மீறல்

மீறல், ஆங்கிலம் மாலதி ராவ், தமிழில் அக்களூர் இரவி, சாகித்ய அகாடமி, பக். 368, விலை 250ரூ. இந்த நாவல் 2007ம் ஆண்டின் சிறந்த ஆங்கில நூலுக்கான விருதைப் பெற்றது. 1930 மற்றும் 1940களில் இருந்த சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்ட இந்த நாவல், அந்தக் காலப் பெண்கள் மற்றும் சமூக கட்டமைப்புகளின் அவல நிலையை வெளிச்சப்படுத்திக் காட்டும் ஓர் அற்புதச் சித்திரம். சுதந்திரப் போராட்ட காலத்தில்தான், இந்தியப் பெண்கள் தங்களுக்கான பொருளாதார சமூக விடுதலையைக் கனவு காணும் துணிச்சல் பெற்றனர். நாவலில் வரும் […]

Read more

தமிழிலக்கிய வகைமைகளும் வாழ்வியல் சிந்தனைகளும்

தமிழிலக்கிய வகைமைகளும் வாழ்வியல் சிந்தனைகளும், பதிப்பாசிரியர் சு. சதாசிவம் உள்ளிட்டோர், செம்மூதாய் பதிப்பகம், பக். 538, விலை 400ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024280.html இந்த தொகுப்பில், மொத்தம் 121 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியம் முதலாக ஆயிஷா நடராசன் படைப்புக்கள் ஈறாக ஆய்வுப் பொருள், பல்வேறு களங்களில் அமைந்துள்ளது. சித்தர் குறித்த ஆய்வுக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. களஆய்வின் வெளிப்பாடாக, திருவக்கரை வக்கர காளியம்மன் கோவில் ஓர் ஆய்வு, வீரராகவப் பெருமாள் கோவில் கல்வெட்டுக்கள் கூறும் சமுதாயம் ஆகிய […]

Read more

கம்பன் தமிழும் கணினித் தமிழும்

கம்பன் தமிழும் கணினித் தமிழும், நா. முத்துநிலவன், அகரம் வெளியீடு, பக். 216, விலை 150ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024227.html பெண் கவிகள், புதுக்கவிதை, சிறுகதை, எழுத்தாளர்கள் என, இலக்கிய சுற்றத்தை விமர்சித்தும், ஆய்வு செய்தும் நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய தமிழில் பெண் கவிகள் முதல், கணினியில் வளரும் தமிழ்வரை, மொத்தம் 16 கட்டுரைகள், சீரான நேர்கோட்டில் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, கதை எழுதுவது, ஈட்டி எறிதல் போல இருக்க […]

Read more

காப்பிய மகளிர் ஒரு புதிய கண்ணோட்டம்

காப்பிய மகளிர் ஒரு புதிய கண்ணோட்டம், ந.யோகாம்பாள், முல்லைப் பதிப்பகம், பக். 80, விலை 80ரூ. காப்பியங்களில் வரும் பெண்களை காதல், வீரம், கற்பு, தீக்குணம், தியாகம், காமம் போன்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் புது முயற்சி. கண்ணகி, மாதவி முதல் நீலகேசி, வேகவதி வரையான காப்பியப் பெண்களின் மாறுபட்ட குணங்களை இந்நூலில் காண முடியும். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 4/1/2016.   —- ஹைக்கூ பூக்கள், மயிலாடுதுறை இளையபாரதி, நம் மொழி பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. 58 கவிஞர்களின் ஹைக்கூ […]

Read more

இரண்டாம் புத்தர்

இரண்டாம் புத்தர், சொ. முத்துக்குமார், வனிதா பதிப்பகம், பக். 120, விலை 60ரூ. நம் நாட்டுக்காக, சமுதாயத்திற்காக, விடுதலைக்காகப் பாடுபட்டவர்களின் தொண்டினை, அப்பா, மகன், மகள் ஆகியோரின் உரையாடல்கள் வழி சின்னஞ்சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அறிந்து கொள்ளச் செய்துள்ளார் ஆசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 4/1/2016.   —- எளிமையின் சிகரம் எங்கள் நல்லக்கண்ணு, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 288, விலை 180ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024665.html எளிமை, தியாகம், கறைபடாத வாழ்க்கை […]

Read more

வெள்ளித்திரையில் அள்ளிய புதையல்

வெள்ளித்திரையில் அள்ளிய புதையல், பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், பக். 544, விலை 500ரூ. இந்த நூல், தமிழ்த் திரைப்படப் பாடல்களை சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் இனம் பிரித்து தொகுத்தளித்திருக்கிறது. நூலாசிரியரின் கடின உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் பளிச்சிடுகிறது. ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த நூலின், பொருளடக்கத்தில் உள்ள தலைப்புகளைப் படிப்பதுவே ஒரு சுவையான அனுபவமாகத்தான் இருக்கிறது. பல தலைப்புகளை உட்பிரிவாகவும் பிரித்து, அதில் அடங்கக்கூடிய பாடல்களையும் பட்டியலிட்டிருக்கிறார் ஆசிரியர். உதாரணமாக இசைக்கருவிகள் என்ற தலைப்பில் தோல் இசைக்கருவிகள், துளை இசைக்கருவிகள், நரம்பு இசைக்கருவிகள், […]

Read more

நாட்டை உருவாக்கிய மனிதர் ஹோ-சி-மின்

நாட்டை உ ருவாக்கிய மனிதர் ஹோ-சி-மின், தமிழில் நா. தர்மராஜன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், விலை 75ரூ. பிரெஞ்சு அடிமைத்தளத்தின் நெருப்பு ஜுவாலை வியட்நாமிய தொழிலாளர் வர்க்கத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சமயத்தில் விதைக்குள்ளிருந்து மண்ணை முட்டியெழும் முளைபோல எழுந்தவர் மாமனிதர் ஹோ-சி-மின். சிறைக்குள் தள்ளப்பட்போதிலும்,“பிடிவாதமும் விடாமுயற்சியும் என்னுடன் பிறந்தவை. நான் ஓர் அங்குலம்கூடப் பின்வாங்கமாட்டேன்…” என்று உறுதியுடன் சூளுரைத்தார். வியட்நாம் சுதந்திரத்துக்காக போராடி வெற்றி கண்டவர். தம் எழுத்தாற்றலாலும், கவியாற்றலாலும் பாமரர் நெஞ்சுக்குள்ளும் பச்சைக் குத்தியவராவார். ஒரு சாதாரண மனிதரால் எப்படி இத்தகைய […]

Read more

பத்துப்பாட்டு பொருளடைவு

பத்துப்பாட்டு பொருளடைவு, ச.பொ.சீனிவாசன், சேகர் பதிப்பகம், விலை 350ரூ. தமிழின் உயிர்நிலை இலக்கியங்களாக திகழ்வன சங்க இலக்கியங்கள். தமிர் மொழிக்கு செம்மொழி தகுதியையும், நிலைபேற்றையும் பெற்றுத்தந்த பெருமை, சங்க இலக்கியங்களுக்கு உண்டு. சங்க இலக்கியங்களை பொதுவான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்த அதிகமான நூல்கள் வெளிவந்துள்ளன. அவை போதுமானதாக இல்லை. தவிர, சொல்லடைவுகள், சொல், பொருள், வருமிடம் இலக்கணக் குறிப்பு இவற்றோடு நின்றுவிடுகின்றன. இத்தகைய தரவுகளின் தேவையை மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ள நூல்தான் “பத்துப்பாட்டு – பொருளடைவு” என்னும் ஆய்வு நூல். நன்றி: தினத்தந்தி, […]

Read more

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை, வீ. அன்பழகன், அருட்தந்தை ச. இஞ்ஞாசிமுத்து, கண்ணதாசன் பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. விவசாயமும் விவசாயிகளும் உயிர்த்துடிப்புப் பெற ஒரே வழி நாம் நமது பாரம்பரிய விவசாய முறைக்கு மாற வேண்டும் என்பதை வலியுறுத்தும் நூல். தவறான விவசாய முறைகளால் குடிக்கும் நீரிலிருந்து உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருக்கும் இடம் எனத் தொடங்கி தாய்ப்பாலே நஞ்சாகிவிட்ட நிலையை உதாரணங்களுடன் விளக்கி, இதிலிருந்து மீள, நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற இயற்கை வளத்தை, நாம் நமது சந்ததியினருக்கு விட்டுச்செல்ல வேண்டும் […]

Read more

திருக்கயிலைக்கு ஒரு மறக்கவியலாப் பயணம்

திருக்கயிலைக்கு ஒரு மறக்கவியலாப் பயணம், மணிமேகலைப் பிரசுரம், விலை 75ரூ. திருக்கயிலையின் புனிதப் பயணத்தை விவரிக்கும் நூலிது. கயிலைக் காட்சி மயிலைக் காட்சி போல மனத்திற்கு நிறைவு தந்திருப்பதை இந்நூலில் காணலாம். வெறும் பயண விளக்கம் தரும் வழிகாட்டி நூலாக இல்லாமல் வாழ்விற்கு அருள் வழிகாட்டியாய் இப்புத்தகத்தை செம்மைப்படுத்தியுள்ளார் முனைவர் வாசுகி கண்ணப்பன். அவர் வேதம், திருமுறை, புராணம், வரலாறு எனப் பல்வேறு துணை விளக்கங்களையும் அளித்து, மேற்கொண்டு யாரேனும் திருக்கயிலை யாத்திரை மேற்கொண்டால் அவர்களுக்கு உதவும்வகையில், முகவரிகள், ஆலாசனைகள், எடுத்துச்செல்ல வேண்டிய பொருள்கள், […]

Read more
1 21 22 23 24 25 336