நிகழ்வுகள் நினைவாக

நிகழ்வுகள் நினைவாக, ஆ. செந்தில்வேலு, காந்தகளம், சென்னை, விலை 75ரூ. வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையும், கண்ணில் பார்த்த சம்பவங்களையும் அடிப்படையாக வைத்து கதை எழுதும் எழுத்தாளர்கள், சிறந்த படைப்பாளிகளாக விளங்குகிறார்கள். “நிகழ்வுகள் நினைவாக” என்ற இந்த சிறுகதைத் தொகுதியை எழுதியுள்ள ஆ. செந்திவேலு, அத்தகைய எழுத்தாளர்களில் ஒருவர். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஆசிரியர் எழுதியுள்ள 11 கதைகள், இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ளன. நல்ல நடையில், விறுவிறுப்பாக எழுதுவதில் ஆ. செந்தில்வேலுவுக்கு உள்ள ஆற்றலை இக்கதைகள் புலப்படுத்துகின்றன. நன்றி: தினத்தந்தி, 23/12/2015.   —- […]

Read more

நட்பை வழிபடுவோம் நாம்

நட்பை வழிபடுவோம் நாம், கற்பக புத்தகாலயம், சென்னை, விலை 45ரூ. நட்பிலே நல்ல நட்பு, போலி நட்பு, தீய நட்பு, கூடா நட்பு என்று பலவகை இருக்கின்றன. இலக்கியங்களும் அதை நமக்கு எடுத்து சொல்கின்றன. அத்தகைய நட்பையெல்லாம் இப்புத்தகத்தின் வாயிலாக விளக்குவதுடன் நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில சான்றுகளை காட்டி அதன் வாயிலாக நட்பின் பெருமை உணர்த்தப்படுகிறது. கபிலர் – பாரியின் நட்பு, கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு, அவ்வையார் – அதியமான் நட்பு ஆகிய சங்க காலச் சான்றோர்களின் […]

Read more

கவிக்கோ கருவூலம்

கவிக்கோ கருவூலம், கவிக்கோ அறக்கட்டளை, சென்னை, விலை 1000ரூ. கவிக்கோ என்று அனைவராலும் அன்புடனும், பெருமிதத்துடனும் அழைக்கப்பட்டவர் கவிஞர் அப்துல் ரகுமான். வெற்றி பல கண்டு நான் விருது பெற வரும்போது வெகுமானம் என்ன வேஷடும் என்று கேட்டால், அப்துல் ரகுமானைத் தருக என்பேன் என்று கலைஞர் கருணாநிதியால் புகழாரம் சூட்டப்பட்டவர் அவர். அவரது பவள விழாவையொட்டி அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் வழங்கிய கட்டுரை மற்றும் கவிதைகளின் தொகுப்பு. தமிழ் கவிதைகளின் உச்சம் தொட்ட கவிக்கோவை தமிழ் ஆர்வலர்கள் வியந்தும், புகழ்ந்தம் […]

Read more

அமுதும் தேனும்

அமுதும் தேனும், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், பக். 242, விலை 150ரூ. முப்பது கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ‘மூத்தோர் சொல்’ என்ற அத்தியாயத்தில், விவேகானந்தர், ரமண முனிவர், ராஜாஜி, நாமக்கல் கவிஞர், தமிழறிஞர் வ.அய். சுப்பிரமணியன், ஏர்வாடியார் ஆகியோர் பற்றிய கட்டுரைகள் அத்தனையும் அற்புதம். ‘இலக்கிய அமுது’ என்ற தலைப்பில் அகநானூறு, புறநானூறு பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், ஆசிரியரின் ஆழ்ந்த தமிழ் அறிவுக்கு சான்றாய் அலங்கரிக்கின்றன. இக்கால கவிஞர்களின் படைப்புகள் பற்றி தனி ஒரு அத்தியாயம். அதில் புதுக்கவிதை, மரபுக்கவிதை, […]

Read more

இந்துத்துவத்தின் பன்முகங்கள்

கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015 இந்துத்துவத்தின் பன்முகங்கள், அ. மார்க்ஸ், உயிர்மை பதிப்பகம், விலை 400ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024048.html ஒவ்வொரு தளத்திலும் இந்துத்துவத்தின் தத்துவார்த்த, அரசியல், பண்பாட்டு முகங்களின் நகர்வுகளையும் விளைவுகளையும் பற்றி மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பல தளங்களிலும் விரியும் வலுவான வாதங்களை முன்வைக்கும் நூல். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)

Read more

சிந்தனை ஒன்றுடையாள்

சிந்தனை ஒன்றுடையாள், கே.எஸ். சுப்ரமணியன், அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக். 512, விலை 350ரூ. கண்ணாடியும் பிம்பமும்போல தமிழும் சமஸ்கிருதமும்! ஓர் ஆடை, நூலிழையும், பாவுமாய் இணைந்து உருவாவதுபோல், பாரத நாட்டின் பழம் பெருமை, பண்பாடு, ஒருமைப்பாடு ஆகியன, செவ்வியல் மொழிகளான சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளாலும் கட்டிக்காக்கப்படுகின்றன. அந்த வகையில், சமஸ்கிருதத்தில்தான் படித்துச் சுவைத்த அரிய பகுதிகளைத் தமிழில் கொண்டு வர வேண்டும் எனும் பேரவா காரணமாக, நூலாசிரியர் இந்த நூலை உருவாக்கியுள்ளார். வேதம், உபநிஷத்துகள், கீதை, பர்த்ருஹரியின் […]

Read more

வாழ்வைப் புரட்டும் மந்திரம்

வாழ்வைப் புரட்டும் மந்திரம், எஸ்.கே. முருகன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. தன்னம்பிக்கைக் கட்டுரைகள், வெறும் வார்த்தைகளால் அலங்கரிக்கப்படக் கூடாது. அது, வாசகனின் தோளில் கை போட்டு, நடந்து கொண்டே, சுவாரசியமாக செல்வது போல இருக்க வேண்டும் என்பதற்கு, உதாரணமாய் வெளிவந்திருக்கிறது இந்த நூல். மைக்கேல் ஜாக்சன் முதல் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா வரை, 30 பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை அழகாக விவரித்து அதன் மூலம், வாழ்வைப் புரட்டும் மந்திரத்தை சொல்கிறார் ஆசிரியர். திரையில் சூப்பர்மேன் வேடத்தில் நடித்த […]

Read more

தருணம் பார்க்கும் தருணங்கள்

தருணம் பார்க்கும் தருணங்கள், சொ.சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 320, விலை 240ரூ சொல்லாட்சிக் கலையில் சிறந்து விளங்கும் முனைவர் சொ. சேதுபதியின் 22 இலக்கியக் கட்டுரைகளின் இனிய தொகுப்பே இந்த நூல். இலக்கியக் கட்டுரைகளின் அடி நாதமாக, மானிடநேயம், உயிரிரக்கம் ஒலித்துக் கொண்டிருப்பது நூலின் சிறப்பு. தொல்காப்பியம் முதல், தொடுக்கும் முகநூல் முடிய, நுவல்பொருளை வாழ்வியல் நோக்கில் வைத்துப் பார்க்கும் சிந்தனைகளின் தொகுப்பு இந்த நூல். தருணம் எனும் சொல்கொண்டு, சொல் விளையாட்டைச் சுடரச் செய்துள்ள திறம் பாராட்டத்தக்கது. கவிதை, சிறுகதை, […]

Read more

ஹோமியோபதி தத்துவம்

ஹோமியோபதி தத்துவம் (ஆர்கனான் வழியில் விளக்கம்), பழ. வெள்ளைச்சாமி, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 435, விலை 300ரூ. ‘முள்ளை முள்ளால் எடு’ என்பது நம்மூர் பழமொழி. அதுபோல ‘ஒத்ததை ஒத்ததால் குணப்படுத்து’ என்பது டாக்டர் ஹானிமன் கண்டுபிடித்த ‘ஹோமியோபதி’ மருத்துவத்தின் தத்துவமாகும். ஹோமியோபதி முறையில் பல புத்தாணடுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நூலாசிரியர், தனது சிகிச்சை அனுபவங்களை இந்நூலில் தொகுத்தளித்திருக்கிறார். ஒரு ஹோமியோபதி மருத்துவர் எப்படி இருக்க வேண்டும்? எப்படி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை’ ஆர்கனான்’ என்ற தத்துவ நூலில் டாக்டர் […]

Read more

ஏணிகள் தோணிகள் ஞானிகள்

ஏணிகள் தோணிகள் ஞானிகள், கோ.மணிவண்ணன், திருமகள் நிலையம், பக். 296, விலை 190ரூ. கீழிருப்பவரை மேலே உயர்த்தப் பயன்படுவது ஏணி. ஆழ நீர்நிலையைக் கடக்க உதவுவது தோணி. இவ்விரண்டுமே பயனாளிகளுக்காகக் காத்திருக்கின்றன. பயனாளிகள் இவற்றைத் தவிர்த்தால் நஷ்டம் ஏணிகளுக்கும் தோணிகளுக்கும் அல்ல. இவ்விரு சாதனங்களின் மானுட வடிவமாகத் திகழ்பவர்கள்தாம் ஞானிகள். திருநாவுக்கரசர், வள்ளலார், ரமணர், மகாகவி பாரதி, சங்கரர், ராமானுஜர், சைதன்யர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், அரவிந்தர் எனத்தொடரும் அந்த அருளாளர் பரம்பரையின் நோக்கம், மானுட மேம்பாடு மட்டுமே. நூலாசிரியர், ‘பாபாஜி சித்தர் ஆன்மிகம்’ இதழில் […]

Read more
1 13 14 15 16 17 88