என் வழி தனி வழி சச்சின் டெண்டுல்கர் சுயசரிதை

என் வழி தனி வழி சச்சின் டெண்டுகல் சுயசரிதை, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக். 545, விலை 495ரூ. உலகின் பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் 22 கெஜ நீள ஆடுகளத்தில் 24 ஆண்டுகளாக கோலோச்சிய சச்சினைப் பற்றி, ரசிகர்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அவை எல்லாம் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் சின்னப் பயலே வீட்டிற்குச் சென்று பால் குடித்து விட்டு வா என்று சியால்கோட் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் ஏந்தியிருந்த வாசகம் உண்டாக்கிய அசௌகரியம், ஆரம்பத்தில் வாசிம் அக்ரம், வக்கார் […]

Read more

நான் மலாலா

நான் மலாலா, மலாலா யூசுஃப்ஸை, தமிழில் பத்மஜா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம், பக். 303, விலை 275ரூ. பெண்களுக்கு எதிரான தாலிபான்களின் அடக்குமுறைச் சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு துளிதான் மலாலா. ஆனால் அந்த ஒரு துளி பெரும் காட்டாற்று வெள்ளமாக மாறும் என்று தாலிபான்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். தன் சமூகத்தில் பெண்களின் கல்விக்காக குல்மக்காய் என்ற புனைபெயரில் அவர் எழுதியபோதுதான் அனைவரின் கவனமும் அவர்மேல் விழுந்தது. தாலிபான்களின் கவனம் உட்பட. அதன் விளைவு, 2012 அக்டோபரில் பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது அவரைக் குறிவைத்து […]

Read more

சிந்தை கவர்ந்த சித்தர் பாடல்கள்

சிந்தை கவர்ந்த சித்தர் பாடல்கள், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. தமிழ் இலக்கியத்தில் சித்தர்கள் பாடலுக்கு சிறப்பான இடம் உண்டு. அறிவியல் பார்வைக்கும், ஆன்மிகத்தேடலுக்கும் உறவுப் பாலம் அமைத்து உயர்ந்த கருத்துகளை எளிமையாய் விளக்கியவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர் பாடல்களில் சிந்தை கவர்ந்த பாடல்களை முனைவர் சொ. சேதுபதி தொகுத்து வழங்கியுள்ளார். சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர் போன்ற 24 சித்தர்களின் பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடல்களுக்கும் பொழிப்புரையோ அல்லது விளக்கவுரையோ இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். […]

Read more

கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு

கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு, தோழமை பதிப்பகம், சென்னை, விலை 159ரூ. தமிழ்த்திரை உலகில் சிறந்த நகைச்சுவை நடிகராகக் கொடிகட்டிப் பறந்த சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு இந்தப் புத்தகம். 1958 ஜனவரி 23ந்தேதி மதுரையில் ஷீலா என்ற ஆங்கிலோ இந்தியப்பெண்ணை சந்திக்கிறார் சந்திரபாபு. கண்டதும் காதல் கொள்கிறார். அந்த ஆண்டு மே 29ம் தேதி இரு வீட்டாரின் சம்மதத்துடன் சந்திரபாபு ஷீலா திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த பிறகுதான், ஏற்கனவே தான் ஒருவரை காதலித்த தகவலை சந்திரபாபுவிடம் வெளியிடுகிறார் ஷீலா. இதனால் சந்திரபாபு மனம் […]

Read more

வையத் தலைமைகொள்

வையத் தலைமைகொள், வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ், புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. எந்த ஒரு துறையில் யார் கால் பதித்தாலும், அது கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை எந்த இடம் என்றாலும், மற்றவர்களை விட உயர்ந்த இடத்தில் திறமையோடு மிளிர்வதை காட்ட வேண்டும் என்ற இயல்பு உள்ளவர்கள் தான் சிறந்தவர் என்று பொருள்படுவர் ஆவார். அப்படி தனித்துவத்தை அடைய வேண்டும் என்றால் அந்த நிலை தானாக வந்துவிடாது. உழைப்பே உயர்ந்த ஓய்வு என்று தொடங்கி என்னென்ன வகை முயற்சிகளை மேற்கொண்டால் இறுதியாக […]

Read more

வெற்றி வெளியே இல்லை

வெற்றி வெளியே இல்லை, ரமணன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 225ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-459-2.html ரயில் வண்டியில் ஒரு தொழிற்சாலை சீனாவில் ஷ்யாங்கே நகரத்திலிருந்து கடலில் நகரும் தொழிற்சாலையாக ஒரு கப்பல் புறப்படுகிறதாம். நியூயார்க் செல்லும் வழியில், நிற்கும் இடங்களிலெல்லாம் பொருட்களை வாங்கிச் சேகரித்து, அவற்றைக்கொண்டு கப்பலிலேயே உற்பத்தியை முடித்து, நியூயார்க்கில் முழுமையடைந்த பொருட்களாக விற்பனை செய்கிறார்களாம். இப்படி உற்பத்தி நேரம், பயண நேரம் இரண்டையும் ஒன்றாக்க முயற்சிக்கிறார்களாம். நீண்ட ரயில் பாதைகள் உள்ள நம் நாட்டில் […]

Read more

அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகாதா, நக்கீரன், விலை 150ரூ. அண்மையில் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை வென்று, இந்தியாவை மட்டுமல்ல, உலகின் விழிகளையே வியப்பால் விரியச் செய்தவர், அரவிந்த் கெஜ்ரிவால். ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பை அன்னா ஹசாரேயுடன் இணைந்து உருவாக்கியது முதல், மீண்டும் டெல்லி அரியணையில் அமர்ந்தது வரையிலான கெஜ்ரிவாலின் வாழ்க்கையை எழுத்தாளர் ஜெகாதா சுவைபட எழுதியுள்ளார். சாமானியனாக இருந்த சாதனை படைத்த அரவிந்த் கெஜ்ரிவாலின் போராட்ட குணம், துணிச்சல் ஆகியவற்றை பாராட்டும் ஆசிரியர், அவரது ஆரவார […]

Read more

வா. மு. சேதுராமனின் தமிழ்ப்பணி

வா. மு. சேதுராமனின் தமிழ்ப்பணி, சேதுச்செல்வி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு, உயர் கல்வி பயின்று, முனைவர் பட்டம் பெற்றவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன். அண்மையில் 80 வயது நிறைந்து, முத்து விழா கொண்டாடியவர். வாழ்நாளில் கணிசமான பகுதியை வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, தமிழின் பெருமையை பரப்பி வருகிறவர். கவிதை, உரைநடை, சொற்பொழிவு என்று பல துறைகளில் தமிழ்ப்பணியாற்றி வருகிற பெருங்கவிக்கோவின் தமிழ்த்தொண்டினை வா.மு. சேதுராமனின் தமிழ்ப்பணி என்ற தலைப்பில் ஆய்வு செய்து, டாக்டர் பட்டம் பெற்றுள்ளார் ச. குணா. அந்த […]

Read more

எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு

எளிமையின் சிகரம் எங்கள் நல்லகண்ணு, தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, பக். 288, விலை 180ரூ. பொதுவுடைமை இயக்கத் தலைவர் நல்லகண்ணுவின் உயர்ந்த பண்புகளையும் ஆளுமைத் திறனையும், போராட்ட வாழ்க்கையையும் எல்லாரும் அறிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்டிருக்கும் நூல். அவருடன் பழகியவர்கள், போராட்டங்களில் பங்கேற்றவர்கள், சிறையில் உடனிருந்தவர்கள், அவரைப் பற்றி எழுதிய கட்டுரைகள், கவிதைகள் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. நல்ல கண்ணுவின் துணைவியார் ரஞ்சிதம் நல்லகண்ணுவுடனான நேர்காணலும் இடம்பெற்றிருக்கிறது. பொது வாழ்க்கையில் மட்டுமின்றி, தனி வாழ்க்கையிலும் எவ்வாறு ஒரு புரட்சிகரமான தோழராகவே […]

Read more

முருகு சுந்தரம்

முருகு சுந்தரம், சேலம் கு. கணேசன், சாகித்ய அகாடமி, சென்னை, பக். 128, விலை 50ரூ. பாரதி பரம்பரையில், வந்த சிறந்த படைப்பாளர் முருகு சுந்தரம். பழமையில் பூத்து, புதுமையில் கனிந்த முருகு சுந்தரம், மரபில் துவங்கி, புதுக்கவிதையில் உயர்ந்து நின்றார்.புதிய உத்திகள், படிமங்களுடன் புதுக்கவிதையில் நாடகமாக ஈழப் பிரச்சினையை, எரி நட்சத்திரம் ஆக்கினார். அவர் எழுதிய அருவ ஓவியங்கள், கனிந்த பழம், பொம்மைக் காதல் முதலிய ஆறு புதுக்கவிதை நாடகங்களும், அவருக்கு பெருமை சேர்த்தன. மறத்தகை மகளிர், பாரும்போரும், பாவேந்தர் நினைவுகள், மலரும் […]

Read more
1 28 29 30 31 32 46