தினகரன் பொங்கல் மலர்

தினகரன் பொங்கல் மலர், தினகரன், பக். 240, விலை 100ரூ. மும்பை தாராவியில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை உடன், இந்த மலர் துவங்குகிறது. கடந்த ஆண்டு 1500 குடும்பங்கள், தாராவியில் ஒரே இடத்தில் பொங்கலிட்டு, கொண்டாடி உள்ளனர். வெள்ளம், வறட்சி என தமிழகம் அவதிப்பட்டு வரும் நிலையில், கோவில் குளங்களில் நீர் சேமிப்பது குறித்த முன்னோர் தொழில்நுட்பம் தொடர்பான கட்டுரை வரவேற்கப்படத்தக்கது. கர்நாடக சங்கீத வாத்தியங்களில் ஒன்றான கடம், தயாரிக்கப்படுவது குறித்த கட்டுரை, நாய்கள் கண்காட்சி குறித்த, தே.மு.தி.க, தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய் […]

Read more

சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை

சிறகுகள் தரும் சின்னத்திரைக்கலை, மீனாட்சி புத்தக நிலையம், பக்.336, விலை 300ரூ. தினமணியில் 2000-2001இல் தொடராக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக மலர்ந்திருக்கிறது. இன்று மக்களுடைய மனதை ஆட்டிப் படைக்கும் காட்சி ஊடகத்தின் தொழில் நுட்பங்களை மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இந்நூல் விளக்குகிறது. சின்னத் திரைக்காக ஒரு காட்சியைப் படம் பிடிப்பது என்பது அவவ்ளவு எளிதானதல்ல என்பதை இந்நூலைப் படிக்கும் யாரும் உணர முடியும். ஷாட்-இல் எத்தனை வகைகள் உள்ளன? எடுக்கப்போகிற காட்சிக்கு ஏற்ப கேமரா கோணம் எப்படி மாறுபடுகிறது? ஒருவரை உயர்வாகக் காட்ட […]

Read more

ஏணிகள் தோணிகள் ஞானிகள்

ஏணிகள் தோணிகள் ஞானிகள், கோ.மணிவண்ணன், திருமகள் நிலையம், பக். 296, விலை 190ரூ. கீழிருப்பவரை மேலே உயர்த்தப் பயன்படுவது ஏணி. ஆழ நீர்நிலையைக் கடக்க உதவுவது தோணி. இவ்விரண்டுமே பயனாளிகளுக்காகக் காத்திருக்கின்றன. பயனாளிகள் இவற்றைத் தவிர்த்தால் நஷ்டம் ஏணிகளுக்கும் தோணிகளுக்கும் அல்ல. இவ்விரு சாதனங்களின் மானுட வடிவமாகத் திகழ்பவர்கள்தாம் ஞானிகள். திருநாவுக்கரசர், வள்ளலார், ரமணர், மகாகவி பாரதி, சங்கரர், ராமானுஜர், சைதன்யர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர் எனத்தொடரும் அந்த அருளாளர் பரம்பரையின் நோக்கம், மானுட மேம்பாடு மட்டுமே. நூலாசிரியர், ‘பாபாஜி சித்தர் ஆன்மிகம்’ இதழில் […]

Read more

ஹோமியோபதி தத்துவம்

ஹோமியோபதி தத்துவம் (ஆர்கனான் வழியில் விளக்கம்), பழ. வெள்ளைச்சாமி, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 435, விலை 300ரூ. ‘முள்ளை முள்ளால் எடு’ என்பது நம்மூர் பழமொழி. அதுபோல ‘ஒத்ததை ஒத்ததால் குணப்படுத்து’ என்பது டாக்டர் ஹானிமன் கண்டுபிடித்த ‘ஹோமியோபதி’ மருத்துவத்தின் தத்துவமாகும். ஹோமியோபதி முறையில் பல புத்தாணடுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நூலாசிரியர், தனது சிகிச்சை அனுபவங்களை இந்நூலில் தொகுத்தளித்திருக்கிறார். ஒரு ஹோமியோபதி மருத்துவர் எப்படி இருக்க வேண்டும்? எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை’ ஆர்கனான்’ என்ற தத்துவ நூலில் டாக்டர் […]

Read more

ஸ்ரீவாமன முனிவர் அருளிய மேருமந்திர புராணம்

ஸ்ரீவாமன முனிவர் அருளிய மேருமந்திர புராணம், உரையாசிரியர் வீடுர் கு. அப்பாசாமி சாஸ்திரியார், ஜைன இளைஞர் மன்றம், பக். 1008, விலை 600ரூ. தமிழில் இயற்றப்பட்ட பழைமையான காவியங்களுள் ஒன்று ஸ்ரீவாமன முனிவரால் இயற்றப்பட்ட இந்த மேருமந்தர புராணம். இந்நூல் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டிருக்கூடும் என்கிறது பதிப்புரைக் குறிப்பு. இப்புராணம், 1406 செய்யுள்களையும், 13 சருக்கங்களையும் கொண்டுள்ளது. இதன் கதைச் சுருக்கமும் தரப்பட்டிருக்கிறது. அருக நெறியைப் பரப்புவதற்காக உருவான காவியம் இது. ஸ்ரீ புராணத்தில் வரும் மேரு, மந்தரர் ஆகிய இரு […]

Read more

தண்டியலங்கார மூலமும் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் 14ஆவது பட்டம் சுப்பிரமணிய தேசிகர் உரையும்

தண்டியலங்கார மூலமும் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் 14ஆவது பட்டம் சுப்பிரமணிய தேசிகர் உரையும், ச. கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம், பக். 480, விலை 300ரூ. வடமொழி இலக்கண மரபைப் பின்பற்றி இயற்றப்பெற்ற நூல்களுள் தண்டியலங்காரமும் ஒன்று. மிக அதிகமான அளவில் வடமொழியில் அணியியல் நூல்கள் தோன்றின. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வடமொழியில் இயற்றப்பட்ட காவ்யாதர்ஸ்ம் என்னும் நூலினைப் பின்பற்றியும் அதன் மொழிப்பெயர்ப்பாகவே தண்டி என்பவரால் தமிழில் இயற்றப்பட்டதே தண்டியலங்காரம். முதன் முதலாக தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜ பண்டிதர், ‘தண்டியலங்கார மூலமும் சுப்பிரமணிய தேசிகரால் செய்யப்பட்ட உரையும்’ […]

Read more

குடியரசு

குடியரசு, கிரேக்கத்தில் தத்துவஞானி பிளாட்டோ, சாகித்ய அகாடமி வெளியீடு. தலைவனுக்குத் தகுதி எது? தத்துவஞானி பிளாட்டோ கிரேக்க மொழியில் எழுதி, சாகித்ய அகாடமி தமிழில் வெளியிட்டுள்ள, ‘குடியரசு’ நூலை அண்மையில் படித்தேன். ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை நூல் சொல்கிறது. நாட்டை வழி நடத்துபவன் ஒரு தத்துவஞானியாக இருக்க வேண்டும் என்பது, நூல் ஆசிரியரின் நோக்கமாக இருந்தாலும், அவனுடைய கருத்துக்கள் மக்களிடையே எதிர்மறை தாக்கத்தை உருவாக்கும் என்பதால், அரசுக்கு பின்னால் இருந்து இயக்கும் சக்தியாக, தத்துவஞானிகள் இருக்க வேண்டி உள்ளது […]

Read more

சவீதா நாவல்கள்

சவீதா நாவல்கள், சவீதா, நன்னூல் அகம், பக். 1264, விலை 800ரூ. சுகமான வாசிப்பு அனுபவம் தரும் சவீதா ஒரு அபூர்வமான எழுத்துச் சிற்பி. உளி எடுத்துக் கொஞ்சம், கொஞ்சமாகச் செதுக்குவதுபோல், சொற்களைச் செதுக்கும் ஒரு அபூர்வக் கலைஞன், நிலவின் பாலில் குளிப்பதைப்போலவும், நிர்மலத் தென்றலில் குறிப்பதைப்போலவும், சுகம் தரும் வார்த்தைகளை வர்ணனைகளில் கொண்டு வரும் மாயாவி சுவீதா. இந்தத் தொகுதியில் உள்ள, 18 நாவல்களும், சுகமான வாசிப்பு அனுபவத்தைத் தரும். ‘மலைச் சிகரங்கள் மேகங்களால் கூர் மழுங்கி இருந்தன. மூடுபனி, யூகலிப்டஸ் மரங்களுக்கு […]

Read more

செம்மொழிச் சிந்தனைகள்

செம்மொழிச் சிந்தனைகள், தா. நீலகண்ட பிள்ளை, செம்மூதாய் பதிப்பகம், பக். 98, விலை 60ரூ. இளம்பூரணரை பின்பற்றிய உரைக்காரர்கள்! தமிழ் இலக்கியங்களுள் காணக்கிடக்கும் சிந்தனைகளைத் தொகுத்து, ஒன்பது கட்டுரைகளாக பல்வேறு சான்றுகளுடன் எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர். ‘குறுந்தொகைப் பாடல்களில் இலக்கிய மாந்தர்கள் தம் உள்ளத்து எண்ணங்கள் முழுவதையும் வெளிப்படுத்துவதில்லை. கேட்போரின் மனநிலை, சூழல் இவற்றிற்கேற்ப, பேசுவோர் தம் உணர்வுகள் சிலவற்றைப் பேச்சிலும், மெய்ப்பாட்டிலும் வெளிப்படுத்துவர். சிலவற்றை தம் அடிமனதில்தேக்கி வைத்திருப்பர்’ என உளவியல் கோட்பாடு அமைந்திருக்கும் பாங்கை விளக்குகிறார். பிற இலக்கியங்கள் மூவேந்தர்களைப் பாட முற்பட்டபோதே, […]

Read more

ஒருபிடிமண்

ஒருபிடிமண், இயக்குனர் ஸ்ரீதர், விஜயா பப்ளிகேஷன்ஸ், பக். 136, விலை 100ரூ. இயக்குனர் ஸ்ரீதரின் பெயரை தவிர்த்துவிட்டு, தமிழ் திரை வரலாற்றை எழுத முடியாது. அவர் கைவண்ணத்தில், சிவாஜி, முத்துராமன், கே.ஆர். விஜயா ஆகியோர் நடிக்க இருந்த படம் 1965ல் நடந்த, இந்தியா – பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்ததால் கைக்கூடவில்லை. இந்த திரைக்கதை ‘பொம்மை’ சினிமா இதழில் தொடராக வெளிவந்தது. தற்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. கர்னல் ரங்கதுரை கதாபாத்திரம் இடம்பெறும் போதெல்லாம், நம் கண்முன் சிவாஜி தெரிவது அற்புதமான அனுபவம். கதாபாத்திரங்களின் தேர்வே, […]

Read more
1 3 4 5 6 7 9