கற்றாழை

கற்றாழை, சு. தமிழ்ச்செல்வி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 438, விலை 335ரூ. மாணிக்கம், அளம், கீதாரி போன்ற நாவல்கள் மூலம், உழைக்கும் பெண்களின் உலகை, அதன் பூரண தியாகங்களுடனும், ரணங்களுடனும் காட்டினார் தமிழ்ச்செல்வி. கற்றாழை இவரது நான்காவது நாவல். கற்றாழை என்னும் தாவரம் எத்தகைய வறட்சியிலும் தன்னைக் காத்துக்கொண்டு உயிர் வாழும். மணிமேகலை என்ற இந்த நாவலின் கதாநாயகி, தன் வாழ்வில் ஏற்படும் சோதனைக் கட்டங்களை எல்லாம் தீரத்துடன் எதிர்கொண்டு, கடைசியில் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறாள். திருப்பூர் […]

Read more

நேர்மையாக சம்பாதிக்க இவ்வளவு வழிகள்

நேர்மையாக சம்பாதிக்க இவ்வளவு வழிகள், சோம. வள்ளியப்பன், ஆப்பிள் பப்ளிஷிங், சென்னை, விலை 115ரூ. சேலைக்குப் போய்த்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. சுயமாக தொழில், வியாபாரம் தொடங்கி, அதில் மிகப்பெரிய வெற்றி பெற முடியும். வியாபாரத்தை தொடங்கி வெற்றிபெற வாய்ப்புகளை கண்டுபிடிக்கிற பார்வையும், செய்து பார்க்கிற துணிவும், தளராத மனமும் போதும். நேர்மையாக சம்பாதிக்க முடியும் என்பதை நூலாசிரியர் வலியுறுத்தி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 4/6/2014.   —- Employment Education, அருண்குமார், ஹித்யா பப்ளிகேஷன், கோயம்புத்தூர், விலை 600ரூ. கல்வியைப் பொறுத்தவரை […]

Read more

கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு

கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு, சுரா பதிப்பகம், சென்னை, விலை 110ரூ. நம்மில் பலர் மிக அழகான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். ஆனால் துயரங்களால் மனதை நிரப்பிக் கொண்டிருக்கிறோம். மன அழுத்தங்களை மாற்றி மகிழ்வுடன் வாழ நீங்கள் ஒன்றை மட்டும்தான் செய்யவேண்டும். அது உங்களை நீங்களே சீர்திருத்திக் கொள்வதுதான். இதனை மையமாக வைத்து நூலாசிரியர் டாக்டர். லட்சுமி விஸ்வநாதன் 400 சிறிய தலைப்புகளில் எளிய நடையில் கூறியிருப்பது நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. நன்றி:தினத்தந்தி, 7/5/2014.   —- வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம், […]

Read more

போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி

போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி?, ஸ்ரீநிவாஸ் பிரபு, விகடன் பிரசுரம், சென்னை, விலை 125ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-861-3.html அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அனைத்து வேலை வாய்ப்புகளுக்கும், போட்டித் தேர்வு முறையே பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களே உரிய பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதால் போட்டியாளர்கள் இத்தேர்வு குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து கொள்வது முக்கியம். இந்நூலாசிரியர் பல்வேறு இதழ்களில் கதை, கட்டுரைகளை எழுதும் எழுத்தாற்றல் உள்ளவர் என்பதால், இத்தேர்வு குறித்த பல விவரங்களை […]

Read more

முக்கிய விண்ணப்பப் படிவங்கள்

முக்கிய விண்ணப்பப் படிவங்கள், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 350ரூ. இன்றைய காலகட்டத்தில் சில விண்ணப்பப் படிவங்களை நிரப்புவதில் பட்டதாரிகளே தள்ளாட்டத்தை சந்தித்து வருகின்றனர். அப்படியிருக்கையில் சரிவர படிக்காதவர்களின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரசு துறைகளில் வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களை சரிவர நிரப்பாததால், அவை நிராகரிக்கப்பட்டு கிடைக்க வேண்டிய பணியை இழந்தவர்கள்கூட இருக்கிறார்கள் என்ற தகவலே விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதில் உள்ள முக்கியத்துவத்தை உணர்த்தும்விதமாக இருக்கிறது. இதுபோன்ற இன்னல்களில் இருந்து விடுவிக்கும் பொக்கிஷமாக இந்நூல் வெளியாகி உள்ளது. அரசுத் […]

Read more

எது சரியான கல்வி

எது சரியான கல்வி, முனைவர் வெ. இறையன்பு, நேசம் பதிப்பகம், சென்னை, விலை 25ரூ. மதிப்பெண் தேடும் கல்வியைத் தாண்டி வாழ்வியல் மதிப்புக்களை நாடும் கல்வியாக படிப்புமுறை எப்படி மாற வேண்டும் என்பதை நூலாசிரியரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான முனைவர் வெ. இறையன்பு சிந்தனைச் சுவைபட எளிய நடையில் இந்த நூலில் கூறி உள்ளார். முறையான கல்வி என்பதே முறைசாராக் கல்வி தான் என்றும், மனப்பாடம் செய்வதை கற்றுக் கொள்வதையே கல்வி என எண்ணுபவர்கள் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது என்பதையும் நூலாசிரியர் ஆணித்தரமாக கூறியுள்ளார். […]

Read more

கோலங்களில் கணிதம்

கோலங்களில் கணிதம், நல்லாமூர் கோவி. பழனி, வனிதா பதிப்பகம், பக்.160, விலை 100ரூ. கணிதம் கற்பது சிலருக்குக் கற்கண்டு. சிலருக்கு வேப்பங்காய். இந்நூல் வேப்பங்காயையும் கல்கண்டாய் மாற்றுகிறது. ஆம், மிக எளிய கோலங்கள் மூலம் கணித சமன்பாடுகளை விளக்குகிறது. இந்நூலிருந்து யூலர் கோலம் மூலம் இதயக்கமலம் எனும் கோலத்தையும் லுகாஸ் தொடர் மூலம் சதுரக்கோலங்களும் வரையலாம் என்று அறிகிறோம். இந்நூல் படிப்போரின் சிந்தனையைத் தூண்டி கணிதம் குறித்த பயத்தைப் போக்கி, தன்னம்பிக்கையை வளர்க்கும் என்று உறுதியாகக் கூறலாம். -டாக்டர் கலியன் சம்பத்.   —- […]

Read more

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்

குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம், கமலா வி. முகுந்தா, தமிழில் ராஜேந்திரன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 328, விலை 250ரூ. இன்றைய குழந்தைகளிடம் கடவுள் கண்முன் தோன்றி வரம்கேள் என்று சொன்னால் இந்த உலகத்துல இனிமே பள்ளிக்கூடமே இருக்கக்கூடாது என்று வேண்டிக் கொள்ளும் அளவுக்கு பள்ளிகள் குழந்தைகளைப் படுத்தி எடுக்கின்றன. விளையாட்டும் குறும்பும் நிறைந்த குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தின் மீது ஈடுபாடு கொள்ள வைப்பது எப்படி? இந்தக் கேள்விக்கு விடை தெரியாமல் தான் உலகில் இருக்கும் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் தலையைப் பிய்த்துக்கொண்டு அலைகிறார்கள். ‘ […]

Read more

பொது அறிவுக்கு 1000 கேள்வி பதில்கள்

பொது அறிவுக்கு 1000 கேள்வி பதில்கள், டி.எஸ். ரோகிணி, நற்பவி பிரசுரம், 57பி, பசுல்லா சாலை, தி.நகர், சென்னை 17, பக். 368, விலை ரூ. 150. எவ்வளவுதான் உயர் கல்வி கற்றிருந்தாலும், ஒருவரிடமுள்ள பொது அறிவுத் திறன்தான் அவரது ஆற்றலை உயர்த்தி காட்டுகிறது. அதனால் அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் பொது அறிவுத் தேர்வுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தவிர, படிக்காதவர்களும் கூடத் தங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்வது சமுதாயத்தில் மதிப்பு பெற அவசியமாகிறது. இந்நூலின் அறிவியல், வரலாறு, ஆன்மிகம், […]

Read more

இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இஸ்லாமிய மன்னர்கள்

இந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இஸ்லாமிய மன்னர்கள், ஜெகாதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 75ரூ. இந்திய சிம்மாசனத்தில் கம்பீரமாக ஏறி அமர்ந்து ஆட்சி புரிந்த குத்புத்தீன் ஐபக் முதல் முகலாய அவுரங்கசீப் வரையிலான இஸ்லாமிய மன்னர்களைப் பற்றி எழுதப்பட்ட நூலாகும். குறிப்பாக இந்தியா வரலாற்றில் இடம் பெற்றுள்ள அரசியல் சாணக்கியர் முகம்மது பின் துக்ளக், தாஜ்மகால் நாயகன் ஷாஜகான், முகலாய ராஜதந்திரி அக்பர் உள்ளிட்ட 25 இஸ்லாமிய மன்னர்கள் குறித்த செய்திகளை அனைவரும் […]

Read more
1 13 14 15 16 17 21