செம்பியன் செல்வி

செம்பியன் செல்வி,  கோவி. மணிசேகரனின், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 525ரூ. கலிங்கம் எறிந்த கருணாகரத் தொண்டைமானைப் பற்றி ‘கலிங்கத்துப்பரணி’ எனும் தமிழின் தவக்காவியம் புகழ்கிறது. அந்த கருணாகரத் தொண்டைமானைக் கதாநாயகனாகக் கொண்டு எழுந்த உரைநடைக் காப்பியமே இந்த பல்லவ சரித்திர நாவல். புலவர்கள் மத்தியில் கருணாகரனுடைய வீரம் அருமையான காவியமாக உலவி வருகிறது. இதயத்தை மகிழ்விக்கும் வர்ணனைகள், உள்ளத்தைத் திடுக்கிட வைக்கும் போர்க் காட்சிகள், உணர்ச்சியைக் கவரும் காதல் நிகழ்ச்சிகள், சுவையோடு செல்லும் சம்பவக் கோவை – இவை அனைத்தும் நிரம்பியிருக்கின்றன. நாவலாசிரியர் […]

Read more

தேவதைகளின் வீடு

தேவதைகளின் வீடு, எம்.ஸ்டாலின் சரவணன், அகரம் வெளியீடு, தஞ்சாவூர், பக். 88, விலை 60ரூ. கவிஞருக்கு நிகழ்ந்த அனுபவங்களே இக்கவிதை ஊர்வலம் என்பதை கவிதைகளின் வரிகள் நமக்கு நினைவூட்டுகின்றன. அவருக்குள் எழும் கோபதாபங்களையும் மகிழ்ச்சிகளையும் சமூக அக்கறைகளையும் இறங்கி வைக்கும் சுமைதாங்கியாக இக்கவிதைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். “ஆறு கொலை தடயம் சிக்கியது மணல் லாரி தடம்” போன்ற கவிதைகள் அந்த ரகமே. தன் வாழ்வில், தன் நண்பர்களின் வாழ்ந்த நடந்த நிகழ்வுகளை சமுதாயம் உணரும் விதத்தில் அதன் போக்கிலேயே சென்று உண்மையாகப் பேசுவதால் இக்கவிதைகள் […]

Read more

ராஜாஜியின் கருத்துக்கள்

ராஜாஜியின் கருத்துக்கள், ராஜாஜி, வானதி பதிப்பகம், சென்னை, பக். 176, விலை 70ரூ. 20 ஆம் நூற்றாண்டின் ‘இந்திய அரசியல் ஞானி’ என்று பாராட்டப்பட்டவர் சக்கரவர்த்தி சி. ராஜகோபாலாச்சாரியார். விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்திக்கு உறுதுணையாகத் திகழ்ந்தவர். இந்தியாவின் மிக உயர்ந்த பொறுப்பையும் வகித்தவர். பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்பழுக்கற்றவராகத் திகழ்ந்த இந்த மூதறிஞரின் கருத்துக்கள், தொலைநோக்குக் கொண்டவை. 1970-71ல் மத்தியிலும், மாநிலங்களிலும், மற்ற நாடுகளிலும் நிகழ்ந்த பல்வேறு பிரச்னைகள், சம்பவங்கள் குறித்து இவர் கூறிய கருத்துகள் என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியாகின. […]

Read more

ஒரு நீதியரசரின் நெடும் பயணம்

ஒரு நீதியரசரின் நெடும் பயணம், ராணி மைந்தன், வானதி பதிப்பகம், சென்னை, பக். 244, விலை 200ரூ. துவக்க காலத்தில், ‘கடவுள் இல்லை’ என்று நம்பியவன், கால ஓட்டத்தில், ‘கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன’ என்று எண்ணி காலத்தை ஓட்டினான். ஆனால் இன்று, கடவுளின் கருணை இல்லாமல், எதுவுமே இல்லை என்று நம்புகிறான். இந்த மூன்றாம் கட்டத்து வாழ்க்கையில்தான், நான் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வதாக, ஆத்மார்த்தமான வாழ்வு வாழ்வதாக மனப்பூர்வமாக நம்புகிறேன்’ (பக். 16) – நீதியரசர் மு. கற்பகவிநாயகத்தின் இந்த வாக்குமூலம் […]

Read more

படம் பார்த்து படி

படம் பார்த்து படி, சுரேகா, மதி நிலையம், பக். 128, விலை 100ரூ. நாவல் வடிவில், மேலாண்மைக் கருத்துக்களைப் புரிய வைப்பதுதான் நூலாசிரியர் சரேகாவின் பாணி. இந்த நாவலின் கதாநாயகன் குரு, ஓர் உதவி இயக்குனர். அவன் ஒரு விடுதியில் தங்கி இருக்கிறான். அங்கு பல நண்பர்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை. பிரச்சினையை அணுக தெரியாமல் தவிக்கின்றனர். நண்பர்களின் பிரச்னைக்கான தீர்வுகளை, பாய்ஸ், ரமணா, அற்புதம், வானவில், ஐயா, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், நண்பன், நான் பேச நினைப்பதெல்லாம், புதிய கீதை போன்ற பிரபல சினிமா […]

Read more

கோபல்ல கிராமம்

கோபல்ல கிராமம், கி.ராஜநாராயணன், காலச்சுவடு பதிப்பகம். நன்றாக தூங்குபவனுக்கு இரு மனைவிகளாம்! மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய ‘கோபல்ல கிராமம்’ நூலை சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ‘கோபல்ல கிராமம்’ உண்மை சம்பவமா, நாவலா, வரலாற்று பதிவா என, என்னால் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு, அனைத்தும் கலந்த கலவையாக உள்ளது. இஸ்லாமிய மன்னர்களுக்கு பயந்த, ஆந்திராவிலிருந்து தமிழகத்தில் குடியேறியோர் பற்றியது அந்த நூல். தமிழகத்தின் ஒரு பகுதியில் குடியேறி, அங்கு விவசாயம் செய்து, வீடுகள் கட்டி வாழ்ந்த, கோபல்ல கிராம மக்களின் […]

Read more

இந்தியன் ரயில்வேஸ் தி பிகினிங் அப்டு 1900

இந்தியன் ரயில்வேஸ் தி பிகினிங் அப்டு 1900, எஸ். வெங்கடராமன், சென்னை, பக். 500, விலை 800ரூ. அன்றைய சுயநலமும் இன்றைய பலவீனமும் படிக்கப் படிக்க மலைப்பைத் தரும் ஒரு பிரமாண்ட தொகுப்பு நூல் இது. புத்தகத்துக்குள் ஓர் அரிய புகைப்பட கண்காட்சி! இந்திய ரயில்வேயின், 100 ஆண்டுக்கால வரலாற்றை, நேர்த்தியாக பதிவு செய்துள்ளார், நூலாசிரியர். அவர், ரயில்வே துறையில் பணியாற்றியவர். அப்போதே ரயில்வேயில், வெளிநாட்டு முதலீடு செய்து, கொள்ளை லாபம் ஈட்டிய ஆங்கிலேயரின் வியாபார தந்திரம், அகல பாதை, மீட்டர் பாதை, குறுகிய […]

Read more

திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு

திருவிதாங்கூர் தமிழர் போராட்ட வரலாறு, முனைவர் பி. யோகீசுவரன், நீலா பதிப்பகம், சென்னை, பக்கம் 344, விலை 175ரூ. தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை “மொழிவழியாக தமிழகம் அமைந்த சூழ்நிலையில், அதன் எல்லைகள் சுருங்கிய நிலை, நதிநீர் சிக்கல், தொன்மையான நம் தமிழ் மொழி தமிழகத்திலும், இந்தியாவிலும் பெற வேண்டிய இடத்தைப் பெறாத நடைமுறை ஆகியன, எனக்குள் ஓர் உறுத்தலாகவே இருக்கின்றன. “அதனால், என் மாணவ பருவத்தில், நான் ஈடுபாடு கொண்டிருந்த தெற்கெல்லைப் போராட்டத்தை, தமிழுலகிற்கு எடுத்துச் சொல்லுதல் இன்றைய என் கடமையென உணர்ந்தேன். அதுவே […]

Read more

மானுடப்பண்ணை

மானுடப்பண்ணை, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 130ரூ. வேலை இல்லாத, கிடைக்காத, கிடைத்தாலும் தகுதிக்கேற்ப சம்பளம் வரப்பெறாத இளைஞர்கள், இந்தத் தேசத்தில், தெரு நாய்களைப் போல வாழச் சபிக்கப்பட்டவர்கள். இந்த துருப்பிடிக்கும் இளமையாளர்கள் பற்றிய சரியான சமூகக் கவலையே இந்த நாவல். கதாநாயகனை பெரியாரியத்தின் பக்கம் இழுக்கும் பாலகிருஷ்ணன். காதல் பக்கம் தள்ளும் நீலா, மார்க்சியத்தில் பக்கம் வசீகரிக்கும் தோழர், மண்ணின் மைந்தர் தண்டபாணி ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்கள். வேலையில்லாத இளைஞன் மன உளைச்சல், குடும்ப உறவு, காதல், வேலை வாய்ப்பு, அரசியல் அலைக்கழிப்பு […]

Read more

வடகரை

வடகரை, டாக்டர் மு. ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். அகநி, வந்தவாசி, விலை 400ரூ. ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் மு. ராஜேந்திரன் எழுதியுள்ள வடகரை என்ற ஒரு வம்சத்தின் வரலாறு நூல். அவரது குடும்பத்தினரின் 600 ஆண்டு வம்ச வரலாறு மட்டுமல்ல, தென் மாவட்டங்களின் குறிப்பாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி போன்ற மாவட்டங்களின் கலாச்சார வரலாறு. ஏதோ காதில் விழுந்த செய்தியாக எழுதாமல் 600 ஆண்டு சம்பவங்களையும், ஆதாரத்தோடு அத்தனை விவரங்களையும் திரட்டி எதையும் ஒளிக்காமல் எழுதியிருக்கிறார். குடும்பங்களில் இன்று இழந்து கொண்டு இருக்கும் பாசப்பிணைப்புகள் […]

Read more
1 2 3 4 5 6 9