காப்பிய மகளிர் ஒரு புதிய கண்ணோட்டம்

காப்பிய மகளிர் ஒரு புதிய கண்ணோட்டம், ந.யோகாம்பாள், முல்லைப் பதிப்பகம், பக். 80, விலை 80ரூ. காப்பியங்களில் வரும் பெண்களை காதல், வீரம், கற்பு, தீக்குணம், தியாகம், காமம் போன்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் புது முயற்சி. கண்ணகி, மாதவி முதல் நீலகேசி, வேகவதி வரையான காப்பியப் பெண்களின் மாறுபட்ட குணங்களை இந்நூலில் காண முடியும். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 4/1/2016.   —- ஹைக்கூ பூக்கள், மயிலாடுதுறை இளையபாரதி, நம் மொழி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. 58 கவிஞர்களின் ஹைக்கூ […]

Read more

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை, வீ. அன்பழகன், அருட்தந்தை ச. இஞ்ஞாசிமுத்து, கண்ணதாசன் பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. விவசாயமும் விவசாயிகளும் உயிர்த்துடிப்புப் பெற ஒரே வழி நாம் நமது பாரம்பரிய விவசாய முறைக்கு மாற வேண்டும் என்பதை வலியுறுத்தும் நூல். தவறான விவசாய முறைகளால் குடிக்கும் நீரிலிருந்து உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருக்கும் இடம் எனத் தொடங்கி தாய்ப்பாலே நஞ்சாகிவிட்ட நிலையை உதாரணங்களுடன் விளக்கி, இதிலிருந்து மீள, நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற இயற்கை வளத்தை, நாம் நமது சந்ததியினருக்கு விட்டுச்செல்ல வேண்டும் […]

Read more

பத்துப்பாட்டு பொருளடைவு

பத்துப்பாட்டு பொருளடைவு, ச.பொ.சீனிவாசன், சேகர் பதிப்பகம், விலை 350ரூ. தமிழின் உயிர்நிலை இலக்கியங்களாக திகழ்வன சங்க இலக்கியங்கள். தமிர் மொழிக்கு செம்மொழி தகுதியையும், நிலைபேற்றையும் பெற்றுத்தந்த பெருமை, சங்க இலக்கியங்களுக்கு உண்டு. சங்க இலக்கியங்களை பொதுவான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்த அதிகமான நூல்கள் வெளிவந்துள்ளன. அவை போதுமானதாக இல்லை. தவிர, சொல்லடைவுகள், சொல், பொருள், வருமிடம் இலக்கணக் குறிப்பு இவற்றோடு நின்றுவிடுகின்றன. இத்தகைய தரவுகளின் தேவையை மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ள நூல்தான் “பத்துப்பாட்டு – பொருளடைவு” என்னும் ஆய்வு நூல். நன்றி: தினத்தந்தி, […]

Read more

நாட்டை உருவாக்கிய மனிதர் ஹோ-சி-மின்

நாட்டை உ ருவாக்கிய மனிதர் ஹோ-சி-மின், தமிழில் நா. தர்மராஜன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், விலை 75ரூ. பிரெஞ்சு அடிமைத்தளத்தின் நெருப்பு ஜுவாலை வியட்நாமிய தொழிலாளர் வர்க்கத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சமயத்தில் விதைக்குள்ளிருந்து மண்ணை முட்டியெழும் முளைபோல எழுந்தவர் மாமனிதர் ஹோ-சி-மின். சிறைக்குள் தள்ளப்பட்போதிலும்,“பிடிவாதமும் விடாமுயற்சியும் என்னுடன் பிறந்தவை. நான் ஓர் அங்குலம்கூடப் பின்வாங்கமாட்டேன்…” என்று உறுதியுடன் சூளுரைத்தார். வியட்நாம் சுதந்திரத்துக்காக போராடி வெற்றி கண்டவர். தம் எழுத்தாற்றலாலும், கவியாற்றலாலும் பாமரர் நெஞ்சுக்குள்ளும் பச்சைக் குத்தியவராவார். ஒரு சாதாரண மனிதரால் எப்படி இத்தகைய […]

Read more

அதே வினாடி

அதே வினாடி, நாகூர் ரூமி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. முதல் பொக்கிஷம், மூச்சின் ரகசியங்கள், மூச்சின் வகைகள், அந்த இரண்டு விநாடிகள், உடலாகிய சத்குரு, அசச்ம் என்பது, புள்ளிகள் கொண்ட ஆடுகுள், எல்லாமே விதி, நீங்கள்தான் அதுபோன்ற பல கட்டுரைகளின் தொகுப்பு நூல். தற்செயல்களைப் புரிந்துகொள்வது, நாம் விரும்புவதை அடைவதற்கான முதல்படி என்பதால் தற்செயல் எனும் அற்புத மாளிகைக்குள் கட்டாயம் பிரவேசித்து அங்கு என்னதான் நடக்கிறது என்பதை நாம் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை எளிதாக புரிந்து கொள்ளும்வகையில் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் […]

Read more

இஸ்லாமிய சட்ட கருவூலம்

இஸ்லாமிய சட்ட கருவூலம், அஷ்ஷெய்க் ஸெய்யத் சாபிக், இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், விலை 250ரூ. திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி அடிப்படையில் இஸ்லாமிய சட்டங்கள் குறித்து அஷ்ஷெய்க் ஸெய்யத் சாபிக் எழுதிய ‘பிக்ஹுஸ் சுன்னா’ (இஸ்லாமிய சட்ட கருவூலம்) என்ற நூலை மவுலவி நூஹ் மஹ்ழரி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இதுவரை 5 பாகங்கள் வெளியாகி உள்ளன. இது 6 வது பாகம். இதில் முழுக்க முழுக்க ‘திருமணம்’ குறித்து விளக்கப்பட்டுள்ளது. திருமண வாழ்வின் முக்கியத்துவம், திருமணம் செய்யும் முறை, மணக்கொடை, பலதாரமணம் போன்ற பல்வேறு தலைப்புகளில் […]

Read more

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம், வீ. இளவழுதி, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. தமிழில் உருவான முதல் காப்பியம் ‘சிலப்பதிகாரம்’. ‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியாரால் புகழப்பட்ட நூல். இயல், இசை, நாடகம் என்ற இலக்கண எல்லைக்குள் இடம் பெற்ற முத்தமிழ் நூல் எனப் போற்றப்படுகிறது. சிலப்பதிகாரத்தை கதை வடிவில் வீ. இளவழுதி எழுதியுள்ளார். மாணவர்களுக்கு பெரும் பயனளிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, 30/12/2015.   —- கட்டுரைக் கதம்பம், மு. ஸ்ரீனிவாஸன், அருள் பதிப்பகம், விலை 150ரூ. கண்ணன் வாழ்ந்த துவாரகை, சேழர்களின் தலைநகரும், உலகின் […]

Read more

திருக்கயிலைக்கு ஒரு மறக்கவியலாப் பயணம்

திருக்கயிலைக்கு ஒரு மறக்கவியலாப் பயணம், மணிமேகலைப் பிரசுரம், விலை 75ரூ. திருக்கயிலையின் புனிதப் பயணத்தை விவரிக்கும் நூலிது. கயிலைக் காட்சி மயிலைக் காட்சி போல மனத்திற்கு நிறைவு தந்திருப்பதை இந்நூலில் காணலாம். வெறும் பயண விளக்கம் தரும் வழிகாட்டி நூலாக இல்லாமல் வாழ்விற்கு அருள் வழிகாட்டியாய் இப்புத்தகத்தை செம்மைப்படுத்தியுள்ளார் முனைவர் வாசுகி கண்ணப்பன். அவர் வேதம், திருமுறை, புராணம், வரலாறு எனப் பல்வேறு துணை விளக்கங்களையும் அளித்து, மேற்கொண்டு யாரேனும் திருக்கயிலை யாத்திரை மேற்கொண்டால் அவர்களுக்கு உதவும்வகையில், முகவரிகள், ஆலாசனைகள், எடுத்துச்செல்ல வேண்டிய பொருள்கள், […]

Read more

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பூம்புகார் பதிப்பகம், விலை 250ரூ. எழுத்தாளர், பேச்சாளர், இதழ் ஆசிரியர், தொழிலாளர்களின் தோழர் என்பன போன்ற பன்முகம் கொண்டவர், திரு.வி.க. என்று அழைக்கப்பட்ட திரு.வி. கல்யாணசுந்தரனார். காந்தியடிகள் மீதும், அவரது கொள்கைகள் மீதும் அளப்பரிய அன்பும், பிடிப்பும் கொண்டவர். அவர் எழுதிய, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற நூல் மிகவும் பிரசித்தி பெற்று நூலாகும். அது இப்போது புதிய கட்டமைப்புடன் வெளிவந்துள்ளது. மனிதன் எத்தகைய வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதையும், மனித வாழ்வுக்குப் பேரிலக்கியமாக வாழ்ந்த காந்தியடிகளின் வாழ்க்கை முறையையும் […]

Read more

காதல் வாழ்க்கை

காதல் வாழ்க்கை, வி. கந்தவனம், காந்தளகம், விலை 600ரூ. இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞர் வி. கந்தவனம் எழுதிய நூல் இது. சங்க காலத்து மாந்தர்களின் காதல் வாழ்க்கை பற்றிய கட்டுரைகள் இதில் அடங்கியுள்ளன. சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கை முறையையும், அக்கால பழக்க, வழக்கங்களையும் அறிய இந்நூல் பெரிதும் பயன்படும். புத்தகம் முழுவதும் ஆர்ட் காகிதத்தில் அச்சிடப்பட்டுள்ளது. கண்கவரும் வண்ணப்படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 30/12/2015.   —- ஆவியின் டைரி, பேரா. க. மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 120ரூ. […]

Read more
1 7 8 9