O.C. என்ற C.M.

O.C. என்ற C.M., மலையாள மூலம் பி.டி.சாக்கோ(குஞ்சூஞ்சு கதைகள்), தமிழில் ஜி.வி.ரமேஷ் குமார், தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியீடு, பக். 80, விலை 50ரூ. கிட்டத்தட்ட பக்கத்து வீட்டுக்காரர்! ‘உம்மன் சாண்டியும் கலாமும் நீண்ட கால நண்பர்கள். கலாம் இறந்தபோது, உம்மன் சாண்டியும், கேரள எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனும் ஒரே ஹெலிகாப்டரில் வந்து, அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.’ இந்த நுாலின், 62ம் பக்கத்தின் கடைசிப் பகுதியில் வரும் இந்தப் பகுதிதான் இந்தப் புத்தகத்தின் செய்தியாக இருக்கும் என, நம்புகிறேன். இந்தச் செய்தி மாற்றுக் […]

Read more

உங்களில் ஒருவன்

உங்களில் ஒருவன், மாமணி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128, விலை 60ரூ. வறுமையில் வென்று, முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு தூண்டுதலாய் இருக்கும் தன் வரலாற்று நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 27/4/16.   —- முதல் மனித வெடிகுண்டு: பி. சந்திரசேகரன், தமிழில் ராஜசியாமளா, குமுதம் பு(து)த்தகம், பக். 272, விலை 580ரூ. பெண் ஒருத்தி மனித வெடிகுண்டாக மாறி உலகத் தலைவர்களில் ஒருவரான ராஜீவ்காந்தியைக் கொலை செய்த பின்னணியை அலசி ஆராய்ந்து உண்மையை உலகுக்கு உணர்த்திய முதல் நூல். இந்த வழக்கில் தடயவியல் […]

Read more

செட்டிநாட்டு சுற்றுலாவும் சிவகங்கை மாவட்ட பிரசித்திபெற்ற திருத்தலங்களும்

செட்டிநாட்டு சுற்றுலாவும் சிவகங்கை மாவட்ட பிரசித்திபெற்ற திருத்தலங்களும், S.L.S.பழனியப்பன், S.L.S. பதிப்பகம், பக். 74, விலை 60ரூ. செட்டிநாட்டில் உள்ள பிரசித்திபெற்ற கோயில் தலங்கள், அரண்மனை, அழகிய வீடுகள், அருங்காட்சியம் போன்ற அனைத்தையும் விவரித்து, அவற்றை காணச்செல்வோருக்கு உதவும் வகையில் ஒரு சுற்றுலா வழிகாட்டியாக விளங்கும் நூல். நன்றி: குமுதம், 27/4/16.   —- அக்னிக் குஞ்சுகள், ஏம்பல் ராஜா, பஞ்சவர்ணம் பதிப்பகம், பக். 232, விலை 150ரூ. சமுதாயத்திற்கான குரலாக ஒலிக்கும் கவிதைகளின் தொகுப்பு இவை. சமூக விடுதலையில் கவிஞருக்குள்ள அக்கறை வெளிப்படும் […]

Read more

குமரி மாவட்டத் தமிழ் வழக்கு

குமரி மாவட்டத் தமிழ் வழக்கு, ச. சுஜாதா, சேகர் பதிப்பகம், பக். 240, விலை 180ரூ. நூலின் முன்னுரை, குமரி மாவட்டத்தின் பூகோளம், வரலாறு, நாடார் மக்கள் சமூக வரலாறு, மொழியின் இயல்பு போன்றவற்றை விளக்குவதாகவும், ஆய்வு அடிப்படையை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. ‘கன்னியாகுமரி மாவட்ட மொழிச்சூழல்’ என்னும் தலைப்பில் அங்கு வழங்கும் தமிழ், மலையாளம், சில பழங்குடி மக்கள் பேசும் மொழிகள் போன்றவற்றின் மொழி இயல்புகள் விளக்கப்படுகின்றன. ஹசிறிஸ்தவ நாடார் வட்டார வழக்கின் இயல்புகள்’ என்னும் தலைப்பில், மொழி இயல்புகள், இரட்டை வழக்கு, வட்டார […]

Read more

ஆயுஷ் குழந்தைகள்

ஆயுஷ் குழந்தைகள் (சித்த மருத்துவ குழந்தை வளர்ப்பு முறைகள்), டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ், ஷன்லாக் பப்ளிகேஷன்ஸ், பக். 620, விலை 390ரூ. குழந்தைகளை பராமரிக்க உதவும் மருத்துவ களஞ்சியமாக, முழு தொகுப்பாக இந்த பெரிய நூலை நூலாசிரியர் எழுதியுள்ளார். கரு உருவாவதிலிருந்து மகப்பேறு காலம், குழந்தை பிறப்பு, தாய்ப்பால், குழந்தை வளர்ப்பு முறைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், கற்றல் குறைபாடுகள், நோய் தடுப்பு முறைகள், குழந்தைகளுக்காக விற்கப்படும் பொருட்கள், அவற்றின் பாதுகாப்புத் தன்மை, குழந்தைகளின் சட்ட உரிமைகள் என, அனைத்தையும் விளக்கி உள்ளார். ஒவ்வொரு பக்கத்திலும், […]

Read more

இதயமே இதயமே

இதயமே இதயமே, டாக்டர் எஸ். தணிகாசலம், தொகுப்பு: அகில் அரவிந்தன், குமுதம் பு(து)த்தகம், பக். 64, விலை 70ரூ. பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தணிகாசலம் இதயத்திற்கு நேர்கின்ற சிக்கலைப்பற்றியும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளையும் எளிய முறையில் விளக்கும் நூல். நன்றி: குமுதம், 27/4/16.   —- திருக்குறள்: தமிழர்களின் அறிவுக் களஞ்சியம், நர்மதா பதிப்பகம், பக். 280, விலை 175ரூ. திருக்குறளின் தமிழ் மூலப்பாடலுடன் ஆங்கில உரையாக்கம், தமிழ் தெரிந்த பிறமொழியினரும் திருக்குறளை எளிதில் அறிந்துகொள்ள இந்த உரை உதவும். நன்றி: […]

Read more

சொக்கப்பனை

சொக்கப்பனை, கடங்கநேரியான், வலசை பதிப்பகம், விலை 60ரூ. அறவெழுச்சிக் கவிதைகள் கவிஞர் கடங்கநேரியானின் மூன்றாவது தொகுப்பாக வெளிவந்திருக்கும் சொக்கப்பனையில் முந்தைய இரண்டு தொகுப்புகளையும் விட கவிமொழியில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். தான் வாழும் காலத்தில் நடக்கும் சமகால அரசியலை, நிகழ்வுகளை முடிந்த அளவுக்கு கவிதைகளில் படைத்திருப்பதாகச் சொல்லும் இவரது கவிதைகளில் வாழ்நிலத்தின் கூறுகள் நிரம்பிக்கிடக்கின்றன. மேகாற்றில் வேப்பம்பூ உதிரும் கிணற்றைக் கொண்டவள் நீ! அண்டங்காக்கைகள் அறிந்தே அடைகாக்கும் குயிலின் முட்டைகளை! மின்னல் கள்ளருந்திச் சென்ற மொட்டைப்பனை! இவ்வாறாக தெறிக்கும் வாழிடம் சார்ந்த காட்சிகளின் ஊடே […]

Read more

M.G.R. எழுத்தும் பேச்சும்

M.G.R. எழுத்தும் பேச்சும், தொகுப்பாசிரியர் வே. குமரவேல், முல்லை பதிப்பகம், விலை 250ரூ. எழுத்தும் பேச்சும் எம்.ஜி.ஆர். இன்று வழிபடப்படும் ஓர் அரசியல் பிம்பம். அவரது பேச்சும் எழுத்தும் என்று எதுவும் இன்றைய இளைஞர்கள் அறிய அரசியல் அரங்கில் முன்வைக்கப்படுவதில்லை. இந்த இடைவெளியை நிரப்பக்கூடியது எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும் என்கிற இருபாகமாக வந்திருக்கும் தொகுப்பு. எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்குவதற்கும் மன்னும் பின்னுமாக நிறைய நேர்காணல்கள், கட்டுரைகள், அறிக்கைகள் என்று தமிழ்நாட்டு மக்களிடையே தொடர்பாடலில் இருந்திருக்கிறார். வெறுமனே தன்னுடைய திரைபிம்பம் எழுப்பித் தந்த கவர்ச்சியை மட்டும் […]

Read more

அச்சுதம் கேசவம்

அச்சுதம் கேசவம், இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், விலை 310ரூ. வேர்களின் கதை அரசூர் வம்சம், விஸ்வரூபம் ஆகிய இரா. முருகனின் நாவல்கள் வரிசையில் மன்றாவதாக வெளியாகியிருக்கிறது அச்சுதம் கேசவம். இந்நாவலில் சிறு கதையாடல்கள் மூலம் கதையோட்டத்தை முன்னோக்கி செலுத்துகிறார் முருகன். அரசூரைச் சேர்ந்த உறவுகள் காலப்போக்கில் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் வேர்களை உணர்ந்தறிவதே இந்த நாவலின் சுருக்கம் என்று சொல்லிவிடலாம். பெரும் திருப்பங்களோ, நாடகார்த்த நிகழ்வுகளோ இல்லாமல் அதே சமயம் சுவாரசியமான தனிமனிதர்களின் கதைகளைச் சொல்லிக்கொண்டே செல்கிறார் எழுத்தாளர். […]

Read more

மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு

மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு, சுந்தரபுத்தன், பரிதிபதிப்பகம், விலை 150ரூ. மணம் வீசும் நினைவுகள் கண்ணையும் காதையும் திறந்துவைத்திருக்கிறவர் பத்திரிகையாளர் சுந்தரபுத்தன். சென்னையின் மஞ்சள் பூக்கள் நிறைந்த தெருக்களையும் கிராமத்தில் வெல்லம் அடைத்து சுட்டுத்தின்னும் தேங்காய்களையும் ஒரே நேரத்தில் எழுதுகிறவர். நகரவாழ்விலிருந்து கிராம வாழ்வின் ஏக்கங்களை, பெருமூச்சுகளை பதிவு செய்யும் இவரது எழுத்துகளில் ஏராளமான மனிதர்கள் வந்துபோகிறார்கள். பூவிற்கும் பெண்மணி முதல் நடிகர் சிவாஜிகணேசன் வரை எத்தனைபேர்? தன் தந்தையாரை என்ன மீசை எப்படி இருக்கே என்று நடிகர் சிவாஜிகணேசன் கூப்பிட்டதாக நினைவுகூரும் இவர் […]

Read more
1 2 3 4 5 6 9