தமிழக விழிப்பின் முன்னோடி ஜி. சுப்பிரமணிய ஐயர்

தமிழக விழிப்பின் முன்னோடி ஜி. சுப்பிரமணிய ஐயர், பெ.சு. மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 184, விலை 80ரூ. விதவை திருமணத்தை நடத்தியவர் ஐயர்! இந்தியாவின் அரசியல், சமுதாய விடுதலைக்கு அரும்பாடுபட்டவர்களில் ஜி. சுப்பிரமணிய ஐயரின் பணி குறித்து இந்த நூல் விளக்குகிறது. திருவையாற்றில் 1855ம் ஆண்டு பிறந்தார் ஐயர். 1878ல் ‘இந்து’ நாளிதழ், 1882ல் ‘சுதேசமித்ரன்’ நாளிதழ்களை அவர் தோற்றுவித்தார். பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த தமிழ்ப் பேரறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களுக்கு, அந்த பணியில், ஐயர் உதவி உள்ளார். தென் ஆப்ரிக்காவில் […]

Read more

எருது உலக சிறுகதைகள்

எருது உலக சிறுகதைகள், தமிழில் கார்த்திகைப் பாண்டியன், எதிர் வெளியீடு, பக். 150, விலை 120ரூ. தமிழுக்கு புதியதொரு கதை சொல்லல் முறை மொழிபெயர்ப்பு என்பது, வானத்தை பிழிந்து வட்டியில் இறக்கும் வேலை என்பர். அதில், ஒரு துளி அளவேனும் சந்தேகம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக வெளிவந்துள்ளது, ‘எருது’ உலக சிறுகதைகளின் தொகுப்பு. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட 10 நாட்டு எழுத்தாளர்களின் சிறுகதைகள், இதில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவாறும், புதுப்புது களங்களும் உள்ள சிறுகதைகள், தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டுள்ளன. எட்மண்டோ பாஸ் […]

Read more

ஜெகாதா குறுநாவல்கள்

ஜெகாதா குறுநாவல்கள், ஜெகாதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 608, விலை 380ரூ. ஜெயகாந்தனை துரோணராக வரித்துக்கொண்ட ஜெகாதா (ஜெயகாந்தன்தாசன்) என்ற ஏகலைவன், வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி உச்சியைத் தொட்டிருக்கிறார். ஜெகாதாவின், 18 நீள் கதைகளைக் கொண்ட தொகுதி இது. ‘அவ்வளவு பெய்த மழையிலும் நிலவு நனையாமல் பளீரிடுவதைப் பார்த்தாள். ஒளியேற்றிய கற்கண்டுக் கட்டிகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன’ என்பது போன்ற வர்ணனைகள் நம்மை, உற்சாகப்படுத்துகின்றன. ராமேஸ்வரம் சங்கு குளித் தொழிலாளர் பிரச்னைகளைச் சித்தரிக்கும், ‘சமுத்திர குமாரர்கள்’, கந்து வட்டிக்குக் கடன் […]

Read more

காடோடி

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 காடோடி, நக்கீரன், அடையாளம், விலை 270ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024312.html தமிழில் கவனம் பெற்றுவரும் பசுமை இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாக்க முயற்சி ‘காடோடி’. உலகின் பழமையான, பிரம்மாண்டமான போர்னியோ காடுகளில் பணிபுரிந்த எழுத்தாளர் நக்கீரன், காடுகளைப் பற்றி நமக்கென்ன தெரியும் என்ற கேள்வியை நாவல் மூலம் எழுப்புகிறார். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

இடது திருப்பம் எளிதல்ல

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 இடது திருப்பம் எளிதல்ல, விஜயபிரசாத், தமிழில் சுப்பாராவ், பாரதி புத்தகாலயம். கம்யூனிஸ்ட் இயக்கங்களின் வரலாற்றின் பின்னணியில் சுதந்திர இந்தியாவின் வரலாற்றையும் கம்யூனிஸ்ட்கள் பின்தங்க, இந்தியச் சூழலில் எவையெல்லாம் முக்கியக் காரணங்கள் என்பதையும் ஆய்வுநோக்கில் எழுதப்பட்டிருக்கும் நூல். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார், பா.சு.ரமணன், சூரியன் பதிப்பகம், பக். 191, விலை 150ரூ. யோகி பற்றிய முழுமையான வரலாற்று நூல்! விசிறி சாமியார், கொட்டாங்குச்சி சாமியார், சிகரெட் சாமியார் என, சுட்டப்பட்டு, பின் ஞானியாகப் போற்றப்பட்டவர், யோகி ராம்சுரத்குமார். உ.பி. மாநிலத்தில், நர்தரா எனும் குக்கிராமத்தில், 1918ம் ஆண்டு, டிசம்பர் 1ம் தேதி, ராம்சுரத் குன்வர் பிறந்தார். ‘சுரத்’ எனும் சமஸ்கிருத சொல்லுக்கு, அர்ப்பணிப்பு என்ற பொருள் உண்டு. அந்த வகையில், ராமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குமரனாக வளர்ந்த ராம்சுரத் குன்வர், இளமையிலேயே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு, […]

Read more

குரு விஜயேந்திரா

குரு விஜயேந்திரா – தி இன்வின்சிபிள் செயின்ட், அருள்மிகு அம்மன் பதிப்பகம், பக். 320, விலை 300ரூ. கயிற்றின் மீது நடந்த விஜயேந்திரர்! மாத்வ பரம்பரையில் ராகவேந்திரரைப் பற்றி அம்மன் சத்தியநாதன் எழுதிய நூல் மிக அற்புதமானது. அந்த வரிசையில், வெல்ல இயலாத குரு விஜயேந்திரர் பற்றிய விரிவான வரலாற்றையும், தமிழில் எழுதியுள்ளார். மூல பிருந்தாவனம் அமைந்துள்ள கும்பகோணம் பற்றியும், அங்கு அவர் செய்த அற்புதங்கள் பற்றியும், இந்த இரண்டாம் பாகத்தில் மிக விரிவாகவும், பக்தியோடும் எழுதியுள்ளார். அதை யாவரும் புரிந்துகொள்ளும் எளிய ஆங்கிலத்தில் […]

Read more

காடுகளுக்காக ஒரு போராட்டம்

காடுகளுக்காக ஒரு போராட்டம், சிக்கோ மென்டிஸ், தமிழில் ச. வின்சென்ட், எதிர்வெளியீடு, விலை 120ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023826.html இறுதி சடங்கிற்கு பூக்கள் வேண்டாம். பிரேசிலை சேர்ந்த, சிக்கோ மென்டிஸ் ஆங்கிலத்தில் எழுதி, பேராசிரியர் ச.வின்சென்ட், ‘காடுகளுக்காக ஒரு போராட்டம்’ என, தமிழில் மொழிபெயர்த்த நூலை சமீபத்தில் படித்தேன். எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இயற்கையை அழிப்போருக்கு, அரசு நிர்வாகம் துணை நிற்பதும், எதிர்ப்பவர்களை கொல்வதும் என்ற உண்மை சம்பவத்தை நூல் விவரிக்கிறது. இயற்கையை காப்பாற்ற போராடி கொல்லப்படும், சிக்கோ […]

Read more

களப்பணியில் கம்யூனிஸ்டுகள்

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 களப்பணியில் கம்யூனிஸ்டுகள், ஜி.ராமகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம், விலை 20ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024324.html தலைவர்கள் குறித்து தொண்டர்கள் எழுதிய ஆயிரமாயிரம் புத்தகங்கள் உண்டு. ஆனால், சித்ரவதைகள், இழப்புகள், தியாயகங்களினூடே ஓர் இயக்கத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் எளிய தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளை ஒரு கட்சியின் தலைவர் எழுதியிருக்கும் முன்னோடி நூல் இது. நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

பாரதி கவிஞனும் காப்புரிமையும்

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 பாரதி கவிஞனும் காப்புரிமையும், ஆ.இரா. வேங்கடாசலதி, காலச்சுவடு, உலகில் எந்தப் படைப்பாளிக்கும் கிடைக்காத தனிப்பெருமை பாரதிக்குக் கிடைத்தது எப்படி என்பதைக் கூறுகிறது இந்த நூல். பாதியின் படைப்புகள் நாட்டுடமை ஆனதற்குப் பின்பு நடந்த நிகழ்வுகளைப் புனைகதைக்குரிய சுவாரஸ்யத்துடன் ஆவணப்படுத்துகிறார் சலபதி. நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more
1 15 16 17 18 19 336