என் ஜன்னலுக்கு வெளியே

என் ஜன்னலுக்கு வெளியே, மாலன், புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை – 32, விலை 100 ரூ. நீங்கள் இந்தத் தேசத்தை நேசிப்பவராக இருந்தால், ஏழைகள் மீது கருணை கொண்டவராக இருந்தால், எதிர்காலத்தின் மீது நம்பிக்கை உள்ளவர் என்றால், இலவசங்களை அள்ளிக்கொடுப்பதாகச் சொல்லி வாக்கு கேட்டு வருபவர்களை நிராகரியுங்கள் என்று மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறார் மாலன். ஜன்னலுக்கு உள்ளே இருந்துகொண்டு என்னதான் ஆக்கபூர்வமாகச் சிந்தித்தாலும், அவையெல்லாம் அம்பலம் ஏற முடியாத சமுதாயக் கட்டமைப்பில் நாம் உழன்றுகொண்டிருக்கிறோம் என்பதை நன்றாக உணர்ந்தவர்தான் மாலன். இருந்தாலும் ‘இமைப்பொழுதும் […]

Read more

வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்)

மலைப்பாதையில் நடந்த வெளிச்சம், பத்மஜா நாராயணன், டிஸ்கவரி புக் பேலஸ் (பி)லிட், விலை 70 ரூ கவிஞர் பத்மஜா நாராயணனின் கவிதைத் தொகுப்பைப் படிக்கும்போது, ஒவ்வொரு கவிதையும் அவரவர் தம் சுய அனுபவங்களோடு ஒத்துப் போகிற பாதிப்பை ஏற்படுத்துகிறது. ‘உனக்கும் எனக்கும் நடுவே அலைகின்றன, நமக்கான வார்த்தைகள்’ என்கிற வரிகள், வாழ்வின் ஏதாவது ஓர் இடத்தில் தவிர்க்க முடியாததுதானே… ‘எல்லாப் பொறிகளிலும் இலகுவாய் போய் சிக்கிக் கொள்கிற சுயம். எந்தப் பொறிக்கும் வேண்டப்படாத வஸ்துவாய் பொறியிலிருந்து இடதுகையால் தூக்கி எறியப்படும் நானானது மற்றொரு பொறியில்தான் […]

Read more

இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி

  இலக்கியக் காதலில் இலக்கணச் சுருதி, ஜெயம் கொண்டான், ஸ்ரீ கள்ளழகர் பதிப்பகம், 41, காமராசர் சாலை, அசோக்நகர், சென்னை – 600083, விலை 60 ரூ. தம்முடைய பள்ளிப் பருவ காலத்தில் தோன்றிய சினேகித சினேகிதங்கள் நட்பின் இலக்கணச் சுருதிகளை அவர்களிடம் இருந்து கண்டதையும் கேட்டதையும் பார்த்ததையும் கற்றதையும் இந்நூலில் அழகாக மீட்டியுள்ளார் கவிஞர் ஜெயம் கொண்டான். கவிதையே மௌனமாக இருந்து என்னைப் பேச வைத்தாய்… நான் பேச ஆரம்பித்ததும் நீ மௌனமாகிவிட்டாய். இதுபோன்ற எளிய யதார்த்த புனைவு இந்தக் கவிதை நூல். […]

Read more

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் மனிதனின் நிரந்தரத் தேடல்

மனிதனின் நிரந்தரத் தேடல் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 1, விலை 150 ரூ. நான் தியானம் செய்ய ஆரம்பித்த போது அதில் இவ்வளவு ஆனந்தம் காண்பேன் என நான் ஒருபோதும் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல எவ்வளவு அதிகமாக நான் தியானித்தேனோ அவ்வளவு எனது அமைதியும், ஆனந்தமும் அதிகரித்தன’ என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர். தினசரி வாழ்க்கையில் இறைவனை உணர்வதைப் பற்றிய சொற்பொழிவுகள், கட்டுரைகளின் தொகுப்பை அண்மையில கொல்கத்தாவிலுள்ள ‘யோகோதா சத்தங்க […]

Read more

1945ல் இப்படியெல்லாம் இருந்தது…

நினைவு அலைகள், டாக்டர் தி.சே.சவு. ராஜன், சந்தியா பதிப்பகம், பக்கங்கள் 352,விலை 225 ரூ. இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் மிகவும் மதித்துப் போற்றப்பட வேண்டியவர், இந்நூலின் ஆசிரியர் டாக்டர் தி.சே.சவு.ராஜன். 1947ல் வெளிவந்த பதிப்பிற்குப்பின், தற்போதுதான் இந்நூல் வெளிவந்துள்ளது. ராஜனின் சுயசரிதையாக இந்நூல் இருப்பினும், விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட பலரின் நிகழ்வுகளும் உள்ளன. அக்கால சிறைக் கொடுமை குறித்தும், தேர்தல் குறித்தும், ஹரிஜன சேவை குறித்தும், அவர் எழுதியுள்ள நிகழ்வுகள், படிக்கப்படிக்க, ஒரு நாவலைப் படிக்கும் விறுவிறுப்புடன் உள்ளன. நூலிற்கு, கல்கி எழுதியுள்ள முன்னுரை […]

Read more

குமுதம் புத்தக அறிமுகங்கள் – 29.08.2012

வீடு நெடும் தூரம் ரவி பக்கங்கள் 240 விலை 160ரூ பரிசல் பதிப்பகம் அகிம்சை வழியில் தொடங்கிய இலங்கைத் தமிழர்கள் சுதந்திரப் போராட்டம், ஆயுதப் போராட்டமாக உருமாறிய காலத்தைப் பற்றிய, ஒரு முன்னாள் போராளியின் அனுபவப் பகிர்வு இந்தப் புத்தகம். 1972-1986 வரை பதினைந்து வருட காலம் ஈழத்தில் என்ன நடந்தது என்பதை அப்படியே பதிவு செய்துள்ளார். ஏன் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள்? ஏன் இலங்கைத் தமிழர்கள், ‘எங்களால் சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது’ என்று சொல்கிறார்கள்? போன்ற பல கேள்விகளுக்கு இந்தப் […]

Read more

பார்த்திபன் கனவு

பார்த்திபன் கனவு – அமரர் கல்கி; பக்.384; ரூ.75; நக்கீரன் வெளியீடு, சென்னை-14 கவித்துவமான சொற்பெருக்கு, ஜீவநதியின் ஓட்டம் போன்ற சரளமான எழுத்து நடை. முற்போக்குச் சிந்தனை, தியாக உணர்வு என்று பன்முகக் கலவை அமரர் கல்கி. உயிரோட்டமான அவரது ஒவ்வொரு படைப்பும் இதற்குச் சாட்சி. சரித்திர பார்வையுடன் சமூக நோக்கும் கொண்ட பார்த்திபன் கனவு நாவல், மூன்று பாகங்களைக் கொண்டது. நரசிம்ம பல்லவன், குந்தவை, விக்கிரமன் பாத்திரங்கள் வரும் காட்சிகளின் விறுவிறுப்பு வாசகர்களை நூலை கீழே வைக்காது படிக்க வைக்கும். சோழமன்னர் பார்த்திபன் […]

Read more
1 10 11 12