மலரும் நினைவுகளில் காமராஜர்

மலரும் நினைவுகளில் காமராஜர், விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. அனைவரின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ள கர்மவீரர், அவரது வாழ்க்கையில் நடந்த 100 நிகழ்வுகளை நம் கண் முன் காட்டுகிறது இந்நூல் நன்றி: தினமலர், 06/11/2016.   —- நீயே உனக்கு நிகரானவன், ஆர்.சி. சம்பத், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 100ரூ. திரைப்படங்களில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட எம்.ஆர்.ராதா, தனிமனித வாழ்க்கையில் ஒரு உன்னத மனிதராகத் திகழ்ந்தார் என்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 06/11/2016.

Read more

புனிதர் அன்னை தெரசா

புனிதர் அன்னை தெரசா, குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 216, விலை 190ரூ. கிறிஸ்தவ மதத்தில் இறை அருள் பெற்றவருக்கு, கத்தோலிக்க திருச்சபையால் வழங்கப்படுவதே ‘புனிதர்’ பட்டம். சமீபத்தில் அத்தகைய பட்டத்தைப் பெற்றவர் மறைந்த அன்னை தெரசா. தவிர, இவர் உலகின் மிக உயர்ந்த பரிசான அமைதிக்கான நோபல் பரிசையும் பெற்றவர். அன்னை தெரசா, ‘நான் ஒரு இந்தியப் பெண். இந்தியா எனது நாடு. இந்தியர்கள் எனது சகோதரர்கள்’ என்று முழங்கியவர். இப்படி இந்தியாவுக்குப் பல பெருமைகளை சேர்த்துள்ள இவர் எப்படி இந்தியா […]

Read more

தித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோவில்கள்

தித்திக்கும் தேனினும் திகட்டாத திருக்கோவில்கள், பா. வரதராசன், குமுதம், ஒவ்வொரு பாகத்தின் விலை 125ரூ. திருக்கோயில்களுக்குச் செல்பவர்களுக்கு அத்திருக்கோவிலின் வரலாறு, தெய்வத்தின் திருநாமம், மகிமை, வரந்தரும் கடவுள்களின் சிறப்பு, தரிசிப்பதால் மக்களுக்கு கிட்டும் பலன்கள் ஆகியவற்றை விளக்குவதோடு, திருக்கோவில்கள் பற்றிய கலைக்களஞ்சியமாகவே இந்நூலை ஆக்கியுள்ளார் ஏ.எம்.ராஜகோபாலன். முதல் பாகத்தில் 18 கோவில்களைப் பற்றியும், 2-ம் பாகத்தில் 23 கோவில்களைப் பற்றியும் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- இரா. மோகன், ச. கவிதா, கலைஞன் பதிப்பகம், விலை 90ரூ. பன்மொழிப் பாவலர், […]

Read more

எம்.ஜி.ஆர். கதை

எம்.ஜி.ஆர். கதை, இதயக்கனி எஸ். விஜயன், இதயக்கனி பிரசுரம், பக். 352, விலை 200ரூ. பத்திரிகை துறையில் நீண்ட கால அனுபவம் பெற்ற இந்நூலாசிரியர், 1987ல் ‘தேவி’ வார இதழில் ‘எம்.ஜி.ஆர். கதை’ என்று ஒரு வருடத்திற்கு மேல் எழுதிய தொடர், வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. சினிமா, அரசியல் போன்ற துறைகளிலும் இதன் தாக்கம் இருந்ததால், பிறகு ‘ராணி’ வார இதழிலும் வேறு பல செய்திகளுடன் இதே தலைப்பில் 70 வாரங்கள் இத்தொடர் வெளியாகி சாதனை படைத்தது. எம்.ஜி.ஆரைப் பற்றிய நிறைகளை மட்டுமின்றி, […]

Read more

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம்

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம், அரங்க பரமேஸ்வரி, வையவி பதிப்பகம், பக். 192, விலை 120ரூ. அரசியலிலும் நேர்மையை நிலைநாட்ட முடியும் என்று வாழ்ந்து காட்டிய பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கையை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதோடு, தாமும் அம்மாமனிதர்போல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற தூண்டுதல் உணர்வை ஏற்படுத்தும் நூல். நன்றி: குமுதம், 10/8/2016.

Read more

சிவகுமார் எனும் மானுடன்

சிவகுமார் எனும் மானுடன், தொகுப்பு அமுதவன், அல்லயன்ஸ் கம்பெனி, பக். 432, விலை 400ரூ. நல்லொழுக்கம், நற்பண்புகளுக்கு சினிமாத்துறையில் எடுத்துக்காட்டாக விளங்குபவர் நடிகர் சிவகுமார். கோவை மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த இவர், பிழைப்பு தேடி 1950 – களில் சென்னை வந்து, சுமார் 7 ஆண்டுகள் ஓவியம் பயின்று, 40 ஆண்டுகள் திரைப்படங்களிலும், நாடகங்களிலும், சின்னத்திரையிலும் பல வகையான பாத்திரங்களில் பரிணமித்து, கலையுலக மார்க்கண்டேயனாகப் பாராட்டப்படுபவர். அது மட்டுமின்றி புராண, இதிகாசங்களில் தேர்ச்சி பெற்ற பேச்சாளராக, எழுத்தாளராக, தமிழறிஞராக, தன்னை உயர்த்திக் கொண்டு, […]

Read more

ஹெலன் கெல்லர்

ஹெலன் கெல்லர், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, அருள்மொழிப் பதிப்பகம், விலை 90ரூ. பார்வையும் இல்லாமல், பேசவோ, கேட்கவோ முடியாத ஒரு பெண்மணி, படித்துப் பட்டதாரியாகி உலகப் புகழ் பெற்ற எழுத்தாளராக விளங்கினார் என்றால் அதிசயமாக இருக்கிறது அல்லவா? அந்தப் பெண்மணியின் பெயர் ஹெலன் கெல்லர். இருபதாம் நூற்றாண்டின் அதிசயப் பெண்மணி. உடல் ஊனமுற்றவர் என்றாலும் மன உறுதி இருந்தால், சாதனை புரியலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்கிய ஹெலன் கெல்லர் வாழ்க்கை வரலாற்றை சுவைபட எழுதியுள்ளார், கள்ளிப்பட்டி சு. குப்புசாமி. நன்றி: தினத்தந்தி, 28/9/2016.

Read more

பார் போற்றும் பகலவன் பாபாசாகேப் பயணப்பாதை

பார் போற்றும் பகலவன் பாபாசாகேப் பயணப்பாதை, எம்.ஏ. பாலசுப்ரமணியன், சித்தார்த்த பதிப்பகம், விலை 450ரூ. ஆழ்ந்த கற்றல், வீரமிகு சுயமரியாதை, உயர்வான சிந்தனை, தெளிந்த ஞானம், ஓய்வறியா உழைப்பு மற்றும் உத்தம குணங்கள் முற்றாக நிரம்பியதே டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை. அத்தகைய தன்னலமற்ற பேரருளாளரின் வாழ்வின் நிகழ்வுகளை, அவர் பிறந்த 14/4/1891 முதல் இறப்பான 6/12/1956 வரை நாட்குறிப்பாய் தொகுத்து அளித்திருக்கிறார் நூலாசிரியர் எம்.ஏ. பாலசுப்பிரமணியன். தாம் பிறந்த மண்ணிற்கும், தன்னைச் சார்ந்த சமுதாயத்திற்கும் ஈடு இணையற்ற தொண்டாற்றிய பெருமகன் பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கைப் […]

Read more

மறைந்தும் மறையாதவர்கள்

மறைந்தும் மறையாதவர்கள், ஏ.ஆர். பாலஸ்ரீதரன், சுமதி பதிப்பகம், விலை 250ரூ. அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், நாட்டுக்கு உழைத்த உத்தமர்கள், மேல்நாட்டு சாதனையாளர்கள் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல். நேதாஜி, இந்திரா காந்தி, கப்பலோட்டிய தமிழன், வ.உ. சிதம்பரனார், மகாகவி பாரதியார், மறைமலையடிகள், பேரறிஞர் அண்ணா, கிருபானந்தவாரியார், எம்.கே. தியாகராஜாகவதர், மு. வரதராசனார் உள்ளிட்ட 49 பேர்களின் வரலாறுகள் இடம் பெற்றுள்ளன. அதிகமாக வளர்த்தாமலும், மிகவும் சுருக்கி விடாமலும் மிகத் திறமையாக வரலாறுகளை சுவைபட எழுதியுள்ளார் இலங்கைத் தமிழரான ஏ.ஆர். பாலஸ்ரீதரன். நன்றி: தினத்தந்தி, 5/10/2016.

Read more

திரைப்பட இசைப்பாடல்கள்

திரைப்பட இசைப்பாடல்கள், மணிவாசகர் பதிப்பகம், விலை 75ரூ. திருச்சி தியாகராஜன், எம்.கே. ஆத்மநாதன் ஆகியோர் சினிமாவுக்காக எழுதிய பாடல்களை கவிஞர் பொன்.செல்வமுத்து தொகுத்துள்ளார். இரண்டு சிறந்த கவிஞர்களின் பாடல்களுடன், அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்பு, அவர்களுடைய பாடல்கள், இடம்பெற்ற படங்கள் முதலிய விவரங்களுடன் புத்தகம் சிறப்பாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —-   பஷீர் தனிமையில் பயணிக்கும் துறவி, சாகித்திய அகாடமி, விலை 335ரூ. தனது எளிமையான எழுத்துக்களின் மூலம் மலையாள இலக்கியத்தில் தன்னிகரற்ற ஆளுமையாக திகழ்ந்தவர் வைக்கம் முஹம்மது பஷீர். அவரது […]

Read more
1 17 18 19 20 21 46