அரிதார உலகில் அரிதாக வந்த அவதாரமே எம்.ஜி.ஆர்.

அரிதார உலகில் அரிதாக வந்த அவதாரமே எம்.ஜி.ஆர்., நாஞ்சில் பி.சி. அன்பழகன், கண்மணி பதிப்பகம், விலை 250ரூ. திரைப்பட இயக்குநரும் அதிமுக பேச்சாளருமான பி.சி.அன்பழகனின் கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகளின் தொகுப்பு. சினிமா, ஆன்மிகம், வரலாறு என்ற கூட்டுக் கலவையில் நடப்பு அரசியலின் காரமும் நெடியும் கொஞ்சம் தூக்கலாகவே உண்டு. நன்றி:தி இந்து, 6/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஆகாயத்தில் பூகம்பம்

ஆகாயத்தில் பூகம்பம், பட்டுக்கோட்டை பிரபாகர், வானவில் புத்தகாலயம், விலை 200ரூ. பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வார இதழ் ஒன்றுக்கு எழுதிய தொடர்கதையின் தொகுப்பே இந்நூல். விமான கடத்தல் சம்பவத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட ‘திரில்லர்’ கதை. ஒரு விமானி, ராணுவ அதிகாரி, மாவோயிஸ்ட்டுகள், சினிமாவில் சாதிக்கத்துடிக்கும் இளம் இயக்குனர்கள் என பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் இக்கதையில் பயணிக்கின்றன. அவர்களின் லட்சியம், அடிப்படை சித்தாந்தம், காதல், விரோதம் ஆகியவற்றை ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி சர்வதேச அரசியல் பிரச்சினை வரை நடப்பு நிகழ்வுகளுடன் வலைப்பின்னலாக கதையை நகர்த்தி […]

Read more

தமிழ்க்கிளை மொழி அகராதி

தமிழ்க்கிளை மொழி அகராதி, தொகுப்பாசிரியர் இரா.பாலகிருஷ்ணன், சபாநாயகம் பப்ளிகேஷன்ஸ், விலை 400ரூ. ஒரு பொருளைக் குறிக்கும் ஒரு சொல், ஒரு வட்டாரத்தில் ஒரு விதமாகவும், வேறு வட்டாரத்தில் வேறு விதமாகவும் குறிப்பிடப்படுவது கிளை மொழிச் சொற்கள் எனப்படுகின்றன. தமிழ் மொழியில் உள்ள இது போன்ற சொற்களைத் தொகுத்து, அவற்றுக்குப் பொருளுடன் அவை எந்த வட்டாரத்தைச் சேர்ந்தவை என்பதையும் அகராதியாகத் தந்து இருக்கிறார் ஆசிரியர். சுமார் 5 ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளை மொழிச் சொற்கள் உள்ளன என்பது இதம் மூலம் […]

Read more

உச்சியிலிருந்து தொடங்கு

உச்சியிலிருந்து தொடங்கு (தற்கொலைத் தடுப்பு வழிகாட்டி), வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை 175ரூ. வாழ்க்கை என்றால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். வெற்றியும் தோல்வியும், மகிழ்ச்சியும் துன்பமும், வரவும் இழப்பும் கொண்டதுதான் மனித வாழ்க்கை. ஏற்ற இறக்கம் நிறைந்த மனித வாழ்க்கையில் பிரச்சினைகளுக்கு பயந்து தற்கொலை எண்ணத்தை தேடிச் செல்வோரை நல்வழிப்படுத்தும் கருத்துக்கள் நிறைந்த நூல் இது. தற்கொலை எண்ணம் ஏன் வருகிறது? அதற்கு உளவியல், குடும்ப, சமூக காரணங்கள் என்ன?, அதில் இருந்து முண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? […]

Read more

அறிவியல் 1000

அறிவியல் 1000, அ.சப்பையா பாண்டியன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 300ரூ. அறிவியலை ஒரு விளையாட்டு போல எடுத்துச்சொல்வதில் கைதேர்ந்தவர் அ.சுப்பையா பாண்டியன். மாணவர்களுக்கு அறிவியலில் ஆர்வம் ஏற்படுத்தும்விதமாகப் பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான தொடரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. அறிவியலின் அடிப்படையை விளையாட்டாகப் பரிசோதனைகள் மூலம் அறிந்துகொள்ள இந்நூல் உதவும். நன்றி:தி இந்து, 6/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

டொரினா

டொரினா, கார்த்திக் பாலசுப்ரமணியன், யாவரும் பதிப்பகம், விலை 100ரூ. புதிய களத்தில் புதிய கதைகள் கார்த்திக் பாலசுப்ரமணியனின் முதல் தொகுப்பான டொரினாவிலுள்ள 12 கதைகளும் எளிய கதைகள் அல்லது 12 உண்மைகள். வீட்டைவிட்டு வெளியேறிய சொந்தங்கள், யோசிக்காமல் எதிர்வினையாற்றுபவர்கள், துணை இழந்த முதியவர்கள் என நமக்குத் தெரிந்திருக்கும் ஜீவன்கள்தான் இத்தொகுப்பின் பாத்திரங்கள். பின் ஏன் டொரினா? ஏனென்றால், நம்மிடமிருந்து பிரிந்தவர்கள், தொலைத்தவர்களை, நினைவுகளின் ஓரத்தில் கிடக்கும் விஷயங்களை எடுத்துவந்து நம் முன் நிறுத்துகிறது. இத்தொகுப்பின் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கதைகள் முக்கியமானவை. ஐடி துறையில் […]

Read more

மாடித்தோட்டம் 77+ வயதினிலே

மாடித்தோட்டம் 77+ வயதினிலே,  ஆர்.எஸ். நாராயணன், யுனிக் மீடியா இன்டகரேட்டர்ஸ், பக்.168, விலை ரூ.135. இயற்கையான முறையில் செயற்கை உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் இல்லாமல் காய்கறிகள், கீரைகள், பழங்களை நமது வீட்டு மாடித்தோட்டத்தில் நாமே உருவாக்கிக் கொள்ள இந்நூல் உதவுகிறது. இயற்கை விஞ்ஞானியாகிய நூலாசிரியர், மாடித்தோட்டம் அமைத்த தனது அனுபவத்தின் அடிப்படையில் இந்த நூலைப் படைத்து அளித்திருக்கிறார். மாடித் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு எழும் பல ஐயங்களுக்கு இந்நூல் விடை பகர்கிறது. மாடித்தோட்டத்தில் எவற்றை எல்லாம் வளர்க்கலாம்? எவ்வளவு இடம் தேவை? மாடித்தோட்டம் அமைத்தால் […]

Read more

ஏழாம் நம்பர் வீடு

ஏழாம் நம்பர் வீடு, சுப்ரஜா, வாதினி வெளியீடு, விலை 499ரூ. எழுத்தாளர் சுப்ரஜா எழுதிய 40க்கும் மேலான சிறுகதைகளின் தொகுப்பு. அவருடைய சிறுகதைகள் குறித்து மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய ருசிகர கடிதமும் இணைக்கப்பட்டு உள்ளது. ஏழாம் நம்பர் வீடு, திருட்டுப் பய, அது வேற இது வேற ஆகியவை மனதை தொடுகின்றன. 50 கிராம் மிக்சரும் 100 கிராம் அல்வாவும் கதையில் ஒரு சாதாரண மனிதனின் மன உணர்வு வெளிப்படுகிறது. அறை எண் 13, விடுதியில் தங்கி உயர்கல்வி பயில்வோருக்கும், சாக்கடை, அடுக்குமாடிவாசிகளின் […]

Read more

சிவாஜியின் அரசியல் அத்தியாயம்

சிவாஜியின் அரசியல் அத்தியாயம், மு.ஞா.செ.இன்பா, கைத்தடி பதிப்பகம், விலை 350ரூ. சிவாஜி ஆளுமை 3-வது பாகத்தில் சிவாஜியின் அரசியல் பிரவேசம் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. மிகச் சிறந்த இந்திய நடிகரான சிவாஜிக்கு அரசியலில் நடிக்கத் தெரியாது என்பதை அவரது ஒவ்வொரு அரசியல் முடிவுகளும் எடுத்துக்காட்டுகின்றன. காமராஜரின் மறைவுக்குப் பிறகு இந்திரா காங்கிரஸை ஆதரித்தது தவறான முடிவு என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் பேசுகிறது. ‘ஏற்றுக்கொண்ட தலைமைக்கு சிவாஜி இறுதிவரை விசுவாசமாக இருந்தார். காங்கிரஸ் தன்னை மட்டம் தட்டியபோதெல்லாம் மனம் சோர்ந்துவிடாமல் அவமானங்களைத் தூக்கி எறிந்துவிட்டு தலைமைக்கு […]

Read more

மனிதனுக்கு மரணமில்லை

மனிதனுக்கு மரணமில்லை, த.ஸ்டாலின் குணசேகரன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். பக்.276, விலை ரூ.230. பொதிகை தொலைக்காட்சியில் தினசரி காலை ஒளிபரப்பாகும் தமிழ் விருந்து நிகழ்ச்சியில் நூலாசிரியர் ஆற்றிய உரைகளின் தொகுப்பே இந்நூல். சுவாமி விபுலானந்த அடிகள், ஆர்.கே.சண்முகம் செட்டியார், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வ.உ.சிதம்பரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர், ரவீந்திரநாத் தாகூர், ஜி.டி.நாயுடு, ஆப்ரகாம் லிங்கன், பெர்னாட்ஷா, தாமஸ் ஆல்வா எடிசன், கேப்டன் லட்சுமி உள்ளிட்ட நாமறிந்த – நாமறியாத – பல ஆளுமைகளைப் பற்றிய மிகச் சுருக்கமானதும், அதே சமயம் மனதில் பதியும் […]

Read more
1 2 3 4 5 9