கோழிப்பாட்டி

கோழிப்பட்டி, ஐ.சிவசுப்பிரமணி ஜெயசேகர், அய்யா நிலையம் பதிப்பகம், தஞ்சாவூர், பக். 128, விலை 100ரூ. சமகத்தில் புரையோடிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள், சமூக அவலங்களை இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் வாயிலாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர். இந்நூலில் உள்ள சிறுகதைகள் அனைத்துமே கற்பனை அல்ல. நெஞ்சை உலுக்கும் நிஜங்கள். ஒவ்வொரு சிறுகதையைப் படித்து முடிக்கும்போதும் சோகத்தால் மனம் கனத்துப் போகிறது. இந்த நூலில் இடம்பெற்றுள்ள கோழிப்பாட்டி கதையில் கொள்ளி வைக்க ஆம்புளப்புள்ள வேணும் என்று மார்தட்டும் கோழிப்பாட்டி, அதே ஆம்புளப்புள்ளைகளால் துன்புறுத்தப்படும்போது தானே தனக்குக் கொள்ளி […]

Read more

முதற்கனல்

முதற்கனல், ஜெயமோகன், நற்றிணைப் பதிப்பகம், சென்னை, விலை 290ரூ. இதிகாசங்களையும் புராணங்களையும் தமிழ்நாட்டில் இந்த அறுபது, எழுபது ஆண்டுகளில் நிறையவே விமர்சனம் செய்தாயிற்று. இந்த 21வது நூற்றாண்டில் இந்தியாவின் ஆதி காவியமாகிய வால்மீகியின் ராமாயணம் தமிழில் புதிய மொழிபெயர்ப்பு பெற்றிருக்கிறது. வியாச மகாபாரதம், இன்றைய தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் இரு பெரும் எழுத்தாளர்களால் எழுதப்பட்டு வருகிறது. பிரபஞ்சன் சில மாதங்களாக இதைத் தொடராகச் சிறப்பாக எழுதி வருகிறார். ஜெயமோகன் தன் இணையதளத்தில் தினம் ஓர் அத்தியாயமாக எழுதி வருகிறார். இதன் முதல் பாகம் நூலாக வெளிவந்து […]

Read more

கல்வியே மகாசக்தி

கல்வியே மகாசக்தி, நரேந்திர மோடி, சப்னா புக் ஹவுஸ், பக். 100, விலை 150ரூ. கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி பேசிய பல விஷயங்கள் இப்போதும் பேசப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கல்வி குறித்து அவர் சொன்ன விஷயங்கள் கல்வியாளர்களாலும் கருத்தாளர்களாலும் பாராட்டப்படுகின்றன. அவர் அன்று பேசிய பேச்சு, அவரது ஆழ்மனதில் பல வருடங்களாக உறங்கிக்கிடந்த எண்ணங்களின் எழுச்சியே. கல்வி குறித்து அவர் கொண்டிருந்த எண்ணங்களை அவ்வப்போது குறித்து வைத்திருப்பது வழக்கம். அந்த குறிப்புகள்தான் இந்த நூல். குஜராத்தி மொழியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் […]

Read more

திருக்குர்ஆன்

திருக்குர்ஆன், மூலம் தமிழாக்கம் விரிவுரை, இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், சென்னை, பக். 1227, விலை 350ரூ. 1400 ஆண்டுகளுக்கு முன் மனித சமூதாயம் அனைத்திற்கும் இறுதித் தூதராக அனுப்பப்பட்ட முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறுதி வேதமாக திருக்குர்ஆன் அருளப்பட்டது. இதன் சிறப்பு என்னவென்றால், எதிரிகள் பலமுறை முயன்றும் இதற்குள் ஒரு மனித வார்த்தையைக்கூட திணிக்க முடியாமல், இன்று வரையும் அதன் புனிதம் பாதுகாக்கப்படுவதுதான். திருக்குர்ஆன், உலகிலுள்ள எல்லா மொழிகளிலுமே அதன் மூலத்துடன் கூடிய மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. அத்தகைய திருக்குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு தமிழகத்தில் […]

Read more

அண்ணாவின் ஆங்கிலக் கட்டுரைகள்

அண்ணாவின் ஆங்கிலக் கட்டுரைகள், திரு.வி.க. நிலையம் பதிப்பகம், வேலூர், விலை 250ரூ. தமிழைப்போலவே ஆங்கிலத்திலும் வல்லவர், பேரறிஞர் அண்ணா. அவர் ஹோம் லேண்ட் என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழ் நடத்தினார். அதில் 1957 முதல் 1961 வரை அவர் எழுதிய கட்டுரைகள் The Dawn (விடியல்) என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. இந்தக் கட்டுரைகளைத் தொகுத்து, புத்தகமாகக் கொண்டு வந்துள்ளவர் வேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ஜி.வேதாச்சலம். திராவிட நாடு பத்திரிகையில், தம்பிக்கு அண்ணா எழுதிய கடிதங்கள் புகழ் பெற்றவை. அதுபோன்ற கடிதங்கள் இந்த […]

Read more

ஐ.ஏ.எஸ். பொது அறிவு கேள்விகள் பதில்கள்

ஐ.ஏ.எஸ். பொது அறிவு கேள்விகள் பதில்கள், நெல்லை கவிநேசன், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும் என்பது அனைவரது லட்சியம், கனவாகவே இருக்கும். அதற்கான சூழலும், வழிகாட்டுதலும் அமையப்பெற்றவர்கள் அந்த இலக்கை எட்டிப்பிடித்து விடுகிறார்கள். அத்தகைய வழிகாட்டுதலை செவ்வனே செய்துள்ளது இந்த நூல். சிவில் சர்வீசஸ் தேர்வின் கீழ் எத்தனை பணிகள் வருகின்றன. சிவில் சர்வீசஸ் தேர்வை யார், யார் எழுதலாம்? எத்தனை முறை எழுதலாம்? அதற்கான வயது வரம்பு என்ன? , அதற்கு நாம் தேர்வு செய்ய […]

Read more

நடிகர் திலகம் சிவாஜி

நடிகர் திலகம் சிவாஜி, கே. சந்திரசேகரன், நக்கீரன் வெளியீடு, சென்னை, விலை 275ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-806-2.html நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து பல்வேறு கவிஞர்கள் எழுதிய கவிதைகள், அவருடன் பழகியவர்கள் அவர் குறித்து எழுதியவை என எல்லாவற்றையும் தொகுத்துத் தருகிறது நூல். சிவாஜி கணேசனின் அரிய புகைப்படங்கள் பலவும் நூலில் உண்டு. அவர் எத்தனை பேரை கவர்ந்த நடிகர் என உணரவைக்கும் நூல். -கவின்மலர். நன்றி: இந்தியா டுடே, 30/7/2014.   —- கசடறக் கற்க […]

Read more

மனக்குகைச் சித்திரங்கள்

மனக்குகைச் சித்திரங்கள், ஆத்மார்த்தி, புதிய தலைமுறை பதிப்பகம், பக். 104, விலை 120ரூ. தன் வாழ்க்கையில் சந்தித்த பல மனிதர்களை குணச்சித்திர வார்ப்புகளாக தீட்டிக் காட்டுகிறார் ஆத்மார்த்தி. புதிய தலைமுறை வார இதழில் வெளியான, கட்டுரைகளின் தொகுப்பு. பழைய புத்தக கடைக்காரர், சாலையில் சாக்பீஸ் மூலம் சித்திரம் வரையும் ஓவியர், தன் உற்றார் உறவினரை போரில் பறிகொடுத்த சிலோன்காரர், சாலை விபத்தில் மகனை பறிகொடுத்த தந்தை, என பல வகையான மனிதர்கள். ராணுவத்தில் சேர இருந்த மகன், சாலை விபத்தில் போனதும், தந்தை சொல்கிறார், […]

Read more

தி மியூசிக் ஸ்கூல்

தி மியூசிக் ஸ்கூல், செழியன், தி மியூசிக் ஸ்கூல் பப்ளிகேஷன்ஸ், சென்னை 33. The Music School எளிமையான, குழப்பம் இல்லாத தமிழ் நடை. வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுப்பதுபோலவே எழுதப்பட்ட வடிவமைப்பு.உதாரணத்துக்கு ஒரு பகுதி இதோ- இது வெறுமனே தொடர்ச்சியாக வாசிக்கிற புத்தகம் அல்ல. இதில் இருக்கிற பல விஷயங்களுடன் நீங்கள் இணைந்து பயிற்சி செய்ய வேண்டும். கண்களால் பார்த்து இந்தப் பாடங்களை நினைவில் வைத்துக்கொண்டால் மட்டும் போதாது. பாடத்தை வாசிக்கும்போது, எப்போதும் அருகில் பென்சில் வைத்திருங்கள். முக்கியமான விஷயத்தை அடிக்கோடு இடுவதற்கு […]

Read more

தமிழ் மென்பொருள்கள்

தமிழ் மென்பொருள்கள், முனைவர் இரா. பன்னிருகைவடிவேலன், நோக்கு, சென்னை, விலை 125ரூ. அச்சுப்பணி, தகவல் தொழில்நுட்பம் என்னும் இரண்டுக்கும் உதவும் கணினி, அலைபேசி, இணையம் எனப் பல ஊடகங்களிலும் செயல்படும் முக்கியக் கருவியான தமிழ் மென்பொருள்கள் குறித்த பல கருத்துகளை விளக்குவதாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூல் மூன்று இயல்களைக் கொண்டுள்ளது. தமிழ் மென்பொருள்களுக்கு அடிப்படையான எழுத்துரு (font), குறியீட்டாக்கம் (Encoding), விசைப்பலகை (keybord), குறித்தும் இம்மூன்று அடிப்படைக் கூறுகளுக்கான ஒருங்குறி (Unicode) பங்களிப்பு குறித்தும் விரிவான பல கருத்துகள் ஆராயப்பட்டுள்ளன. கணினியைத் தமிழில் இயங்கவைக்கும் […]

Read more
1 12 13 14 15 16 21