நேருவின் ஆட்சி, பதியம் போட்ட 18 ஆண்டுகள்

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள், ரமணன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 115ரூ. சுதந்திர இந்தியாவில் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும் தலைவர்களில் மகாத்மா காந்திக்கும், பண்டித ஜவஹர்லால் நேருவுக்கும் முக்கியமான இடம் உண்டு. காந்தியைக் கூட இநத் நாடு விமர்சனத்துக்கு உட்படுத்தியது என்றால், அரசியல்வாதியான நேருவைப் பற்றி கேட்கவே வேண்டாம். நேரு, நாடு சுதந்திரம் பெற்ற 1947 முதல் அவர் இறந்த 1964 வரையில் பிரதமராகப் பதவி வகித்தார். அந்த 17 ஆண்டு காலத்தில் நாட்டை வடிவமைத்த சிற்பி […]

Read more

சங்ககால கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட செழிய செழியன் நாணயங்கள்

சங்ககால கொற்கைப் பாண்டியர் வெளியிட்ட செழிய செழியன் நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, கார்னெட் பதிப்பகம், சென்னை, பக். 132, விலை 400ரூ. நாணயவியல் ஆய்வாளரான நூலாசிரியர் திருநெல்வேலியில் இருபது ஆண்டுகளுக்கு மன் பாத்திரக் கடையில் வாங்கிய இரண்டு கிலோ பழைய நாணயங்களைப் பல மாதங்கள் ஆய்வு செய்து பல்வேறு அரிய தகவல்களைத் திரட்டியுள்ளார். நாணயங்களைக் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டியர்கள் வெளியிட்டிருக்க வேண்டும். கொற்கைப் பாண்டிய நாடு கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு வரை தனி நாடாக இருந்திருக்கலாம். சங்க […]

Read more

இந்த விநாடி

இந்த விநாடி, நாகூர் ரூமி, சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, பக். 200, விலை 150ரூ. கவிஞர் நாகூர் ரூமியின் இந்தப் புத்தகம், சுய முன்னேற்றம் வகை புத்தகம் அல்ல, சுயத்தை மீட்டெடுக்கும் புத்தகம். எட்டு அத்தியாயத்திலும் எட்டு எளிய விஷயத்தை நமக்கு அவர் அறிமுகப்படுத்துகிறார். அவை நமக்கு வெளியே இருப்பவை அல்ல. நமக்கு உள்ளே இருப்பவை. நம் உடலையும், மனதையும் சீரமைத்துக் கொள்வதற்கான எளிய வழி முறைகள். நம் பழக்க வழக்கங்களால், நம்பிக்கைகளால் விலகிச் சென்ற பாதையிலிருந்து, வழி தவறிய பாதையிலிருந்து அழைத்து சரியான பாதை […]

Read more

மணப்பேறும் மகப்பேறும்

மணப்பேறும் மகப்பேறும், டாக்டர் ஞானசௌந்தரி, இந்திய மருத்துவ மையம், சென்னை, பக். 1217, விலை 1000ரூ. இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு 1990இல் வெளிவந்துள்ளது. அதன் பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தப் புத்தகம் மீண்டும் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நூலின் ஆசிரியரும் மகப்பேறு நிபுணருமான டாக்டர் ஞான சௌந்தரியின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஓர் அனுபவமே இந்த நூலை எழுதுவதற்கு முக்கிய காரணம். அவரின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு இரண்டு பிரசவத்திலும் பெண் குழந்தைகளே பிறந்தன. மூன்றாவது பிரசவத்துக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண், டாக்டரின் […]

Read more

காஞ்சி மகான் தரிசனம்

காஞ்சி மகான் தரிசனம் (கச்சிமூர்த்தி நூலின் மறுபதிப்பு), ஸ்ரீமடம் பாலு, இலக்கியப் பீடம் பதிப்பகம், பக். 256, விலை 150ரூ. நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த காஞ்சி மாமுனிவரான மகா பெரியவரின் பெருமையும் புகழும் அவர் நிகழ்த்திய தெய்வீக நிகழ்வுகளும் சொல்லில் அடங்காதவை. அவருடன் அணுக்கமாக இருந்து அவருடைய அருளைப் பெற்று, அனுபவித்தவர்கள் சொல்லிக் கேட்க வேண்டும் என்றால் அதன் சுவையே தனிதான். காரணம் மகா பெரியவரின் சின்னச் சின்ன காரியங்களில்கூட தத்துவார்த்தமான செய்திகள் பொதிந்து கிடந்ததை அதுவும், மகா பெரியவருக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த […]

Read more

பாரதியும் தேசியத் தலைவர்களும்,

பாரதியும் தேசியத் தலைவர்களும், சு. சுப்புராமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், சென்னை, பக். 74, விலை 65ரூ. மகாகவி பாரதிக்கு காந்தியடிகைள், வ.உ.சி., அரவிந்தர், திலகர், நெல்லையப்பர், பாரதிதாசன், வ.வே.சு. அய்யர் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களுடன் இருந்த உறவுகளையும், வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களையும் தனித்தனி கட்டுரைகளாக விரிவாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர். சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவை சந்தித்த பிறகு பாரதி வாழ்வில் ஏற்பட்ட மனமாற்றம், இந்தியா பத்திரிகையை நடத்துவதற்காக பாரதியார் பட்ட துயரங்கள் மற்றும் பாரதியாரின் தந்தை சின்னச்சாமி […]

Read more

நல்லா எழுதுங்க நல்லதையே எழுதுங்க

நல்லா எழுதுங்க நல்லதையே எழுதுங்க, பி.ஆர். ஜெயராஜன், ஸ்ரீ பதி ராஜன் பப்ளிஷர்ஸ், சேலம், பக். 144, விலை 75ரூ. நமது வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் சில பழமொழிகளுக்கான விளக்கங்கள், பிறருக்குத் தொந்தரவு கொடுக்காமல் எவ்வாறு செயல்படுவது, ஒட்டுக் கேட்பதால் ஏற்படும் விபரீதம், பொதுத் துறையில் பணியிலிருக்கும் அரசு ஊழியரின் அசாதாரண செயல்கள், மனைவியின் மொழியைக் கணவர் புரிந்து கொள்வது எப்படி, மனைவியின் கொடுமையிலிருந்து கணவனைக் காப்பதற்கான சட்டங்களின் அவசியம், கடன் அட்டை வங்கியிலிருந்து அனுப்பப்படும்போது, அந்த அட்டை அடங்கிய உறை நன்கு மூடி […]

Read more

மொழிபெயர்ப்புச் செம்மல் நா. தர்மராஜன் 80

மொழிபெயர்ப்புச் செம்மல் நா. தர்மராஜன் 80, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, பக். 240, விலை 200ரூ. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற்பெயர்த்தல் வேண்டும் என்றார் பாரதி. அந்தப் பணியை தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு உழைத்து வருபவர் நா. தர்மராஜன். மூச்சுவிடுவது, சாப்பிடுவதைப்போல மொழிபெயர்ப்பும் ஓர் உடலியல் தேவை என்பதைப்போல – கடமை என்பதைப்போல எடுத்துக்கொண்டேன் என்று சொல்லும் அவர், பிற மொழிகளில் இருந்து தமிழுக்குக் கொண்டு சேர்த்திருக்கும் நூல்களின் எண்ணிக்கை நூறை நெருங்குகிறது. டால்ஸ்டாயின் அன்னா கரீனினா போன்ற உலகப் […]

Read more

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, தொகுப்பாசிரியர் கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 500, விலை 200ரூ. இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட நாயகரான சுவாமி விவேகானந்தரின் தாக்கம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் பலரிடமும் இருந்தது. அவர்களுள் மகாகவி பாரதியார் முதன்மையானவர். விவேகானந்தரும் பாரதியாரும் நேரில் சந்தித்ததில்லை என்றபோதும், இவ்விருவரின் சிந்தனையும் கருத்துகளும் ஒத்திருப்பதைக் காண முடிகிறது. இருவரும் ஆன்மிக அடிப்படையில்தான் இந்தத் தேசம் உயர்வடையும் என்ற நம்பிக்கையை வலுவாக முன்வைத்தவர்கள். பாரதியாரின் கவிதைகள் பேசப்படும் அளவுக்கு அவரது இதழியல் பணிகள் […]

Read more

நீதி நூல் களஞ்சியம்

நீதி நூல் களஞ்சியம் (22 நூல்கள் உரையுடன்), உரையாசிரியர்கள் பத்மதேவன், தமிழ்ப்பிரியன், கொற்றவை வெளியீடு, சென்னை, பக். 1056, வலை 720ரூ. ஒழுக்கம், நீதி, அறம், பண்பாடு பணிவுடைமை என்பதெல்லாம் என்ன? அவை என்ன விலை? எங்கே கிடைக்கும்? என்று கேட்கும் இன்றைய இளயை சமுதாயத்திற்கு தேவையான தொகுப்பு இந்நூல். மனித வாழ்க்கையைச் செம்மைபடுத்தும் நீதிநெறிக் கருத்துகளை நம் சங்கப் புலவர்கள் வாரி வழங்கியுள்ளனர். ஆனால், அதைப் படிப்போரும், அதன்வழி நடப்போரும் அருகிவிட்ட காலம் இது. நீதிநூல்கள் – அற நூல்கள் அனைத்தும் ஒரே […]

Read more
1 129 130 131 132 133 180