லீ குவான்யூ, பெருந்தலைவன்

லீ குவான்யூ, பெருந்தலைவன். பி.எல். ராஜகோபாலன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 264, விலை 200ரூ. எதுவுமே இல்லை என்ற நிலையிலிருந்து எல்லாமே சாத்தியம் என்பதை சாதித்துக் காட்டியவர் லீ குவான்யூ. அவருடைய வாழ்க்கைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது இந்த நூல். நூலை எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் அதை முடிக்கும் வரை கீழே வைக்க முடியாத அளவுக்கு எளிமையும், சுவையும் ஈர்ப்பும் கொண்டதாக இருக்கிறது இந்நூல். 1959-இல் அவர் பிரதமராகப் பதவியேற்றபோது எதிர்கொண்ட சவால்கள், சூதாட்ட விடுதிகளை தொடங்க அனுமதி மறுத்தது, பொது இடங்களில் எச்சில் […]

Read more

சத்யஜித்ரே வாழ்வும் வழியும்

சத்யஜித்ரே வாழ்வும் வழியும், வீ.பா.கணேசன், விகடன் பிரசுரம், பக்.216, விலை .ரூ.160; இந்திய சினிமாவின் துருவ நட்சத்திரமாக விளங்கும் இயக்குநர் சத்யஜித்ரேயின் வாழ்க்கைப் பயணத்தையும், கலைப் பயணத்தையும் விரிவாக அறிந்து கொள்ள உதவும் நூல். கொல்கத்தா நகரவாசியாக இருந்த ரே, கிராமிய சூழலில் இருந்த சாந்தி நிகேதனில் சேருவதற்குக் காட்டிய தயக்கம், பின்னர், நுண்கலை பயில அங்கே சேருதல், 20 வயதான ரே, 80 வயது தாகூரை நான்குமுறை சந்தித்தும் இயல்பாகப் பேச முடியாமல் போனது, தாகூர் மறைவுக்குப்பின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறியது, […]

Read more

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்க

மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம், அ.கா. பெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 94, விலை 70ரூ. கடந்த, 47 ஆண்டுகளுக்கு முன், மனோன்மணியம் நாடக நூலில் பேராசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை எழுதிய, ‘நீராடும் கடல் உடுத்த’ பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாக, அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., அறிவித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் மோகன ராகத்தில் திஸ்ரம் தாளத்தில் இசையமைத்திருந்தார். இந்த செய்தியுடன், இந்நூல் துவங்குகிறது. சிலப்பதிகாரமும், பதிற்றுப்பத்தும் சேர நாட்டுக்கு உரியதாக இந்நூல் ஆய்கிறது. கேரளத்தில் ஆலப்புழை, திருவனந்தபுரத்தில் வாழ்ந்தவர் தமிழறிஞர் சுந்தரம் பிள்ளை. […]

Read more

சர்தார் வல்லபாய் படேல்

சர்தார் வல்லபாய் படேல், அ.செல்வமணி, ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக். 458, விலை 280ரூ. அசோகர், கனிஷ்கர், சந்திர குப்தர், சாணக்கியர், சத்ரபதி சிவாஜி, மேவார்ராணாக்கள், தாந்தியோதோபி, நானாசாகிப் போன்ற மாவீரர்கள் இந்த பாரத தேசத்தை வலிமைமிக்க நாடாக ஆக்க எடுத்த முயற்சிகள் தனித்தனியானவை. தனித்துவமானவை. ஆனால் பிரிந்து கடந்த இந்த பாரதத்தை செம்மைப்படுத்தி, ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த மாவீரர் சர்தார் வல்லப பாய்படேல் என்ற ஒரு தனி மனிதரே. அவரது வாழ்க்கை வரலாற்றை முழுமையாகத் தரும் நூல் இது. -இரா. […]

Read more

ஆனந்த யாழ்

ஆனந்த யாழ், ஆரூர் தமிழ்நாடன், நக்கீரன் பதிப்பகம், பக். 264, விலை 170ரூ. திரைப்படப் பாடலாசிரியராகவும், சிறந்த கவிஞராகவும் அறியப்பட்ட நா.முத்துக்குமார், கடந்த ஆண்டு அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவருடனான தங்களின் பழக்கத்தையும் நெருக்கத்தையும் அவருடைய நண்பர்கள், நலம் விரும்பிகள், திரையுலகப் புள்ளிகள், அரசியல் பிரபலங்கள் போன்ற பல்வேறு துறையினரும் வெவ்வேறு ஊடகங்களில் பதிவு செய்ததன் தொகுப்புதான் இந்நூல். திரைப்படப் பாடலாசிரியராக பதினைந்தே ஆண்டுகள் பணியாற்றியிருந்தாலும் அக்காலகட்டத்தில் ஏறக்குறைய 1500 பாடல்கள் எழுதியுள்ளார் என்பது வியப்பைத் தருகிறது. அவற்றில் பெரும்பாலான பாடல்கள் மக்களால் கொண்டாடப்பட்டவை […]

Read more

என் நாடு என் மக்கள் எனது போராட்டம்

என் நாடு என் மக்கள் எனது போராட்டம், அடால்ஃப் ஹிட்லர், தமிழில் ஆர்.சி. சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 352, விலை 175ரூ. உலகின் மிகக் கொடிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் சுயசரிதை இந்நூல். அவருடைய இளமைக் காலம் முதல் 1918 வரையில் நிகழ்ந்த அவருடைய சொந்த வாழ்க்கை, அரசியல் நிகழ்வுகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாதாரண ஓவியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், உலகின் மாபெரும் சர்வாதிகாரியாக மாற அவருடைய கம்யூனிச எதிர்ப்பு சிந்தனை முறையே காரணமாக இருந்திருக்கிறது. “ஒரு கொள்கை பரவுவதைத் தடுக்க […]

Read more

டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம்

டாக்டர் ரங்கபாஷ்யத்தின் சரிதம், சாந்தகுமாரி சிவகடாட்சம், சாந்திசிவா பப்ளிகேஷன்ஸ், பக். 397, விலை 600ரூ. டாக்டர் என். ரங்கபாஷ்யம் என்கிற டாக்டர் என்.ஆரின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமல்ல, மருத்துவத்துறையின் வளர்ச்சியையும் இந்நூலின் மூலம் அறிந்து கொள்ள முடியம். தந்தையைப் போல் தானும் மருத்துவராகி, சிரமப்படக் கூடாது என்று நினைத்து விமானியாக விருப்பப்பட்டவர் ரங்கபாஷ்யம். ஆனால் ரமணரின் ஆலோசனைப்படி மருத்துவம் படிக்கச் சென்றார். அதன் விளைவு, இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சை என்ற துறையை இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மருத்துவக் கல்லூரியில் தொடங்கினார். இந்தப் பிரிவை […]

Read more

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா

அசுரக் கலைஞன் எம்.ஆர்.ராதா, கவிதா பப்ளிகேஷன், விலை 100ரூ. நீயே உனக்கு நிகரானவன் ஏழு வயதில் எம்.ஆர்.ராதா ஆலந்தூர் மன மோகன ரங்கசாமியின் நாடகசபாவில் இணைகிறார். “கிருஷ்ண லீலா’ நாடகத்தில் பாலகிருஷ்ணனாக நடிக்கிறார். அதன் பிறகு பல சபாக்கள், பல மேடைகள். பால மீன ரஞ்சனி சங்கீத சபாவில் மட்டும் 15வருட அனுபவம்; சமூக சீர்திருத்தக்ப கருத்துகள் உடைய அவருக்கு, பெரியார், அண்ணாவுடன் பரிச்சயம் உண்டாகிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி, மு.கருணாநிதி ஆகியோருடனான நாடக அனுபவங்கள் கிடைக்கின்றன. கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய “இழந்த காதல்’\ நாடகத்தை பல […]

Read more

ஆப்ரகாம் லிங்கன்

ஆப்ரகாம் லிங்கன், டாக்டர் மா. இராசமாணிக்கனார், முல்லை பதிப்பகம், பக்.80, விலை 35ரூ. ஆப்ரகாம் லிங்கன் ஏழைக்குடும்பம் ஒன்றில் பிறந்தது முதல் அவர் அரசியலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருமுறை பதவி வகித்தது வரை சுருக்கமாக பேசும் நூல். அவரது குணநலம், பண்பாடு, சொற்பொழிவுகள், அவரது படைப்புகள் ஆகியவற்றை மாணவர் உலகம் பயனுறும் வகையில் சிறுநூலாகத் தந்துள்ளார் மூதறிஞர் இராசமாணிக்கனார். நன்றி: குமுதம், 21/12/2016.

Read more

சிகரம் தொட்ட சாதனையாளர்கள்

சிகரம் தொட்ட சாதனையாளர்கள், புதுகை மு.தருமராசன் , புதுகைத் தென்றல், விலை 90ரூ. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், எழுத்தாளர் வல்லிக்கண்ணன், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் உள்பட 13 சாதனையாளர்கள் பற்றி புதுகை மு.தருமராசன் எழுதிய புத்தகம். “நயனுறு நடைச்சித்திரம்” – சிகரம் தொட்ட சாதனையாளர்கள். இனிய நடையில் ரத்தினச் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 21/12/2016.   —-   நெடுஞ்சாலை வாழ்க்கை, விகடன் பிரசுரம், விலை 175ரூ. நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்களை ஓட்டிச் செல்லும் டிரைவர்களைப் பற்றிய கட்டுரைகள். நெடுஞ்சாலைப் பயணங்களில் லாரி டிரைவர்கள் […]

Read more
1 15 16 17 18 19 46