இதயம் இதயமாய் இயங்க

இதயம் இதயமாய் இயங்க, வாலண்டினா பப்ளிகேஷன்ஸ், 21-10, லோகநாதன் நகர், 2ம் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 200ரூ. இதயம் எப்படி நம் உடம்பில் செயல்படுகிறது என்பதை விரிவாக தெளிவாக விளக்குகிறது இந்த நூல். இதய அமைப்பு, இதய செயல் திறன், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், அறிகுறிகள், காரணங்கள், தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், பராமரிப்பிற்கான வழிவகைகள், கருவுற்ற நிலையில் நச்சுத்தன்மை, மாரடைப்பு என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது? மாரடைப்பிற்கு எளிதில் யார் இலக்காகிறார்கள்? முன்னெச்சரிக்கை அறிகுறிகள், சிகிச்சை […]

Read more

தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு (சிசிஇ)-ஓர் அறிமுகம்

தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீடு (சிசிஇ)-ஓர் அறிமுகம், பத்மா ஸ்ரீநாத், வேதா டி.ஸ்ரீதரன், வேத ப்ரசகாசனம் வெளியீடு, சென்னை 28, பக். 220, விலை 250ரூ. மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிக்கும் வழக்கமான பாணியை வேறுவகையில் மாற்றி, அமைத்துள்ளது சி.சி.இ. என்ற தொடர்ச்சியான, முழுமையான மதிப்பீட்டுமுறை. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சி.பி.எஸ்.இ. இந்தத் திட்டத்தை தமிழக அரசும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய மதிப்பீட்டு முறையில் தமிழக ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு வினாக்களுக்கு விளக்கமாக விடை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெற்றோருக்கும் தனது குழந்தை கற்கும் […]

Read more

சுவாமி விவேகானந்தர் வரலாறு

சுவாமி விவேகானந்தர் வரலாறு, அ.லெ. நடராஜன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 655, விலை 360ரூ. சுவாமி விவேகானந்தரின் தெய்வீக வலாற்றைக் கூறும் இந்நூலைத் தொடர்ந்து படிக்கும்போது சாதாரண மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பசி, பட்டினி, வறுமை, குடும்ப சொத்து தொடர்பான நீதிமன்ற வழக்கு, ஏளனம், பரிகாசம், அவமதிப்பு அத்தனையையும் சுவாமி விவேகானந்தர் சந்தித்தார் என்பது தெரிகிறது. அதேபோல் 11/9/1983இல் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற உரையை ஆற்றுவது வரையிலும் கூட […]

Read more

மாணவர்களுக்கு வள்ளுவர்

மாணவர்களுக்கு வள்ளுவர், என். வீரகண்ணன், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 168, விலை 100ரூ. இந்த நூலில், அறத்துப் பால், பொருட்பால் ஆகியனவற்றில் இடம் பெற்றுள்ள, 108 அதிகாரங்களில் உள்ள, 1080 குறட்பாக்களின் எளிய, இனிய உரைகள் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, கற்கக் கசடற என்ற குறளை, கற்க வேண்டிய நூல்களை மிகத் தெளிவுடன் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின் கற்ற கல்விக்குத் தக்கபடி நல்வழியில் வாழ வேண்டும் என்று சொல்கிறார். மாணவ, மாணவியர் படித்துப் பயன் […]

Read more

கல்கியின் முத்திரைக் கதைகள்

கல்கியின் முத்திரைக் கதைகள், செல்லப்பா பதிப்பகம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை 1, விலை 100ரூ. தமிழ்நாட்டின் மாபெரும் எழுத்தாளரான கல்கி எழுதிய 12 சிறந்த சிறுகதைகள் கொண்ட நூல் இது. ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கதைகள். ஆயினும் இன்று பூத்தமலர் போல மணம் வீசுகின்றன. கல்கியின் கதைகளுக்கு வயதே இல்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ம. திருமலை, கல்கியின் கதைகளை எல்லாம் படித்துப் பார்த்து, ஆராய்ந்து இந்த 12 கதைகளை முத்திரைக் கதைகளாகத் தேர்வு […]

Read more

இது யாருடைய வகுப்பறை?

இது யாருடைய வகுப்பறை?, ஆயிஷா ரா. நடராசன், புக்ஸ் பார் சில்ரன், பக். 248, விலை 150ரூ. கவனத்தை ஈர்க்கும் தலைப்புடைய இந்நூல், கல்வி, ஆசிரியர், சமூகம் என பல தளங்களின் கலைக் களஞ்சியம் போல் அமைந்துள்ளது. இந்தியக் குழந்தைகளுக்கான கல்வி உளவியல், கற்றல் கோட்பாடுகளை நாம் தேடிக் காண வேண்டாமா? மனிதர்களை உருவாக்கும் வகுப்பறைகளை நக்கி, நம் கவனம் மெல்லத் திரும்ப வேண்டாமா? எப்படியாவது வெற்றி என்ற இலக்கை நோக்கி, பிள்ளைகளை மந்தைகளாய் துரத்தும், பண்பாட்டுச் சிதைவைத் தடுத்து நிறுத்த வேண்டாமா? இத்தகைய […]

Read more

உட்கவர் மனம்

உட்கவர் மனம், மரியா மாண்டிசோரி, தமிழாக்கம்-சி.ந. வைத்தீஸ்வரன், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, பக். 446, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-180-4.html குழந்தை நம்மால் நிறைக்கப்பட வேண்டிய ஒரு காலிப் பாண்டம் அன்று. ஓர் அசைவற்ற பொருள் அன்று. அது எதையெதைச் செய்கிறதோ, அத்தனையும் நம்மாலே தான் என்றும் கருதக்கூடாது. மனிதனை ஆக்குவது குழந்தையே (பக். 29) குழந்தையின் உள்ளத்தில் ஒரு சக்தி குடி கொண்டிருக்கிறது. இந்தச் […]

Read more

சித்தர் பாடல்கள்

சித்தர் பாடல்கள், மானோஸ், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை 4, விலை 200ரூ. To buy this Tamil book online  – www.nhm.in/shop/100-00-0001-432-6.html தமிழ்நாட்டு சித்தர்களான அகத்தியர், கபிலர் முதற்கொண்டு கயிலாய கம்பளிச்சட்டை முனி நாயனார் வரையிலான சித்தர்களின் பாடல்களை உள்ளடக்கிய நூல் இது. பாடல்கள் அனைத்தும் எளிய நடையில் அமைந்திருப்பதுடன், அருஞ்சொற்பொருள் விளக்கமும் நூலில் இணைக்கப்பட்டுள்ளன. இத்துடன் உரைநடையில் விளக்கப்பட்டுள்ள சித்தர் தத்துவங்கள் நூலுக்கு சிறப்பு சேர்க்கிறது. நன்றி: தினத்தந்தி, 11/12/13.   —-   […]

Read more

ஹிட்லரின் மறுபக்கம்

ஹிட்லரின் மறுபக்கம், வேங்கடம், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை 2, விலை 90ரூ. To buy this book online –www.nhm.in/shop/100-00-0001-498-6.html சர்வாதிகாரத்தின் மறுபெயர் அடால்ப் ஹிட்லர், ஜெர்மனியை ஆண்ட ஹிட்லர், 2ம் உலகப்போருக்கே வித்திட்டதுடன் கோடிக்கணக்கான மனித உயிர்களை காவு வாங்கினார். அந்த மாபெரும் சர்வாதிகாரி ஹிட்லரின் கொடூர மறுபக்கம் இந்த புத்தகத்தில் படம் பிடிக்கப்பட்டு உள்ளது. ஹிட்லரின் ஆட்சியில் யூதர்கள் பட்ட துன்பங்கள், அவரின் உத்தரவுப்படி ஜெர்மன் அதிகாரிகள் நடத்திய கொலைவெறி தாக்குதல்கள், ஜெர்மன் டாக்டர்கள் தங்கள் ஆய்வுக்கூடங்களில் […]

Read more

தமிழக வரலாற்றில் இருளும் ஒளியும்

தமிழக வரலாற்றில் இருளும் ஒளியும், முனைவர் செல்லன் கோவிந்தன், திருக்குறள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்.நகர், சென்னை 78, பக். 272, விலை 170ரூ. தமிழக வரலாற்றில் இருளும் ஒளியும் என்ற, இந்த நூலினைப் படைத்துள்ள நூலாசிரியர் ஆய்வாளரா என்னும் ஐயம் தோன்றும் அளவிற்கு, இந்த நூலினைப் படைத்திருக்கிறார். சங்க இலக்கியத்தில், மனிதன் இனக் குழுவாக வாழ்ந்த காலத்துப் பாடல் துவங்கி, கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரைஉள்ள பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்பதை, சங்க இலக்கியத்தைப் படிக்கும் எவரும் எளிதில் அறிந்துகொள்ள முடியும். இந்த […]

Read more
1 14 15 16 17 18 21