திருக்குறள் பரிமேலழகர் உரை

திருக்குறள், பரிமேலழகர் உரை, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், உலகின் தலைசிறந்த நீதி நூலாகப் போற்றப்படுகிறது. அதற்கு உரை எழுதிய அறிஞர்கள் பலர். பழங்காலத்தில் எழுதப்பட்ட உரைகளில், பரிமேலழகர் உரையே சிறந்தது என்பது தமிழறிஞர்களின் கருத்து. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பரிமேலழகர் உரை சிறந்த முறையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கு உரிய பணி. நன்றி: தினத்தந்தி, 11/5/2016.   —- வாரியார் சுவாமிகள் ரசித்து தொகுத்த பழமொழிகள், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 23ரூ. பொதுவாக பழமொழிகள் […]

Read more

வழிகாட்டும் வள்ளுவம்

வழிகாட்டும் வள்ளுவம், வானதி பதிப்பகம், விலை 170ரூ. திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும் புதுப்புது தகவல்களைக் கூறும் அரிய நூல் இது. பேராசிரியர் இரா. மோகன், அவர் மனைவி பேராசிரியர் நிர்மலா மோகன் இருவரும் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளனர். திருக்குறளுக்கு அறிஞர் – பெருமக்கள் எழுதிய உரைகளை ஆராய்ந்து, நாமக்கல் கவிஞர் சில குறள் பாக்களுக்கு எழுதியுள்ள நுட்பமான உரையை சுட்டிக்காட்டுகிறார்கள். திருவள்ளுவருக்கும், சீன அறிஞர் கன்பூசியசுக்கும் (கி.மு.551 – கி.மு.479) உள்ள ஒற்றுமைகள் பற்றியும் எடுத்துக் கூறுகிறார்கள். சுருக்கமாகக் கூறினால், திருவள்ளுவர் […]

Read more

வெற்றியே இலட்சியம்

வெற்றியே இலட்சியம், கவிதாசன், குமரன் பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. வெற்றி என்பது முதன்மையாக இருப்பதல்ல. முன்னேறிக்கொண்டே இருப்பது போன்ற முன்னேற்ற முயற்சிகளுக்கு உந்துதலாக இருக்கும் நூல். நன்றி: குமுதம், 18/4/2016.   —- எண்ணுவது உயர்வு, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. பாரதியார் எழுதிய ‘புதிய ஆத்திச்சூடி’ க்கு விளக்கவுரை எழுதியுள்ளார். பாரதியின் கீர்த்தியை பரப்பும் வண்ணம் எளிய நடையில் புத்துரை அமைந்துள்ளது சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.

Read more

குறுந்தொகை மலர்கள்

குறுந்தொகை மலர்கள், ப. அநுராதா, ரமணி பதிப்பகம், பக். 176, விலை 150ரூ. புலி புலி என்று கூவினால் பூக்கள் உதிரும்! சங்க இலக்கியங்களில் ‘நல்ல குறுந்தொகை’ எனும் சிறப்பான அடைமொழியைப் பெற்ற குறுந்தொகையில் காணப்படும் மலர்கள் குறித்து விவரிப்பதுதான் இந்த நூல். குறுந்தொகையில், அடும்பு துவங்கி வேம்பு வரை, 46 மலர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. அந்த மலர்களது அகர வரிசைப்படி ஒவ்வொரு மலரையும், மலர் குறித்த தாவரவியல் கருத்து, தாவரவியல் பெயர், மலர் இடம் பெறும் பாடல் எண்வரி, புலவரின் பெயர், பாடல் […]

Read more

காசியும் கங்கையும்

காசியும் கங்கையும், மு. ஸ்ரீனிவாசன், அருள் பதிப்பகம், பக். 168, விலை 120ரூ. இந்திய கலாசாரத்தில், வரலாற்றில், சமய வாழ்வில், இலக்கியத்தில், மக்கள் சிந்தனையில் என அனைத்திலும் இடம் பெற்றுள்ள விஷயங்களில், காசியும் கங்கையும் குறிப்பிடத்தக்கவை. 1950களில் காசியில் கங்கையின் ஒரு கரையில் மக்கள் நீராட, மறுகரையில் நீர்யானைகளும் டால்பின்களும் மூழ்கி எழுந்த காலமாக இருந்தது. உலகின் முதல் நூலாக கருதப்படும் ரிக்வேதத்தில் காசியைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. காசி, கங்கை பற்றி வேத, புராண, இதிகாச, இலக்கியங்களில் வரும் குறிப்புகள் அனைத்தையும் நூலாசிரியர் தொகுத்து, […]

Read more

எண்ணுவது உயர்வு

எண்ணுவது உயர்வு, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், விலை 150ரூ. அவ்வையார் எழுதிய ஆத்திசூடி நூலுக்கு உயிரோட்டம் கொடுத்து தன்னுடைய புதிய படைப்பை கொடுத்தவர் பாரதியார். அந்த புத்தகத்துக்கு இன்னும் மெருகேற்றி எண்ணுவது உயர்வு (பாரதியின் புதிய ஆத்திசூடி விளக்கவுரை) என்ற தலைப்பில் முனைவர் நா. சங்கரராமன் ஒரு புதிய நூல் வெளியிட்டு உள்ளார். இதில் ‘நம் உயர்வான எண்ணங்கள் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்’ போன்ற உயரிய கருத்துகளை அனைவருக்கும் புரியும் விதத்தில் மிக நேர்த்தியாக உரை எழுதி இருக்கிறார். அச்சம் […]

Read more

பனித்துளிக்குள் ஒரு பயணம்

பனித்துளிக்குள் ஒரு பயணம், சந்தர் சுப்ரமணியன், வர்ஷன் பிரசுரம், பக். 128, விலை 80ரூ. உலகை பனித்துளியின் உள்ளிருந்து பார்க்கும் பார்வையாய் அமைந்த கவிதைகளின் தொகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- ராம ராவண யுத்தம், வ. பாரத்வாஜர், காவ்யா பதிப்பகம், பக். 227, விலை200ரூ. நாம் நம் மனதில் தேக்கி வைத்திருக்கும் ராமாயணப் பாத்திரங்களை வேறுவகையான கோணத்தில் பார்த்து நவீன ராமாயணத்தைப் படைத்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.

Read more

தமிழை வளர்த்த முக்கியத் தமிழ் அறிஞர்கள்

தமிழை வளர்த்த முக்கியத் தமிழ் அறிஞர்கள், மறைமலை ராதா, மணிமேகலை பிரசுரம், விலை 60ரூ. தமிழ்த்தொண்டு புரிந்த உ.வே.சாமிநாத அய்யர், மறைமலை அடிகள் உள்ளிட்ட 20 செம்மொழிச் சிற்பிகளைப் போற்றுவதுடன், அவர்கள் ஆற்றிய பணிகளின் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 17/2/2016.   —- ஸ்ரீஹரி வம்சம், எல். வரலட்சுமி நரசிம்மன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 250ரூ. வேத வியாசரால் இயற்றப்பட்ட மகாபாரதத்தோடு இணைந்த ஒரு பாகமாக இருக்கிறது ஸ்ரீஹரி வம்சம். சுமார் 12 ஆயிரம் சுலோகங்கள் […]

Read more

மனப்பலகை

மனப்பலகை, பரமன் பச்சைமுத்து, மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. மொத்தம் 31 சிறுகதைகள் கொண்ட புத்தகம். “எழுதுவதை புதுமையாக எழுத வேண்டும்” என்ற ஆசிரியரின் எண்ணம் கதைகளில் பிரதிபலிக்கிறது. கதைகள் ரத்தினச் சுருக்கமாக அமைந்துள்ளன. “காலமாகிப்போன கணவருக்கு மனைவி எழுதும் கடிதம்” மனதைத் தொடுகிறது. சில கவிதைகளை புதுக்கவிதை பாணியில் எழுதியிருப்பதை ‘புதுமை’ என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால் “வாழ்க்கை ஒரு தீராநதி”யில், சிவாஜிகணேசன், இளையராஜா, கண்ணதாசன், சுஜாதா, ஜெயகாந்தன் முதலிய சாதனையாளர்களைப் பற்றி தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். அதை சிறுகதை என்று […]

Read more

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள்

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள், கற்பகம் புத்தகாலயம், விலை 65ரூ. மனிதனின் தொழில் முன்னேற்றத்திற்கு சூத்திரம் இருப்பதுபோல, அவன் உண்ணும் உணவிற்கும் உண்டு. உடற்கூறுகளில் ஏதாவது மாறுதல்கள் ஏற்பட்டால் அதற்குத் தகுந்தாற்போல் உணவு முறை சூத்திரத்தை மாற்றி அமைத்து உடலின் இயக்கத்தை சீர் செய்யலாம் என்பதை விளக்குகிறது இந்த நூல். வயிற்றுப்புண், குடல் புண், மலச்சிக்கல், அஜீரணம், ரத்தக் கொதிப்பு, சிறுநிரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள், மூலநோய், நிரழிவு, மாதவிடாய்க் கோளாறு என அனைத்து முக்கியமான நோய்களுக்கான உணவு ஆலோசனைகளை எளிய நடையில் சமையல் […]

Read more
1 24 25 26 27 28 56