இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு, கேரேன் மெக்ரீடி, தமிழில் எஸ். ராமன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. இலங்கை மலேசியத் தமிழராக ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த மஹாலிங்கம் சின்னத்தம்பியின் வாழ்க்கை வரலாறு இந்த நூல். 1939ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். மஹாலிங்கத்திற்கு சிறுவயது முதலே நேர்மறைச் சிந்தனைகளும், வெற்றி கிடைக்கம் வரை அயராது முயற்சி செய்யும் பண்பும் இருந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் மனிதர்கள் வசிக்க இயலாத மலையாக இருந்த ஸ்பிரிங் பீல்ட் மலையில் 2860 ஹெக்டேர் நிலத்தை […]

Read more

வடலிமரம்

வடலிமரம், ஐரேனிபுரம் பால்ராசய்யா, முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், பக். 124, விலை 80ரூ. பனைமரத்தின் விடலைப் பருவத்தை வடலிமரம் எனக்கூறுவது உண்டு. அதே விடலைப் பருவத்தை ஒத்த இருவரின் காதலில், அந்த மரத்தையும் காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். சாதியைக் காரணம் காட்டி காதலைப் பிரிக்கிறார் கதை நாயகனின் தந்தை. இதனால் மதுவுக்கு அடிமையாகும் நாயகனை நல்வழிப்படுத்தும் முயற்சியாக காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். கர்ப்பமுற்ற நிலையில் நாயகி காதலனை ஏற்கிறாளா அல்லது மறுக்கிறாளா என்பதை திரைப்பட பாணியில் காட்சியாக எழுதியுள்ளார் நூலாசிரியர். இடையிடையே காதலை, கவிதையாக தர […]

Read more

பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் 2ஆம் பாகம்

பாரதியியல் ஆய்வுக் கட்டுரைகள் 2ஆம் பாகம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 336, விலை 150ரூ. பாரதியாரைப் பற்றிப் படிக்கப் படிக்க புதுப்புது கருத்துகள் தோன்றிக்கொண்டே இருக்கும். இந்த நூலிலும் அதனை உணர முடிகிறது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் பல்வேறு காலகட்டங்களில் நூலாசிரியரால் கருத்தரங்குகளில் பேசப்பட்டவை, கட்டுரைகளாக வெளிவந்தவை. இந்த நூலில் 10 கட்டுரைகள் இருப்பினும் நான்கு கட்டுரைகள் மிக மிக முக்கியமானவை. 1. பாரதியாரும் இந்தியத் தத்துவமும், 2. முதல் பாரதி திறனாய்வாளர் சுவாமி விபுலானந்தர், 3. பாரதி புகழ் […]

Read more

தருணம் பார்க்கும் தருணங்கள்

தருணம் பார்க்கும் தருணங்கள், சொ.சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 320, விலை 240ரூ. வாழ்வில் ஏற்படும் சந்தர்ப்பங்களை நாம் எத்தகைய முறையில் பயன்படுத்துகிறோமோ, அதற்கேற்பவே நமது வாழ்வும் சிறப்படையும் என்பது முன்னோர் கருத்து, அதன்படி நூலின் தலைப்பு சந்தர்ப்பத்தைக் குறிக்கும் தருணம் என்ற பொருளிலே அமைந்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்த்தது, படித்தது, கேட்டது என தனக்கு ஏற்பட்ட சமூகத் தாக்கத்தையும், அவற்றால் தனக்கு ஏற்பட்ட சிந்தனை மாற்றத்தையும் ஒவ்வொரு கட்டுரையில் ஆசிரியர் இலக்கிய நயத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் நாடகங்களை அலசி ஆராயும் முதல் […]

Read more

ஸ்ரீ வியாசரின் மஹாபாரதம் (3 பாகங்கள்)

ஸ்ரீ வியாசரின் மஹாபாரதம் (3 பாகங்கள்), ஸ்வாமி, கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை, பக். 1230, விலை 900ரூ. உலக இலக்கியங்களிலே ஒப்புயர்வற்றது வியாசர் அருளிய மஹாபாரதம். இதில் இல்லாதது வேறு எதிலும் இல்லை என்னும் அளவுக்கு ஆன்மிகம், வாழ்வியல், அரசியல், உளவியல், வரலாறு, புவியியல் என அனைத்துத் தகவல்களையும் தன்னகத்தே கொண்டது. இப்போது வெளிவந்துள்ள இந்நூல், காலவோட்டத்துக்குத் தகுந்தபடி, நவீன காலத்துக்கு ஏற்ப நன்கு தொகுக்கப்பட்டுள்ளது. நூலாசிரியரின் சில விளக்கங்கள் ரசனையை மெருகேற்றுகின்றன. ‘ஜய’ என்ற சொல் மஹாபாரதத்தைக் குறிக்கும் சங்கேதச் சொல் […]

Read more

உரையியல்

உரையியல், பெ. மாதையன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 254, விலை 160ரூ. பெண்களை ‘பா’ போட்டு அழைக்கலாமா? தமிழ் இலக்கண, இலக்கிய உலகில், உரையாசிரியர்களின் உன்னத இடத்தை, இந்த ஆய்வு நூல் விரிவாக உரைக்கிறது. அகராதியின் சொற்பொருள், உரையாசிரியர்களின் விளக்கங்கள், மூலநூலை எளிதாக்கிவிடுகின்றன. தொல்காப்பியத்திற்கு, சேனாவரையரின் உரை, மறுப்புத்திறன் மிக்க உரையும், தெய்வச் சிலையாரின் மிக எளிய உரையும், திருக்குறளுக்கு மணக்குடவர் விளக்க உரையும், நற்றிணைக்கு பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் பதிப்பும், உரைநெறிகளும், அவ்வை துரைசாமிப்பிள்ளை பதிப்பும், பாட பேதங்களும், நாவலர் ந.மு. […]

Read more

வலி தீர வழிகள்

வலி தீர வழிகள், டாக்டர் எம். செந்தில்குமார், விகடன் பிரசுரம், பக். 192, விலை 120ரூ. உடலின் ஏதாவது ஒரு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால், நுண்ணிய நரம்புகள் மூலம், அந்த செய்தி மூளைக்கு உணர்த்தப்பட்டு, அந்த பகுதியில் வலி உணரப்படுகிறது. எந்த ஒரு நோய்க்கும் உடல் தரும் எச்சரிக்கை மணி, வலிதான். இந்த நூலானது பாதம் முதல் தலைவரை ஏற்படக்கூடிய வலிகளைச் சொல்லி, வலி ஏற்பட்டால் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன என்பதை விளக்கி, வலி வருவதன் காரணங்களையும், வலி ஏற்படாமல் இருக்க நாம் […]

Read more

அர்த்த சாஸ்திர அறிவுரைகள்

அர்த்த சாஸ்திர அறிவுரைகள், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன் பேங்க், பக்.192, விலை 150ரூ. நீதி நூல்களில் இருந்து பெற வேண்டிய வாழ்வியல், நிர்வாகவியல் பாடங்களை தெளிவாக விளக்கியதோடு, தமது அனுபவத்தையும் கலந்து, அர்த்த சாஸ்திரம் நூல் குறித்து எளிமையான விளக்கத்தை, இந்த நூலில் தந்திருக்கிறார் நூலாசிரியர். கவுடில்யர் என்ற சாணக்கியரை அறிந்திராதவர் யாரும் இருக்க முடியாது. புத்திசாலித்தனத்திற்கும், ராஜ தந்திரத்திற்கும், சாணக்கியத்தனம் என்ற பெயர் இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் சாணக்கியரின் வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லியதோடு, என்றைக்கும் பொருந்திப்போகும் அவரது […]

Read more

ஓளவை சொன்ன அமுத உரை

ஓளவை சொன்ன அமுத உரை, கமலா சுவாமிநாதன், வானதி பதிப்பகம், பக். 144, விலை 70ரூ. அவ்வையாரின் ஆத்திசூடியில், 77 முதல் 109 வரை, 33 தலைப்புகளில், முக்கனிச் சுவையில் கதைகளைச் சொல்கிறார் ஆசிரியர். பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், இணையதளங்களில் எழுதுபவராகவும் இருந்த அனுபவத்தால், வார்த்தைப் பூக்களைத் தூவி, வசந்த கால அனுபவமாக கதை சொல்கிறார். ஒரு கதையில், ராமலிங்க அடிகளாரின் தாயார், மருதம்மை என்று தவறாக தரப்பட்டுள்ளது. அவரது உண்மையான பெயர், சின்னம்மையார் அடிகளார், பிறந்த ஊர் மருதூர். அடுத்த பதிப்பில் திருத்தி […]

Read more

வரலாறு படைத்த வைர மங்கையர் (2 தொகுதிகள்)

வரலாறு படைத்த வைர மங்கையர் (2 தொகுதிகள்), பேராசிரியர் பானுமதி தருமராசன், புதுகைத் தென்றல், பக். 304, 208, விலை 200ரூ, 150ரூ. வரலாறு படைத்த இந்திய பெண்களின், வாழ்க்கை வரலாறு, இரண்டு நூல்களில் சுருக்கமாக தரப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில், ஆங்கிலேயரை தோற்கடித்த முதல் பெண்ணான வேலு நாச்சியாரில் துவங்கி, ராமநாதபுர மாவட்டத்தின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க மணிமுத்தாறு அணைத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, தீக்குளிப்பு போராட்டம் வரை சென்ற ரமணி நல்லதம்பி எம்.எல்.ஏ., வரை மொத்தம் 38 பெண்களின் வரலாறு இரு பாகத்திலும் இடம்பெற்றுள்ளது. […]

Read more
1 3 4 5 6 7