கலைமாமணி வி.சி. குகநாதன்

கலைமாமணி வி.சி. குகநாதன், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 224, விலை 200ரூ. திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் வி.சி. குகநாதனின், திரையுலக வாழ்க்கை வரலாற்றை, சுவைபட விவரித்திருக்கிறார் நூலாசிரியர். இந்தியா – இலங்கை இடையே உள்ள பல தீவுகளில், ஒன்றான, புங்குடு தீவில் பிறந்து, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக வளர்ந்து, அவரின் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் அளவுக்கு உயர்ந்தவர் குகநாதன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆவலில் வந்தவரை, மடைமாற்றிவிட்டவர், அண்ணாதுரை. எம்.ஜி.ஆருக்காக, எடுத்த திரைப்படம், தெலுங்கு திரையுலகில் செய்த சாதனைகள் […]

Read more

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம்

நவீனத் தமிழ் இலக்கியத்தில் தாகூர் கவிதையின் தாக்கம், பெ.சு.மணி, பூங்கொடி பதிப்பகம், விலை 90ரூ. தமிழ்க் கவிதைகளிலும் கதைகளிலும் நாடகங்களிலும் தாகூரின் தாக்கம் எவ்வாறு அமைந்துள்ளது என்பதைத் தெளிவாக விளக்குகிறது இந்த நூல். பாரதியார், வ.வே.சு. ஐயர், உ.வே.சாமிநாதையர், த.நா.குமாரசுவாமி, விபுலானந்த அடிகள், கி.வா.ஜ., போன்ற இலக்கிய அறிஞர்களின் வாழ்க்கையிலும் இலக்கியத்திலும் தாகூரின் தாக்கத்தைத் தகுந்த ஆதாரங்களுடன் தந்துள்ளார் நூலாசிரியர். தாகூரின் கவிதைகள் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வரலாற்றையும்  அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் தமிழ்மொழிபெயர்ப்பையும் தந்துள்ளதால், தமிழ் வாசகர்கள் பயன் பெறுவார்கள் என்பது உறுதி. […]

Read more

இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி

இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி, முனைவர் எஸ்.எம்.உமர், அல்லயன்ஸ் கம்பெனி, பக். 288, விலை 275ரூ. உயர்ந்த மனநிலையில் எம்.எஸ்., இசை கேட்டு மகிழ்வர் பலர்; இசையாகவே வாழ்ந்தவர் சிலரே. அச்சிலரில், இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி குறிப்பிடத்தக்கவர். இந்த நூல் அவர் வாழ்க்கை வரலாற்றை விவரிப்பதுடன், அவர் பண்பு நலன்களையும் மிக நேர்த்தியாக விவரிக்கிறது. எட்டு வயதில் முன்னறிவிப்பின்றி அரங்கேற்றமான எம்.எஸ்.,சின் மேடைக்கச்சேரி (பக்.35), எம்.எஸ்.,சின் முதல் இசைத்தட்டுகளை எச்.எம்.வி., நிறுவனம் வெளியிட்டது (பக். 41), சென்னை மியூசிக் அகாடமியில் 1932ம் ஆண்டு, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் […]

Read more

தீர்க்கதரிசி

தீர்க்கதரிசி, தமிழில் சிவசங்கரி, வானதி பதிப்பகம், விலை 800ரூ. ஆந்திராவில் எளிய குடும்பத்தில் பிறந்து தமிழ்நாட்டில் குடியேறி உலக சாதனை புரிந்தவர் டாக்டர் பிரதாப் சந்திர ரெட்டி. ஒரு காலத்தில் அரசாங்க ஆஸ்பத்திரிகளும், நகரசபை ஆஸ்பத்திரிகளும்தான் இருந்தன. இந்நிலையில் சர்வதேச தரத்துக்கு ஆஸ்பத்திரிகளை அமைத்தார், பிரதாப் சி.ரெட்டி. இன்று அவருடைய அப்போலோ ஆஸ்பத்திரிகள், உலகப்புகழ் பெற்று விளங்குகின்றன. வெளிநாட்டவர்களும் இங்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள். அப்போலோ மருத்துவமனைகள் ஒவ்வொரு நாளும் 60,000 பரிசோதனைகளைச் செய்கின்றன. 3000 அவசர நிலை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றன. 2200 […]

Read more

இயேசுநாதர் வரலாறு

இயேசுநாதர் வரலாறு, அ,லெ. நடராஜன், சந்தியா பதிப்பகம், பக். 288, விலை 250ரூ. இயேசுவின் வாழ்க்கையை மிகவும் தெளிவாக எம்மதத்தினரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார் நூலாசிரியர். அன்பின் மறுவுருவம் இயேசு என தெளிவுபடுத்தியுள்ளார். இறைமகன் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை – ஐந்து கால கட்டங்களாகப் பிரித்துள்ளார். இயேசுவின் 33 வருட வாழ்க்கையை பிறப்பு முதல் மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தது வரை அனைத்து நிகழ்வுகளையும் நம் கண்முன் நிறுத்தியுள்ளது அருமை. பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வருகையைக் குறித்து […]

Read more

ஸ்ரீ அரவிந்த் அன்னை

ஸ்ரீ அரவிந்த் அன்னை, எஸ். ஆர் . செந்தில் குமார், சூரியன் பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மிரா அல் – பாஸாவாக பிறந்த பெண் குழந்தை, இந்தியாவில் பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த அன்னையாக மலர்ந்த விதத்தை கூறுகிறது இந்நூல். கருவிலே திருவுடன் பொலிந்து பிறந்து வளர்ந்த காலத்தில் தாம் தெய்விக குழந்தை என்பதை நிரூபித்தார், மிரா. பின்பு அல்ஜீரியா சென்று தியான் என்பவரிடம் சித்துக்கலை பயின்றார். ஒருமுகப்பட்ட மனதின் வலிமை குறித்து மிராவின் ஆராய்ச்சிகள், சோதனைகள் பவுத்த […]

Read more

நான் பூலான்தேவி

நான் பூலான்தேவி, மரியே தெரஸ்கூன் பால் ராம்பாலி, தமிழில் மு.ந. புகழேந்தி, எதிர் வெளியீடு, பக். 364, விலை 300ரூ. எனக்காக நான் பேச ஒரு முறை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், எனக்காக பலர் பேசியும், புகைப்படம் எடுத்தும் தங்களின் சுயநலத்துக்காக பலரும் பயன்படுத்திக் கொண்டனர். தாங்க முடியாத துயரங்கள், அவமானங்களை அனுபவித்த அப்பாவி பெண்ணான, என்னை பலரும் திட்டி, பழித்து, கேவலப்படுத்தினர். உதவி கேட்டு நான் கைகளை நீட்டினேன் என்றாலும், எவரும் எனக்கு உதவவில்லை. சமூகம் என்னை ஒரு சிறு பூச்சியாகவும், […]

Read more

தி லைப் அண்டு டைம் ஆப் என்.டி.வானமாமலை

தி லைப் அண்டு டைம் ஆப் என்.டி.வானமாமலை, வழக்கறிஞர் எஸ். அருணாச்சலம், ஆல் இந்தியா பப்ளிக் ரைட்ஸ் புரொடக்ஷன், ஆர்கனைசேஷன் வெளியீடு, பக். 320, விலை 200ரூ. விழுதுகள் வாழ்த்தும் விருட்சம் தமிழில் நூலாசிரியரால், ‘கரை சேர்க்கும் உயிர் துடுப்பாய்’ என்னும் தலைப்பில் வெளியான நூல், தற்போது ஆங்கிலத்தில் மொழி மாற்றம் பெற்றுள்ளது. முற்போக்குச் சிந்தனையும், தொண்டுள்ளமும் நிறைந்த மூத்த வழக்கறிஞரின் வாழ்க்கை வரலாற்று நூல். என்.டி.வி., என்று அன்புடன் அழைக்கப்படும் என்.டி. வானமாமலை, ஒரு வழக்கறிஞன் சடர்விட்டுப் பிரகாசிக்கத் தேவையான அயராத உழைப்பு, […]

Read more

என்றென்றும் விஜய்

என்றென்றும் விஜய், சபீதா ஜோசப், குமுதம் பு(து)த்தகம், பக். 112, விலை 110ரூ. நடிகர் விஜய் தான் கடந்து வந்த பாதையை, தான் அனுபவித்த சிக்கல்களை அதிலிருந்து விடுபட அவர் மேற்கொண்ட கடின உழைப்பை, திறந்த மனதோடு இந்நூலில் சொல்லிச் செல்கிறார். குறிப்பிட்ட துறையில் தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்கிற தீராவேட்கை கொண்ட எல்லோருக்குமே இந்தப் புத்தகம் பிடிக்கும். அதிலும் விஜயின் தீவிரமான ரசிகர்களுக்கு இந்நூல் ஒரு பொக்கிஷம். குமுதத்தில் தொடராக வந்தபோது பல லட்சம் வாசகர்களால் பாராட்டப்பட்டது. அதை தொகுத்து குமுதம் […]

Read more

ஜுலயஸ் சீசர்

ஜுலயஸ் சீசர், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக். 136, விலை 110ரூ. உலகை வசப்படுத்திய ஒரு மாவீரனின் கதை இது. சீசரின் காதல், வீரம், தலைமைப்பண்பு, போர்த்திறன், அரசியல், உத்திகள், மனிதநேயம் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே நூலில் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/6/2016.   —– திருக்குறள் அகர வரிசையில் தெளிவுரை, வெளியீடு பொ.கிருஷ்ணன், விலை 100ரூ. அகர வரிசையை முதன்மைப்படுத்தி திருக்குறளை மனப்பாடம் செய்ய ஏற்ற நூலாக உருவாக்கியுள்ளார் நூலாசிரியர் பானுமதி கிருஷ்ணன். அகரத்தில் தொடங்கும் […]

Read more
1 20 21 22 23 24 46