அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம், கௌதம நீலாம்பரன், சூரியன் பதிப்பகம், விலை 175ரூ. சங்க காலம் தொடங்கி நமது அரசர்கள், மானுட வாழ்வை மேம்படுத்த நன்னெறி கொண்டு வாழ்வில் நாம் சிறந்தோங்க ஆன்மிகம் என்னும் அன்பு நெறியை வளர்த்துத் தந்த வரலாற்றுச் செய்திகளை, நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வுகளை அருமையான கதைகளாகத் தொகுத்து அளித்திருக்கிறார் எழுத்தாளர் கவுதம நீலாம்பரன். புராணத்தில் பேசப்பட்ட அரசர்களாகட்டும் அல்லது சமீபத்தில் வாழ்ந்த கட்டபொம்மன் போன்ற மன்னர்களாகட்டும் இவரது கைவண்ணத்தில் மெருகேறி, மிகச்சிறந்த பாத்திரங்களாக உருவெடுக்கிறார்கள். கதை சொல்லும்பொழுது ஒரு இடத்தின் அழகைச் சொல்லி, […]

Read more

கேன்டர்பரிக் கதைகள்

கேன்டர்பரிக் கதைகள், தமிழில் வான்முகில், மீனா கோபால் பதிப்பகம், பக். 175, விலை 200ரூ. ஆங்கிலக் கவிதையின் தந்தை என்று போற்றப்படுகிற சியாஃபிரே சாசர் என்பவரின் படைப்புகளுள் தலைசிறந்தது கேன்டர்பரிக் கதைகள். 14ம் நூற்றாண்டில் ஆங்கிலம் என்று ஒரு தனி மொழியே இல்லை. இங்கிலாந்தின் வட்டார வழக்குகளை ஒன்று திரட்டி அதனை ஒரு மொழியாக மாற்றி, இங்கிலாந்துக்கு ஒரு தேசிய மொழியை அளித்தவர் சாசர். கேன்டர்பரிக்குப் புனிதப் பயணமாகச் செல்லும் பயணிகள், வழியில் தபார்டு என்ற சத்திரத்தில் தங்கிச் செல்வது வழக்கம். பயணக் களைப்புத் […]

Read more

எந்நாளும் எங்கள் நெஞ்சில்

எந்நாளும் எங்கள் நெஞ்சில், மேதகு ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம், பக். 192, விலை 225ரூ. மாணவர்களின் இதயமாக விளங்கிய அப்துல்கலாம் ஒரு சிறந்த கவிஞரும்கூட. அந்த வகையில் அவரது பிறந்த நாளை மாணவர் தினமாகக் கொண்டாடுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், மாணவர்களிடையே உள்ள படைப்புத் திறனை வெளிக்கொணரும் வகையில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் மாணவர்களின் கவிதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டு அப்துல்கலாமுக்கு பெருமை சேர்க்கும் முயற்சி இது. மாணவர்கள், ஆசிரியர்கள் அலுவலர்கள் என அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் பெறப்பட்ட அப்துல்கலாம் பற்றிய கவிதைத் […]

Read more

திடீர் இடியோசை

திடீர் இடியோசை, ஓஷோ, தமிழில் சுவாமி சியாமானந்த், கண்ணதாசன் பதிப்பகம், பக். 416, விலை 260ரூ. தூங்கிக் கொண்டிருப்பவர்களின் மனக் கதவுகளைத் திடீரென்று திறக்க, இந்த இடியோசை தேவைப்படுகிறது. உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பது கிடையாது. நீங்கள் விழிப்புணர்வு அடைந்தவர்களாக ஆகிவிட்டாலே போதும். ஏனெனில் உண்மை என்பது இங்கே ஏற்கெனவே இருக்கிறது. ஓஷோவைப் பொறுத்தவரையில் எல்லா மாற்றங்களுமே தனி மனிதனிடம் ஏற்படுவதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஓஷோவின் இந்த நூல் வார்த்தைகளுக்கு அப்பால், உள்ளத்திற்கு அப்பால், எல்லா புரிதர்களுக்கும் அப்பால் […]

Read more

ஹிந்துத்துவ சிறுகதைகள்

ஹிந்துத்துவ சிறுகதைகள், அரவிந்தன் நீலகண்டன், தடம் பதிப்பகம், பக். 172, விலை 125ரூ. தமிழ் புனைவுலகின் புதிய யுக்தி To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000025209.html அழுக்கு சட்டையைத் துவைத்துப்போடுவதால் புரட்சி தாமதப்படும் என்றால் பரவாயில்லை. ஆடைகள் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்’ என்றார் பொதுவுடைமைவாதி வி.பி.சிந்தன். கொள்கைத் தீவிரத்தில் அழகியலுக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை. அழகியல் வாழ்வின் சிறப்பான பகுதி என்பதைத்தான் அவர் குறிப்பிட்டார். பிரசாரக் கதை எழுதும்போது, கொள்கை சில இடங்களில் சங்கடமாகவும், சில இடங்களில் சவுகரியமாகவும் இருக்கிறது. கதை […]

Read more

சப்தங்கள்

சப்தங்கள், மலையாளம் வைக்கம் பஷீர், தமிழில் குளச்சல் மு. யூசப், காலச்சுவடு பதிப்பகம். நம்பினால் இருக்கிறான் To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000000462.html மலையாளத்தில் வைக்கம் பஷீர் எழுதி, தமிழில் குளச்சல் மு. யூசப் மொழிபெயர்த்த, சப்தங்கள் என்ற குறுநாவலை, சமீபத்தில் படித்தேன். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. நடைபாதை இருளில் சந்திக்கும் ஒருவரோடு, வைக்கம் பஷீர் நடத்தும் உரையாடலை, ஒருவர் கதையாக சொல்வதுதான் இந்த நாவல். இருளில் சந்திக்கும் அந்த நபர், ஒரு ராணுவ வீரன். அவரது வாழ்க்கை, காதல் […]

Read more

உலகில் ஒருவன்

உலகில் ஒருவன், குணா கந்தசாமி, தக்கை, பக். 144, விலை 120ரூ. ஐந்து வயது சிறுவனின் பார்வையில்… ‘மெமோய்ர்ஸ்’ என்ற இலக்கிய வகைப்பாடு, தமிழுக்குப் புதியதில்லை என்ற முன்னுரையோடு (தன்னுரை) கதைக் கூறத் துவங்குகிறார் குணா. ஐந்து வயது சிறுவன்தான், நாவலின் தலைவன். அவனுடைய பத்து வயது வரையிலான வாழ்க்கைச் சூழலை, அந்தச் சிறுவனின் உலகத்திலிருந்து, அவனுடைய பார்வையிலேயே சொல்வதுதான் இந்த நாவல். ஏற்கனவே இந்தப் பகுதியில், ரத்த உறவு, சூரிய வம்சம், கூளமாதாரி, வெலிங்டன் போன்ற நாவல்களை நூலாசிரியர், பட்டியலிடுகிறார். ஆனால், என்னைப் […]

Read more

காசி இராமேசுவரம்

காசி இராமேசுவரம், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 600, விலை 420ரூ. குமரகுருபரர் பேச்சில் மயங்கிய தாராஷூகோ காசி என்ற சொல்லே தூய்மை, மங்கலம் என்ற பொருளுடையது. மங்கலத்தை தரும் சிவபெருமான் அங்கே அருள்பாலிக்கிறார். புத்தர், காசியின் தெருக்கள் வழியே சாரநாத் சென்றார். ஆதிசங்கரர் தனது தத்துவம் வெற்றி காண, வாதுபுரிந்து வெற்றிபெற்ற தலம் அது. குருநானக் பெருமகனார், கங்கைக் கரையில் அமர்ந்திருந்தது மட்டுமின்றி, கபீர்தாசரும், துளசிதாசரும் நடந்த பூமி என, ஆசிரியர் அடுக்கும் தகவல்கள் ஏராளம். அதேபோல் கஜினி முகமது, அலாவுதீன் […]

Read more

உடல்நலம் காக்கும் உன்னதக் குழம்புகள்

உடல்நலம் காக்கும் உன்னதக் குழம்புகள், சரஸ்வதி அரங்கராசன், முகிலன் பதிப்பகம், பக். 152, விலை 120ரூ. மிளகுக் குழம்பு, வெந்தயக் குழம்பு, ஓமக் குழம்பு, கடுகுக் குழம்பு, சீரகக் குழம்பு, பூண்டுக் குழம்பு, இஞ்சிக் குழம்பு, சுக்குக் குழம்பு போன்ற மருந்தாகும் 30 குழம்புகளைச் செய்யும் முறைகள் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. அரிசிச் சாதத்திற்கே மட்டுமல்லாமல் கம்பு, வரகு, கேழ்வரகு, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவிற்கும் துணை உணவாக உட்கொள்ள ஏற்றவை இந்தக் குழம்புகள். மிளகு, சீரகம், ஓமம், கடுகு, வெந்தயம் போன்ற அஞ்சறைப் […]

Read more

காலப்பிரகாசிகை

காலப்பிரகாசிகை, கே.என். சரஸ்வதி, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், பக். 426, விலை 310ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000002619.html ஒரு விழாவைக் கொண்டாடவோ அல்லது ஒரு முக்கியச் சடங்கைத் துவங்க வேண்டியிருந்தாலோ, நல்ல நேரம் பார்த்துத்தான் எவருமே துவங்குவர். நன்மை செய்யும் கிரகங்களும், தீமை விளைவிக்கும் கிரகங்களும் உள்ளன. அதேபோல், சுப, அசுப நட்சத்திரங்களும், திதிகளும், கிரக நிலைகளும் உள்ளன. எனவே, அதற்கு அந்த நாளைப் பற்றிய திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் (பஞ்ச அங்கங்கள்) இவை யாவும் நன்மையளிக்கக் […]

Read more
1 27 28 29 30 31 336