முகவரியில்லா முகங்கள்

முகவரியில்லா முகங்கள்,கவி.தங்க.ஆரோக்கியதாசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ. 25 சிறுகதைகள் கொண்ட தொகுதியாக வழங்கப்பட்டுள்ளது. இது தனது முதல் முயற்சி என்று நூலாசிரியர் கூறியுள்ளது நம்ப முடியவில்லை. அந்த அளவுக்கு தேர்ந்த எழுத்தாளர் போல யதார்த்த நடையில், தான் சந்தித்த முகம் தெரியாத சாதாரண மனிதர்கள் பற்றிய நிகழ்வை கதையாக வடித்துள்ளார். சில கதைகள் சென்னையில் நம் கண் முன் நடந்த சம்பவங்களை நினைவு கூறுகின்றன. சோகம், வறுமை என பிழிந்துவிடுகிறார். ஒவ்வொரு சிறுகதையும் சில இடங்களில் நடந்த சிறுகதைகளுக்கான போட்டிகளில் பரிசு பெற்றுள்ளன. […]

Read more

பணம் மற்றும் பலன் தரும் மரங்கள்

பணம் மற்றும் பலன் தரும் மரங்கள், கா.த.பார்த்திபன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 280ரூ. பல வகையான மரங்களின் சிறப்புகள், அந்த மரங்களை சாகுபடி செய்வது எப்படி, நோய் மற்றும் பூச்சிகளில் இருந்து அவற்றை காப்பது எவ்வாறு, வளர்ந்து மரங்களை சந்தைப்படுத்தும் விதம் என்று மரங்கள் தொடர்பான அத்தனை விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் ராசிக்கு ஏற்ற மரங்கள், மருத்துவ குணம் மிக்க மரங்கள் போன்று தகவல்களும் தரப்பட்டுள்ளன. மரம் பயிரிடுபவர்கள் மட்டும் இன்றி அனைவரும் தெரிந்து கொள்வதற்கு ஏராளமான குறிப்புகள் கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பு. நன்றி: […]

Read more

ராணுவ நாயகி நிர்மலா சீதாராமன் வாழ்க்கை வரலாறு,

ராணுவ நாயகி நிர்மலா சீதாராமன் வாழ்க்கை வரலாறு, டாக்டர் மனோஸ், ஹலோ பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. மதுரையில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் மிக உயர்ந்த பொறுப்புகளில் ஒன்றான ராணுவ மந்திரி என்ற அந்தஸ்துக்கு உயர்ந்த நிர்மலா சீதாராமன் பற்றிய விவரங்கள் விலாவாரியாகத் தரப்பட்டுள்ளன.2014 முதல் 2018 வரையிலான அவரது டைரிக் குறிப்பு, ரபேல் போர் விமான விவகாரம் தொடர்பான கருத்துக்கள் ஆகியவையும் இதில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

உலகின் இருபெரும் போர்கள்

உலகின் இருபெரும் போர்கள், மதிமாறன், வேமன் பதிப்பகம், விலை 200ரூ. புத்தகத்தின் தலைப்பு, முதல் மற்றம் இரண்டாம் உலகப் போர்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடுவதாக இருந்தாலும், இந்தப்புத்தகம் உலக வரலாறு, மனித இனத் தோற்றம், வரலாற்றில் இடம் பெற்ற வியட்நாம் போர், உள்ளிட்ட பல போர்கள், போர்களுக்குத் தேவையான ஆயுதங்கள் என்று பல விஷயங்களையும் அலசுகிறது. போர்கள் பற்றிய முழுவிவரங்களையும் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தமிழ் அகராதி

தமிழ் அகராதி, தொகுப்பு த.கோவேந்தன், பூம்புகார் பதிப்பகம், விலை 300ரூ. தமிழ் இலக்கியங்களில் நெருடலான பல தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. அவற்றுக்கு எளிய பொருள் என்ன என்பதைத்தெரிந்து கொள்வதற்காக புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரிடம் தமிழ் பயின்ற புலவர் த.கோவேந்தன், இந்த அகராதியைத்தொகுத்துத் தந்துள்ளார். ஒரே சொல்லுக்கு உரிய பல பொருள்களையும் அகர வரிசைப்படி தந்து இருப்பதால், மாணவர்கள்மட்டும் அல்லாமல் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்த நூல் மிக்க பயன் உள்ளதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மதுரைக் கோயில் வரலாறு

மதுரைக் கோயில் வரலாறு, இரா.இளங்குமரன், செல்லப்பா பதிப்பகம், விலை 120ரூ. கோவில் நகரம் என்று புகழ்பெற்ற மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலின் சிறப்புகள், அந்தக் கோவில் தொடர்பான வரலாறு போன்றவை விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. கட்டுரை வடிவில் தராமல் பேசிக்கொள்வது போன்ற நடையில் இந்த புத்தகத்தை அமைத்து இருப்பதால், படிக்க சுவையாகவும் ருசிகரமாகவும் உள்ளது. மதுரைக்கோவிலை நேரில் கண்டது போன்ற உணர்வை இதன் மூலம் பெறலாம். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027254.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

தாமஸ் பெய்யின் பொது அறிவு

தாமஸ் பெய்யின் பொது அறிவு, தமிழில் வெ.ஜீவானந்தம், மேன்மை வெளியீடு, விலை 50ரூ. அமெரிக்க சுதந்திரப் போராட்டக் காலத்தில் அரசியல் சிந்தனையாளர் தாமஸ் பெய்ன் எழுதி ‘காமன் சென்ஸ்” நூலின் மொழிபெயர்ப்பு. சுதந்திரம், சமத்துவம் முதலிய மக்களாட்சியின் அடிப்படைகளையும் அவசியத்தையும் உணர்த்தும் நூல். நன்றி:தி இந்து, 6/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பழந்தமிழில் காலங்கள்

பழந்தமிழில் காலங்கள், ச.சுபாஷ் சந்திரபோஸ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 160ரூ. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற காலப்பகுப்பை தொல்காப்பியர் காலம் தொட்டு விரிவான ஆதாரங்களுடன் விளக்கும் பழந்தமிழ் இலக்கண ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. மொழியில் ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள நூல். நன்றி:தி இந்து, 6/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பாரதி உள்ளம்

பாரதி உள்ளம்,  வி.ச.வாசுதேவன், சந்தியா பதிப்பகம், பக். 144, விலை ரூ.135. தமிழின் மகாகவியான பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகளானாலும் அவரது படைப்புகள் சிலாகிக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் அவரது கவித்துவம் நிரம்பிய தூய உள்ளம். அவருடைய உள்ளத்தில் அன்பு, கடவுள் பக்தி, நகைச்சுவை உணர்வு, தாய்ப்பாசம் போன்ற பல்வேறு அம்சங்கள் அடங்கியிருந்தன. அவற்றைப் பற்றி எழுதியுள்ளார் முதுபெரும் பாரதி அன்பரான வி.ச. வாசுதேவன். பாரதியாரைப் பற்றிய பல்வேறு தகவல்கள், அவரது குரு பரம்பரை, அவரது பழக்க வழக்கங்கள், நண்பர்கள் என்று பல விஷயங்களைச் சுட்டிக்காட்டுகிறது […]

Read more

தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு)

தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு),  பாலூர் கண்ணப்ப முதலியார், பூம்புகார் பதிப்பகம், பக்.458, விலை ரூ.300. தமிழ்மொழி, தமிழ் நூல்கள் எவ்வாறு வளர்ச்சியுற்றன; தமிழ் மொழியின் பழைமை, மாண்பு; முற்கால, இடைக்கால, பிற்கால நூல்கள், அவற்றை இயற்றிய ஆசிரியர்கள்; இக்காலப் புலவர்கள், அவர்களுடைய நூல்கள்; தமிழ் நாட்டின் தொன்மை, சிறப்பு, மக்களின் வாழ்க்கை முறை முதலியனவற்றை இலக்கிய வரலாற்றைக் கூறுவது போலக் கூறாமல், சுவையான செய்திகளையும், பாடல்களையும், மேற்கோள்களையும் இணைத்துக் கூறியிருப்பது, இந்நூலின் சிறப்பு. சங்க காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை […]

Read more
1 2 3 4 9