பாரதியும் ஆங்கிலமும்

பாரதியும் ஆங்கிலமும், சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், பக். 64, விலை 30ரூ. தமிழ் மொழியின் வளர்ச்சி, ஆங்கில ஆதிக்க ஒழிப்பு பற்றி மகாகவி வெளியிட்டுள்ள கருத்துக்களை கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.   —-   மாணவப் பருவம் பிரச்சனைகளும் தீர்வுகளும், சு. தங்கவேலு, அமராவதி பதிப்பகம், பக். 48, விலை 23ரூ. பல நிலைகளையும் தாங்கி வளரும் மாணவனே சிறந்த மனிதனாக வடிவம் பெறுகிறான் என்கிறது இந்த நூல். நன்றி: தினமலர், 13/11/2016.

Read more

புத்தர் கொள்கைகளும் பெரியார் இயக்கமும்

புத்தர் கொள்கைகளும் பெரியார் இயக்கமும், க. திருநாவுக்கரசு, தளபதி பதிப்பகம், பக். 80, விலை 60ரூ. 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புத்தர் கொள்கைகள் பற்றியும் 2500 ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்த பெரியார் உருவாக்கிய இயக்கத்தின் கொள்கைகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பாய்வுரையின் நூல் வடிவம் இது. புத்தரும் பெரியாரும் மக்களை அறிவார்ந்த வாழ்க்கையை வாழும்படி பரப்புரை செய்ததை ஒப்பிட்டுள்ளது சிறப்பு. நன்றி: குமுதம், 29/9/2016.

Read more

நினைவின் நிழல்கள்

நினைவின் நிழல்கள், மணா, கலைஞன் பதிப்பகம், விலை 195ரூ. இந்திய சிற்பங்களுக்கு ஒழுங்கு முறை மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒரு திறந்த புத்தகம். அந்தப் புத்தகத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும். அதுவே ஓர் அறிஞராக இருப்பின் நமக்கு இன்னும் கூடுதல் தகவல்களும், செய்திகளும் கிடைக்கும். அந்த அறிஞர்களை ஒட்டுமொத்தமாக ஒரே நூலாக்கிப் படித்தால் தீங்கனியாக இனிக்கும்தானே! அப்படியான ஒரு புத்தகம் தான், ‘நினைவின் நிழல்கள்.’ பல்வேறு துறை சார்ந்த சாதனை மனிதர்களுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கம், அனுபவங்கள், தான் பேட்டி […]

Read more

பாரதியின் பாஞ்சாலி சபதம்

பாரதியின் பாஞ்சாலி சபதம், பதிப்பாசிரியர் பழ. அதியமான், காலச்சுவடு பதிப்பகம், பக். 200, விலை 180ரூ. பதிப்புலகின் புதுமை: 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியான நூல் ஒன்றின், 21ம் நூற்றாண்டு பதிப்பு இந்நூல். ஆம்! பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் மறு பதிப்பு. பதிப்புரை எழுதும் கலையில் ஒரு புதுமையை இந்தப் பதிப்பின் முன்னுரை தெளிவுப்படுத்துகிறது. பாரதியின் பாஞ்சாலி சபதத்தை வியாசரின் பாஞ்சாலி சபதத்துடன் ஒப்பிட்டு மாறுபடும் இடங்களையும், பாரதியின் கவிதை வீரியத்தையும் இப்பதிப்பு வெளிப்படுத்துகிறது. வியாச பாரதத்தில் பாஞ்சாலி சபதம் பகுதி இடம் பெறும் […]

Read more

எண்ணுவது உயர்வு

எண்ணுவது உயர்வு (பாரதியின் புதிய ஆத்திசூடி விளக்கவுரை), முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. அச்சம் தவிர் துவங்கி’, ‘வவ்வுதல் நீக்கு’ வரை உள்ள, பாரதியின், 110 புதிய ஆத்திசூடி வரிகளுக்கு, 240 பக்கங்களில், நா.சங்கரராமன் விளக்கவுரை எழுதி உள்ளார். பலர், செய்யுளுக்கான விளக்கவுரையில், தாம் படித்த இலக்கியங்கள், தமது கருத்துக்களை எடுத்துக்காட்டி விளக்குவர். ஆனால், இந்த நூலில், முழுக்க முழுக்க, பாரதியின் மற்ற கவிதைகள், அவை இயற்றப்பட்ட சூழல், அவர் வாழ்வில் கடைபிடித்த நெறிகளை கூறி விளக்கி […]

Read more

சமூக மேம்பாட்டிற்கு இலக்கியம் தரும் அருமையான கருத்துகள்

சமூக மேம்பாட்டிற்கு இலக்கியம் தரும் அருமையான கருத்துகள், முனைவர் பேராசிரியர் பெ. கணேஷ், மணிமேகலைப்பிரசுரம், விலை 160ரூ. இலக்கியம் தரும் அருமையான கருத்துகள் பழந்தமிழ் இலக்கியங்களை எல்லோராலும் படித்து மகிழ முடியாது. எனவே ‘யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்ற எண்ணத்துடன், இலக்கியத்தில் உள்ள சிறந்த கருத்துக்களை தொகுத்துத் தந்துள்ளார் முனைவர் பேராசிரியர் பெ. கணேஷ். சமூக மேம்பாட்டிற்கு இலக்கியம் தரும் அருமையான கருத்துகள் என்ற தலைப்புக்கேற்ற சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 5/10/2016.

Read more

கவிஞராக

கவிஞராக, அ.கி. பரந்தாமன், அல்லி நிலையம், பக். 342, விலை 135ரூ. தமிழில் இலக்கியம், இலக்கணம், வரலாறு என அனைத்து நிலைகளிலும் நுண்மாண் நுழைபுலம் மிக்கவரான நூலாசிரியர், தன் மாணாக்கர்களுக்கு கவிதை படைக்கும் ஆற்றலை வளர்க்க கற்பித்ததன் அடிப்படையில் இந்நூல் உருவாக்கம் பெற்றுள்ளது. பொது இயல், உறுப்பியல் போன்ற ஒன்பது தலைப்புகளிலும், முப்பத்தைந்து உள் தலைப்புகளிலும் கவிதையை, அதன் உருவாக்கத்தை நூலெங்கும் விளக்கியுள்ளார். யாப்பிலக்கணத்தை மையமாக வைத்து கவிதை உருவாக்குவதன் அவசியத்தைமுக்கியமாகக் கூறியுள்ள நூலாசிரியர், புதுக்கவிதை இலக்கணமற்றது என்பதை மறுக்கிறார். யாப்பிலக்கணம் அக்காலம் முதல் […]

Read more

குமரித் தமிழர் தொல்காப்பியர்

குமரித் தமிழர் தொல்காப்பியர், சி. ஞானாமிர்தம், முதற்சங்கு பதிப்பகம், விலை 100ரூ. அகத்தியம் முதல் இலக்கண நூல் இன்று அகப்படவில்லை. எனவே, தமிழின் முதல் இலக்கண நூலானது தொல்காப்பியம். அகத்தியரின், 12 மாணாக்கரில் தலைமை சான்றவர் தொல்காப்பியர். இவரது இடம், காலம் பற்றிய வரலாறு, ஆய்வுக்கு உரியதாகவே உள்ளது. மதுரையில், நிலந்தரு திருவின்பாண்டியன் அவையில், அதங்கோட்டு ஆசான் தலைமையில், ‘தொல்காப்பியர் அரங்கேற்றம் செய்தார். அதனால், ‘அதங்கோடு’ பகுதியில் வாழ்ந்தவர். ‘அதங்கோட்டு ஆசான்’ என்றும், ‘காப்பிக்காடு’ என்ற ஊரில், தொல்காப்பியர் பிறந்தார் என்றும் இந்த நூல் […]

Read more

கேட்டதும் கிடைத்தது

கேட்டதும் கிடைத்தது, ‘பதின் கவனகர்’ இராமையா, தொகுப்பு கனகசுப்புரத்தினம், கற்பகம் புத்தகலாயம், விலை 150ரூ. இந்நூல் வினா- விடை வாயிலாகத் திருக்குறளுக்கு விளக்கம் அளிக்கிறது. சில வினாக்கள் வேடிக்கையாகக் கேட்கப்பட்டவைபோல் தோன்றினாலும் அதற்குரிய விடையை விளக்கமாகவும் பொருத்தமாகவும் தந்திருக்கிறார் பதின் கவனகர் இராமையா. கொம்புக்குறி இடம் பெறாத குறள் ஒன்றைக் கூறுமாறு கேட்க, அதற்கு 17 குறளைக் காட்டுகிறார் ஆசிரியர். அதேபோல் நீட்டலளவை, நிறுத்தல் அளவைக்கு ஒரு குறள், விதையில்லாப் பழம் உள்ள குறள், தோல்வியே வெற்றி ஆகின்ற குறள், ஐந்து உவமைகள் இடம் […]

Read more

சங்க இலக்கிய ஐயங்களும் தெளிவுகளும்

சங்க இலக்கிய ஐயங்களும் தெளிவுகளும், முனைவர் வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், விலை 110ரூ. சங்க இலக்கியங்கள், ஆழமான கருத்துக்களைக் கொண்டவை. அவற்றைப் படிப்போருக்கு பல ஐயங்கள் எழுவது இயல்பு. அந்த ஐயங்களைப் போக்கும் வகையில் இந்த நூலை எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வாணி அறிவாளன். நன்றி: தினத்தந்தி, 31/8/2016.

Read more
1 22 23 24 25 26 56