தமிழ்நாட்டில் காந்தி

தமிழ்நாட்டில் காந்தி, அ. ராமசாமி, விகடன் பிரசுரம், பக். 904, விலை 425ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-198-9.html தில்லையாடிக்கும் வள்ளியம்மைக்கும் என்ன தொடர்பு? 1969ல் முதல் பதிப்பாக வெளிவந்த இந்த நூல், தற்போதுதான் மறு அச்சு கண்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில், காந்தியின் இளமை காலத்தில், பாலசுந்தரம் என்ற தமிழன் முதன்முதலாக அவர் உதவியை நாடினார். அதுமுதல் தமிழருடன் அவர் கொண்ட அன்பு, இறுதிவரை தொடர்ந்தது. அதை, இந்த நூல் ஒரு குறும்படமாக நமது இதயத் திரையில் ஓட வைக்கிறது. தில்லையாடி […]

Read more

ஆ. பத்மநாபன்

ஆ. பத்மநாபன், பசுபதி தனராஜ், தாய்த் தமிழ் பதிப்பகம், பக். 272, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-189-0.html மாதம், 17 ரூபாய் ஊதியம் பெற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் ஏழு குழந்தைகளில் ஒருவர், தினமும் 10 கி.மீ. நடந்து வந்து பள்ளியில் படித்தவர், அனைத்து இந்தியாவிலும், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற முதல் தலித் மகன், தலைமைச் செயலர், கவர்னர் என உழைப்பால் உயர்ந்தவர். உலகக் கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், சிறந்த ஆட்சியாளர் என்ற ஆளுமையின் உயர்ந்த […]

Read more

கொதிக்குதே கொதிக்குதே

கொதிக்குதே கொதிக்குதே, (புவி வெப்பமடைதலும் நாமும்), ஆதி வள்ளியப்பன், விகடன் பிரசுரம், சென்னை, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-196-0.html இயற்கையின் சதிக்கு எதிராக மக்கள் போராடிக்கொண்டு இருப்பதுதான் இன்றைய வாழ்க்கை. மழைக் காலத்தில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயில் காலத்தில் மேகம் கருக்கிறது. கரைபுரண்டு ஓடிய காவிரி வறண்டுகிடக்கிறது. மலைப் பகுதிகள் தங்களது ஈரப்பதத்தை இழந்துகிடக்கின்றன. காலைக் காற்றையும் காணோம். மாலைத் தென்றலையும் காணோம். இரவின் குளுமையும் பறந்துவிட்டது. இதுதான் இயற்கையின் சதி என்றால், ஏன் சதி […]

Read more

கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு

கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு, சுரா பதிப்பகம், சென்னை, விலை 110ரூ. நம்மில் பலர் மிக அழகான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். ஆனால் துயரங்களால் மனதை நிரப்பிக் கொண்டிருக்கிறோம். மன அழுத்தங்களை மாற்றி மகிழ்வுடன் வாழ நீங்கள் ஒன்றை மட்டும்தான் செய்யவேண்டும். அது உங்களை நீங்களே சீர்திருத்திக் கொள்வதுதான். இதனை மையமாக வைத்து நூலாசிரியர் டாக்டர். லட்சுமி விஸ்வநாதன் 400 சிறிய தலைப்புகளில் எளிய நடையில் கூறியிருப்பது நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம், […]

Read more

போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி

போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி?, ஸ்ரீநிவாஸ் பிரபு, விகடன் பிரசுரம், சென்னை, விலை 125ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-861-3.html அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அனைத்து வேலை வாய்ப்புகளுக்கும், போட்டித் தேர்வு முறையே பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களே உரிய பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதால் போட்டியாளர்கள் இத்தேர்வு குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து கொள்வது முக்கியம். இந்நூலாசிரியர் பல்வேறு இதழ்களில் கதை, கட்டுரைகளை எழுதும் எழுத்தாற்றல் உள்ளவர் என்பதால், இத்தேர்வு குறித்த பல விவரங்களை […]

Read more

புலி தடம் தேடி

புலி தடம் தேடி, ரத்த ஈழத்தில் 25 நாட்கள், மகா. தமிழ்ப் பிரபாகரன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 192, விலை 100ரூ. இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக எந்த அளவுக்கு இனவெறித் தாண்டவமாடுகிறது என்பதை நூலாசிரியர் தோலுரித்துக் காட்டியுள்ளார். இலங்கையின் பூர்வீகக் குடிமக்களாகிய ஈழத்தமிழர்கள் தங்களது தாய் மண்ணிலேயே ராஜபட்சவின் இனவெறி அரசால், உறவுகளையும், உடைமைகளையும் இழந்து, இன்று உணவுக்கே வழியில்லாமலும், உயிருக்கு உத்தரவாதமில்லாமலும் வாழ்வதை உலககுக்கு உரக்கத் தெரிவித்துள்ளார் நூலாசிரியர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் […]

Read more

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள், விகடன் பிரசுரம், சென்னை, விலை 115ரூ. மகாபாரதத்தின் மகா புருஷரான கண்ணன் பற்றிய கதைகளை சுவாட தொகுத்துத் தந்துள்ளார் வேளுக்குடி கிருஷ்ணன். மாருதி வரைந்துள்ள வண்ணப் படங்கள், புத்தகத்தின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 16/4/2014.   —-   இயற்கை மருத்துவம் இலைகளின் மகத்துவம், ஆப்பிள் பள்ளிஷிங் இண்டர்நேஷனல், சென்னை, விலை 80ரூ. பல்வேறு நோய்களைத் தீர்க்கும் சக்தி பச்சிலைகளுக்கு உண்டு. துளசி, வல்லாரை, கறிவேப்பிலை, நொச்சி இலை உள்பட 20 பச்சிலைகளின் மருத்துவ குணங்க9ளை […]

Read more

ஜான் கென்னடி கொலையானது எப்படி

ஜான் கென்னடி கொலையானது எப்படி?, சிவதர்ஷினி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 120, விலை 70ரூ. அமெரிக்காவில் ஜான் கென்னடி கொலை செய்யப்பட்டது ஒரு மாபெரும் சோக நிகழ்ச்சி. ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டத்தில் இருந்து கொலை வழக்கு விசாரணை முடியும் வரை, நடந்த விவகாரங்கள் என்ன என்பதை விவரமாக சொல்கிறது இந்தப் புத்தகம். உலகமே வியந்து போற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு எந்தெந்த நேரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என்பதைப் பற்றி எல்லாம் இதில் நூலாசிரியர் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொலை வழக்கு […]

Read more

என்றென்றும் சுஜாதா

என்றென்றும் சுஜாதா, அமுதவன், விகடன் பிரசுரம், பக். 184, விலை 90ரூ. சுஜாதா எழுதிய எழுத்துகளும் சரி, அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதியதும் சரி. எல்லாமே தனி சுவாரஸ்யத்தோடு இருப்பவை. நூலாசிரியர் ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலம் சுஜாதாவுடன் நெருங்கிப் பழகியவர். அந்த நாட்களில் படிப்படியான அவரது வளர்ச்சியை மகிழ்ச்சியை சில நேரங்களில் அவருக்கு ஏற்பட்ட வருத்தங்களை உடனிருந்து பகிர்ந்து கொண்டவர். சுஜாதா தொடர்பான பல வெளியே வராத மிகச் சுவையான தகவல்களை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். -கேசி. நன்றி: தினமலர், 27/4/2014. […]

Read more

திருக்குறள் புதுக்கவிதை வடிவில்

திருக்குறள் புதுக்கவிதை வடிவில், காவ்யா, சென்னை, விலை 900ரூ. கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள். மனிதன் மகோன்னத நிலையடையும் நெறிகளையும் அறங்களையும் அழகாக சொன்னது திருக்குறள். அத்திருக்குறளுக்கு உரைநடையில் விளக்கம் எழுதியவர்கள் பலர். சிலரது உரை சாமான்யர்களுக்கு புரிவது கடினம். அதனால் உரைநடையை வேறொரு கோணத்தில் புதுக்கவிதை வடிவத்தில் கொடுத்தால் அனைவரும் படித்து இன்புறுவர் என்றெண்ணி இந்நூலை படைத்துள்ளார் நூலாசிரியர் கி.ரா. கிருஷ்ண பிரசாத். நன்றி: தினத்தந்தி, 23/4/2014.   —- பகதூர்கான் […]

Read more
1 14 15 16 17 18 31