12 பாவ பலன்கள்

12 பாவ பலன்கள், சுப. சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 120ரூ. ஜாதகங்களை துல்லியமாக கணிக்கவும், பலன் சொல்லவும் உதவும் ஆராய்ச்சி நூல். இதில் 200க்கும் அதிகமான வாழ்வு நிலைகளுக்கான கிரக அமைப்புகளை பல உதாரண ஜாகங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜோதிடர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 11/3/2015.   —- சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள், சாயிபிரியா, ஸ்ரீ அலமு புத்தக நிலையம், சென்னை, விலை 50ரூ. ஸ்ரீசீரடி சாய்பாபாவின் அருள்மொழிகளை அனைவரும் உணர்ந்து பயனடைய வேண்டும் என்ற […]

Read more

கண்ணதாசன் பேட்டிகள்

கண்ணதாசன் பேட்டிகள், தொகுப்பாசிரியர் ஆர்.பி. சங்கரன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. கவிஞர் கண்ணதாசன் அளித்த பேட்டிகள் அடங்கிய புத்தகம். 1971ல் எதிரும் புதிருமாக உள்ள புரமுகர்களை சந்திக்க வைத்து, அவர்களின் உரையாடலை “குமுதம்” வெளியிட்டது. அப்போது, கண்ணதாசனும், ‘‘சோ”வும் சந்தித்து உரையாடினார்கள். சூடும், சுவையும் நிறைந்த அந்த உரையாடல் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நன்றி: தினத்தந்தி, 11/3/2015.   —- டார்வின் ஸ்கூல், ஆயிஷா இரா. நடராசன், புக் பார் சில்டர்ன், சென்னை, விலை 75ரூ. மாந்திரீக எதார்த்த நாவல் […]

Read more

நெப்போலியன்

நெப்போலியன், எஸ்.எல். வி. மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ், சென்னை, விலை 300ரூ. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நெப்போலியன், பிரான்ஸ் நாட்டுச் சக்கரவர்த்தியாக உருவான வரலாற்றைக் கூறும் நூல். நெப்போலியனின் குடும்ப வாழ்க்கை, அந்தரங்கக் காதலிகள், அவர் நடத்திய வீரப் போர்கள், வாட்டர்லூ போரில் படுதோல்வி, ஹெலனா தீவில் சிறைவைப்பு, நாள்பட கொல்லும் விஷத்தால் மரணம் என்பன போன்ற வரலாற்று நிகழ்வுகளை இந்த நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தி சுவைபடச் சொல்கிறார். மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகளைக் கண்டால் குலை நடுக்கம். வெயில் காலத்திலும் வெந்நீரில்தான் குளிப்பார், தினமும் […]

Read more

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள்

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள், காவ்யா, சென்னை, விலை 400ரூ. தமிழ் இலக்கியத்துக்கு அரும்பணியாற்றிய கிறிஸ்தவ படைப்பாளிகளை இனம் கண்டு, அவர்களைப் பற்றிய தகவல்களை நேர்த்தியாக தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் மதுரை இளங்கவின். அரிய பணியை இலகுவாக செய்திருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து மதப்பணி ஆற்ற வந்தவர்கள், அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை கற்றதுடன், அதில் தேர்ச்சியும் பெற்று, படைப்புகளையும் செய்திருக்கிறார்கள் என்பது அவர்களது தமிழார்வத்தை பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. அந்த வகையில் தேம்பாவணி தந்த வீரமாமுனிவர், சீகல் பால்கு, கால்டுவெல், ஜி.யு.போப் போன்றவர்களைப் பற்றிய தகவல்கள் […]

Read more

ஓர்மை வெளி

ஓர்மை வெளி, பேராசிரியர் வீ. அரசு மணிவிழாக் கட்டுரைகள், தொகுப்பாளர்கள் இரா. சினிவாசன், பா. மதுகேசுவரன், அ. சதீஷ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 576, விலை 560ரூ. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் பணியாற்றிய பேராசிரியர் வீ. அரசவின் பணி நிறைவையொட்டி, அவரிடம் பயின்ற மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. ‘ஓர்மை’ என்பதை ஆங்கிலத்தில் (Consciousness) என்று தமிழில் மொழியாக்கம் செய்யலாம். ‘ஒர்மை வெளி’ என்பதை A Space for consciousness என்று மொழியாக்கம் […]

Read more

அகிம்சையின் சுவடுகள்

அகிம்சையின் சுவடுகள், ப. முத்துகுமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 360, விலை 260ரூ. மகாத்மா காந்தியடிகள், மார்ட்டின் லூதர் கிங் ஜுனியர் ஆகிய இரு தலைவர்களைப் பற்றி விவரிக்கிறது இந்நூல். காந்திஜியின் கொள்ளையால் ஈர்க்கப்பட்ட லூதர் கிங், 1895 ஆம் ஆண்டில் தொடங்கி 1965 ஆம் ஆண்டு வரை அமெரிக்க ஆப்ரிக்க மக்களின் உரிமைகளுக்காக நடத்திய எண்ணற்ற போராட்டங்கள் காந்திய வழிப் போராட்டங்கள்தாம். காந்திஜியின் வழிமுறை, அமெரிக்காவில் பயன்படுத்தக் கூடியத என்பதை 1920களிலேயே அமெரிக்க கறுப்பின மக்கள் உணர்ந்திருந்தனர். இந்தப் போராட்டத்தின்போது பள்ளிச் […]

Read more

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது

யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது, எர்னெஸ்ட் ஹெமிங்வே, தமிழில் சி.சீனிவாசன், எதிர்வெளியீடு, பொள்ளாச்சி, பக். 760, விலை 550ரூ. இலக்கியத்துக்கான நோபல் பரிசை தனது ‘கடலும் கிழவனும்’ நாவலுக்காகப் பெற்றவர் எர்னெட் ஹெமிங்கே. அவருடைய குறிப்பிடத்தக்க இன்னொரு நாவல் இது. 1936 – 1939 இல் ஸ்பானிஷில் நடந்த உள்நாட்டுப் போரை மையமாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. போர் நிகழும் காலத்தில் ஆண்களும், பெண்களும் சிந்திக்கும் முறை, நடந்துகொள்ளும் முறை ஆகியவை மிக இயல்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் வெடி மருந்து நிபுணர் ராபர்ட் ஜோர்டான் […]

Read more

தாய்ப்பால்

தாய்ப்பால், முகுந்தன், தமிழில் டி.க. சதாசிவம், சாகித்ய அகாதெமி குணா பில்டிங்ஸ், சென்னை, பக். 336, விலை 185ரூ. சுனாமிபோல புறப்பட்டு வரும் மேற்கத்திய நாகரிகம், தொழில்நுட்பப் பெருக்கம், நவீனமயமாக்கல், காலனிமயமாக்கல் போன்றவற்றால் ஏற்படும் பின்விளைவுகளை நமது பண்பாட்டு விழுமியங்கள் எவ்வாறு முரண்பட்டு எதிர்கொள்கின்றன என்பதைப் பாசாங்கில்லாமல் எடுத்துச் சொல்கின்றன ‘உண்ணி சொன்ன கதை’, ‘பிளாஸ்டிக்’, ‘காரோட்டி‘, ‘பாவாடையும் பிக்கினியும்’ ஆகிய சிறுகதைகள். யதார்த்தத்தை மீறிய கற்பனைக்கு எட்டாத உலகத்தை சுவாரசியமாகவும் தத்துவார்த்தமாகவும் சொல்கின்றன. ‘தணியாத தாகம்’, ‘குளியலறை’ ஆகிய சிறுகதைகள். ‘மாதவனின் பயணங்கள்’, […]

Read more

நூற்றாண்டை கண்ட டி.எஸ். பாலையா

நூற்றாண்டை கண்ட டி.எஸ். பாலையா, திருநின்றவூர் தி. சந்தான கிருஷ்ணன், நிழல் பதிப்பகம், பக். 140, விலை 150ரூ. குணச்சித்திரம், நகைச்சுவை, நயவஞ்சகம், பாமரத்தனம், மேதாவித்தனம், ஏழ்மை, பணக்காரத்தனம் போன்ற எந்தக் கதாபாத்திரமானாலும் தன்னுடைய இயல்பான அலட்டலில்லாத நடிப்பின் மூலம் எராளமான ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடச் செய்தவர் டி.எஸ்.பாலையா. அந்த அபூர்வக் கலைஞனைப் பற்றிய அரிய ஆவணப் பதிவே இந்நூல். 1936இல் ‘சதிலீலாவதி’யில் அறிமுகமாகி 1972-இல் ‘எல்லைக்கோடு’ வரை சுமார் 145 திரைப்படங்களைத் தாண்டி பயணித்த டி.எஸ்.பாலையா பற்றி இந்தத் தலைமுறையினர் மட்டுமல்லாமல் […]

Read more

கலீல் கிப்ரானின் காதல் கதை

கலீல் கிப்ரானின் காதல் கதை, ராஜ்ஜா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. நீங்கள் மாதந்தோறும், 300 ரூபாய் செலவில் புத்தகங்கள் வாங்குகிறீர்கள். அந்த ரசீதை அரசிடம் கொடுத்தால், உங்களுக்குப் பணம் திரும்பக் கிடைத்துவிடும் என்றால் எப்படியிருக்கும்? ஹாலந்து நாட்டின் அரசு ஊழியர்களுக்கு, இப்படியொரு சலுகை வழங்கப்படுகிறது. தங்கள் நாட்டு மக்கள், படிப்பதில் ஆர்வம் குன்றாதிருக்க, புத்தக பதிப்பாளர்களுக்கு அவற்றை அச்சிட வேண்டிய காகிதத்தை, மிகக் குறைந்த விலைக்கு அளிக்கிறது. புத்தக விலையை ஏற்ற வேண்டிய அவசியமே அங்கு இல்லை. இப்படி […]

Read more
1 2 3 4 9