சிந்தனையின் சிற்பங்கள்

சிந்தனையின் சிற்பங்கள், கவிஞர் சொ.பொ. சொக்கலிங்கம், பூம்புகார் பதிப்பகம், விலை 80ரூ. சிந்தனையில் தோன்றிய கருத்துக்களை, கவிதைகளாக வடித்துத் தந்துள்ளார் கவிஞர் சொ.பொ. சொக்கலிங்கம். அந்தக் கவிதைகள், அழகிய சிற்பங்கள் போல நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 27 கவிதைகள், “இனப்பற்றும், மொழிப்பற்றும், இந்நாட்டுப் பற்றும் விட்டு, இளைஞர் எல்லாம் வெளிநாட்டில் இடர்ப்படுதல் யார் குற்றம்?” என்று கேட்டு, தம் சிந்தனையைத் தூண்டுகிறார். கவிதைகள் உண்மையில் அழகிய சிற்பங்கள்தான். இந்த நூலில், ஆசிரியரின் 4 சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன. சிறுகதைகள் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாக, “பள்ளிப்படைச் […]

Read more

சின்ன அண்ணி

சின்ன அண்ணி, தேவி வெளியீடு, விலை 140ரூ. இயல்பான ஏழைகளின் வாழ்க்கை, வாழ்க்கையின் அன்றாடப் பிரச்சினைகள், பாத்திரப் படைப்புகள், வர்ணனைகள், வட்டார வழக்குகளைப் புகுத்தி, அந்த மண்ணுக்குரிய மேன்மைகள், மென்மைகளை கதாபாத்திரம் மூலம் வாசகர் நெஞ்சில் பதிய வைக்கும் எழுத்தாளர் உமா கல்யாணி, அருமையான நாவலை படைத்திருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 1/4/2015.   —- இது சக்சஸ் மந்திரம் அல்ல, சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 85ரூ. தொழிலில் வெற்றி பெற கடின உழைப்பு தவிர்த்து வேறு சில காரணிகளும் தேவை என்பதை […]

Read more

அனுபவச் சுவடுகள்

அனுபவச் சுவடுகள், கே.எஸ். சுப்பிரமணியன், கவிதா வெளியீடு, சென்னை 17, பக். 192, விலை 125ரூ. நூலாசிரியரின் வாழ்க்கை அனுபவங்களைக் கூறும் நூல். தமிழகத்தின் முன்னாள் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம், எழுத்தாளர் ஜெயகாந்தன், பணி நிறைவு பெற்ற நீதிபதி சந்துரு, அமர்சேவா சங்கத்தின் ராமகிருஷ்ணன் ஆகியோருடனான தனது நட்பு குறித்து நூலாசிரியர் விவரித்துள்ள சம்பவங்களின் மூலம் அவர்களைப் பற்றிய புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது. இதேபோல, பிலிப்பைன்ஸில் ஆசிய வளர்ச்சி வங்கியில் பணியாற்றியபோது தனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களையும் சுவைபட விவரித்துள்ளார். பிலிப்பைன்ஸ் […]

Read more

கடைசிக்கோடு

கடைசிக்கோடு, இந்தியாவின் வரைபடம் பிறந்த கதை, ரமணன், கவிதா வெளியீடு, விலை 80ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-187-6.html பொறாமைப்படவைக்கும் ஒரு புத்தகம் நில அளவைத்துறை என்கிறார்கள் இன்றைக்கு சங்கிலிப் பிடித்து நூறு நூறு அடியாக இந்தத் தேசம் முழுவதையும் அளந்து வரைபடமாகத் தயாரித்தவர்கள் அந்த சர்வே துறையில் பிள்ளையார் சுழியிட்ட இரண்டு வெள்ளைக்கார அதிகாரிகள். 1802ஆம் ஆண்டில் சென்னை நகரத்து மெரினா கடற்கரையில் கேப்டன் வில்லியம் லாம்ப்டன் என்பவர் முதல் அளவைக் கோட்டை வரைந்து தொடங்கிய இந்தப் […]

Read more

ஏன் எங்கே எப்படி?

ஏன் எங்கே எப்படி?, வாண்டுமாமா, கவிதா வெளியீடு, தபால் பெட்டி எண்-6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 350ரூ. மூளைக்கு வேலை 80-90களில் குழந்தைகளாக இருந்தவர்களைக் கவர்ந்த எழுத்தாளர் வாண்டுமாமா. பொதுஅறிவு சார்ந்து சிந்திக்கத் தூண்டிய அவர், தகவல்களில் துல்லியம், சரியான அயல்மொழி சொல் உச்சரிப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தியவர். ஒரு பொது அறிவுத் தகவலை வெறும் தகவலாக மட்முல்லாமல் அதன் பல்வேறு பரிமாணங்களை எடுத்துக்காட்டுவதில் வல்லவர். எல்லாவற்றுக்கும் மேலாகக் குழந்தைகளைக் கவரும் எளிய மொழியில் எழுதியது அவரது […]

Read more

மலரும் நினைவுகளில் மக்கள் தலைவர்

மலரும் நினைவுகளில் மக்கள் தலைவர், கே. இளந்தீபன், கவிதா வெளியீடு, 8/55, மேற்கு சாலைத் தெரு, சுந்தரப் பெருமாள் கோவில், கும்பகோணம் 614208, பக். 104, விலை 100ரூ. மக்கள் தலைவர் மூப்பனார் பற்றிய நினைவுகளின் தொகுப்பு நூல். மூப்பனார் மறைந்ததும் கலைஞர், ஜெயலலிதா, வைகோ உள்ளிட்ட தமிழக தலைவர்கள், ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள், வாலி, வைரமுத்து உள்ளிட்ட கவிஞர்கள் இன்னும் கட்சி பேதமின்றி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி அன்பர்களிடமும் மூப்பனார் பற்றிய மேலான நினைவுகளை நூல் […]

Read more

விட்டு விடுதலையாகி

விட்டு விடுதலையாகி, வாஸந்தி, கவிதா வெளியீடு, பக். 408, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-099-1.html இது ஒரு சமூக நவீனம் தான் என்றாலும், வரலாற்றுச் சிறப்புடையதாகவும் மிளிர்கின்றது. மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்பது ஓர் உயரிய கருத்து வெளிப்பாடு. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்பது ஓர் ஆவேசக் கருத்தின் குரல். சரி, மாதர் தம்மை எப்படியெல்லாம், இந்தச் சமூகம் ஒரு காலத்தில் இழிவு செய்து கொண்டிருந்தது? இந்த மூன்றின் கலவையாக […]

Read more

சாலப்பரிந்து

சாலப்பரிந்து, நாஞ்சில் நாடன், காலச்சுவடு, பக். 240, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-797-3.html நாஞ்சில் நாடனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், சிலவற்றைத் தொகுத்துள்ளார். க. மோகன ரங்கன் 25 சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. வடிவம், செறிவு, துல்லியம், முடிவை நோக்கிய விரைந்த நடை என்பது போன்ற, அளவீடுகளைத் தாண்டி, கதாபாத்திரங்களின் குண இயல்புகளைத் தாண்டி, கதாபாத்திரங்களின் குண இயல்புகளுக்கு ஏற்ற மொழி நடையில், பண்பாட்டின் சாரம் உள்பொதிய எழுதப் பெற்று உயரிய கதைகள். கதைகளின் ஊடே அவர் வெளிப்படுத்தும், […]

Read more

பாஷாவும் நானும்

பாஷாவும் நானும், வெளியிட்டோர்: வெஸ்ட்லேண்ட், வெங்கட் டவர், 165, பூந்தமல்லி ஐரோடு, மதுரவாயல், சென்னை – 95. விலை ரூ. 125 ரஜினிகாந்த்தின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல்கல் “பாட்ஷா.” அவர் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, வசூல் சக்ரவர்த்தி என்று எடுத்துக்காட்டிய படம். ரஜினி நடித்த பாட்ஷா, அண்ணாமலை, வீரா ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர் சுரேஷ்கிருஷ்ணா. பாட்ஷா படமாகும்போது நடந்த சுவையான சம்பவங்கள், படப்பிடிப்பில் ரஜினி காட்டிய ஆர்வம், படத்தில் செய்யப்பட்ட மாறுதல்கள்… இவைகளை எல்லாம் கதைபோல் எழுதியிருக்கிறார்கள், சுரேஷ் […]

Read more