தி ஆட்டோபயாகிராபி ஆப் பஸ்டர் கீட்டன்

தி ஆட்டோபயாகிராபி ஆப் பஸ்டர் கீட்டன், ஆலன் ரமோன் கிளின்ட்டன். மவுனப் படங்களின் சகாப்தம் சமீபத்தில் நான் படித்த நூல்களில் என்னை மிகவும் பாதித்த அற்புதமான நூல், பஸ்டர் கீட்டனின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஆலன் ரமோன் கிளின்ட்டன் என்பவர் எழுதிய ‘தி ஆட்டோபயாகிராபி ஆப் பஸ்டர் கீட்டன்!’ கடந்த 1920களில் அமெரிக்காவின் மவுனப் படங்கள், உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பார்க்கப்படுகின்றன. அந்த காலகட்டத்தில் பெரும் புகழ் பெற்ற முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் கீட்டன். உலகப் போரால் தங்களது வாழ்க்கையை இழந்து வெறுப்பிலும் வேதனையிலும் […]

Read more

கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் மற்றும் பணிகள்

கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள் மற்றும் பணிகள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 416, விலை 330ரூ. தமிழக அரசின் அனைத்து துறைகள் குறித்து முழு விவரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம், நுகர்வோர் விழிப்புணர்வு கையேடு, தமிழக அரசுப் பணியில் சேருவது எப்படி, வெளிநாட்டு கல்வி வழிகாட்டி என்று மக்களுக்கு பயனுள்ள பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளவர் இந்நூலாசிரியர். அதே முறையில் இந்நூலையும் உருவாக்கியுள்ளார். ஒரு மாவட்டத்தை நிர்வகிக்கும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கு உள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகள் போன்றே, ஒரு கிராமத்தை […]

Read more

உத்தம நாயகன்

உத்தம நாயகன், த. தியாகையா, நூலக உலகம் வெளியீடு, பக். 88, விலை 60ரூ. ராமபிரானின் பண்பையும், ஒழுக்கத்தையும் விளக்கும் நூலாக உள்ளது. கம்பன் பாடல்களில் சில மிகநுட்பமாக ஆய்வு செய்து எழுதியுள்ளார். ‘திருஉறப்பயந்தனள், உரம் உருகிய வாளி, ஏழிரண்டாண்டில் வா, முறைமை அன்று, என்னது கடன்’ என்ற ஆறு தலைப்புகளில் நூலாசிரியர், கம்பன் பாடல்களில் சிலவற்றை விவரித்துள்ளார். விஸ்வாமித்ரரிடம் இருக்கும்போது தான் தாடகை வதைப் படலம் முதல் அடுத்து வரும் படலங்களில், ராமபிரான் ஆற்றல் வெளிப்படுகிறது (பக். 25). கைகேயின் வரத்தை நிறைவேற்றியதன் […]

Read more

சேர மண்டல வரலாற்றுக் களஞ்சியம்

சேர மண்டல வரலாற்றுக் களஞ்சியம், பா. சசிக்குமார், விஜயா பதிப்பகம், பக். 248, விலை 160ரூ. சேர மண்ணை சேர்ந்தவர் சாணக்கியர்? சேர மண்டலத்தின் வரலாறு, இலக்கியம், ஆன்மிகப் பெருமைகளை காலவாரியாக தொகுத்து, வரலாற்றுக் களஞ்சியமாக மிகவும் சுவையுடன், இந்த நூல் வழங்குகிறது. ‘சேரலரே’ இன்றைய, ‘கேரளர்’ என்கிறார், நூலாசிரியர். இந்திய தேசமெங்கும் தமிழ் பரவியிருந்தது. இதற்கு ஆதாரமாக, இன்றைய பல பெயர்கள், தமிழிலிருந்து வந்தவையே. பேலாப்பூர் (வேளார்புரம்), பேலூர் (வேள்ஊர்), பெல்காம் (வேள்அகம்), பெல்லாளன் (வெள்ளான்) என்று ஆதாரத்துடன் கூறுகிறார். உலக வர்த்தகத்தில், […]

Read more

கெட்டவார்த்தை பேசுவோம்

கெட்டவார்த்தை பேசுவோம், பெருமாள் முருகன், கலப்பை பதிப்பகம். பீப் பாடல் துணிச்சல் வந்தது எப்படி? பெருமாள் முருகன் எழுதி, கலப்பை பதிப்பகம் வெளியிட்ட, கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற நூலை சமீபத்தில் படித்தேன். ப.மணி என்ற பெயரில் அவர் எழுதி, உள்ளூர் சிற்றிதழில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். மனிதன் முதல் கால்நடை வரை பாலியல் புணர்ச்சி மற்றும் கிராமப்புற சொல்லாடல்களைப் பற்றியது இந்த நூல். கிராமங்களில் சாதாரணமாக பேசும் கெட்டவார்த்தைகளைக் கேட்டு யாரும் முகம் சுளிப்பதில்லை. அதனால் அந்த வார்த்தைகளை பேசுவதில் […]

Read more

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம்

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், பக். 208, விலை 90ரூ. தாகூருக்கு பாரதியை தெரியுமா? தமிழ்க் கவிதைகளிலும், கதைகளிலும் நாடகங்களிலும் தாகூரின் தாக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை தெளிவாக விளக்குகிறது இந்த நூல். பாரதியார், வ.வே.சு. அய்யர், உ.வே.சாமிநாதையர், த.நா.குமாரசுவாமி, விபுலானந்த அடிகள், கி.வா.ஜ. எனும் இலக்கிய அறிஞர்களின் வாழ்க்கையிலும், இலக்கியத்திலும் தாகூரின் தாக்கத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் தந்துள்ளார் பெ.சு.மணி. தாகூரின் கவிதைகள், உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள வரலாற்றையும், அவற்றின் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புகளையும் தந்துள்ளதால் […]

Read more

மேலே உயரே உச்சியிலே

மேலே உயரே உச்சியிலே, வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்., விகடன் பிரசுரம், பக். 288, விலை 270ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024069.html எவ்வித பிரச்னையையும் தீர்க்க, புதிய கோணத்தில் சிந்தியுங்கள் என, அறிவுறுத்தும் புத்தகம். அதை, அறிவுரையாக கூறி தெவிட்டாமல், நண்பனாக வாசகனோடு, நூலாசிரியர் பேசுகிறார். புராணங்கள், கணிதம், நாட்டுப்புற கதைகள், மேல்நாட்டு கதைகளில் உள்ள புதிர்கள் மூலம், நம்மை கட்டுரைக்குள் இழுக்கும் லாவகம், ஆசிரியருக்கே உரியது. மொத்தம் 40 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. குழு ஒற்றுமையை விளக்கும் ஆசிரியர், […]

Read more

சொல்லில் அடங்காத உலகம்

சொல்லில் அடங்காத உலகம், பா. ராமமூர்த்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 144, விலை 90ரூ. சொல்லில் அடங்காத உலகத்தை, ஏதேனும் ஒரு தருணத்தில் எல்லோரும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த வகையில் ‘பராக்கா’ எனும் திரைப்படத்தை முன் வைத்து, ஒரு விமர்சனப் பார்வையாக வந்துள்ளது இந்த கட்டுரைத் தொகுப்பு. ‘பராக்கா’ ஆவணப்படத்தில், பழங்குடி இனச் சிறுவன், தனது பசுமை உலகத்திலிருந்து வெளியேறத் துடிப்பதையும், பரவசமோ பதற்றமோ அற்று அது உணர்த்தும் பெருத்த அமைதி, காண்பவரை உறங்கவிடாமல் செய்யும் நிதர்சனத்தையும், நெஞ்சை ஊடுருவிச் செல்லும் வகையில் […]

Read more

நிலைபெறுமாறு எண்ணுதியேல்

நிலைபெறுமாறு எண்ணுதியேல், முனைவர் சொ. சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 220, விலை 165ரூ. ‘கற்கோவிலுக்குள் வீற்றிருக்கும் இறைவனைச் சொற்கோவிலுக்குள் எழுந்தருளச் செய்தது அப்பர் தமிழ்’(பக். 9) எனும் நூலாசிரியர், திருவாரூர் திருத்தாண்டகத்தின் ஒரு பாடல் அடியை தொடக்கமாகக் கொண்டு, ‘நிலைபெறுமாறு எண்ணுதியேல்’ என்ற தலைப்பில் இந்த நூலை எழுதியுள்ளார். தேடல் நிறைந்த தன் தனி வாழ்வை, தவ வாழ்வாக்கித் தமிழ் வாழ்வாக உயர்த்திப் பற்பல அற்புதங்கள் புரிந்தவர் அப்பர் (பக். 19). ‘என் கடன் பணி செய்து கிடப்பதே, நாமார்க்கும் குடியல்லோம் நமனை […]

Read more

செம்பியன் செல்வி

செம்பியன் செல்வி, கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், பக். 647, விலை 525ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024623.html ஒரு வரலாற்றுப் புதினம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு முன்மாதிரி இந்த நூல். கலிங்கத்துப் பரணி காலம்தான், கதை நிகழும் காலம். குலோத்துங்க சக்கரவர்த்தியும், கருணாகரனும், இன்னும் பல கதை மாந்தர்களும் நாம் அறிந்தவர்களே. இந்த வரலாற்று நாயகர்களை தனது காப்பியத்திலிட்டுக் கதைப்படுத்தி, வாசகரைச் சோழ தேசத்தில் வாழ்வதுபோல் ஓர் மயக்க நிலையை ஏற்படுத்திவிடுகிறார். காலிங்கராயரின் உதிரத்தில் மீண்டும் […]

Read more
1 20 21 22 23 24 336