பாக்ஸ்

  கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 பாக்ஸ் கதை புத்தகம், ஷோபா ஷக்தி, கருப்புப் பிரதிகள் வெளியீடு, விலை 200ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024980.html ஈழத் தமிழர் போராட்டத்தின் இலக்கிய சாட்சி ஷோபா சக்தி. ‘கொரில்லா’, ‘ம்’ நாவல்களைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் எழுதி வெளியான நாவல் இது. விறுவிறுப்பான உரைநடையில் எழுதப்பட்ட போரைப் பற்றிய கலாபூர்வமான பதிவு. நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு

ஹெர்மான் ஹெஸ்ஸின் சித்தார்த்தா ஓர் ஆய்வு, சுரானந்தர், சுரா பதிப்பகம், பக். 80, விலை 176ரூ. கடந்த, 1946ம் ஆண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றதும், ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டதும், பின் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதும், இந்திய கலாச்சாரத்தை உலகிற்கு உணர்த்தியதுமான, ஹெர்மான் ஹெஸ் எழுதிய, ‘சித்தார்த்தா’வை தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளார் சுரானந்தா. வெறும் மொழிபெயர்ப்பு நூலாக மட்டும் படைக்காமல் ஓர் ஆய்வு நூலாகவும் மாற்றி ஆங்காங்கே தான் படித்தது, கேட்டது ஆகியவற்றையும் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. அந்தணர் குலத்தில் பிறந்த சித்தார்த்தன், […]

Read more

எஸ்.எஸ்.போத்தையா கரிசக்காடு

எஸ்.எஸ்.போத்தையா கரிசக்காடு, பா. செயப்பிரகாசம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 188, விலை 140ரூ. மொத்தம் 900 சொலவடைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார் எஸ்.எஸ். போத்தையா, அதை அகர வரிசைப்படுத்தி அழகாகப் பதிப்பித்துள்ளார் பா. செயப்பிரகாசம். பழமொழிகள் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்தாமல், சொலவடைகள் எனும் சொல்லாட்சியைப் பயன்படுத்துவதற்கான விளக்கத்தை இந்த நூல் தெரிவிக்கிறது. மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் முதலானவையும், கம்பளத்தார் குறித்த வரலாறும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. டைரி எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்த போத்தையாவின் டைரிக் குறிப்புகளும், அவர் பயணித்த ஊர்களின் காட்சிகளும் படங்களுடன் […]

Read more

தருணம் பார்க்கும் தருணங்கள்

தருணம் பார்க்கும் தருணங்கள், சொ.சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 320, விலை 240ரூ சொல்லாட்சிக் கலையில் சிறந்து விளங்கும் முனைவர் சொ. சேதுபதியின் 22 இலக்கியக் கட்டுரைகளின் இனிய தொகுப்பே இந்த நூல். இலக்கியக் கட்டுரைகளின் அடி நாதமாக, மானிடநேயம், உயிரிரக்கம் ஒலித்துக் கொண்டிருப்பது நூலின் சிறப்பு. தொல்காப்பியம் முதல், தொடுக்கும் முகநூல் முடிய, நுவல்பொருளை வாழ்வியல் நோக்கில் வைத்துப் பார்க்கும் சிந்தனைகளின் தொகுப்பு இந்த நூல். தருணம் எனும் சொல்கொண்டு, சொல் விளையாட்டைச் சுடரச் செய்துள்ள திறம் பாராட்டத்தக்கது. கவிதை, சிறுகதை, […]

Read more

வாழ்வைப் புரட்டும் மந்திரம்

வாழ்வைப் புரட்டும் மந்திரம், எஸ்.கே. முருகன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. தன்னம்பிக்கைக் கட்டுரைகள், வெறும் வார்த்தைகளால் அலங்கரிக்கப்படக் கூடாது. அது, வாசகனின் தோளில் கை போட்டு, நடந்து கொண்டே, சுவாரசியமாக செல்வது போல இருக்க வேண்டும் என்பதற்கு, உதாரணமாய் வெளிவந்திருக்கிறது இந்த நூல். மைக்கேல் ஜாக்சன் முதல் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா வரை, 30 பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை அழகாக விவரித்து அதன் மூலம், வாழ்வைப் புரட்டும் மந்திரத்தை சொல்கிறார் ஆசிரியர். திரையில் சூப்பர்மேன் வேடத்தில் நடித்த […]

Read more

சிந்தனை ஒன்றுடையாள்

சிந்தனை ஒன்றுடையாள், கே.எஸ். சுப்ரமணியன், அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக். 512, விலை 350ரூ. கண்ணாடியும் பிம்பமும்போல தமிழும் சமஸ்கிருதமும்! ஓர் ஆடை, நூலிழையும், பாவுமாய் இணைந்து உருவாவதுபோல், பாரத நாட்டின் பழம் பெருமை, பண்பாடு, ஒருமைப்பாடு ஆகியன, செவ்வியல் மொழிகளான சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளாலும் கட்டிக்காக்கப்படுகின்றன. அந்த வகையில், சமஸ்கிருதத்தில்தான் படித்துச் சுவைத்த அரிய பகுதிகளைத் தமிழில் கொண்டு வர வேண்டும் எனும் பேரவா காரணமாக, நூலாசிரியர் இந்த நூலை உருவாக்கியுள்ளார். வேதம், உபநிஷத்துகள், கீதை, பர்த்ருஹரியின் […]

Read more

பாஸன் நாடகங்கள்

பாஸன் நாடகங்கள், தமிழில் அ, ரேவதி, காவ்யா, பக். 194, விலை 180ரூ. காதலா? கடமையா? பழமையும், பெருமையும் மிக்க செம்மொழி சமஸ்கிருதம். ஜெர்மன் மொழியில் இதன் இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்பட்டு, அங்கிருந்து ஆங்கிலம் மூலம் உலகெங்கும் உலா வருகிறது. தமிழிலும் சமஸ்கிருத இலக்கியங்கள் மொழிமாற்றம் பெறுகின்றன. ஆனால், தமிழை உயர்த்துவதாக கூறிக்கொண்டு, சமஸ்கிருதத்தை வளரவிடாமல், வரவிடாமல் தடுத்தோர், இன்றும் உள்ளனர். அதையும் மீறி சமஸ்கிருதம் – தமிழ் உறவு வளர்கிறது. இத்தகு மொழிப்பாலத்தில் மகாகவி பாஸன் நாடகங்கள் நான்கும், வெகு அழகாக தமிழில் தற்போது […]

Read more

இந்திய நாட்டுப் பண்பாடு

இந்திய நாட்டுப் பண்பாடு, சௌரி, சேது அலமி பிரசுரம், பக். 176, விலை 110ரூ. ராமாயண காலம் முதல் இந்தியாவில் நிலவிய பண்பாட்டை இந்த நூல் விவரிக்கிறது. வால்மீகி ராமாயணத்தின் துணை கொண்டு, பண்டைய சமூகப் பழக்க வழக்கங்கள், கோமாதா நம் குலமாதா என்று ஏன் வழிபடுகிறோம், பசு பராமரிப்பின் பயன், 84 சித்தர்கள், கி.பி. 800 முதல் கி.பி. 1200 வரையுள்ள, 400 ஆண்டுகளில் இந்திய மக்களிடையே சமத்துவ சமுதாய உணர்வைப் பரப்பினர் (பக். 113) ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. தெய்வக்கலையாக நடனம் […]

Read more

அர்த்தநாரீஸ்வரம்

அர்த்தநாரீஸ்வரம், இரா.த. பாலாஜி, முரண்களரி வெளியீடு, பக். 112, விலை 100ரூ. தற்போது, எஸ்.ஆர்.எம்., சிவாஜிகணேசன் பிலிம் இன்ஸ்ட்டியூட்டின் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பாலாஜியின், ஏழு சிறுகதைகளைக் கொண்ட நூல் இது. வாழ்க்கையில் எந்தச் சந்தர்ப்பத்திலும் மனம் தளர வேண்டாம் என்பதை சொல்லும் ‘தன்னம்பிக்கை’, இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதைச் சொல்லும் ‘தாகம்’, மனம் விட்டுப் பேசுங்கள், பகைமை உணர்ச்சி வேண்டாம் என்று விளக்கும் ‘எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’, ஆடம்பரச் செலவு அவசியம் அற்றது என்று சுட்டிக் காட்டும், ‘ராயல் […]

Read more

காஷ்மீர் இந்தியாவுக்கே!

காஷ்மீர் இந்தியாவுக்கே!, கேப்டன் எஸ்.பி. குட்டி, கிழக்கு பதிப்பகம், பக். 303, விலை 250ரூ. கடந்த, 1947ல் நடந்த இந்தியா பாக்., போர் பின்னணியை முழுமையாக விளக்குகிறது இந்த நூல். ஆசிரியர் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால், ராணுவ செயல்பாடுகளையும், நுணுக்கங்களையும் எளிமையாக விவரிக்கிறார். போரின் நிகழ்வுகள், அதில் இந்திய ராணுவ வீரர்களின் தியாகம், அரசியல்வாதிகளின் தவறான அணுகுமுறை என, அனைத்தும் விளக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் உரிமை கோரும் பாகிஸ்தானின் நடவடிக்கையை ஏற்க மறுப்பதற்கான காரணத்தை ஆதாரங்களுடன் பேசுவது கடினம். அத்தனை எளிமைப்படுத்தி இருக்கிறார், நூலாசிரியர். காஷ்மீர் […]

Read more
1 2 3 4 5 6 9