திரையிசை வளர்த்த தமிழ்க்கவிகள் (தொகுதி 3)

திரையிசை வளர்த்த தமிழ்க்கவிகள் (தொகுதி 3), கவிஞர் பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 250ரூ. திரைப்பட பாடலாசிரியர் மதுர பாஸ்கரதாஸ் தொடங்கி பஞ்சு அருணாசலம் வரை 100 பாடலாசிரியர்களையும், அவர்களின் படைப்புகளையும் முதல் தொகுதியில் ஆவணப்படுத்தி, 1963-1981 காலகட்டத்தில் பாடல்கள் எழுதிய 19 பேரையும், அவர்களின் பாடல்களையும் 2வது தொகுப்பில் ஆவணப்படுத்திவிட்டு, இந்த 3ம் தொகுதியை நூலாசிரியர் தந்து உள்ளார். இதில் எம்.ஜி.வல்லபன் தொடங்கி யுகபாரதி வரையில் 21 திரைப்பட பாடலாசிரியர்களின் வாழக்கைச்சுருக்கம், படைப்புகள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. திரைப்படத்துறைக்கு அப்பால் இருந்து ஒருவர், அதுவும் […]

Read more

சமூக நலத்துறை திட்டங்கள் மற்றும் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு நடைமுறைகள்

சமூக நலத்துறை திட்டங்கள் மற்றும் பாலியல் வன்புணர்ச்சி வழக்கு நடைமுறைகள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 370ரூ. குழந்தைகளுக்கான தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கி பெண்கள், மூத்த குடிமக்கள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு தமிழக அரசு நிறைவேற்றி வருகிற சமூக நலத்திட்டங்களின் பலன்களை அடைவதற்கான வழிமுறைகள் எளிய முறையில் தெளிவாக தரப்பட்டு உள்ளது. சமூக நலத்திட்டங்கள் தொடர்பான அதிகாரிகளின் முகவரி, தொலைபேசி எண்கள் வரை தந்திருப்பது சிறப்பு. பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாகிற பெண்கள் எந்தெந்த சட்டங்களின் கீழ் வழக்கு தொடரா முடியும். அந்த […]

Read more

விஞ்ஞான லோகாயத வாதம்

விஞ்ஞான லோகாயத வாதம், ராகுல் சாங்கிருத்யாயன், தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 135ரூ. காரண காரிய வாதம், உண்மை, தலைவிதி தத்துவம், மூடநம்பிக்கைகள், பூதங்களும் இயக்கங்களும், குணாம்ச மாறுதல் போன்றவை குறித்து விரிவான விளக்கங்களை முன்வைப்பதுடன், பல்வேறு விவாத களங்களையும் உருவாக்கி சொல்லி இருக்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027075.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அழகான அம்மா

அழகான அம்மா, ரஷ்ய சிறார் கதைகள், தமிழில் யூமா வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 360, விலை 290ரூ. குழந்தைகளின் உலகம் மிக இனிமையானது. சாதாரண விஷயங்களையும் கதையாக சொல்லும் போது, ஈர்க்கும் பருவம் அது. வாழ்க்கையின் புரிதலை, கதை வழியாக கேட்பதால் ஆனந்தமடையும் வயது. அதனால் தான், வீடியோ காட்சிகளாகவும், ஆடியோ பேச்சுகளாகவும் வடிவம் எடுத்துள்ள கதைகளுக்கும் மவுசு குறையவில்லை. ‘டிவி சேனலில்’ ஒளிபரப்பாகும், பொம்மை படங்களின் கதைகள், இந்த தலைமுறை குழந்தைகளை ஈர்க்கின்றன. இருந்தாலும், ‘பாட்டி வடை சுட்ட […]

Read more

தமிழர் மரபும் அறிவியல் பார்வையும்

தமிழர் மரபும் அறிவியல் பார்வையும், ச.ராமமூர்த்தி, லாவண்யா பதிப்பகம், விலை 150ரூ. தொன்மை சிறப்பு வாய்ந்த சங்கச் சான்றோர் தொடங்கி இன்றைய கபிலன் வைரமுத்து வரை வாழையடி வாழை என வழிவந்த கவிஞர்களின் படைப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி தான் எழுதிய 16 கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார் பேராசிரியர் ச.ராமமூர்த்தி. முற்றிலும் திறனாய்வு கட்டுரைகளை கொண்ட இந்த நூல் கட்டமைப்பு, கருத்து வைப்பு, ஆய்வுநெறி மற்றும் முடிவுரைத்தல் ஆகிய 4 நிலைகளிலும் தனிசிறந்து நிற்கிறது. இந்நூல் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு ஓர் வழிகாட்டியாக அமையும். […]

Read more

இருவேறு உலகங்கள்

இருவேறு உலகங்கள், சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், விலை 350ரூ. இன்றைய இந்திய சமுதாயம் வறுமை, அறியாமை, தீண்டாமை போன்ற ஒரு உலகத்திலும், அறிவுடைமை, செல்வச்செழிப்பு, வெறுப்பு என்ற இன்னொரு உலகத்திலும் பயணித்து கொண்டிருக்கிறது என இருவேறு உலகங்கள் என நாவலை படைத்துள்ளார் ஆசிரியர். சாதி என்ற குறுகிய வட்டத்துக்குள் நாடு பிரிந்து கிடப்பதையும், தீண்டாமை என ஒடுக்குமுறையால் தலித் மக்கள் தனித்து நிற்பதையும் படம் பிடித்து காட்டுகிறார். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

நாட்டுக்கொரு பாட்டு

நாட்டுக்கொரு பாட்டு, பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, தி இந்து தமிழ், விலை 170ரூ. உலக நாடுகளின் தேசிய கீதம் உருவான விதம் பற்றி தி இந்து தமிழ் நாளிதழின் மாயாபஜார் இணைப்பிதழில் எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. 43 பிரபல நாடுகளின் தேசிய கீதம் குறித்து பலரும் அறிந்திராத விஷயங்கள் சுவைபட திரட்டப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் வெவ்வேறு வித தகவல்களை நூலாசிரியர் பதிந்திருப்பதும், பாடலை தமிழாக்கம் செய்திருப்பதும் பாராட்டப்பட வேண்டிய அம்சம். குறிப்பாக பாடல்களை எழுதிய கவிஞர்களின் வாழ்க்கை குறிப்பு, பாடல்கள் […]

Read more

நாம் கண்ட வள்ளல் எம்.ஜி.ஆர்.

நாம் கண்ட வள்ளல் எம்.ஜி.ஆர்., கமலா கந்தசாமி, தமிழன் குழுமம், விலை 200ரூ. ‘குன்றனைய பொருள் சேர்த்துக் கொடுத்து புகழ் வளர்த்தோன்’ என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப் பெற்ற எம்.ஜி.ஆரைப் பற்றிய இந்த நூல், அவரது வாழ்க்கை, சினிமா, அரசியல், கொடை உள்ளத்தை படம்பிடித்து காட்டி உள்ளது. குறிப்பாக அவர் யார், யாருக்கெல்லாம் குறிப்பறிந்து உதவி செய்து இருக்கிறார் என அறிகிறபோது வியப்பாக இருக்கிறது. தன்னை துப்பாக்கியால் சுட்ட எம்.ஜி.ஆர்.ராதாவைக்கூட, “என்னண்ணே இப்படி பண்ணிட்டீங்களே” என்று தான் கேட்டார் என்ற பண்பு நலனும் வியப்புக்கு […]

Read more

இடம் பொருள் மனிதர்கள்

இடம் பொருள் மனிதர்கள், மாதவ பூவராக மூர்த்தி, விருட்சம் பதிப்பகம், விலை 130ரூ. வாழ்க்கை என்னும் நெடும் பயணம் நமக்கு அளித்து செல்லும் அனுபவங்கள் ஏராளம். அந்த நினைவுகள் எப்போதும் சுகமானவையாகவே இருக்கும். அப்படி சக மனிதர்கள், பொருட்கள், இடங்கள் போன்றவற்றால் தனக்கு ஏற்பட்ட சிறப்பான அனுபவங்களை இங்கே சுவையாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். நகைச்சுவை உணர்வுடன் கருத்தையும் கவரும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை படிக்கும்போது நமது வாக்கை அனுபவங்களும் கண்முன்னே வந்து செல்வது சிறப்பு. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000027077.html […]

Read more

மாயமனிதன்

மாயமனிதன், எச்.ஜி.வெல்ஸ், தமிழில் புவியரசு, சப்னா புக் ஹவுஸ், விலை 100ரூ. நவீன அறிவியலுடன், கற்பனையையும் சேர்த்து எழுதப்படும் கதைகள் எப்போதும் சுவாரஸ்யத்தை கூட்டும். அப்படி ஐரோப்பிய இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘இன்விசிபிள் மேன்’ என்ற நாவல், தமிழில் மொழிபெயர்த்து தரப்பட்டு உள்ளது. நாவலை படிக்கும்போதே அதன் காட்சிகள் மனதில் இழையோடுகின்றன. விறுவிறுப்பும், திகிலும் கூட்டும் இந்த நாவல் படிப்போரை பரவசத்தில் ஆழ்த்தும். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more
1 2 3 4 9