உணவு சரித்திரம்

உணவு சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 304, விலை 225ரூ. தமிழில் சரித்திர நூல்கள் பல எழுதியிருக்கும் முகில், உலக வரலாற்றில் நடந்த சில சம்பவங்களை, உணவோடு சேர்த்து எளிய நடையில் படைத்துள்ள நூல்தான் உணவு சரித்திரம். ஆதிமனிதன் முலம் அவசரயுக மனிதன் வரை ருசிக்கும் சில உணவுகளையும், அவை பெற்றுள்ள மாற்றங்களையும் எழுத்தில் சுவையூட்டித் தந்துள்ளார் நூலாசிரியர். உப்பு, மிளகு, பெருங்காயம், எள், மரவள்ளி ஆகியவற்றின் பின்னால் இப்படியொரு உலக வரலாறு இருப்பதைப் படிக்கும்போது வியப்பின் எல்லைக்கே சென்றுவிடுகிறோம். உணவு சரித்திரம் […]

Read more

சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்

சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள், நீதி கேட்ட நிரபராதி சிறைக்குப் போன கதை, செந்தமிழ்க்கிழார், நர்மதா பதிப்பகம், பக். 432, விலை 200ரூ. கவிதையையும், இலக்கியத்தையும் விரும்பிய, அதிகம் படித்திராத சமூக ஆர்வலரான செந்தமிழ்க்கிழார் தனது சிறை அனுபவங்களைத் தொகுத்து புத்தகமாக எழுதியிருக்கிறார். 1997-இல் தமிழகத்தையே உலுக்கியது சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு கொலை வழக்கு. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூத்த மாணவர் ஜான் டேவிட்டை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது தொடர்பாக, செந்தமிழ்க்கிழார் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் […]

Read more

பிளேட்டோவின் குடியரசு

பிளேட்டோவின் குடியரசு, தமிழாக்கம் ஆர். இராமானுஜாசாரி, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 412, விலை 230ரூ. மண்ணிலேயே விண்ணரசு ஏற்படுத்த முடியுமா? முடியும் என்கிறது பிளேட்டோவின் குடியரசு. சாக்ரடீஸ் தன்னுடைய மாணவர்களுடன் நடத்தும் உரையாடல்தான் இந்த புத்தகம். இந்த உரையாடல்கள் மூலம் ஒரு சிறந்த குடியரசுக்கான அடிப்படை எவை, அவை எவ்வாறு அமையும், அதில் ஆட்சியாளர்கள், நீதிமான்கள், காவலர்கள், தகுதிகள் என்ன? அத்தகைய குடியரசில் இளைஞர்கள் எப்படி வளர்த்தெடுக்கப்பட வேண்டும், இத்தகைய குடியரசில் எவை தீமைக்கு இடம் அளிக்கும், எவை நன்மையைச் சேர்க்கும், எத்தகைய […]

Read more

வீழியும் காழியும்

வீழியும் காழியும், சண்முக. செல்வகணபதி, செ. கற்பகம், தஞ்சை பெரியகோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர், பக். 96, விலை 100ரூ. திருஞானசம்பந்தர் அவதரித்த, அவருக்கு அம்மையப்பராகத் தோணியப்பர் காட்சி அளித்த சீகாழி என்கிற சீர்காழியும், திருமால் நாள்தோறும் ஆயிராம் தாமரை மலர்களால் சிவபெருமானை அர்ச்சித்து சக்கராயுதம்பெற்ற திருவீழிமிழலையும் தேவாரப் பாடல் பெற்ற சிறப்புக்குரிய தலங்களாகும். காழிபாதி வீழிபாதி என்னும் வழக்காறு பெற்ற திருத்தலம் திருவீழிமிழலை. திருஞானசம்பந்தரும் அப்பரடிகளும் படிக்காசு பெற்று, மக்களின் பஞ்சத்தைப் போக்கிய பஞ்சம் துர்த்த தலமாகவும், ஞானசம்பந்தருக்கு சீர்காழி தோணியப்பர் […]

Read more

தேவாங்கர் குல தெய்வ வழிபாடு

தேவாங்கர் குல தெய்வ வழிபாடு, கவிஞர் பாப்ரியா, மாஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 292, விலை 150ரூ. ஆடையும் நூலும் தந்த தேவல மகரிஷி ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று கூறப்பட்டாலும், ஊருக்கு ஊர், குலத்திற்கு குலம் எண்ணற்ற குலதெய்வ வழிபாடு வழக்கத்தில் இருப்பதை யாரும் மறுக்கவியலாது. திருமண பத்திரிகைகளை பிரித்து பார்த்தால், வெவ்வேறு குலதெய்வங்களின் உருவங்கள், பெயர்களை பட்டியலிட முடியும். அந்த குல தெய்வங்களின் புராண வரலாற்றை ஆய்வு செய்தால், அவை சார்ந்த மனித இனங்களின் பூர்வோத்தரம் புலப்பட்டுவிடும். சிவன், திருமால், முருகன், […]

Read more

சோபியின் உலகம்

சோபியின் உலகம், தமிழில் ஆர். சிவகுமார், காலச்சுவடு பதிப்பகம். மகளுக்கு தந்தையின் பிறந்த நாள் பரிசு நார்வே மொழியில் யோஸ்டைன் கார்டர் எழுதி, ஆங்கிலத்துக்கு வந்து, தமிழில் ஆர்.சிவகுமார் மொழியாக்கம் செய்து, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள, சோபியின் உலகம் என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். நாவல் 19955ல் வெளியானபோது, பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. ஆங்கிலத்தில், திரைப்படமாகவும் வந்துள்ளது. தமிழ் மொழிபெயர்ப்புக்காக, இந்த ஆண்டின் தமிழ் பேராய விருதைப் பெற்றுள்ளது. நார்வே நாட்டில் நடக்கும் இந்த கதையின் நாயகி சோபி. அவரது […]

Read more

பொற்றொடி பங்கனும் பூமகள் கேள்வனும்

பொற்றொடி பங்கனும் பூமகள் கேள்வனும், திருவின் நாயகன் தொகுப்பு, உமா பதிப்பகம், பக். 264, விலை 120ரூ. ராவணனின் பெருமைகளையும், அவனது முறையற்ற செயல்களையும் சைவ, வைணவ நூல்களின் துணையுடன் தொகுப்பாசிரியர் மிக அருமையாக, பதிவு செய்துள்ளார். ராவணன் என்ற சொல்லிற்கு அழுதவன், பிறரை அழவைத்தவன் என்று பொருள் (பக். 9). ராவணன் தவவலிமையால் பெற்ற வரம் (பக். 20), தசமுகன் எனும் பெயரை, ராவணன் எனும் இறவாப் பெயராக சிவபெருமான் ஈந்தது (பக். 38), ராமன் கடல் கடந்து செல்லும் முன்பாக, பிரயோபவேசம் […]

Read more

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு, கேரன் மெக்ரீடி, தமிழில் எஸ்.ராமன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 512, விலை 300ரூ. சுவாமி விவேகானந்தரின் பத்து கட்டளைகளை பின்பற்றி, ஒரு தமிழர் அடைந்த வெற்றியை விவரிக்கிறது, இந்த நூல். ஆஸ்திரேலியாவில், கிரேட்டர் ஸ்பிரிங் பீல்டு என்ற மாபெரும் நகரத்தை உருவாக்கிய, தமிழரான, மஹா சின்னத்தம்பியின் வாழ்க்கை வரலாற்றை நூல் விவரிக்கிறது. விவேகானந்தரின் தத்துவத்தை முதலில் விவரித்துவிட்டு, அதன் தொடர்ச்சியாக, மஹா சின்னத்தம்பியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கோர்ப்பதில், நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். மஹா சின்னத்தம்பி தோல்வியை, […]

Read more

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள்

கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்கள், மதுரை இளங்கவின், காவ்யா வெளியீடு, பக். 422, விலை 400ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024572.html தமிழுக்குத் தொண்டு செய்த கிறிஸ்தவத் தமிழ் தொண்டர்களாக, முதல் பகுதியில் 72 பேர், இரண்டாம் பாகத்தில், 83 பேர் ஆக மொத்தம், 155 தொண்டர்கள் பற்றிய வரலாற்று இலக்கியக் குறிப்புகள் இதிலடக்கம். ஒப்பிலக்கணம் படைத்த கால்டுவெல், பைபிளைத் தமிழில் அச்சேற்றிய சுகன் பால்கு, திருக்குறள், திருவாசகம், சிவஞான போதத்தை ஆங்கில மொழியாக்கம் செய்த ஜி.யூ.போப், முதலில் தமிழை, 1555ல் […]

Read more

கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை

கைக்கு எட்டும் தூரத்தில் அழகு 6 லிருந்து 60 வரை, ராஜம் முரளி, எழுத்தாக்கம் பிரேமா நாராயணன், விகடன் பிரசுரம், பக். 168, விலை 110ரூ. அழகைப் பராமரிப்பது என்றதுமே நமக்கு உடனே இந்த ஷாம்புவைப் பயன்படுத்துங்கள். இந்த சோப்பை உபயோகியுங்கள் என்பன போன்ற விளம்பரங்கள்தாம் நினைவுக்கு வரும். இதற்கு மாறாக, தலை முதல் பாதங்கள் வரை அழகுபடுத்த இந்நூலாசிரியர் சொல்லியிருக்கும் அழகு சாதனப் பொள்கள் எல்லாமே நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் சாதாரண, இயற்கைப் பொருள்கள்தாம். அந்த இயற்கை அழகு சாதனப் பொருள்களைத் […]

Read more
1 2 3 4 7