காமராஜ் புதிரா? புதையலா

காமராஜ் புதிரா? புதையலா, எஸ்.பி. கணேசன், காமராஜ் விழிப்புணர்வு மையம், விருதுநகர், பக். 192, விலை 70ரூ. வட மாநிலங்களை விட கல்வி, தொழில் வளர்ச்சி, அணைக்கட்டு, மின்சாரம் என்று பல்வேறு துறைகளில் தமிழகம் இன்றும் முன்னிலையில் இருப்பதற்குக் காரணம், பெருந்தலைவர் காமராஜ் என்றால் அது மிகையாகாது. எளிய குடும்பத்தில் பிறந்து, பள்ளிக் கல்வி மட்டுமே கற்று, எந்தவொரு பின்னணியும் இன்றி, காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்களுக்கு இணையாக அரசியலிலும், மக்கள் மனதிலும் உயர்ந்த இடத்தைப் பிடித்தவர் காமராஜ். தமிழக முதல்வராக ஒன்பது […]

Read more

445

குமரி மாவட்டத் தமிழ் வழக்கு, முனைவர் ச. சுஜாதா, சேகர் பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழ் வழக்கு , மொழிச்சுழல், கிறிஸ்தவ நாடார் வட்டார வழக்கின் இயல்புகள் ஆகிய தலைப்புகளில் நூலாசிரியர் ஆராய்ச்சி செய்த தகவல்கள் அடங்கிய நூல். வட்டார வழக்கியல் ஆய்வுக்கு மட்டும் அல்லது மொழி ஆய்வுக்கும் மொழியியல் ஆய்வுக்கும் இந்த நூல் பெரிதும் துணைபுரியும். நன்றி: தினத்தந்தி, 26/8/2015.   —-   பிரியாணி சமையல், கிழக்கு பதிப்பகம், விலை 100ரூ. 100 வகை வெஜிடெபிள் பிரியாணி […]

Read more

ஊரடங்கு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு, வெர்சோ பேஜஸ் வெளியீடு, புதுச்சேரி, விலை 200ரூ. 1979-ம் ஆண்டு புதுச்சேரியை தமிழ் நாட்டோடு இணைக்க, அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் முடிவு செய்தார். இது அங்குள்ள மக்களின் உணர்வைக் கிளறி விட்டது. குடியரசு தினம் தொடங்கி 10 நாட்கள் புதுச்சேரி போராட்டக் கனமானது. இந்த நூலில், அந்த நிகழ்வுகளைப் பத்திரிகையாளர் பி.என்.எ ஸ். பாண்டியன் பதிவு செய்துள்ளார். இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தோடு, புதுச்சேரியின் பிரதேச வரலாறு மற்றும் அரசியல் வரலாற்றில் நடந்த பல்வேறு வெளிவராத சுவாரசியமான சம்பவங்களையும் அழகுற விவரிக்கிறார். […]

Read more

தமிழுக்கு ஆஸ்கார்

தமிழுக்கு ஆஸ்கார், முனைவர் வெ. மு. ஷாஜகான் கனி, மதுரை, விலை 110ரூ. சினிமா ரசிகர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. காரணம், ஆஸ்கார் பரிசு பற்றிய விவரங்கள் அனைத்தும் இதில் உள்ளன. ஆஸ்கார் பரிசு பெற்ற படங்கள் பற்றிய விவரங்களும் உண்டு. தமிழ்ப்படங்கள் ஆஸ்கார் பரிசு பெற வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயற்கை. வாய்ப்பு உண்டு என்கிறார் இந்த நூலின் ஆசிரியர். சிறந்த வெளிநாட்டுப் படம் என்ற தலைப்பில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆஸ்கார் பரிசு […]

Read more

சித்தர் களஞ்சியம்

சித்தர் களஞ்சியம், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. சித்தர்களின் கோட்பாடுகள் மக்களுக்குத் தரமான வாழ்க்கையையும், சமநிலையையும், சீரான வளர்ச்சியையும் தர வல்லன. அத்தகைய சித்தர்களின் குறிக்கோள்களையும், சிந்தனைகளையும், அற்புதங்களையும் இந்த நூலில் முத்துக் கொத்தள மாரியப்ப செல்வராஜ் விரிவாக எடுத்துரைக்கிறார். இந்த நூல் சித்தர்கள் குறித்த பிற நூல்களில் இருந்து பெரிதும் வேறுபட்டது. சித்தர்கள் பற்றிய ஆய்வு பூர்வமான, அறிவியல் பூர்வமான பல செய்திகள் மிக நுணுக்கமாக கூறி இருக்கிறார். சித்த ஆர்வலர்களுக்கும், நெறியாளர்களுக்கும் இந்த நூல் ஒரு பொக்கிஷம். நன்றி: தினத்தந்தி, […]

Read more

பல்லவர் வரலாறு

பல்லவர் வரலாறு,டாக்டர் மா. இராசமாணிக்கனார்,  ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000010375.html தமிழகத்தை ஆண்ட மன்னர்களில், பல்லவ மன்னர்கள் மற்றவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர். பல்லவர்கள் ஏழு நூற்றாண்டுகள் வரை தமிழ்நாட்டில் மன்னர்களாக ஆண்டு புகழ் பெற்றவர்கள். ஆனால் அவர்களுடைய பண்டைக்குலம், இன்னதென்று உறுதியாகக் கூறுவார் எவருமிலர். அவர்களது ஆட்சிக்காலத்தில் அரிய பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன என்பதை எவரும் மறுக்க முடியாது. குறிப்பாக பல்லவ மன்னர்களின் இறைப்பணி அனைவராலும் இன்றளவும் பாராட்டப்படுகிறது. இறைப்பணி என்றாலே […]

Read more

திருக்குறள் (தமிழ் ஆங்கில உரை)

திருக்குறள் (தமிழ் ஆங்கில உரை), நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 200ரூ. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு என்பது பாரதியாரின் பாராட்டுரை. வள்ளுவர் தந்த பொதுமறையாம் திருக்குறள், தனி மனித ஒழுக்கம் உயர்வடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் எழுதப்பட்டது. திருக்குறளுக்கு பலரும் உரை எழுதியுள்ளனர். இருந்தபோதிலும், ‘திருக்குறள் தூதர்’ மு.க. அன்வர் பாட்சா, எளிய உரையை எல்லோருக்கும் புரியும் வகையில் தந்திருக்கிறார். மேலும், ஆங்கிலம் அறிந்த மாணவர்கள் பயனடையும் வகையில் பாதிரியார்கள் டபிள்யூ.எந்.ட்ரூ, ஜான் லாசரஸ் […]

Read more

இருள் நீக்கி

இருள் நீக்கி, தொகுப்பாசிரியர் ஆர். கரிகாலன், கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட், பக். 208, விலை 95ரூ. சனாதன தர்மம் என்று கூறப்படும் ஹிந்து மதம், பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றியது என்றாலும், சுமார் 1500 வருடங்களுக்கு முன்தோன்றிய ஆதிசங்கரரால் இம்மதம் மறுமலர்ச்சி கண்டது. அவர் உருவாக்கிய காஞ்சி சங்கர பீடத்தின் தற்போதைய பீடாதிபதியான ஸ்ரீஜெயந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஹிந்து மதம் குறித்து எழுந்த பல்வேறு சந்தேகங்களுக்கு பல்வேறு சமயங்களில் அளித்த விளக்கங்களையெல்லாம், இந்நூலாசிரியர் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஹிந்து […]

Read more

சப்பெ கொகாலு

சப்பெ கொகாலு, ஒடியன் லட்சுமணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,  விலை 225ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000022871.html திருமணத்திற்கு முன் 3 நாள் வன வாழ்க்கை பழங்குடி மக்களின் வாழ்வை சித்தரிக்கும், ‘சப்பெ கொகாலு’ என்றால், இருளர் பயன்படுத்தும் துளை இசை கருவியின் பெயர். இந்த தொகுப்பில், பழங்குடிகளான இருளர்களின் வாழ்வியலை ஆசிரியர் விவரிக்கிறார். இருளர் என்ற சொல்லுக்கு கறுப்பர் என பொருள். இவர்களில் பல்வேறு குலங்கள் உள்ளன. பிறப்பு, இறப்பு, திருமணம், பிரசவம், உணவு […]

Read more

நரேந்திர மோடி சுவைமிகு தேநீர் துளிகள்

நரேந்திர மோடி சுவைமிகு தேநீர் துளிகள், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பூம்புகார் பதிப்பகம், பக். 176,விலை  270ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024551.html மோடிக்கு பிடித்த வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் நரேந்திர மோடி பற்றி, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எழுதிய நூல். மோடியைப் பற்றிய 160 செய்திகளை கொண்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தம், விவசாயிகளுக்கு எதிரானது, தொழில் துறையினருக்கு ஆதரவானது என்பது குற்றச்சாட்டு. குஜராத்தில் 1960லிருந்து 2000ம் ஆண்டு வரையில், சொட்டு நீர் பாசனம் நிலம், 12 […]

Read more
1 2 3 4 5 6 7