அருணாசலக் கவிராயர் முதல் ஆலந்தூர் மோகனரங்கன் வரை

அருணாசலக் கவிராயர் முதல் ஆலந்தூர் மோகனரங்கன் வரை, சு.முத்தையா, வசந்தா பதிப்பகம், பக்.112, விலை 70ரூ. தமிழ் இலக்கியத்தில் சுவை, பக்தி இலக்கியத்தில் மனிதநேயத்தை, ‘கண்ணன் பாட்டு’ மூலம் கூறிய ஆசிரியர், சிறுகதையின் யதார்த்தவாதம், ஈழத் தமிழ்ச் சிறுகதைகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, மு.வ.,வின் தேங்காய்த் துண்டுகள், சிற்பியின் தமிழ்ப் பணி உள்ளிட்டவற்றின் சிறப்புகளை இந்நூலில் வழங்கிஇருக்கிறார். நன்றி: தினமலர், 1/10/2017.

Read more

எரிநட்சத்திரம்

எரிநட்சத்திரம், ரா. கிருஷ்ணமூர்த்தி, வசந்தா பதிப்பகம், விலை1 25ரூ. ஒரு சினிமா நடிகையின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார் ரா. கிருஷ்ணமூர்த்தி. உள்ளத்தைத் தொடும் உணர்ச்சிமயமான கதை. நன்றி: தினத்தந்தி, 16/8/2017

Read more

நினைவலைகளில் பாவேந்தர்

நினைவலைகளில் பாவேந்தர், கவிஞர் பொன்னடியார், வசந்தா பதிப்பகம், விலை 220ரூ. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்தது இந்த நூல். காரணம், இதை எழுதியவர் பாரதிதாசனின் பிரதான மாணவரும் புரட்சிக்கவிஞரின் இறுதிக்காலம் வரை அவரது நிழலாக இருந்தவருமான பொன்னடியார். பாரதிதாசனின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை, உள்ளத்தைத் தொடுகிற விதத்தில் விவரித்துள்ளார். “பண்டியன் பரிசு” என்ற திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு பாவேந்தர் எடுத்துக்கொண்ட முயற்சிகள், அப்போது நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவை இந்நூலில் ஆதாரபூர்வமாக விளக்கப்பட்டுள்ளன. 1962-ம் ஆண்டில், […]

Read more

மாவீரன் மருதநாயகம் (யூசுப்கான்)

மாவீரன் மருதநாயகம் (யூசுப்கான்), கொங்கு நூல் பதிப்பகம், சென்னை, விலை 175ரூ. தமிழ்நாட்டில் பிறந்து, பிரெஞ்சு படையில் பணி புரிந்து பின்னர் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியில் சேர்ந்து போர்த் தளபதியாக உயர்ந்தவன் மருதநாயகம். முஸ்லிம் மதத்தில் சேர்ந்ததால் யூசுப்கான் என்றும் கான் சாகிப் என்றும் அழைக்கப்படுகிறான். தீரமும், வீரமும் மிக்க மருதநாயகத்தின் வரலாற்றை எழுத்தாளர் பாஸ்கரதாஸ் எழுதியுள்ளார். தொடக்கத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவாகச் செயல்பட்டவன், மருதநாயகம். பிற்காலத்தில் அவர்களின் அடக்குமுறையை தாங்கிக் கொள்ள அவனது தன்மானம் இடம் தரவில்லை. எதிர்த்துப் போராடுகிறான். இறுதியில் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு […]

Read more

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி நினைவுகள்

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி நினைவுகள், கல்யாணி இராமசாமி, வசந்தா பதிப்பகம், பக். 160, விலை 200ரூ. திரைப்பட உலகில் இன்று நிலவும் பகுத்தறிவு கருத்துகளுக்கு, வித்திட்டவர், தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. அண்ணாதுரையின் வலதுகரமாகச் செயல்பட்டவர், கே.ஆர். இராமசாமி. பராசக்தி மற்றும் மனோகரா திரைப்படங்களில் தனக்கு வந்த வாய்ப்பை, அண்ணாதுரை சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக, சிவாஜி கணேசனுக்கு விட்டுக்கொடுத்தவர், அண்ணாதுரையின் நிழலாக வாழ்ந்தவர். காலமெல்லாம் தாம் சம்பாதித்த வருவாயை, கழகம் வளரவே செலவழித்தார். தனக்கொரு குடும்பம் இருக்கிறது என்பதையே மறந்து, தூய கழகத் […]

Read more

நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி நினைவுகள்

நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி நினைவுகள், வசந்தா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. நாடகத்துறையிலும், சினிமா துறையிலும் சாதனை படைத்தவர் கே.ஆர். ராமசாமி. பாகவதர், பி.யு. சின்னப்பா, டி.ஆர். மகாலிங்கம் போல, சொந்தக் குரலில் பாடி நடித்தவர். அறிஞர் அண்ணா வசனம் எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, சொர்க்கவாசல் முதலான படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தி.மு. கழகத்தில் உறுப்பினராக இருந்ததால், புராணப் படங்களில் நடிக்க மறுத்தவர். சம்பாதித்த பணத்தில் பெரும் பகுதியை கட்சி நலனுக்காக செலவிட்டவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை, அவரோடு நாடகத்தில் நடித்தவரும், […]

Read more

சுவாமி விவேகானந்தர் வரலாறு

சுவாமி விவேகானந்தர் வரலாறு, அ.லெ. நடராஜன், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, விலை ரூ. 360. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-179-5.html 39 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழந்து, இந்து சமயம் மற்றும் இந்திய கலாசாரம் பற்றி பல்வேறு இடங்களில் ஆற்றல் வாய்ந்த சொற்பொழிவுகள் நிகழ்த்தி, உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு, ஆதி முதல் அந்தம் வரை விலாவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் தூண்டதலால் அமெரிக்க பயணம் மேற்கொண்ட […]

Read more

கடாஃபி வாழ்வும் வீழ்வும்

கடாஃபி வாழ்வும் வீழ்வும், பிரதீபா, நக்கீரன் பதிப்பகம், 105, ஜானி ஜான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 30ரூ. 40 ஆண்டுகளுக்கு மேலாக லிபியா நாட்டை ஆட்சி செய்த கடாபியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் நூல் இது. சர்வாதிகாரியாக செயல்பட்டாலும் கடாபிக்கு லிபிய வரலாற்றில் இடம் உண்டு என்பதை இந்த நூல் தெளிவுபடுத்தியுள்ளது. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ள நூல்.   —-   ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள், வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத்தெரு, ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை 88, விலை 170ரூ. […]

Read more

உனக்குள்ளே ஒரு குரல்

உனக்குள்ளே ஒரு குரல், டாக்டர் ராஜன் சங்கரன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 145ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-865-8.html உன்னை நீ அறிவாய் உன்னை நீ குணப்படுத்திக் கொள்வாய் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஆழ்மனதின் எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்ள ஆர்வம் உடையவர்களுக்கு அத்தகைய கருத்துகளை அறிமுகம் செய்து வைப்பதே இந்த நூலின் நோக்கம். இன்றைய நவீன ஹோமியோபதி சிகிச்சை முறை, மற்ற சிகிச்சை முறையிலிருந்து மாறுபட்டிருப்பதை விளக்குகிறது இந்த நூல். அரிப்பு, […]

Read more

தமிழர் உணவு

தமிழர் உணவு, பக்தவத்சல பாரதி, காலச்சுவடு பதிப்பகம், நகார்கோவில், பக்கங்கள் 415, விலை 250ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-197-7.html பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில் உணவைப் பசிக்காகவோ, ருசிக்காகவோ உண்பது என்ற நிலை மாறிவிட்டது. அன்றாட நாளில் அதுவும் ஒரு கடமையாகவே கழிகிறது. உணவு என்பது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதுபோன்ற விஷயம் அல்ல. அது சமூகம் சார்ந்தது. உணவும் சமுகமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை என்ற கருத்தை இன்றைய தலைமுறையினருக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் தமிழர்களின் உணவு […]

Read more
1 2 3