ஈடேற்றும் சமத்துவம்

ஈடேற்றும் சமத்துவம்,  பிரபா ஸ்ரீதேவன், தமிழில்: ஸ்ரீ.சம்பத்,நீதிபதி சிவராஜ் வி.பாட்டீல் பவுண்டேசன், பக்.174, விலை ரூ.200. நூலாசிரியர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக  அந்நூலில் உள்ள கட்டுரைகளின் தமிழாக்கமும், நூலாசிரியர் ஆற்றிய உரைகளும், தினமணியில் வெளிவந்த கட்டுரைகளும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சமத்துவம் தேவை என்கிற அடிப்படையில் நம் சமூகத்தில் சமத்துவம் மறுக்கப்பட்டவர்களான மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், சாதிரீதியாக மலக்கழிவுகளை அள்ளும் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், பெண்கள் ஆகியோரின் மனித உரிமைகள் எவ்வாறெல்லாம் மறுக்கப்படுகின்றன; அவர்களுடைய மனித உரிமைகளை அவர்களுக்கு எவ்விதம் மீட்டெடுத்துக் கொடுப்பது என்று […]

Read more

சிதறு தேங்காய்

சிதறு தேங்காய்,  வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், பக்.112, விலை ரூ.80. ‘குமுதம்‘ வார இதழில் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். எழுதிய குறுங்கதைகளின் தொகுப்புதான் ‘சிதறு தேங்காய்‘. மனிதர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், மனக்கசப்புகளுக்கு கதைகள் மூலம் தீர்வு வழங்குகிறது இந்த நூல். கதைகள் யாவும் இதுவரை அதிகம் கேள்விப்படாதவை என்பதுதான் சிறப்பு. சில கதைகள் நூலாசிரியரின் அனுபவ கதைகள் என்பதால் சுவாரஸ்யம் கூடுகிறது. சொல்லப்படாத சில கதைகளில் ஒன்று, ராமாயணத்தில் சீதை மட்டும் தீக்குளிக்கவில்லை;கற்பை நிரூபிக்க லட்சுமணனும் தீக்குளித்தான் என்பதுதான். மராத்திய ராமாயணமான பவர்த் ராமாயணத்தில் […]

Read more

உதிர்ந்த இலைகளின் பாடல்

உதிர்ந்த இலைகளின் பாடல், தமிழில் ப. கல்பனா, பரிசல் வெளியீடு, விலை 150 ரூ. 1999-ல் வெளியான கவிதைகள் என்னும் மொழிபெயர்ப்பு நூலின் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது இந்நூல். மொழிபெயர்ப்பாளர் தமிழ் இலக்கிய மாணவியாக இருந்தபோது சீன இலக்கியம் எனும் காலாண்டிதழில் வாசித்த சீன கவிதைகளில் மனம் ஒன்றி 42 சீனக் கவிஞர்களின் 87 கவிதைகளையும், 6 நாட்டுப்புறப் பாடல்களையும் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். சீன மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வையும் அந்த நிலப்பரப்பையும் தனது மொழிபெயர்ப்பின் வழியாக மிக நெருக்கமாக தமிழ் வாசகர்களுக்கு கொண்டுவந்து […]

Read more

சுபமங்களா நேர்காணல்கள் – கலைஞர் முதல் கலாப்ரியா வரை

சுபமங்களா நேர்காணல்கள் – கலைஞர் முதல் கலாப்ரியா வரை, தொகுப்பாசிரியர்: இளையபாரதி, வ.உ.சி. நூலகம், பக்.624, விலை ரூ.600. ‘சுபமங்களா‘ இதழில் வெளியான நேர்காணல்களின் தொகுப்பான இந்நூலில் எழுத்தாளர்கள், ஓவியக் கலைஞர்கள், திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. கலைஞர் மு.கருணாநிதி நேர்காணல் தொடங்கி, மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், லா.ச.ராமாமிர்தம், சுந்தர ராமசாமி, தொ.மு.சி.ரகுநாதன், கி.ராஜநாராயணன், சா.கந்தசாமி, கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, வண்ணநிலவன், செ.யோகநாதன், கலாப்ரியா உள்ளிட்ட 38 பிரபலங்களின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. கலைஞரின் தந்தை முத்துவேலரே சிறந்த […]

Read more

காஞ்சி முனியெனும் கருணை நிதி

காஞ்சி முனியெனும் கருணை நிதி, ஸ்ரீதர், சாமா, விருட்சம், பக்.144, விலைரூ.100. காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் அறுபத்தெட்டாவது பீடாதிபதியாகத் திகழ்ந்தவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். ‘பரமாச்சார்யா‘ என்றும் ‘மஹா பெரியவா‘ என்றும் பக்தர்களால் அழைக்கப்படும் சுவாமிகளின் வாழ்வில் நிகழ்ந்த பல அபூர்வ சம்பவங்கள், அவரது உபதேசங்கள் ஆகியவற்றின் தொகுப்பே இந்நூல். பிற துறவிகளைப் போல உலக நன்மைக்காக கடவுளை வழிபடுபவராக மட்டும் இல்லாமல், துன்பப்படுவோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதே உண்மையான இறைப்பணி என்று கூறி அப்படியே செயல்பட்டும் இருக்கிறார். குறிப்பாக, உயிருக்குப் போராடுபவர்களுக்கு […]

Read more

பிருந்தாவன் யாத்திரை

பிருந்தாவன் யாத்திரை,  சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், பக்.276, விலைரூ.200. நம்நாட்டில் தீர்த்த யாத்திரை செல்லும் வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருகிறது. அவற்றில் அயோத்தி, பிருந்தாவன் யாத்திரைகள் மிகவும் புனிதமானவை. அவை இரண்டும் கடவுள் வாழ்ந்த இடம் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம். பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த புண்ணிய பூமிகளான பிருந்தாவனம், மதுரா, கோகுலம், நந்தகாம், பர்ஸானா, கோவர்த்தன் மலை ஆகிய ஆறு இடங்களும் சேர்த்தே ‘பிருந்தாவன்‘ அல்லது ‘விரஜ மண்டலம்‘ என்று அழைக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் பிருந்தாவனுக்கு மூன்று முறை செல்லும் […]

Read more

ஈழம் 87

ஈழம் 87, வரலாற்று ஓவியப் பதிவு, தாய்ப்பனை வெளியீடு, விலை 500ரூ. ஓவிய வடிவில் ஈழப்பிரச்னை ஈழப் பிரச்னையை விளக்கும் பல நூல்களுக்கு மத்தியில் அப்பிரச்னையின் ஒரு முக்கிய காலகட்டத்தைர ஓவியங்களின் மூலமாகச் சொல்கிறது இந்த நூல். அங்கங்கே வர்ணனையாக குறிப்புகளை உணர்வுடன் எழுதி இருப்பவர் புகழேந்தி தங்கராஜ். 1987ஆம் ஆண்டு நிகழ்ந்த பிரபாகரன் – ராஜீவ்காந்தி சந்திப்பு முதல் அதன் பின்னர் நிகழ்ந்த இந்திய அமைதிப்படை – புலிகள் மோதல் போக்கு என 1987 முதல் 1990 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த […]

Read more

ஐந்தாம் வேதம் பாகம் 1, பாகம் 2

ஐந்தாம் வேதம் பாகம் 1, பாகம் 2, ஜெ.கே.சிவன், கிருஷ்ணார்ப்பணம் சேவா சொஷைட்டி. இந்த நாட்டின் ஒப்பற்ற காவியமான மஹாபாரதத்தை, ‘ஐந்தாம் வேதம்’ என, பலரும் புகழ்கின்றனர். மஹாபாரதத்தை தமிழில், வில்லிபுத்துாரார் பாடியுள்ளார். பலரும் உரைநடையாக, எழுதிஉள்ளனர். எத்தனை முறை படித்தாலும், அலுப்பு தட்டாத மஹாபாரதத்தை, விலாவாரியாக, ஒரு சம்பவத்தை கூட விடாமல், ஐந்தாம் வேதம் என்ற பெயரில் ஆசிரியர் எழுதியுள்ளது, மிகச் சிறப்பு. மஹாபாரத கதையை ஆதியிலிருந்து, முடியும் வரை, ஆசிரியர் எளிமையாக, குழந்தைகளும் விரும்பி படிக்கும் வகையில் தந்துள்ளார். எந்த கதாபாத்திரத்தின் […]

Read more

வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள்,  ஞா.தேவநேயப் பாவாணர், பூம்புகார் பதிப்பகம், பக்.688, விலை ரூ.450. ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே‘ என்று சுட்டுகிறது தொல்காப்பியம். ஒரு கருத்திலிருந்து மற்றொரு கருத்து தோன்றும்போது, ஒரு சொல்லிலிருந்து மற்றொரு சொல் பிறக்க இடமுண்டாகிறது. கருத்து வேறுபடும்போது சொல்லும் வேறுபட வேண்டும். இல்லையெனில் பொருள் மயக்கம் உண்டாகும். மொழியும் வளர்ச்சியுறாது. இதுவே சொல்லாக்க நெறிமுறை. இந்த நெறிமுறையை அடிப்படையாகக் கொண்டு, தம் வாழ்நாள் முழுவதும் வேர்ச்சொல் ஆய்வில் மூழ்கிக் கிடந்த ஞா.தேவநேயப் பாவாணர் ‘செந்தமிழ்ச் செல்வி‘ என்னும் திங்களிதழில் தொடர்ந்து எழுதி […]

Read more

பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள் பாகம்-1

பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள் பாகம்-1, தமிழில்: மதுமிதா,சாகித்திய அகாதெமி, பக்.496, விலை ரூ.365. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 34 தெலுங்கு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இச்சிறுகதைகளின் மாந்தர்களை நீங்கள் உங்கள் வீட்டருகே, தெருவில், கடைவீதியில், பொது இடங்களில் சந்திக்கலாம். ஆதரவற்றவர்கள், அனாதைக் குழந்தைகள், ஒருவேளை உணவு கிடைக்காமல் திண்டாடுபவர்கள், அவர்களின் உளவியல்ரீதியிலான சிக்கல்கள் எல்லாவற்றையும் மிகவும் அற்புதமாகச் சித்திரித்திருக்கிறார். எனினும் இக்கதைகளின் ஊடே மனிதநேயமும், பிறருக்காக வாழ்தலும் பிரதானப்படுத்தப்படுகிறது. கிணறு தோண்டியவன் எப்போதோ இறந்து போயிருக்கலாம். ஆனால் அவன் இன்னும் தாகம் கொண்ட வழிப்போக்கர்களுக்கு உயிரளித்துக் […]

Read more
1 2 3 4 5 9