மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு

மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு, யமுனாராஜேந்திரன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 300ரூ. பல்வேறு காலகட்டங்களில் எழுத்தாளர் யமுனா ராஜேதிரன் எழுதிய 18 கட்டுரைகளின் தொகுப்பு. உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவில் நடைபெற்ற சம்பவங்களைக் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகளை ஓர் ஆய்வுரை என்றே சொல்லலாம். ஜெயகாந்தனின் கருத்துலகம், எம்.ஜி.ஆர். எனும் மாபெரும் விருட்சம் போன்றவை யதார்த்த நிலையைப் பிரதிபலிக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 6/1/2016.   —- நபி நேசம் நம் சுவாசம், மல்லவி பி.எம்.கலீல் ரஹ்மான், எஸ்.கே.எஸ். பப்ளிகேஷன்ஸ், விலை […]

Read more

ஜெயகாந்தனின் கல்பனா கட்டுரைகள் கேள்வி பதில்கள்

ஜெயகாந்தனின் கல்பனா கட்டுரைகள் கேள்வி பதில்கள், தொகுப்பு ஜெயசிம்ஹன், எழில்முத்து. ஜே.கே. வாசகர் வட்டம் வெளியீடு, விலை 150ரூ. ஜே.கே.வின் பார்வை கல்பனா பத்திரிகை 1979ல் ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த பத்திரிகை. இது சிறுகதை, குறுநாவலுக்கு முக்கியத்துவம் தந்த பத்திரிகை. இதில் அவர் எழுதிய வலுமையான கட்டுரைகள், கேள்வி பதில் பகுதிகள் ஆகியவை இடம்பெற்ற பக்கங்கள் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. கலைஞர் கருணாநிதியை ஜெயகாந்தன் சந்தித்து எடுத்த நேர்காணல் மிகமுக்கியமானது. அதேபோல் எம்.ஜி.ஆருக்கு அர்த்தமுள்ள கேள்விகள் என்ற பெயரில் அவர் முன்வைத்திருக்கும் கேள்விகளைப் படிக்கும்போது […]

Read more

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்

தமிழ்வாணனின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள், தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 250ரூ. தன்னம்பிக்கையும், மன உறுதியும் இல்லாத காரணத்தினால்தான் பலருடைய பொன்னான காலம் வீணாகி அவர்கள் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. தன்னம்பிக்கையும், துணிவும் கொண்டு செயல்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதை வலியுறுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நூல். ஒருவரது திறமையை வளர்க்க ஒரு ஆசிரியரே, வழிகாட்டியோ நிச்சயம் தேவை. அந்த ஆசிரியர் ஒரு புத்தகமாகவோ, மனிதனாகவோ ஏன் நமது மனதாகக்கூட இருக்கலாம். எனவே, திறமை வளர்க்கும் வழிகளை எல்லாவற்றிலும் தேடுங்கள் என 62 […]

Read more

பெண்களும் நலவாழ்வும்

பெண்களும் நலவாழ்வும், நா. மோகன்தாஸ், இமாலயா பதிப்பகம், விலை 100ரூ. மனிதனைக் கருக்கொண்டு உருவாக்கும் பெண் மக்கள் நோயின்றி வாழ்ந்தால்தான், நல்ல மக்கள் செல்வத்தை உலகிற்குத் தர இயலும். மனித இனத்தின் ஆற்றல் வாய்ந்த பெண் மக்களை மனதில் கொண்டு பெண்ணின் உடல்கூறு அமைப்புகளை விளக்கி அவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களைக் குறித்தும், அவை வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பெண்கள் மிக எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் மருத்துவர் நா. மோகன்தாஸ் எழுதியுள்ள இந்நூல் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒன்றாகும். நன்றி: தினத்தந்தி, 6/1/2016.   […]

Read more

கவுரி கருமை காளமேகம்

கவுரி கருமை காளமேகம், (தமிழாய்வுக் கட்டுரைகள்), க. கதிரவன், இராசகுணா பதிப்பகம், பக்.130, விலை 168ரூ. செவ்விலக்கியங்களும் கேரள உணவுகளும் இந்த நூல் பல்வேறு அரங்குகளில் படிக்கப்பெற்ற 11 கட்டுரைகளின் தொகுப்பு. சங்க இலக்கியம், இரட்டைக் காப்பியங்கள், பக்தி இலக்கியம், தனிப்பாடல், இக்கால இலக்கியம் ஆகிய தளங்களில், ஆசிரியருக்குள்ள புலமையைக் காட்டுகிறது. நூலாசிரியர், தனது அறிமுக உரையினைத் தற்சிறப்பு பாயிரம் என்னும் பெயரில் அமைத்து, உள் தலைப்புக்களுக்குப் படலம் என்று பெயரிட்டுள்ளார். ஒவ்வொரு கட்டுரையும் ஆய்வு நெறிமுறைகளுக்கேற்ப கருதுகோளுடன் சிறந்த ஆய்வு முடிவையும் தருகிறது. […]

Read more

கெட்டவார்த்தை பேசுவோம்

கெட்டவார்த்தை பேசுவோம், பெருமாள் முருகன், கலப்பை பதிப்பகம். பீப் பாடல் துணிச்சல் வந்தது எப்படி? பெருமாள் முருகன் எழுதி, கலப்பை பதிப்பகம் வெளியிட்ட, கெட்ட வார்த்தை பேசுவோம் என்ற நூலை சமீபத்தில் படித்தேன். ப.மணி என்ற பெயரில் அவர் எழுதி, உள்ளூர் சிற்றிதழில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். மனிதன் முதல் கால்நடை வரை பாலியல் புணர்ச்சி மற்றும் கிராமப்புற சொல்லாடல்களைப் பற்றியது இந்த நூல். கிராமங்களில் சாதாரணமாக பேசும் கெட்டவார்த்தைகளைக் கேட்டு யாரும் முகம் சுளிப்பதில்லை. அதனால் அந்த வார்த்தைகளை பேசுவதில் […]

Read more

மேலே உயரே உச்சியிலே

மேலே உயரே உச்சியிலே, வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ்., விகடன் பிரசுரம், பக். 288, விலை 270ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024069.html எவ்வித பிரச்னையையும் தீர்க்க, புதிய கோணத்தில் சிந்தியுங்கள் என, அறிவுறுத்தும் புத்தகம். அதை, அறிவுரையாக கூறி தெவிட்டாமல், நண்பனாக வாசகனோடு, நூலாசிரியர் பேசுகிறார். புராணங்கள், கணிதம், நாட்டுப்புற கதைகள், மேல்நாட்டு கதைகளில் உள்ள புதிர்கள் மூலம், நம்மை கட்டுரைக்குள் இழுக்கும் லாவகம், ஆசிரியருக்கே உரியது. மொத்தம் 40 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. குழு ஒற்றுமையை விளக்கும் ஆசிரியர், […]

Read more

சொல்லில் அடங்காத உலகம்

சொல்லில் அடங்காத உலகம், பா. ராமமூர்த்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 144, விலை 90ரூ. சொல்லில் அடங்காத உலகத்தை, ஏதேனும் ஒரு தருணத்தில் எல்லோரும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த வகையில் ‘பராக்கா’ எனும் திரைப்படத்தை முன் வைத்து, ஒரு விமர்சனப் பார்வையாக வந்துள்ளது இந்த கட்டுரைத் தொகுப்பு. ‘பராக்கா’ ஆவணப்படத்தில், பழங்குடி இனச் சிறுவன், தனது பசுமை உலகத்திலிருந்து வெளியேறத் துடிப்பதையும், பரவசமோ பதற்றமோ அற்று அது உணர்த்தும் பெருத்த அமைதி, காண்பவரை உறங்கவிடாமல் செய்யும் நிதர்சனத்தையும், நெஞ்சை ஊடுருவிச் செல்லும் வகையில் […]

Read more

தமிழிலக்கிய வகைமைகளும் வாழ்வியல் சிந்தனைகளும்

தமிழிலக்கிய வகைமைகளும் வாழ்வியல் சிந்தனைகளும், பதிப்பாசிரியர் சு. சதாசிவம் உள்ளிட்டோர், செம்மூதாய் பதிப்பகம், பக். 538, விலை 400ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024280.html இந்த தொகுப்பில், மொத்தம் 121 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியம் முதலாக ஆயிஷா நடராசன் படைப்புக்கள் ஈறாக ஆய்வுப் பொருள், பல்வேறு களங்களில் அமைந்துள்ளது. சித்தர் குறித்த ஆய்வுக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. களஆய்வின் வெளிப்பாடாக, திருவக்கரை வக்கர காளியம்மன் கோவில் ஓர் ஆய்வு, வீரராகவப் பெருமாள் கோவில் கல்வெட்டுக்கள் கூறும் சமுதாயம் ஆகிய […]

Read more

கம்பன் தமிழும் கணினித் தமிழும்

கம்பன் தமிழும் கணினித் தமிழும், நா. முத்துநிலவன், அகரம் வெளியீடு, பக். 216, விலை 150ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024227.html பெண் கவிகள், புதுக்கவிதை, சிறுகதை, எழுத்தாளர்கள் என, இலக்கிய சுற்றத்தை விமர்சித்தும், ஆய்வு செய்தும் நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இன்றைய தமிழில் பெண் கவிகள் முதல், கணினியில் வளரும் தமிழ்வரை, மொத்தம் 16 கட்டுரைகள், சீரான நேர்கோட்டில் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, கதை எழுதுவது, ஈட்டி எறிதல் போல இருக்க […]

Read more
1 14 15 16 17 18 88