நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு

நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு, ஆர்.சி.சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ. இன்று பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தில் எளிய குடும்பத்தில் பிறந்தவர். தந்தை, ரெயில் நிலையத்தில் டீக்கடை வைத்திருந்தார். மோடி பள்ளிக்கூடம் விட்டதும், நேரே தந்தையின் கடைக்கு வந்து டீ போடுவார். அப்படி இருந்தவர் பாரதிய ஜனதாவில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து குஜராத் முதல்மந்திரியானார். அதன்பின் அகில இந்திய அரசியலுக்குத் திரும்பி, பிரதமரானார். இப்போது ரூபாய் நோட்டுப் பிரச்சினையில் எதிர்நீச்சல் போட்டு வருகிறார். திருப்பங்கள் நிறைந்த மோடியின் வரலாற்றை, சுருக்கமாக, […]

Read more

கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை

கலைமகள் கைப்பொருள் சிவாஜி ஆளுமை, மு.ஞா.செ. இன்பா, பந்தள பதிப்பகம், பக். 412, விலை 400ரூ. திரைப்பட ரசிகர்களால் “நடிகர் திலகம்‘’ என்று பாராட்டப்பட்ட சிவாஜி கணேசனைப் பற்றி வெளிவந்திருக்கும் மற்றொரு நூல். சிவாஜியின் இயற்பெயர் கணேசமூர்த்தி என்பதில் தொடங்கி, திருச்சியில் கம்பளக்கூத்துக்காரர்கள் நடத்திய “கட்டபொம்மன்’‘ நாடகத்தில் சிறுவன் சிவாஜி வெள்ளைக்கார சிப்பாயாக நடித்தது (முதல் நாடக வேடம்), அடுத்து யதார்த்தம் பொன்னுசாமியின் மதுரை பாலகான சபாவில் சேர்ந்து ராமாயண நாடகத்தில் சீதை வேடம் ஏற்றது, ஒரே நாடகத்தில்(“இழந்த காதல்’‘) சிவாஜியும், எம்.ஆர். ராதாவும் […]

Read more

சொன்னால் நம்ப மாட்டீர்கள்

சொன்னால் நம்ப மாட்டீர்கள், சின்ன அண்ணாமலை, குமரன் பதிப்பகம், பக். 240, விலை 90ரூ. 1920 இல் பிறந்த நூலாசிரியர், தனது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை இந்நூலில் சொல்லியிருக்கிறார். நூலின் தலைப்புக்கேற்ப இந்நூலில் இடம் பெற்றுள்ள பல சம்பவங்கள் அமைந்திருக்கின்றன. மிகச் சிறுவயதில் தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட நூலாசிரியர், ராஜாஜி, கல்கி ஆகியோரைக் குருவாக ஏற்றுக் கொண்டவர். பத்துவயதிருக்கும்போது காந்தியை நேரில் பார்த்து, காந்தி தந்த ஆப்பிளைச் சுவைத்தது, சத்தியமூர்த்தியின் அறிவுரையைக் கேட்டு கதர் அணிய ஆரம்பித்தது, 10 பேர் கலந்து கொண்ட […]

Read more

திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும்

திராவிட இயக்கமும் பாவேந்தர் பாரதிதாசனும், ச.சு. இளங்கோவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 418, விலை 315ரூ. மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ள இந்நூல், பாரதிதாசன் வாழ்ந்த காலத்தின் சமூக, அரசியல், பண்பாட்டுத் தாக்கங்கள் அவருடைய படைப்புகளில் எவ்வாறு பிரதிபலித்தன என்பதை ஆராய்கிறது. பாரதிதாசனின் கருத்துகள் உருவாக எம்மாதிரியான சூழ்நிலைகள் காரணமாக இருந்தன என்பதை ஆராயும் இந்நூல், அவர் காலத்தின் சாதி, சமயம், மூடநம்பிக்கைகள், பிற மொழிகளின் ஆதிக்கம், தொழிலாளர் இயக்கங்கள், பொதுவுடமைக் கருத்துகள், பெண்ணுரிமை கருத்துகள், இன உணர்வு ஆகியவை பற்றிய […]

Read more

பின்னலில் அவிழ்ந்த முடிச்சுகள்

பின்னலில் அவிழ்ந்த முடிச்சுகள், சுபி. முருகன், வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 65ரூ. கவிஞர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள், சந்திப்புகள், ஒன்றையொன்று பின்னி கவிதை வரிகளாக உருவெடுத்து கவிதைத் தொகுப்பாக மலர்ந்துள்ளது. ‘எனக்குள்ளே பின்னிக் கொண்டிருந்த முடிச்சுகளை அவிழ்க்கையில், என்னையே பின்னிக் கொண்டன… கனவு முடிச்சுகள்! இப்படிப் பல கவிதை. நன்றி: குமுதம், 28/12/2016.   —-   பாரதியார் பெருமை, முல்லை பதிப்பகம், விலை 60ரூ. பாரதியாரின் வாழ்க்கை வரலாறும், பாரதியார் பற்றி பல பிரமுகர்கள் எழுதிய கட்டுரைகளும் கொண்ட அரிய […]

Read more

கவிஞர் பாலா

கவிஞர் பாலா, சாகித்ய அகாடமி, விலை 50ரூ. இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற தலைப்பில், எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகளின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக சாகித்ய அகாடமி வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் கவிஞர் பாலா பற்றிய புத்தகம் இப்போது வெளிவந்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறை தலைவராகப் பணிபுரிந்தவர் கவிஞர் பாலா. இந்தியாவின் இலக்கியச் சிறப்பு பற்றி வெளிநாடுகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியவர். “புதுக்கவிதை – ஒரு புதுப்பார்வை” உள்பட பல நூல்கள் எழுதி உள்ளார். நன்றி: தினத்தந்தி, 4/1/2017.

Read more

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா, ஆர்.சி.சம்பத்,கவிதா பப்ளிகேஷன், விலை 100ரூ. திராவிட இயக்க முன்னோடிக் கலைஞன், புரையோடிப்போன மூட நம்பிக்கைகளைச் சாடி, அறிவுக்கண் திறக்கச் செய்த கலையுலக ஆசான்/ நடிகனைப்போல சமூகப் புரட்சியாளன், புரட்சியாளனைப் போன்ற தலைசிறந்த நடிகன், இத்துனைக்கும் மேலே, திரைப்படங்களால் வில்லனாக மக்களிடையே சித்தரிக்கப்பட்ட அவர், தனி மனித வாழ்க்கையில் எப்படி ஒரு உன்னத மனிதனாக இருந்தார் என்கிற ரகசியத்தையும் இந்த நூல் மூலம் அறிய வைக்கிறார் நூலாசிரியர் ஆர்.சி.சம்பத். நன்றி: தினத்தந்தி, 28/12/2016.

Read more

தமிழ்நாட்டின் முதன்மைக்கு அம்மா மாடல்

தமிழ்நாட்டின் முதன்மைக்கு அம்மா மாடல், தமிழில் நா.முருகேசன், சாமிநாதன் பதிப்பகம், விலை 200ரூ. இந்த நூலில் எழுதப்பட்ட திட்டங்கள், கொள்கைகள், நடவடிக்கைகள், அணுகுமுறைகள் யாவற்றிற்கும் உந்து சக்தி “அம்மா” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் ஜெயலலிதாவே ஆவார். அம்மாவை மையப்படுத்தியே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வளர்ச்சி, நல்வாழ்வு, நலத்திட்டங்கள், மிகச்சிறந்த ஆட்சி முறை என்ற தலைப்பின் கீழ் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பிற்சேர்க்கையில், அம்மாவின் வாழ்க்கைக் குறிப்பும், தமிழ்நாடு பற்றிய புள்ளி விவரங்கள், 2011-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியது போன்றவை தரப்பட்டுள்ளன. சாதனை என்பது அவரவர் […]

Read more

நான் ப்ரம்மம் (முதல் பகுதி)

நான் ப்ரம்மம் (முதல் பகுதி), மராத்தி ஒலிப்பதிவுகள், ஸ்ரீ நிசர்கதத்த மஹராஜ், ஆங்கிலத்தில் மோரிஸ் பிரைட்டன், தமிழில் சி. அர்த்தநாரீஸ்வரன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 408, விலை 250ரூ. இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப் பெரும் ஞானிகளில் ஒருவராகக் கருதப்பட்டவர் ஸ்ரீ நிசர்கத்த மஹராஜ். மஹாராஷ்டிராவில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த இவருக்கு மாருதி என்பதே இயற்பெயர். திருமணம் செய்து கொண்டு (ஒரு மகன், மூன்று மகள்கள்) சிறு வியாபாரம் செய்வதன் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தவருக்கு, ஸ்ரீசித்தராமேஷ்வர் மஹராஜ் என்ற ஆன்மிக குரு […]

Read more

பார் போற்றும் பகலவன் பாபா சாகேப் பயணப் பாதை

பார் போற்றும் பகலவன் பாபா சாகேப் பயணப் பாதை, எம்.ஏ. பாலசுப்பிரமணியன், சித்தார்த்த பதிப்பகம், பக். 655, விலை 450ரூ. 14.4.1891 முதல் 6.12.1956 வரையிலான சட்டமேதை அம்பேத்கரின் வாழ்க்கைப் பயணத்தை தேதி வாரியாக தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர். நூலின் ஒவ்வொரு பக்கங்களும் அம்பேத்கர் எத்தகைய இடர்பாடுகளையெல்லாம் கடந்து தாழ்த்தப்பட்டவர்களை மிளிரச் செய்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. 1905-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் அம்பேத்கர் 5-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஆசிரியர் ஒருவர், “அவரிடம் தாழ்ந்த மஹர் இனத்தில் பிறந்த நீ படிப்பதனால் […]

Read more
1 16 17 18 19 20 46