கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள்

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. கல்வியை கடல் என்பார்கள், ஆனால் நூலாசிரியர் கல்வியை ‘பூங்கா’ என்று புதிய சிந்தனையுடன் அணுகியுள்ளார். கல்வி களஞ்சியமாக திகழும் இந்த நூலில், சுவையான கருத்துக்களும் நீதிக்கதைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன. நூலில் உள்ள கல்விச்சிந்தனை, குருவணக்கம், இளைஞர்கள், பெண்கள், கல்வித் தத்துவங்கள் ஆகிய தலைப்புகள் வாசிப்பவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. நாட்டை வல்லரசாக்கும் வலிமையும், புத்திக்கூர்மையும் இளைஞர்களுக்கு அவசியம் வேண்டும் என்று நூலாசிரியர் முனைவர் மு.ராசாராம் ஐ.ஏ.எஸ். வலியுறுத்துகிறார். திசைமாறி போகும் […]

Read more

லெமுரியா குமரிக்கண்டம்

லெமுரியா குமரிக்கண்டம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, விலை 130ரூ. லெமுரியா – ஆராய்ச்சியாளர்கள் பலரை ஈர்த்த பெயர். தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த பகுதியாக, உலக மக்கள் பலரும் கூறும் நிலப்பரப்பு. பூமிபந்தின் பல்வேறு இடங்களிலும் லெமுரியா இருந்ததாக அவரவர்கள் அடையாளம் காட்டினார்கள். ஆயினும், உண்மையில் லெமுரியா எங்கிருந்தது? பண்டைய தமிழர்களின் குமரிக்கண்டத்திற்கும், லெமுரியாவிற்கும் என்ன தொடர்பு? இரண்டும் ஒன்றா? தென் திசையே முன்னோர்களின் திசை என்றும், முன்னோர் வழிப்பாட்டைத் தென்திசை நோக்கியே செய்ய வேண்டும் என்பதும் இந்தியர்களின் நம்பிக்கை. இத்தகைய நம்பிக்கைக்கு, குமரிமுனைக்குத் தெற்காக […]

Read more

சங்க இலக்கியத்தில் பெண் மறுப்பு

சங்க இலக்கியத்தில் பெண் மறுப்பு, சு. தாமரைப் பாண்டியன், அருள் பதிப்பகம், பக். 118, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-335-9.html கவுரவ கொலைகள் சங்க காலத்திலும் நிகழ்ந்ததா? பண்டைக் காலந்தொட்டே, தமிழ் சமூகத்தில் ஆண்டிகளும் மன்னனுக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர். இதற்கு காரணம், கீழ்த்தட்டு மக்களின் இனப்பற்றும், குல மானமும், குலத் தூய்மையுமே ஆகும். மேலும், அனைத்து இனங்களும், சம்பந்த வழி உறவுடைய கிளையினருடன் மட்டுமே, மண உறவு வைத்து கொள்கின்றனர். “புல்லு அறுத்தா தொழுபட்டிக்குத் தான் […]

Read more

ஒரு தலித்திடமிருந்து

ஒரு தலித்திடமிருந்து, வசந்த் மூன், தமிழில் வெ. கோவிந்தசாமி, நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 285, விலை 220ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-287-0.html தலித் சமூக உட்பிரிவு பகைமையை அம்பேத்கர் இயக்கம் எதிர்கொண்டது எப்படி? டாக்டர் அம்பேத்கரின் வரலாற்றை ஆதாரத்தோடும் சுவையாகவும் எழுதியவர் வசந்த் மூன். மகாராஷ்டிர அரசால் வெளியிடப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் நூல்களுக்கு தொகுப்பாசிரியராக இருந்து அம்பேத்கரின் எழுத்துக்களை, பேச்சுக்களை மக்கள் முன் வைத்தவர். அம்பேத்கரின் தொண்டர் படை அமைப்பில் சேர்ந்து கடைசி வரை […]

Read more

நேருவூம் போஸும் இணையான வாழ்க்கைகள்

நேருவூம் போஸும் இணையான வாழ்க்கைகள், ருத்ராங்சூ முகர்ஜி, பெங்குயின் பதிப்பகம். வங்க எழுத்தாளர் ருத்ராங்சூ முகர்ஜி எழுதி, பெங்குயின் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘நேருவூம் போஸும் இணையான வாழ்க்கைகள்’ (நேரு அண்டு போஸ் பேரலல் லைவ்ஸ்) என்ற ஆங்கில நூலை சமீபத்தில் படித்தேன். நேதாஜியை விட, நேரு எட்டு வயது மூத்தவர். இருவரும், பெரும் செல்வ குடுங்பங்களில் பிறந்தவர்கள். கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்தவர்கள். நேரு நினைத்திருந்தால், அவரது தந்தை வழியில், பிரபல வழக்கறிஞர் ஆகியிருக்கலாம். பிரிட்டிஷ் ஆட்சியில் தற்போதைய ஐ.ஏ.எஸ்., போல, ஐ.சி.எஸ்., தேர்ச்சி பெற்றவர் […]

Read more

அச்சுவெல்லம்

அச்சுவெல்லம், பா. முருகானந்தம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 145, விலை 176ரூ. சூழ்நிலைகளால் உருவாகும் சம்பவங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடக்கின்றன. அவை அவ்வப்போது சிறுகதைகளாக உருப்பெறுகின்றன. அந்த வகையில் பா. முருகானந்தம், 15 சிறுகதைகளை, அச்சுவெல்லம் எனும் தலைப்பில் சிறுகதைகளாக தொகுத்து அளித்துள்ளார். தலைப்பு கதையான, ‘அச்சுவெல்ல’த்தில் பண்ணையார் வீட்டிற்கு போகும் ஒவ்வொரு அச்சுவெல்லத்திலும், கரிகாலன் கலக்கும் ‘பதம்’, அடிமைத்தனத்திற்கு எதிராகவும், இயலாமையின் வெளிப்பாடாகவும் மிக அழுத்தமாக படைக்கப்பட்டுள்ளது. ‘முதுகு வலி’ கதையில், ‘உடம்பில் இயல்வு நிலையிலேர்ந்து மாறுபட்டா அதைப் புரிஞ்சுக்கிட்டு மீண்டும் […]

Read more

நல்ல நிலம்

நல்ல நிலம், கண்மணி கிரியேட்டிங் வேவ்ஸ், சென்னை, விலை 600ரூ. வாழ்ந்த மண்ணில் மேல் ஒரு மனிதன் வைக்கிற பற்றும் பாசமும் வார்த்தைக்கு அடங்காதவை. சொந்த பூமியை மனிதன் இழந்து, வெறும் நினைவுகளோடு மட்டும் நிற்பதுதான் இன்றைய வாழ்க்கை நிர்பந்தம். சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஒரு மனிதனை அவனது சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கியெடுத்து, இன்னொரு மண்ணில் வீசி எறிந்து விடுகின்றன. ஆனால் மனிதன் ஜடமல்ல. வீசியெறிந்த இடத்தில் வேரூன்றி அவன் நிலை கொள்ள முயல்கிற சந்தர்ப்பங்கள் எல்லாம், அவனது சொந்த மண்ணின் நினைவு வந்து […]

Read more

பாரதியார் கவிதைகள்

பாரதியார் கவிதைகள், உரையாசிரியர் கவிஞர் பத்மதேவன், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 750ரூ. 39 வயது வரையே வாழ்ந்த முண்டாசுக் கவிஞர் பாரதியார் இயற்றிய கவிதைகள் ஏராளம். தேசப்பற்று, ஆன்மிகம், சமூக மாற்றம், சாதிமறுப்பு, பெண்ணியம் என்று அவரது கவிதை வானத்தின் அளவு, விரிந்து பரந்தது. அவரது அத்தனை கவிதைகளையும் அழகாகத் தொகுத்து, அவற்றுக்கு முதல் முறையாக உரையும் வழங்கி இருக்கிறார், ஆசிரியர். வசன கவிதைகள் தவிர்த்து மற்ற எல்லா கவிதைகளும் உரையும், மேலும் அவற்றை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் குறிப்புகளும் தந்து இருக்கிறார். […]

Read more

விடுதலை வீரர் மருது பாண்டியர்கள்

விடுதலை வீரர் மருது பாண்டியர்கள், மதுரை இளங்கவின், காவ்யா, சென்னை, விலை 250ரூ. தமிழகத்தின் சிவகங்கை சீமையிலிருந்து ஆங்கிலேயரை மண்டியிட வைத்த வீர மறவர்கள் மருது பாண்டியர்கள் பற்றிய வரலாற்று நாவல். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பிள்ளையார் சுழி போட்டவன் பூலித்தேவன், மறவர் நாட்டு மண்டேலா முத்துராமலிங்க சேதுபதி, கட்டபொம்மனோடு சேர்ந்து போரிட்டு களப் பலியானவர் வெள்ளையத்தேவன். களத்தில் கணவனை இழந்த பின்னும் களம் பல கண்டு வெள்ளையரோடு போராடி வெற்றி கொண்டவள் வீர மங்கை வேலு நாச்சியார். இவரது வெற்றிக்கு வாளாகவும், […]

Read more

மக்கள் தோழர் ஜோதிபாசு

மக்கள் தோழர் ஜோதிபாசு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 170ரூ. மேற்கு வங்க மாநிலத்தின் வரலாற்றோடு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய அரசியல் வரலாற்றோடு கலந்து விட்ட மகத்தான தலைவர் ஜோதி பாசு. இந்தியாவில் கம்யூனிச இயக்கத்திற்கு மிகப்பெரும் கவுரவத்தை ஏற்படுத்தியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிச்சுடராக திகழ்ந்த ஜோதிபாசுவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் இது. லண்டனில் சட்டம் பயின்ற ஜோதி பாசு வக்கீல் தொழிலை தூக்கியெறிந்துவிட்டு மக்கள் பணிக்காக  களத்தில் குதித்தார். சட்டமன்ற உறுப்பினராகி துணை முதல்வரானார். பின் முதல்வரானார். 23 ஆண்டுகள் மாநில […]

Read more
1 109 110 111 112 113 336