப்பதில்லை. 3. வாழ்க்கை எப்போதும் நியாயமாய் இருப்பதில்லை. 4. வலி என்பது வாழ்வின் அங்கம். 5. மனிதர்கள் எப்போதும் அன்பாகவும், விசுவாசமாகவும் நடப்பதில்லை என்ற இந்த ஐந்தும் சவாலாகவே இருக்கின்றன. இந்த விஷயங்கள் […]

Read more

எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். பா. தீனதயாளன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 452, விலை 300ரூ. எம்.ஜி.ஆரின் பிறப்பில் தொடங்கி, இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்றை இந்நூல் சுவைபட விவரிக்கிறது. நூலின் முகப்பில் சொல்லியிருப்பதைப்போல், திரையுலகம் அரசியல் இரண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய அவரின் மலைப்பூட்டும் சரித்திரத்தில், அதிகம் வெளிவராத, ஆனால் ஆதாரப்பூர்வமான தகவல்கள் இந்நூலில் நிரம்பவே இருக்கின்றன. எம்.ஜி.ஆரின் குழந்தைப் பருவத்தையே விவரிக்கும் முதல் அத்தியாயத்திலேயே, அரை வயிற்றுச் சாப்பாடாவது கிடைக்கட்டும் என்று நாடகக் கம்பெனியில் அவரைச் சேர்த்து விடுவதும், நாடக வாத்தியார் அவரைச் சேர்த்து விடுவதும், […]

Read more

வறட்சியிலும் வளமை

வறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி), ஆர். எஸ். நாராயணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 136, விலை 100ரூ. உணவுப் பயிர்களின் சாகுபடியில் குறைந்த அளவு நீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இந்நூல் விவரிக்கிறது. நாட்டின் மொத்தப் பரப்பளவில் 50 சதவிகித காடுகள் இருந்தபோது, மாதம் மும்மாரி மழை பொழிந்தது. ஆனால் தறேபாது பல்வேறு காரணங்களால் காடுகளின் மொத்தப் பரப்பளவு 10 சதவிகித அளவுக்குக் குறைந்துவிட்டது. இதனால், 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட மழை பெய்வதில்லை. […]

Read more

இது சக்சஸ் மந்திரம் அல்ல

இது சக்சஸ் மந்திரம் அல்ல, சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 112, விலை 85ர வாழ்வில் சாதனை புரிந்தவர்களைப் பற்றி எழுதப்பட்ட 24 ஆங்கில நூல்களை அறிமுகம் செய்யும்விதமாக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. அந்த நூல்களில் அடங்கியுள்ள செய்திகள் என்ற அளவில் நின்றுவிடாமல், வாசகர்களைச் சாதனையாளராக மாற்றும் முனைப்புடன் நூலாசிரியர் எழுதியிருப்பது வியக்க வைக்கிறது. ‘பெரிய குட்டையில் சிறிய மீன் ஆக இருப்பதைவிட சிறிய குட்டையில் பெரிய மீனாக இருப்பது நல்லது. ‘நம்பிக்கையில்லாதவன் காற்றைக் குறை சொல்வான்; நம்பிக்கையுள்ளவன் மாற்றத்தை எதிர்பார்ப்பான்; […]

Read more

விடுதலைப் போரில் தமிழகம் (முதல் பாகம்)

விடுதலைப் போரில் தமிழகம் (முதல் பாகம்), ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், சென்னை, பக். 688, விலை 600ரூ. 1930 வரையிலான சுதந்திரப் போரின் வரலாற்றையும் அதில் தமிழகத்தின் பங்களிப்பையும் முன்வைக்கிறது முதல் பாகம். கிபி 1790 களில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்த பாளையங்கோட்டை கட்டபொம்மன் ஏன் வரலாற்றாசிரியர்களால் விடுதலைப் போர் வீரனாக ஏற்கப்படவில்லை என்ற கவலையுடன் தமிழகத்தின் பங்களிப்பைத் தொடங்குகிறார் ம.பொ.சி. அது மட்டுமல்ல 1857 சிப்பாய் புரட்சியை முன்னிலைப்படுத்துவோர், ஏன் 1806 வேலூர் சிப்பாய்க் கலகத்தை ஒரு சுதந்திரப் போராட்ட கிளர்ச்சியின் முன்னோடியாகக் […]

Read more

கீதைப் பேருரைகள்

கீதைப் பேருரைகள், ஆசார்ய வினோபா பாவே, காந்திய இலக்கிய சங்கம், மதுரை, பக். 416, விலை 80ரூ. விடுதலைப் போராட்டத்தின் போது சிறையில் அடைக்கப்பட்ட ஆசார்ய வினோபா பாவே 1932இல் கீதை குறித்து சிறையில் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு இந்நூல். சுய தர்மத்துக்குத் தடையாக உள்ள மோகத்தை அகற்றுவதே கீதை உபதேசத்தின் முக்கிய குறிக்கோள் என்கிறார் நூலாசிரியர். உயர்ந்த தத்துவங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவது எப்படி என்று கூறுவது கீதையின் சிறப்பு. பாராயணம் செய்வதுடன் சிந்திக்கவும். ஆன்ம சோதனை புரியவும் தூண்டுவது கீதை. கர்ம […]

Read more

தமிழ் இதழியல் கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ் இதழியல் கருத்தரங்கக் கட்டுரைகள், பெ.சு.மணி, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், பக். 362, விலை 175ரூ. தமிழ் இதழியல் வரலாறு தொடர்பாக 13 கருத்தரங்கங்களில் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. 1831-ஆம் ஆண்டு தொடங்கி 1892-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் பத்திரிகைகள் உருவான விதம், அதற்கு பிரிட்டிஷார் ஏற்படுத்திய தடைகள், அதையும் மீறி பத்திரிகை சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்ததோடு, பத்திரிகைகளைத் தொடங்கி நடத்தியவர்கள் குறித்து இந்நூலில் விரிவான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுதேசமித்திரன், லோகோபகாரி, ஞானபோதினி, தத்துவபோதினி, திராவிடன், தினமணி உள்ளிட்ட பத்திரிகைகளைப் பற்றியும் […]

Read more

புத்தகத்தின் பெருநிலம்

புத்தகத்தின் பெருநிலம், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, பக். 238, விலை 210ரூ. நாட்டார் வழக்காற்றியலில் புலமையாளரான நூலாசரியர், ‘உங்கள் நூலகம்’ இதழுக்காக எழுதிய நூல் அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தேர்வு செய்யப்பட்ட 22 கட்டுரைகள் சமூகவியல் – மானிடவியல், வரலாறு, சமயம் – தத்துவம், வாழ்க்கை வரலாறு, இலக்கியம் என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. நூல் அறிமுகக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் அந்த நூலின் சாராம்சத்தை மிகவும் எளிமையாகவும், சுவைபடவும் விளக்குகின்றன. நூலின் சிறப்புகளை மட்டுமன்றி, அது கூற வந்த, கூறியுள்ள […]

Read more
1 131 132 133 134 135 180