யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார், பா.சு.ரமணன், சூரியன் பதிப்பகம், பக். 191, விலை 150ரூ. யோகி பற்றிய முழுமையான வரலாற்று நூல்! விசிறி சாமியார், கொட்டாங்குச்சி சாமியார், சிகரெட் சாமியார் என, சுட்டப்பட்டு, பின் ஞானியாகப் போற்றப்பட்டவர், யோகி ராம்சுரத்குமார். உ.பி. மாநிலத்தில், நர்தரா எனும் குக்கிராமத்தில், 1918ம் ஆண்டு, டிசம்பர் 1ம் தேதி, ராம்சுரத் குன்வர் பிறந்தார். ‘சுரத்’ எனும் சமஸ்கிருத சொல்லுக்கு, அர்ப்பணிப்பு என்ற பொருள் உண்டு. அந்த வகையில், ராமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குமரனாக வளர்ந்த ராம்சுரத் குன்வர், இளமையிலேயே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு, […]

Read more

இடது திருப்பம் எளிதல்ல

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 இடது திருப்பம் எளிதல்ல, விஜயபிரசாத், தமிழில் சுப்பாராவ், பாரதி புத்தகாலயம். கம்யூனிஸ்ட் இயக்கங்களின் வரலாற்றின் பின்னணியில் சுதந்திர இந்தியாவின் வரலாற்றையும் கம்யூனிஸ்ட்கள் பின்தங்க, இந்தியச் சூழலில் எவையெல்லாம் முக்கியக் காரணங்கள் என்பதையும் ஆய்வுநோக்கில் எழுதப்பட்டிருக்கும் நூல். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

காடோடி

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 காடோடி, நக்கீரன், அடையாளம், விலை 270ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024312.html தமிழில் கவனம் பெற்றுவரும் பசுமை இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாக்க முயற்சி ‘காடோடி’. உலகின் பழமையான, பிரம்மாண்டமான போர்னியோ காடுகளில் பணிபுரிந்த எழுத்தாளர் நக்கீரன், காடுகளைப் பற்றி நமக்கென்ன தெரியும் என்ற கேள்வியை நாவல் மூலம் எழுப்புகிறார். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

என் உளம் நிற்றி நீ

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 என் உளம் நிற்றி நீ, ஞானக்கூத்தன், காலச்சுவடு, விலை 160ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023876.html ஐம்பது ஆண்டுகளாகக் கவிதை வடிவத்திலும் சொல்லல் முறையிலும் தொடர்ந்து வளர்ச்சி காட்டிவருபவை ஞானக்கூத்தனின் கவிதைகள். எள்ளல் மற்றும் அடங்கிய பரிகாசத்தை இயல்பாகக் கொண்ட இவரது சமீபத்திய கவிதைகளில் ஆச்சரியமும் நேசத்தின் ஈரமும் சேர்ந்துள்ளன. நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

எங்கதெ

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 எங்கதெ, இமையம், க்ரியா, விலை 110ரூ. இந்த ஆண்டு அதிகம் பேரால் படிக்கப்பட்டு, பரவலாகப் பேசப்பட்ட நாவல் இது. விளிம்புநிலை மக்களின் வாழ்வை யதார்த்தமான சித்திரங்களாக முன்வைப்பதில் தேர்ந்தவரான இமையம், இந்த நூலில் ஓர் ஆணின் மன அவசத்தைப் புனைகதையாக்கியிருக்கிறார். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

இந்துத்துவத்தின் பன்முகங்கள்

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 இந்துத்துவத்தின் பன்முகங்கள், அ. மார்க்ஸ், உயிர்மை பதிப்பகம், விலை 400ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024048.html ஒவ்வொரு தளத்திலும் இந்துத்துவத்தின் தத்துவார்த்த, அரசியல், பண்பாட்டு முகங்களின் நகர்வுகளையும் விளைவுகளையும் பற்றி மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பல தளங்களிலும் விரியும் வலுவான வாதங்களை முன்வைக்கும் நூல். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

தென்னாப்பிரிக்காவில் காந்தி

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 தென்னாப்பிரிக்காவில் காந்தி, ராமச்சந்திர குஹா, கிழக்கு பதிப்பகம், விலை 700ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9789384149048.html காந்தி தன்னைக் கண்டறிந்தது தென்னாப்பிரிக்காவில். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராக காந்தி தொடுத்த போருக்கான ஆதாரப் புள்ளி தென்னாப்பிரிக்காதான் என்பதை குஹா அசாதாரணமான முறையில் இதில் நிறுவியுள்ளார், பல அரிய தகவல்களுடன். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)  

Read more

பாரதி கவிஞனும் காப்புரிமையும்

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 பாரதி கவிஞனும் காப்புரிமையும், ஆ.இரா. வேங்கடாசலதி, காலச்சுவடு, உலகில் எந்தப் படைப்பாளிக்கும் கிடைக்காத தனிப்பெருமை பாரதிக்குக் கிடைத்தது எப்படி என்பதைக் கூறுகிறது இந்த நூல். பாதியின் படைப்புகள் நாட்டுடமை ஆனதற்குப் பின்பு நடந்த நிகழ்வுகளைப் புனைகதைக்குரிய சுவாரஸ்யத்துடன் ஆவணப்படுத்துகிறார் சலபதி. நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

களப்பணியில் கம்யூனிஸ்டுகள்

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 களப்பணியில் கம்யூனிஸ்டுகள், ஜி.ராமகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம், விலை 20ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024324.html தலைவர்கள் குறித்து தொண்டர்கள் எழுதிய ஆயிரமாயிரம் புத்தகங்கள் உண்டு. ஆனால், சித்ரவதைகள், இழப்புகள், தியாயகங்களினூடே ஓர் இயக்கத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் எளிய தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளை ஒரு கட்சியின் தலைவர் எழுதியிருக்கும் முன்னோடி நூல் இது. நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

மகாபாரதம்

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 மகாபாரதம், பிரஞ்சன், நற்றினை, விலை 300ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023685.html பல படைப்பாளிகள் மகாபாரதத்தைப் பல விதங்களில் தமது படைப்புகளில் எதிர்கொண்டிருக்கிறார்கள். பிரபஞ்சன் மகாபாரதத்தை விசரணைக்கு உட்படுத்துகிறார். சமகால வெளிச்சத்திலும் அதை ஊடுருவிப் பார்க்க முயற்ச்சிக்கிறார். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more
1 2 3 4 5 9