தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு

தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு, சைதை முரளி, ஆரம் வெளியீடு, விலை 100ரூ. ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது’ என்பர். ஆனால் ‘ஏட்டுச் சுவடி தமிழுக்கு உதவும்’ என்பதை, கரையிலா இந்தச் சமுத்திரத்தில் நீந்தித் திளைத்து நம் தமிழின் பெருமையை மீட்டெடுத்து, எட்டுத் திக்கும் பரப்பியவர் “தமிழ்த்தாத்தா” உ.வே. சாமிநாதய்யர். தமிழுக்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்ட கொடையாளர். அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தாத்தாவின் உயர்ந்த தமிழ் பணிகள் பற்றியும், அவரது வாழ்க்கை பற்றியும் பல்வேறு தகவல்கள் […]

Read more

யோசிக்கும் வேளையில்

யோசிக்கும் வேளையில், ஜெயகாந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 45ரூ. 80களில் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சமூக அவலங்களை தனது பாணியில் சாடியிருக்கிறார். 5-ம் வகுப்பில் மூன்றுமுறை தான், பின்தங்கிய உண்மையை ஒப்புக் கொண்டுள்ள அவர் உழைப்பும் கல்வியும் என்னும் கட்டுரையில் தனது குடும்ப பின்னணி குறித்து மனம் திறந்து எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 27/4/2016.   —- உணவுப்பொருள் தயாரிப்பு சட்டங்களும், கலப்படத் தடுப்புச் சட்டங்களும், வழக்கறிஞர் எஸ்.சேஷாச்சலம், நர்மதா பதிப்பகம், விலை 80ரூ. உணவுப் பொருள் […]

Read more

சிங்கப்பூரில் மக்கள் தொடர்பு சாதனங்கள்

சிங்கப்பூரில் மக்கள் தொடர்பு சாதனங்கள், முனைவர் சீதாலட்சுமி, காவ்யா, விலை 500ரூ. தமிழ் மொழி இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு தமிழ் இலக்கிய வளர்ச்சி எனும்போது, இலக்கியத்தை நுகர்தல், இலக்கியத்தைப் படைத்தல், இலக்கியத்தை ஆய்தல் என்ற நிலைகளில் மக்களிடையே இலக்கியத்தை நிலைபெறச் செய்வதில் மக்கள் தொடர்புச் சாதனங்கள் அற்றிய பங்கு குறித்து இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தமிழ் நாளிதழ், வானொலி ஆகிய இரண்டுடன் ஒப்பிடும்போது தொலைக்காட்சி இலக்கிய வளர்ச்சியில் சற்றுக் குறைவாகவே தனது பங்கை ஆற்றியுள்ளது என்பதை அறிய முடிகிறது. சிங்கப்பூரில் 25 ஆண்டுகள் […]

Read more

இசை மேதைகள்

இசை மேதைகள், கே. ஆர். கிருஷ்ணமூர்த்தி, வெளியீடு சந்திரா சங்கர், விலை 75ரூ. அந்தக் காலத்து இசை மேதைகள் முதல் இந்த காலத்து இசைக்கலைஞர்கள் வரை, அவர்களது வாழ்க்கை வரலாற்றை சுவைபடக் கூறும் நூல். சங்கீதப் பிதாமகர் என்று அழைக்கப்படும் புரந்தர தாசர் (கி.பி. 1494 – 1564), தான் சென் (1506 – 1589) ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளும் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. தான் சென்னின் இயற்பெயர் ராம்தனு. இவர் அக்பரின் மகளான மெஹருன்னிசைவை மணந்தார். அக்பரின் சபையில், ‘தீபக்’ என்ற […]

Read more

இஸ்லாம் போற்றும் தாய்மை

இஸ்லாம் போற்றும் தாய்மை, என். முகம்மது மீரான், கமருன் பப்ளிகேஷன்ஸ், விலை 60ரூ. இன்றைய நாகரிக உலகில் தாய்மார்களை உதாசீனம் நிலை செய்யும் நிலை நிலவுகிறது. ‘தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது’ என்று தாய்மைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேன்மை அளித்தார்கள். தாய், தந்தையரை எப்படி நடத்த வேண்டும் என்பதை இறைவனும் திருக்குர்ஆனில் பல இடங்களில் தெளிவுபடுத்துகின்றான். அதன் அடிப்படையில் தாய்மை, தாய்ப்பால், குழந்தை வளர்ப்பு, தாயின் துஆ போன்ற தலைப்புகளில் என். முகம்மது மீரான் தாய்மை குறித்து தெளிவுபட விளக்கியுள்ளார். குர்ஆன் […]

Read more

உலகத் திரைப்படம்

உலகத் திரைப்படம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 225ரூ. ஆக்கப்பூர்வமான திரைப்படங்கள் உயர்ந்த இலக்கியங்கள் என்ற அளவில் போற்றப்பட வேண்டியவை. அந்த வகையில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படங்கள் மற்றும் இயக்குனர்கள் குறித்தும், அவர்களது படைப்புகள் பற்றியும் ஆய்வு நோக்கோடு டாக்டர் வெ. சுங்பபிரமணிய பாரதி அலசி ஆராந்துள்ளார். விசித்திரமான கதாபாத்திரங்கள், உரையாடல்கள், அதிர்ச்சிகரமான காட் மாற்றங்கள் என ஒரு வித்தியாசமான கோணத்தில் உலக சினிமாவை மக்கள் மத்தியில் உலவவிடுகிறார். நன்றி: தினத்தந்தி, 27/4/2016.   —- எது சாதனை?, அழகு பதிப்பகம், விலை 250ரூ. […]

Read more

பொன்னகரம்

பொன்னகரம், அரவிந்தன், காலச்சுவடு பதிப்பகம், விலை 230ரூ. மைய நீரோட்டம் எனச் சொல்லப்படும் உலகில் இருப்பவர்கள் நுழையத் தயங்குகிற சாம்பல் உலகத்தில் வெளிச்சத்தைத் தேடுகிற நாவல் இது. கதைக்களம், கதை மாந்தர்கள், அதில் வெளிப்படுத்தக்கூடிய வாழ்வு ஆகியவை நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. ‘பொன்னகரம்’ வெளியில் இருப்பவர்களுக்கு ஒரு சிறிய காலனி. ஆனால் அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு ஊர். அந்த ஊரின் பொதுத்தன்மை சாம்பல் நிறம். அந்தச் சாம்பல் நிற உலகத்தில் யார் யாரெல்லாம் குற்றாவாளிகள், குற்றம் என்றால் என்ன என்பது குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. […]

Read more

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள், ப்ரியா பாலு, கண்ணப்பன் பதிப்பகம், விலை 400ரூ. விக்கிரமாதித்தன் கதைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது வேதாளமும், விக்கிரமாதித்தனும் பங்கு கொண்ட கதைகளாகும். மன்னன் எப்படி நீதி செலுத்த வேண்டும்? மக்களை எப்படிக் காக்க வேண்டும் என்ற கருத்துகளை விக்கிரமாதித்தன் கதைகள் எடுத்துச் சொல்கின்றன. மேலும் வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்குகின்றன. நன்னெறிகளை கதாபாத்திரங்கள் மூலம் எடுத்துரைக்கின்றன. இந்தக் கதைகள் மந்திரங்கள், தந்திரங்கள், மாயாஜாலங்கள் நிறைந்தவை. அத்தகைய கதைகளை எழுத்தாளர் ப்ரியா பாலு குழந்தைகளுக்கு புரியும் வகையில் எளிமையாகவும், சுவையாகவும் எழுதியுள்ளார். நன்றி: […]

Read more

நடிகைகளின் கதை

நடிகைகளின் கதை, யுவகிருஷ்ணா, சூரியன் பதிப்பகம், விலை 150ரூ. சில நடிகைகளின் சொந்த வாழ்க்கை அவர்கள் நடித்த படங்களைவிட வியப்பும், திகைப்பும் நிறைந்தவையாக இருக்கும். உதாரணமாக, “சிவந்த மண்” காஞ்சனா, பல படங்களில் நடித்து சிறைய சம்பாதித்தார். அதையெல்லாம் அவருடைய அப்பாவே அபகரித்துக்கொண்டார். சட்டத்தின் துணையுடன் போராடி, ரூ.15கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டார். அதை அப்படியே திருப்பதி கோவிலுக்கு எழுதி வைத்துவிட்டு, பெங்களூரு புறநகரில் சிறிய வாடகை வீட்டில் வசித்தார். கன்னட திரை உலகின் கனவு கன்னியாகத் திகழ்ந்த கல்பனா, யாரும் எதிர்பாராத விதமாக […]

Read more

வழிகாட்டும் வள்ளுவம்

வழிகாட்டும் வள்ளுவம், வானதி பதிப்பகம், விலை 170ரூ. திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும் புதுப்புது தகவல்களைக் கூறும் அரிய நூல் இது. பேராசிரியர் இரா. மோகன், அவர் மனைவி பேராசிரியர் நிர்மலா மோகன் இருவரும் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளனர். திருக்குறளுக்கு அறிஞர் – பெருமக்கள் எழுதிய உரைகளை ஆராய்ந்து, நாமக்கல் கவிஞர் சில குறள் பாக்களுக்கு எழுதியுள்ள நுட்பமான உரையை சுட்டிக்காட்டுகிறார்கள். திருவள்ளுவருக்கும், சீன அறிஞர் கன்பூசியசுக்கும் (கி.மு.551 – கி.மு.479) உள்ள ஒற்றுமைகள் பற்றியும் எடுத்துக் கூறுகிறார்கள். சுருக்கமாகக் கூறினால், திருவள்ளுவர் […]

Read more
1 5 6 7 8 9