வெற்றிப் படிக்கட்டு (பாகம்1, 2)

வெற்றிப் படிக்கட்டு (பாகம்1, 2), ஹெச். வசந்தகுமார், வெற்றி பவுண்டேஷன் மற்றும் வசந்த் அண்ட் கோ, சென்னை, பக். 194, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-223-1.html வசந்த் டிவி ஆசிரியர் வழங்கி வந்த, சுயமுன்னேற்றம் தொடர்பான சொற்பொழிவுகள், இரண்டு புத்தகங்களாக வெளிவந்துள்ளன. முதல் பாகத்தில், 50 கட்டுரைகள் இடம்பெற்றன. இரண்டாம் பாகத்தில் 76 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சின்ன கோடு-பெரியகோடு தத்துவத்தைக் கூறி அதற்கு, வாழ்க்கையில் ஒருவன் பெரியவனாக விரும்பினால், அவன் மற்றவரை மறைக்காமல், அழிக்காமல் தன் […]

Read more

கருநாவு

கருநாவு, ஆழியாள், மாற்று வெளியீடு, சென்னை, விலை 60ரூ. ‘எங்கள் நாள் வரும்’ ஈழத் தமிழப் பெண் கவிஞர் ஆழியாளின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘கருநாவு’. இரண்டாம் தொகுப்பு வெளிவந்து ஆறு ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கிறது இந்தத் தொகுப்பு. கனவிலும் நனவிலும் சதா தன்னைப் பின்தொடர்ந்தவற்றுக்கு இந்தத் தொகுப்பின் வாயிலாக வரிவடிவம் கொடுத்திருப்பதாக ஆழியாள் குறிப்பிடுகிறார். ஆழியாள் மொழிபெயர்த்த ஆஸ்திரேலியக் கவிஞர்களின் கவிதைகளும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. வாழ்வு குறித்து இந்த உலகம் கட்டமைத்திருக்கும் பிம்பங்களைக் கேள்விக்குட்படுத்துகிறார் ஆழியாள். பிறப்பின் பொருள் என்ன? […]

Read more

அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள்

அன்பு நபியின் (ஸல்) அமுத வாக்குகள், மௌலானா முகம்மத் ஃபாரூக் கான், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், பெரம்பூர், விலை 240ரூ. கவிதை மாதிரி ஓர் அறநூல் “மனிதர்கள் அனைவரும் தவறிழைப்பவர்களே. தவறிழைப்பவர்களில் சிறந்தவர் பாவமன்னிப்புக் கோரி இறைவனின் பக்கம் மீள்பவர்தான்.” இதற்கான விளக்கம் தவறிழைத்த பிறகு அதிலேயே உழன்று கிடைக்காமல் கணப்பொழுதுக்குள்ளாக செய்த தவறை உணர்ந்து, வருத்தப்பட்டு, மனம் நொந்து, வேதனையடைந்து, என்ன இப்படி ஆகிவிட்டதே என மனம் பதைத்து அந்தக் கணத்திலேயே இறைவன் பக்கம் திரும்புகிறவர்கள் மனிதர்களில் சிறந்தவர்களாவர் என்பதே. ‘இஸ்லாம் என்றால் […]

Read more

சக்கர வியூகம்

சக்கர வியூகம் (சிறுகதைகள்), ஐயப்பன் கிருஷ்ணன், அகநாழிகை பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. இருபெரும் இதிகாசங்களாகிய இராமாயணம் மகாபாரதம் கதைகளை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதவை. பிரமிப்பைத் தருகின்றவை. எண்ணற்ற கதை மாந்தர்களைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு பாத்திரப் படைப்புக்கும் முக்கியத்துவம் தரப்பட்ட இவற்றைக் கட்டுரைகளாகச் சொல்லிச் செல்வது ஒரு வகை உத்தி. கதையாகச் சொல்லிச் செல்வது இன்னொரு வகை. இதிகாசக் கதையை மீட்டுருவாக்கம் செய்கையில் பலமான பின்புலத்தின் இழையிலிருந்து விலகாதிருக்க வேண்டிய நிர்பாந்தம், சுவை குன்றாமல் சொல்ல வேண்டிய அவசியம், சறுக்கிவிடாமல் கத்தி […]

Read more

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள்

நேருவின் ஆட்சி பதியம் போட்ட 18 ஆண்டுகள், ரமணன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 115ரூ. என்னுடைய வாரிசு ஜவஹர்லால் என்று காந்தி சொன்னார். இரண்டு பேருக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனாலும் காந்தியச் சிந்தனைக்கு மாற்றாக நேரு நடக்க மாட்டார் என்ற நம்பிக்கை மகாத்மாவுக்கு இருந்தது. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றியது மட்டுமல்ல, இந்தியாவை வடிவமைத்தவர் நேரு. இந்தியா தனது முதலாவது விடுதலை நாளைக் கொண்டாடியபோது, அதைச் செய்தியாக வெளியிட்ட பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று. ‘அடுத்த ஆண்டு இப்படி […]

Read more

ஞாயிறு போற்றுதும்

ஞாயிறு போற்றுதும், எ.வேலாயுதன், முருகம்மை இல்லம், புதுக்கோட்டை, பக். 72, விலை 25ரூ. உலக இருளைப் போக்கி ஒளி வழங்கி, உயிர்களை உய்விக்கும் சூரியனை, சூரிய வழிபாடு என்ற பெயரில் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தொன்றுதொட்டு வணங்கி வருகின்றனர். பகைவர்களிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும், போரில் வெற்றிபெறவும் பாராயணம் செய்ய வேண்டிய வடமொழி மந்திரப்பாடல் ‘ஆதித்த ஹிருதயம்’தான் என்று கூறுவர். இதை வான்மீகி தன் காப்பியத்தில் வழங்கியுள்ளார். இராமன் ஆதித்திய ஹ்ருதயம் படித்தே இராவனணைப் போரில் வென்று, சீதையை மீட்டான் என்கிறது வான்மீகி […]

Read more

மது விழிப்புணர்வுக் கல்வி

மது விழிப்புணர்வுக் கல்வி, கோ. பெரியண்ணன், தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம், சென்னை, பக். 160, விலை 100ரூ. மது விற்பனை இலக்கு, மதுவினால் ஏற்படும் விபத்துகள், மதுப்பழக்கத்தால் நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள், நிதானம் இழந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் – மற்றவரைக் கொன்றவர்கள், மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி அசிங்கப்படும் இன்றைய இளம்தலைமுறையினர், பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் பற்றிய செய்திகள் போன்றவற்றையெல்லாம் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். மது உருவான வரலாறு, புராணங்களிலும் சிற்றிலக்கியங்களிலும் காணக்கிடைக்கும் குடிப்பழக்கத்தின் கொடுமைகள் பற்றிய குறிப்புகள், நாட்டுப்புறப் […]

Read more

அம்ருதா

அம்ருதா, திவாகர், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 448, விலை 335ரூ. கங்கை கொண்ட ராஜேந்திர சோழ சக்கரவர்த்தியின் மகளான அம்மங்கையின் வயிற்றில் பிறந்தவர் அபயன். தெலுங்கு ராஜாவான அபயன் சோழ தேசத்து ஆட்சியை எப்படிப் பிடித்தார், பரந்து விரிந்த சோழ தேசத்தை எப்படி ஆட்சி செய்தார் என்பதே கதைக்களம். சோழர்கள் காலத்தில் உறவுகளுக்குள் நெருக்கம் ஏற்படவும், நிலையான ஆட்சிக்கும் பயன்பட்டு வந்த திருமணம், எப்படி சோழர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக மாற்றியது, பெண்கள் அரசியலில் எவ்வாறெல்லாம் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்பட்டனர் என்பதை விளக்கும் […]

Read more

கற்றாழை

கற்றாழை, சு. தமிழ்ச்செல்வி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 438, விலை 335ரூ. மதுப்பழக்கத்தினால் வாழ்க்கை சீரழிந்த ஒரு பெண், தன்னுடைய மகளுக்கும் அதுபோன்ற வாழ்க்கை அமைந்துவிடக்கூடாது என்று போராடுவதே இந்நாவல். படிக்க விரும்பியும் படிக்க இயலாமல் போன ஒரு பெண்ணின் ஆதங்கத்தையும், இளம் பருவத்தில் அவளுக்கு நேர்ந்த கொடுமைகளையும் சிறப்பாகப் பதிவு செய்திருப்பதன் மூலம் பெண் சுதந்திரத்திற்கான போராட்டங்களுக்குதோள் கொடுத்திருக்கிறார் நாவலாசிரியர். எந்தவிதமான வறட்சியிலும் துவண்டு போகாமல் தன்னைத் தகவமைத்துக் கொண்டு வாழும் கற்றாழை போன்றதுதான் பெண்களின் […]

Read more

தமிழ் சினிமா 100 சில குறிப்புகள்

தமிழ் சினிமா 100 சில குறிப்புகள், பி.எல்.ராஜேந்திரன், சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், சென்னை, பக். 376, விலை 285ரூ. தமிழ் சினிமாவின் தவிர்க் முடியாத ஆளுமைகளான எல்லிஸ் ஆர். டங்கன், கே. சுப்பிரமணியம், எஸ்.எஸ். வாசன், டி.ஆர்.சுந்தரம், இளங்கோவன், மு. கருணாநிதி, தியாகராஜபாகவதர், எம்.ஜி.ஆர். முதலிய 99 பேரைப் பற்றிய அறிமுகம் சாதனைச் சுருக்கமும் சில அரிய புகைப்படங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. முதல் முதலில் டைட்டில் இசையை இசைத்தட்டாக வெளியிட்டு புதுமை செய்தவர் வீணை எஸ். பாலசந்தர், கே. சுப்பிரமணியத்தின் ஸ்டுடியோ, கோர்ட் உத்தரவுப்படி, […]

Read more
1 2 3 9