சிந்தித்த வேளையில்…

சிந்தித்த வேளையில்…, சி.சைலேந்திரபாபு, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.232, விலை ரூ.200. மனம், மாணவர், இளைஞர், பெற்றோர், அறிவியல், ஆசிரியர், வாழ்க்கை, போராட்டம், கல்வி, விளையாட்டு, பொது ஆகிய 11 பிரிவுகளில், மண்ணில் எவ்வாறு நல்லவிதமாக வாழ வேண்டும் என்பதற்கு இந்நூல் வழிகாட்டுகிறது. ஒவ்வொரு புத்தாண்டின் போதும் இவற்றையெல்லாம் இனிமேல் கடைப்பிடிப்பேன் என சபதம் செய்து கொள்பவர்களில் எத்தனை பேர் தொடர்ந்து அவற்றைக் கடைப்பிடிக்க முடிகிறது? தொடர்ந்து கடைப்பிடிக்க எப்படித் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்? என்பது நூலின் முதல் பிரிவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பிரிவில், […]

Read more

அவள்

அவள் – பெண்ணியப் பார்வையில், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், விலை 90ரூ. பெண்ணியப் பார்வை இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் எழுதியுள்ள இந்நூல் உரையாடலுக்கான நூலாகும். பல்வேறு சமயங்களில் உள்ள பெண்களைச் சிறுமைப்படுத்தும் போதனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நபிகள் காலத்தில் பெண்களுக்கு அரசியல் முதல் ஆன்மீகம் வரையில் சமத்துவ உரிமைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் நிகழ்ந்துள்ள மாற்றம் இந்தியாவில் இன்னும் வரவில்லை என்று ஒப்புக்கொள்கிறார் நூலாசிரியர். பெண்களின் பாதுகாப்புக்காகத்தான் கட்டுப்பாடுகள் என்ற வாதத்தை எதிரொலிக்கும் […]

Read more

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்

பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம், கே.ஜி.எப். பழனிச்சாமி, நர்மதா பதிப்பகம், விலை 60ரூ. வளர்ந்து வரும் விஞ்ஞான உலகத்தில், உடலில் ஏற்படும் சிறு, சிறு வியாதிக்கும் டாக்டர்களை தேடி ஓடும் நிலைமை உள்ளது. ஆனால் நமது வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்கள் மூலமாகவே அந்த நோய்களை விரட்டலாம் என்பதை இந்த நூல் சிறப்பாக விளக்கி உள்ளது. மேலும், எந்த வியாதிக்கு என்ன பொருட்களை பயன்படுத்தலாம் என்பதும் தெளிவாக கூறப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000006865.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

கவிதைப் பேழை

கவிதைப் பேழை, ஆ.கோ.குலோத்துங்கன், குகன் பதிப்பகம், விலை 350ரூ. காதல், அழகு, மழை, தனிஈழம் என மொத்தம் 82 தலைப்புகளில் 350க்கும் மேற்பட்ட கவிஞர்களின் கற்பனையில் உதித்த ‘ஹைக்கூ’ கவிதைகளின் தொகுப்பு. கருத்து மணம் பரப்பும், தமிழ் இன உணர்வை உரசும் கவிதைகள் சமகால நிகழ்வுகளை படம்பிடித்து காட்டும் வகையில் அமைந்துள்ளது. கண்ணியம் இதழில் வெளிவந்த கவிதைகள் புத்தகமாக தொகுக்கப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027068.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

கண்மாய்க்கரை மனிதர்கள்

கண்மாய்க்கரை மனிதர்கள், கவிஞர் பொற்கைப் பாண்டியன், கற்பகம் புத்தகாலயம், விலை 100ரூ. தனது கிராமத்தின் திருவிழாக்கள், பாரம்பரிய விளையாட்டுகள், விவசாய செழிப்பு, மக்களின் பழக்கவழக்கங்கள் போன்ற பசுமையான நினைவுகளை அசைபோடும் ஆசிரியர், இன்றைய எந்திர யுகத்தில் இசையெல்லாம் மாயமாகிவிட்டதே என்ற வருத்தத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027067.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தென்னிந்தியப் பயிர்கள்

தென்னிந்தியப் பயிர்கள், வி.டி.சுப்பையா, வேலா வெளியீட்டகம், விலை 450ரூ. உணவு உற்பத்தி முறைகள் மற்றும் அவைகளின் வரலாற்று பின்னணி குறித்து அறிந்துகொள்ள உதவும் இந்த நூலில் வேளாண்மை பற்றிய அரிய தகவல்கள் விளக்கமாகவும், படிப்பதற்கு எளிமையாகவும் உள்ளன. இன்றைய இளைஞர்கள் மரபு விவசாயத்தைப் புரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும். நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உலக அரசியல் வரலாறு

உலக அரசியல் வரலாறு, மன்னை சம்பத், அனிதா பதிப்பகம், விலை 110ரூ. அரசியல் என்பது என்ன? என்பதில் ஆரம்பித்து கம்யூனிசம் எப்படி வந்தது என்பது வரை உலக அரசியல் வரலாறு தெளிவாக தரப்பட்டுள்ளது. மேலும், தமிழர்கள் அரசியலை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நூலை எழுதி உள்ளார் ஆசிரியர் மன்னை சம்பத். நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027066.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

பிரியமுடன் ஒரு பிரளயம்

பிரியமுடன் ஒரு பிரளயம் (லார்கோ த்ரில்லர்), முத்து காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ. காமிக்ஸ் உலகின் ஜோம்ஸ்பாண்ட் குழுமத்தின் தலைவன், லார்கோ கலக்கும் காதல் மணக்கும் அதிரடி திரில்லர். சந்திக்கும் பெண்கள் பலரும் வீசும் காதல் வலைகளில் இருந்து தப்பித்து, இளம்பெண் ஒருத்தியின் அழகில் சிக்குகிறான் லார்கோ. அவளது அன்புக்குப் பின்னால், தீவிரவாதிகளின் சதி என்ற அபாயம் ஒளிந்திருப்பது தெரியாமலே அவளை நேசிக்கிறான். பயங்கரவாதத்தின் பல்வேறு முனைத் தாக்குதல்கள், லார்கோ சந்திக்கும் சவால்கள், ஒட்டுமொத்தமாக அவனது குழுவையே அழிக்க செய்யப்படும் சதி என […]

Read more

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம், பேராசிரியர் இரா.மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 100ரூ. சொல் மணக்க, பொருள் விளங்க உரைபல எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்த பத்மஸ்ரீ ஔவை நடராசன், சங்க இலக்கியம் முதல் கம்பர் வரை பலவற்றிலும் நயம் கண்டு கூறிய நல்லுரைகளின் தொகுப்பு. அவரது பன்முகம் குறித்த ஆய்வு நூலாக இருந்தாலும், தமிழை நேசிப்போரின் வாசிப்புக்கு ஏற்ற நூல். நன்றி: குமுதம், 13/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

மனநலமே உடல்நலம்

மனநலமே உடல்நலம், முனைவர் சசி. வின்சென்ட், வைகறை பதிப்பகம், விலை 50ரூ. உடலுக்கும் உள்ளத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனம் சீராக இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். அலைபாயும், அச்சப்படும் மனதை ஒரு நிலைப்படுத்தி, சங்கடங்களை சமாளிக்க வழிகாட்டும் புத்தகம். நன்றி: குமுதம், 13/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026852.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 292 293 294 295 296 505