பண்டைய தமிழர் பண்பாடு

பண்டைய தமிழர் பண்பாடு, பாலசுந்தரம் இளையதம்பி, மணிமேகலைப் பிரசுரம், விலை 220ரூ. பண்டைய தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு எனும் இந்நுால், பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பியால் எழுதப் பெற்றது. இது, பெயருக்கேற்ப பண்டைய காலத் தமிழர்களின் வரலாற்றை மீள்கட்டமைப்பு செய்யும் வகையில் இந்நுாலாசிரியரின் ஆய்வுப் பார்வை தெளிவாக உள்ளது. பண்டைய தமிழர்கள் வாழ்ந்த நாட்டிற்கு நாவலந்தீவு நிலம் எப்பெயரால் வழங்கப்பட்டு வந்தது என்பதை ஆதாரங்களுடன் விளக்கும் அவர், பிற்பாடு அப்பெயர் மருவியதற்கான காரணங்கள் உள்ளிட்டவற்றை விரிவாக விளக்கிச் செல்லும் பாங்கு அருமை. […]

Read more

இன்றும் இனிக்கிறது நேற்று

இன்றும் இனிக்கிறது நேற்று, ஞானச்செல்வன், வானதி பதிப்பகம், விலை 150ரூ. நூலாசிரியர் கவிக்கோ ஞானச்செல்வன் தம் மனத்திற்கு நியாயம் என்று எது படுகிறதோ? அதன்படியே வாழ்ந்து, தன் வரலாற்று நூலை தமிழர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் படைத்து உள்ளார். இதில் சமகாலத் தமிழறிஞர்கள், கவிஞர்கள் என எண்ணற்றோர் பெயர்களை சுட்டிக்காட்டியிருப்பதுடன், அபூர்வ தகவல்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. பட்டிமன்றங்களின் இன்றைய நிலை பற்றி நூலாசிரியர் கூறிய கருத்துகள் சிந்திக்க தூண்டுகின்றன. நன்றி: தினத்தந்தி, 25/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027097.html இந்தப் புத்தகத்தை […]

Read more

பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ

பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் ரேடியோ, தங்க.ஜெய்சக்திவேல், டெஸ்லா பதிப்பகம், விலை 100ரூ. புயல், மழை போன்ற பேரிடர் காலங்களில் செல்போன், தொலைக்காட்சி, தொலைபேசி போன்ற கருவிகள் வெயலிழந்து விடும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ‘ஹாம் ரேடியோ’ என்னும் ஒலி பரப்புக்கருவி, எத்தகைய இடரிலும் தொடர்ந்து செயல்படும் ஆற்றல் மிக்கது. இந்த கருவியின் சிறப்பம்சங்களை விளக்கி எழுதப்பட்டுள்ள நூல் இது. படித்து பயனுறு வேண்டிய சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 25/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல்

நபிகளார் (ஸல்) போதித்த வாழ்வியல், இஸ்லாமிய நிறுவனம், விலை 275ரூ. காலை விழித்தது முதல் இரவு தூங்க செல்லும் வரை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என உன்னத வழிமுறைகளைச் சொல்லித்தருகிறது இஸ்லாம் மார்க்கம். அத்தகைய வாழ்வியல் நெறிகளாகப் பயன்படும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழீகளை பல்வேறு தலைப்புகளில் மவுலானா ஜலீல் அஹ்ஸன் நத்வீ தொகுத்து தந்துள்ளார். இதை இ.எ.பஸ்லூர் ரஹ்மான் உமரீ அழகிய முறையில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 25/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும்

சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும், மொழிபெயர்ப்பு சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், விலை 125ரூ. 2,300 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியாவின் மகத நாட்டு எல்லைப்புறத்தில் வாழ்ந்து வந்த சாணக்கியர் அரசியலிலும், பொருளாதாரத்திலும் கரைகண்டவர். அவர் ‘கௌடில்யர்’ என்கிற பெயரில் சமஸ்கிருத மொழியில் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்ற நூலின் நுணுக்கங்கள் இன்றளவும் அரசியல் மற்றும் பொருளாதார மேதைகளால் விவாதிக்கப்படுகின்றன. இது தவிர வாழ்வியல் குறித்தும் சில நீதி சாஸ்திரங்களை எழுதி இருக்கிறார் சாணக்கியர். அவற்றில் பிரதானமானது சாணக்கிய நீதி. இந்நூல் அந்தரங்க வாழ்க்கைக்கு ஒரு […]

Read more

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த கதை

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த கதை, ஆர்.சி.சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 55ரூ. சாதாரண குடும்பத்தில் பிறந்து குறைந்த அளவே கல்வி அறிவு பெற்றிருந்தாலும், கப்பல்களிலேயே தனது வாழ்நாளை கழித்து அமெரிக்காவை கண்டுபிடித்தவர் கொலம்பஸ். அவரது வாழ்க்கை பயணத்தை முழுமையாக எடுத்துரைக்கிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 25/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சந்தித்தேன் சிந்தித்தேன்

சந்தித்தேன் சிந்தித்தேன், சிந்தனைக் கவிஞர் கவிதாசன், குமரன் பதிப்பகம், விலை 80ரூ. வாழ்க்கை தெரு எங்கும் நிறைந்து உள்ள வளர்ச்சிக்கான பாடங்களை கவனித்து கற்று கொள்பவர்கள் மட்டுமே முன்னேற்ற பாதையில் செல்கின்றனர். மற்றவர்கள் பின்னடைவுகளை சந்திக்கன்றனர். அவ்வாறு உண்டாகும் பயண அனுபவங்களில் எதை கற்றுக்கொள்ள வேண்டும், எதை புறந்தள்ள வேண்டும் என்ற தன்னுடைய அனுபவங்களை இணைத்து தொகுத்து நூலாக்கி உள்ளார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 25/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027096.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

நீட் தேர்வு யாருக்காக?

நீட் தேர்வு யாருக்காக?, நா.முத்துநிலவன், மேன்மை வெளியீடு, விலை 50ரூ. நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அலசி ஆராய்ந்து பல்வேறு தளங்களில் தான் எழுதியவைகளை தொகுத்து நூலாக வெளியிட்டு உள்ளார் ஆசிரியர். நீட் தேர்வினால் மாநில கல்வி திட்டத்தில் படிப்பவர்களுக்கு மட்டுமல்ல, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கும் அநீதிதான் இழைக்கப்படுகிறது என்று கூறுகிறார். பள்ளி பாடங்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும், ஆசிரியரின் கற்பித்தல் எப்படி இருக்க வேண்டும் என்றும் நூலில் குறிப்பிட்டு இருக்கிறார். நன்றி: தினத்தந்தி, 25/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027095.html இந்தப் […]

Read more

முதல் தலைமுறை மனிதர்கள்

முதல் தலைமுறை மனிதர்கள், சேயன் இப்ராஹீம், நிலவொளி பதிப்பகம், விலை 200 ரூ. முஸ்லிம் சமூகத்தில் பிறந்து குறிப்பிடத்தக்க ஆளுமைகளாக விளங்கிய 30 பேரின் வாழ்வை பற்றி விரிவான தொகுப்பு நூல் இது. அரசியல், கல்வி, சமூக சேவை எனப் பல தளங்களிலும் தங்களது சிறப்பான பங்களிப்பை செய்தவர்களின் அறிமுகமாக மட்டும் சுருங்கி விடாமல் அவர்களின் வாழ்வில் நடைபெற்றத சுவையான நிகழ்வுகளையும், அன்றைய கால தமிழக அரசியல் சூழலையும் இணைத்தெழுதியிருப்பது நூலுக்கு கூடுதல் அர்த்தத்தை தருகிறது. நன்றி: தி இந்து. 7/7/2018.   இந்தப் […]

Read more

கோதை சொல் அமுதம்

கோதை சொல் அமுதம், க.துரியானந்தம், கங்கை புத்தக நிலையம், விலை 70ரூ. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். தமிழ் மொழியின் வளர்ச்சியில் சைவ, வைணவ சமயங்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளும் ஒருத்தி. அவள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்படுகிறாள். பரந்தாமன் மேல் அவள் கொண்ட பக்தியாகிய காதல், தமிழ்ப் பாசுரங்களாக மலர்ந்தன. அவை, நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்னும் தங்கத் தாம்பாளத்தில் மின்னும் வைரங்களாகும். நன்றி: தினமலர், 20/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more
1 3 4 5 6 7 9