கலிங்கத்துப் பரணி

கலிங்கத்துப் பரணி, உரையாசிரியர் – ஆ.வீ. கன்னைய நாயுடு, பக்கம் 392, முல்லை நிலையம், சென்னை – 17, விலை 175 ரூ. ஆயிரம் யானைகளை போரில் வென்ற ஆண்மை வாய்ந்த தலைமகனைச் சிறப்பித்துப் பாடுவது பரணி. தொண்ணூற்று வகை பிரபந்தங்களுள் ஒன்று. தமிழ்த்தரணி போற்றும் பரணிகள் பல உள்ளன எனினும், பரணி என்றதுமே நினைவுக்கு வருவதும், முதன்மையானதும் ஜெயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணியே. இதற்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆனால் படிப்போர் மிக எளிதாய்ப் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லுக்குச் சொல் என்ற அளவில் பதவுரையும், நீரோடைபோன்ற […]

Read more

ஸ்ரீவைஷ்ணவம் என்சைக்ளோபீடியா

செவ்வியல் இலக்கிய மணிமாலை, ம.சா. அறிவுடைநம்பி, பக்கம் 320, கருமணி பதிப்பகம், புதுச்சேரி-8, விலை 160 ரூ. தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நடைபெற்ற கருத்தரங்கம், பயிலரங்கம் ஆகியவற்றில் படிக்கப்பட்ட கட்டுரைகள், தினமணி, தமிழ் ஓசை ஆகிய நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள், அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பான சொற்பொழிவு என மொத்தம் 15 கட்டுரைகளால் கோக்கப்பட்ட இலக்கிய மணிமாலை. இலக்கணம், இலக்கியம், அறநெறி, அரசியல், அறிவியல், மதுவிலக்கு, பழந்தமிழர் வாழ்வு, விருந்தோம்பல், கனவுகள், சிந்தனைகள், இசைக்குறிப்புகள் என்ற இவை அனைத்தையும் உள்ளடக்கிய கட்டுரைகளின் சாரம் செவ்வியல் […]

Read more

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர்

நல்லறம் வளர்த்த வள்ளல் பச்சையப்பர், எஸ்.பரதன், திருமதி மருதேவி பரதன் அறக்கட்டளை, 2980, ழ பிளாக், அண்ணாநகர், சென்னை-40. பக்.174, விலை 150 ரூ. ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் நல்லறம் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு செயலாற்ற முடியும் என்பதற்கு வள்ளல் பச்சையப்பரின் வாழ்வே ஓர் உதாரணம். அதுவும் நாற்பதே ஆண்டுகள் (1754 -1794) இவ்வுலகில் வாழ்ந்த ஒருவர், இத்தனை அறச் செயல்கள் ஆற்றியிருப்பது வியக்கத்தக்கது. குறிப்பாக, கல்விக்கும் ஆன்மிகத்துக்கும் அவர் வழங்கியுள்ள கொடைகள் சமூகப் பயன்பாடு மிக்கதும், காலத்துக்கும் அவர் புகழை நிலைநிறுத்துவதுமாகும். துபாஷி […]

Read more

கிருபானந்த வாரியாரின் தமிழ் அமுதம்

கிருபானந்த வாரியாரின் தமிழ் அமுதம், பெ.கு. பொன்னம்பலநாதன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 108, பக்கக்ம் 256, விலை 125 ரூ. அறுபத்து நான்காவது நாயன்மார் என்று சைவப் பெருமக்களால் பாராட்டப்பட்ட கிருபானந்தவாரியாரின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சுவையாகச் சொல்லும் நூல். வாரியார் தனது ஒன்பதாவது வயதிலேயே மேடையேறிப் பேசியதும், பன்னிரண்டாவது வயதிலேயே பத்தாயிரம் பாடல்களை மனப்பாடமாகப் பயின்றதும் மைசூர் சென்று வீணை வாசிக்கக் கற்றுக்கொண்டதும் சுவையான தகவல்கள். சைவ, வைணவ நூல்களைப் பயின்றதைப் போலவே வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள் போன்றவற்றையும் அவர் ஆழ்ந்து பயின்றிருக்கிறார். […]

Read more

விதைகள்

விதைகள், தொகுப்பு நூல், வெளியீடு: பூவுலகின் நண்பர்கள், ஏ2, அலங்கார் பிளாசா, 425, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை – 10, விலை 70 ரூ. இந்திய விவசாயத்தின் பேரழிவு பசுமைப் புரட்சிக்குப் பின் துவங்குகிறது. நவீன வேளாண்மை முறையும் உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் அதிகபட்ச உற்பத்தி என்ற மாயவலையின் மூலம் நமது இயற்கையான வேளாண் ஆதாரங்களை நிர்மூலமாக்கிவிட்டன. அகில உலக தாவர மரபியற் வளங்களுக்கான அமைப்பின் கீழ், பல்வேறு நாடுகள் மரபுக்கூறு வங்கிகளை அமைக்கின்றன. அவை அந்த நாடுகளிலிருந்து உயிர் ஆதாரங்கள் […]

Read more

ஸ்ரீ சேஷாத்ரி மகான் வரலாறும் பக்தர்களின் நேரடி அனுபவங்களும்

ஸ்ரீ சேஷாத்ரி மகான் வரலாறும் பக்தர்களின் நேரடி அனுபவங்களும், சேஷ. அனு. வெண்ணிலா, மேகதூதன் பதிப்பகம், சென்னை – 5, விலை 240 ரூ. மகான்களின் சரிதங்களை, ‘இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கப் போகிறது’ என்று மனம் சலனப்படாமல் ஆழ்ந்து படிக்கவேண்டும். திருவண்ணாமலையில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்து சித்தியடைந்த மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் வரலாறும் அத்தகையதுதான். வாழ்க்கை வரலாறு மட்டுமின்றி சுவாமிகளோடு பழகும் பேறு பெற்ற பலரின் ஆன்மிக அனுபவங்களையும் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் இந்த நூலை எழுதியுள்ள சேஷ. அனு. வெண்ணிலா. […]

Read more
1 2 3