தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள்

தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள், ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை, விலை 130ரூ. எக்காலத்தும் தனிப்பெருமையுடன் மேலோங்கி நிற்கும் இலக்கிய சிற்பிகளில் முதன்மையாக நிற்பவர் ரவிந்திரநாத் தாகூர். அவர்தம் படைப்புகள் ஓராயிரத்துக்கு மேற்பட்ட கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், சமயம், கல்வி, அரசியல், இலக்கியம் பற்றிய கட்டுரைகள் ஏராளம். அவற்றிலிருந்து தெரிந்து எடுக்கப்பட்ட சிந்தனை வரிகளின் தொகுப்பு நூல். தாகூரின்பால் ஈடுபாடு கொண்ட டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன் அவரது படைப்புகள் ஒவ்வொன்றையும் படித்து இன்புற்றார். அவ்வாறு படித்ததில் பிடித்த முத்தான சத்தான வரிகளை அவ்வப்போது […]

Read more

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு, கேரன் மெக்ரீடி, தமிழில் எஸ்.ராமன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 512, விலை 300ரூ. சுவாமி விவேகானந்தரின் பத்து கட்டளைகளை பின்பற்றி, ஒரு தமிழர் அடைந்த வெற்றியை விவரிக்கிறது, இந்த நூல். ஆஸ்திரேலியாவில், கிரேட்டர் ஸ்பிரிங் பீல்டு என்ற மாபெரும் நகரத்தை உருவாக்கிய, தமிழரான, மஹா சின்னத்தம்பியின் வாழ்க்கை வரலாற்றை நூல் விவரிக்கிறது. விவேகானந்தரின் தத்துவத்தை முதலில் விவரித்துவிட்டு, அதன் தொடர்ச்சியாக, மஹா சின்னத்தம்பியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கோர்ப்பதில், நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். மஹா சின்னத்தம்பி தோல்வியை, […]

Read more

நரேந்திர மோடி சுவைமிகு தேநீர் துளிகள்

நரேந்திர மோடி சுவைமிகு தேநீர் துளிகள், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பூம்புகார் பதிப்பகம், பக். 176,விலை  270ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024551.html மோடிக்கு பிடித்த வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் நரேந்திர மோடி பற்றி, தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எழுதிய நூல். மோடியைப் பற்றிய 160 செய்திகளை கொண்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தம், விவசாயிகளுக்கு எதிரானது, தொழில் துறையினருக்கு ஆதரவானது என்பது குற்றச்சாட்டு. குஜராத்தில் 1960லிருந்து 2000ம் ஆண்டு வரையில், சொட்டு நீர் பாசனம் நிலம், 12 […]

Read more

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு, கேரேன் மெக்ரீடி, தமிழில் எஸ். ராமன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. இலங்கை மலேசியத் தமிழராக ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த மஹாலிங்கம் சின்னத்தம்பியின் வாழ்க்கை வரலாறு இந்த நூல். 1939ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். மஹாலிங்கத்திற்கு சிறுவயது முதலே நேர்மறைச் சிந்தனைகளும், வெற்றி கிடைக்கம் வரை அயராது முயற்சி செய்யும் பண்பும் இருந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் மனிதர்கள் வசிக்க இயலாத மலையாக இருந்த ஸ்பிரிங் பீல்ட் மலையில் 2860 ஹெக்டேர் நிலத்தை […]

Read more

காலச் சப்பரம்

காலச் சப்பரம், விழிகள் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. பாவல் கவிமுகில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. சிறுவயதில் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் மலரும் நினைவுகளாக கவிதை நடையில் உலா வருகின்றன. பேச்சு நடை வீச்சில் கவிதைகள் அமைந்துள்ளன. அமாவாசை கணக்கா ஒருத்தன் வெளுப்பா தேடுனாக்கா கைநகமும் கண்ணு முழியும்தான் ஆனா பேரு வெள்ளத்துரை என்பன போன்ற பாடல்கள். கிராமீய மணம் வீசுகின்றன. நன்றி: தினத்தந்தி, 15/7/2015.   —- நீ உன்னை அறிந்தால், ஜி. மீனாட்சி, வானதி பதிப்பகம், சென்னை, விலை 65ரூ. விண்வெளி, […]

Read more

சில பாதைகள் சில பயணங்கள்

சில பாதைகள் சில பயணங்கள், பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 144, விலை 90ரூ. சமூகத்தாக்கத்தோடு, சமுதாய முன்னேற்றத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து, அதில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பெற்றுள்ள, மதுவிலிருந்து மீள வழிகாட்டும் சாந்தி ரங்கநாதன், அமில வீச்சுக்கு ஆளான அர்ச்சனா குமாரி, பாலியல் தொழிலாளர் குழந்தைகளைப் படிக்க வைக்கும் சோம்லே மாம், தேவதாசி ஒழிப்பில் வெற்றிகண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சமையல் புத்தகம் முதலில் எழுதிய மீனாட்சி அம்மாள், கர்நாடக சங்கீதக் கலைஞர் வீணை தனம்மாள், கம்யூனிஸ்ட் பார்வதி […]

Read more

செல்லப் பிராணிகள் வளர்ப்பு

செல்லப் பிராணிகள் வளர்ப்பு, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 350ரூ. நன்றி மறவாமைக்கு எடுத்துக்காட்டாய் கூறப்படுவது நாய். காவல் காப்பதிலும், ஆபத்து காலத்தில் உதவுவதிலும் நாய்க்கு நிகரான விலங்கு இல்லை. அதுவே மனிதர்களின் செல்லப் பிராணிகளில் முதலிடம் பெறுகிறது. அத்தகைய நாய்களை முறையாக வளர்பப்து எப்படி? என்பது பற்றி பல சுவையான, சுவாரஸ்யமான தகவல்களை இந்த நூலில் ஆசிரியர் வாண்டு மாமா விவரித்துள்ளார். மேலும் பூனை வளர்ப்பு, முயல் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வெள்ளெலி, சீமைப் பெருச்சாளி, தேனீ வளர்ப்பு போன்றவை பற்றியும் இந்த […]

Read more

காவ்யா ஒரு காவியம்

காவ்யா ஒரு காவியம், ஆரூர்தாஸ், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. 1000 திரைப்படங்களுக்கு மேல் வசனம் எழுதி சாதனை படைத்த ஆரூர்தாஸ், இப்போது நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் எழுதுவதிலும் சாதனை படைத்து வருகிறார். அவர் எழுதிய காவ்யா ஒரு காவியம், இலட்சியப் பயணம், இதய இலக்கணம், அரண்மனை வாரிசு ஆகிய 4 குறுநாவல்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. பாசமலர் போன்ற காவியங்களை படைத்தவர் அல்லவா? இந்த குறுநாவல்களிலும் அவரது முத்திரையைப் பதித்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 12/8/2015.   —- மருத்துவ நோபல், நெல்லை சு. […]

Read more

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு

இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு, தமிழில் எஸ். ராமன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. ஒரு நகரத்தையே உருவாக்கிய இலங்கைத் தமிழரின் சாதனை! பிரமிப்பூட்டும் தன்னம்பிக்கை நாயகன், மஹா சின்னத்தம்பியின் வாழ்க்கையை விவரிக்கும் நூல் இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு. பசி, பட்டினியுடன் வளரும் இலங்கை அகதி தமிழரான அவரது மனதுக்குள் பெருங்கனவு ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒரு சமயத்தில் வெறும் திட்டத்தைக் காட்டி, 3 ஆயிரம் ஏக்கர் இடத்தை ஒப்பந்தத்துடன் விலை பேசுகிறார். முதலீடு செய்பவர்களை ஈர்த்து, ஆஸ்திரேலியாவுக்கே பெருமை […]

Read more

நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், ஏ.சி. திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், பக். 352, விலை 220ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024366.html தமிழ் திரைப்பட இயக்குனர் ஏ.சி. திருலோகசந்தர், தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்திருக்கிறார் இந்த நூலின் மூலம். ஒரு திரைக்கதாசிரியராக, உதவி இயக்குனராக எத்தனை போராட்டங்களைச் சந்தித்து, இயக்குனராக வேண்டியிருந்தது. அதன்பின் அந்தப் புகழைத் தக்க வைத்துக் கொள்ள, எத்தனை போராட வேண்டியிருந்தது என்று சினிமாவைத் தாண்டிய பல விஷயங்கள் நூலில் அடங்கியிருப்பது, திரைத்துறையில் வெல்வதற்கு போராடும், உதவி இயக்குனர்கள் […]

Read more
1 27 28 29 30 31 46