கண் அறியாக் காற்று

  கண் அறியாக் காற்று, சஹானா, ஆகுதி பனிக்குடம் பதிப்பகம், விலை 100ரூ. கீறி குணப்பட்ட கண்களின் அறிதல் என் படகு கடல் மீன்கள் தூங்கியிருக்கும் மணல் நண்டுகள் சண்டையிடும் கடல் ஆமைகள் அமைதியாக கரை ஏறித் தவழ்ந்து மகிழும் சூரியன் கடலறையில் ஓய்வெடுக்கும் வான் நிலா மேலேறி பணியைத் தொடரும் மேகம் புகைநிறம் ஆகிவிடும் ஒரே ஒரு மீன் மட்டும் விழித்து இருக்கும் என் படகு கடலில் செல்லும் நேரம். ‘கணத்தின் மொக்கவிழ்ந்தால் காலாதீதம்’ என்பது பிரமிளின் கவிதை வரி. அந்தக் கண்டுபிடிப்பை […]

Read more

கால் பட்டு உடைந்தது வானம்

கால் பட்டு உடைந்தது வானம், எஸ்தர், போதிவனம் பதிப்பகம், விலை 120ரூ. உணர்விழைகளால் நூற்கப்பட்டவை இலங்கையின் மலையகத்தை இனி எஸ்தரின் கவிதைகளைக் கொண்டும் அடையாளப்படுத்தலாம். எஸ்தரின் முதல் தொகுப்பு இது. ‘விடுதலையை நினைத்தவனும் போராடியவனும் நிலமற்றுப்போன என் மலையக மூதாதையர்களுக்கும்’ என நூலின் சமர்ப்பணமே கவிதையாய் விரிகிறது. மெல்லிய உணர்விழைகளால் நூற்கப்பட்ட கவிதைகளைக் கொண்டிருக்கின்றன. காதல், காமம், சோகம், மகிழ்ச்சி, ஆற்றாமை, தவிப்பு, தோல்வி, பிரிவு, துரோகம், இயலாமை என மனிதருக்குள் ஊறும் உணர்வுகளை உருவி எடுத்துக் கவிதைகளாக்கியிருக்கிறார். மலையும் கடலும் வானமும் நதியும் […]

Read more

பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்

பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள், ந.ஜெயபாஸ்கரன், காலச்சுவடு பதிப்பகம், விலை 100ரூ. சொற்களால் ஒ நினைவுத்தடம் ந.ஜெயபாஸ்கரனின் சமீபத்திய கவிதைத் தொகுப்பான ‘பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்’, ஆலவாய் நகர் என்னும் மதுரையின் ஆவணமாகத் திகழ்கிறது. மதுரையின் வீதிகளில் பன்னெடுங்காலம் அலைந்துதிரிந்த ஜெயபாஸ்கரன் வேறொரு புதிய கோணத்தில் தன் ஊரைப் பார்க்கிறார். தொன்மும் புராணமும் இவரது கவிதைகளில் ஊடுபாவாகக் கலந்திருக்கின்றன. நிகழ்காலத்துக்கும் புராண காலத்துக்கும் சடுதியில் தாவுகிறார். ‘வெண்கலப்பாத்திரப் பளபளப்பு’ கொண்ட சொற்களைக் கொண்டு தனக்கே உரித்தான தன்மையுடன் கவிதைகளைப் பின்னியிருக்கிறார் ஜெயபாஸ்கரன். – […]

Read more

கனவும் விடியும்

கனவும் விடியும், தொகுப்பு அ.வெண்ணிலா, சாகித்திய அகாடமி, விலை 200ரூ. வரலாற்றில் தமிழ்ப் பெண் கவிஞர்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரை போன்ற தொகுப்பு ஆசிரியரின் முன்னுரை, பல அரிய தகவல்களைத் தாங்கி இருக்கிறது. சங்க காலத்திற்குப் பிறகு, தற்போதுதான் அதிக அளவில் தோன்றி இருக்கும் தமிழ்ப் பெண் கவிஞர்கள் பலரின் ஆற்றலை வெளிக்கொணர்ந்து அவர்களை மெச்சும் வகையில் இந்தக் கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளது. தேர்ந்து எடுக்கப்பட்ட ஒவ்வொரு கவிதையும் ஆழ்ந்து படித்து இன்புறும் வகையில் அமைந்து இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 21/11/2018. இந்தப் புத்தகத்தை […]

Read more

மூங்கில் கனவுகள்

மூங்கில் கனவுகள், கி.பத்மநாபன், வாசகன் பதிப்பகம், பக்.112, விலை 80ரூ. ந்நுாலில் வெளியாகியுள்ள கவிதை வரிகள், முற்றிலும் பெண்களின் பெருமையையும், பாதுகாப்பையும் வலியுறுத்துகின்றன. ‘அடகு’ என்ற கவிதையில் நடுத்தர குடும்பங்களின் இயலாமைகளை அருமையாகச் சொல்லி, உள்ளத்தை நெகிழ வைக்கிறார். மலைப்பாம்பால் வளைக்கப்பட்ட உயிரினமாய், நடுத்தர குடும்பங்கள் சிக்கி திணறும் அவலத்தை அப்பட்டமாய் உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். இரைப்பை – கருப்பை – இடைவெளி என்கிற சிந்தனை, இதுவரை நாம் படித்த உலக பெருங்கவிஞர்களின் கவிதைகளில் கூட படித்திராத ஒன்று. நன்றி: தினமலர், 28/10/2018. இந்தப் புத்தகத்தை […]

Read more

பாகன் திரும்பும் வரை

பாகன் திரும்பும் வரை, வலங்கைமான் நூர்துன், ஓவியா பதிப்பகம், விலை 80ரூ. வயற்காடு முதல் வான் மழைவரைதினம் நடக்கும் அவலங்களை மனம் தொட்டு உரசும் கவிதைகளாக வடித்திருக்கும் நூல். கைக்கு கனம் இல்லா புத்தகம், மனதை கனக்கச் செய்கிறது. நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பாணனைத் தொடரும் வெயில்

பாணனைத் தொடரும் வெயில், ச.அருண், வாலி பதிப்பகம், விலை 80ரூ. வறுமை நிழலாய்த் தொடர வாழ்க்கைப் பாதையை அந்த இருளில் தேடும் பாணர்களின் நிலையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் கவிதைகள். கண் முன் காட்சியாய் நகர்ந்தாலும் உணரமுடியாத நிஜத்தை கவிதையாய் வாசிக்கிறபோது நெஞ்சம் நெகிழ்வது நிச்சயம். நன்றி: குமுதம், 3/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027223.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கலைஞர் ஆயிரம்

கலைஞர் ஆயிரம், வாழ்க்கையெனும் ஓடம், தொகுப்பாசிரியர் மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 300ரூ. தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளால் புகழ்பெற்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பற்றிய கவிதை புத்தகம் இது. டாக்டர் கலைஞர் புகழ் குறித்து, 249 கவிஞர்கள் இயற்றிய உணர்ச்சிகரமான கவிதாஞ்சலியை மு.கலைவேந்தன் அழகாகத் தொகுத்து தந்து இருக்கிறார். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027225.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பெருவெளியில் சிறுதுளிகள்

பெருவெளியில் சிறுதுளிகள், கவிஞர் லெ.முருகேசன், அகநி வெளியீடு, விலை 80ரூ. துளித் துளிக் கவிதைகளை புத்தகம் முழுக்கத் தூவியிருக்கிறார். கவிதை மழையில் நனைந்த சிலிர்ப்பு மனதை ‘ஜில்’ ஆக்குகிறது. நன்றி: குமுதம்,19.9.2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

துளிப்பா: நூறாண்டுகளில்

துளிப்பா: நூறாண்டுகளில்,  தொகுப்பாசிரியர்: இரா. சம்பத்,சாகித்திய அகாதெமி, பக்.256, விலை ரூ.200. ஜப்பானில் தோன்றிய குட்டிக் கவிதை வடிவமான ஹைக்கூ குறித்த கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். ஹைக்கூ பற்றி ஜப்பானிய கவிதை என்ற கட்டுரை மூலம் 1916-இல் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் மகாகவி பாரதியார். அதிலிருந்து ஒரு நூற்றாண்டுப் பயணம் என்கிற வகையில் இந்தத் தொகுப்பின் பெயர் அமைந்துள்ளது. இறையைப் பாடுவது, இயற்கையைப் பாடுவது, மனிதனைப் பாடுவது என்று எழுத்தில் எல்லாவற்றையும் கையாண்டு வந்துள்ளதை வரலாறு பூராவும் காணலாம். செய்யுள் வடிவிலே எழுதப்பட்டால்தான் எழுத்து […]

Read more
1 9 10 11 12 13 57