ஒரு வீணையின் விசும்பல்

ஒரு வீணையின் விசும்பல், தாழை மதியவன், தாழையான் பதிப்பகம், பக். 176, விலை 100ரூ. பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்த இந்நூலாசிரியரின் இச்சிறுகதைத் தொகுப்பு, அவருக்குப் பெரும் எழுத்தாளருக்குரிய அந்தஸ்தைப் பெற்றுத் தந்துள்ளது எனலாம். இந்நூலில் அவரது 21 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமியக் குடும்பங்களின் கதைகளாக உள்ளதால், அவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள், கலாசாரம், வழிபாட்டு முறைகள், இளைய தலைமுறையினரைப் பாதிக்கும் நவீனமயம்… என்று பல்வேறு கோணங்கள் இக்கதைகளில் படம்பிடித்துக் காட்டப்படுகிறது. இக்கதைகள் சில இஸ்லாமிய இதழ்களிலும், தூது வலைத் […]

Read more

ஸ்ரீரங்கம் பற்றி வண்ணப்புத்தகம்

ஸ்ரீரங்கம் பற்றி வண்ணப்புத்தகம், வேத ப்ரகாசனம் வெளியீடு, சென்னை, விலை 250ரூ. பூலோக வைகுந்தம் என்று வர்ணிக்கப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். அதைப்பற்றிய அபூர்வ தகவல்களுடன் அரங்கமா நகருளானே என்ற தலைப்பில் அரிய புத்தகம் வெளிவந்துள்ளது. ஸ்ரீ ரங்கம் பற்றிய அனைத்து விவரங்களுடன், முழுவதும் ஆர்ட் பேப்பரில் புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. பக்கத்துக்குப் பக்கம் வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. புத்தகத்தை எழுதிய வேதா டி.ஸ்ரீதரனம் வெளியிட்ட பதிப்பகத்தாரும் பாராட்டுக்கு உரியவர்கள். நன்றி: தினத்தந்தி, 1/7/2015.   —-  ஆடும் மயில், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, […]

Read more

நிஜமாகா நிழல்கள்

நிஜமாகா நிழல்கள், கோ. சந்திரசேகரன், தரணிஷ் பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 50ரூ. நூலாசிரியர் சந்தித்த மனிதர்கள், நண்பர்கள், உறவினர்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டும் அவர்தம் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைக் கருவாகக் கொண்டும், எழுதிய பத்துக் கதைகளின் தொகுப்பே இந்நூல். இந்தப் பத்துக்கதைகளும் முத்து முத்தான வெவ்வேறு கதைக் கருக்களைக் கொண்டிருப்பது இனிமையான வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்துகிறது. அரசியல்வாதிகள் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, மக்களின் நலனில் மட்டுமே அக்கறை கொள்ள வேண்டும் என்ற சாமானிய மனிதனின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் நிஜமாகா நிழல்கள். எதிலுமே […]

Read more

யுரேகா கோர்ட்

யுரேகா கோர்ட், இரா. நடராசன், விகடன் பிரசுரம், சென்னை, பக். 158, விலை 150ரூ. 2014ஆம் ஆண்டுக்கான குழந்தைகள் இலக்கியத்துக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் இரா. நடராசனின் சிறந்த படைப்பு. தொழில்நுட்ப வசதிகள் பெருகியதால் குழந்தைகளுக்கும் புத்தக வாசிப்புப் பழக்கம் குறைந்து வரும் இந்நாளில், அவர்களைப் படிக்க வைப்பதற்காக அறிவியலையும், செயல்விளக்கங்களையும் பயன்படுத்தியிருக்கும் உத்தி மிகவும் பிரமாதம். அவர்களைப் புத்தக வாசிப்புப் பழக்கத்திற்கு கையைப் பிடித்து அழைத்துச் செல்வதாக அமைந்துள்ள எழுத்து நடை, இந்நூலின் தனிச்சிறப்பு. கதைகளின் ஊடே அறிவியல் தகவல்களைப் […]

Read more

கதை கதையாம் காரணமாம்

கதை கதையாம் காரணமாம், பவளசங்கர், மெட்ராஸ் பழனியப்பா பிரதர்ஸ், பக். 144, விலை 105ரூ. உணவு சேகரிக்கும் வேலையைச் செய்ய மறுத்தது ஓர் எறும்புக்கூட்டம். வேலை செய்யும் நாள்களுக்கு மட்டுமே உணவு என்று சட்டமேற்படுத்தியது ராணி எறும்பு. குளிர்காலம மழைக்காலம வந்து வெளியில் செல்ல முடியாமல் எறும்புகளை முடக்கிப் போட்டது. வேலை செய்ய மறுத்த எறும்புக்கூட்டம் பசியால் வாட்டமுற்றது. சேமிப்பின் அவசியத்தை உணர்த்தி மன்பிபையும் அளித்த ராணி எறும்பின் தலைமைப் பண்பு சிறு துளி பெரு வெள்ளம் கதையின் அற்புதமான சாராம்சமாகும். கண்தானம் பற்றிய […]

Read more

வீணாதி வீணன்

வீணாதி வீணன், நா. வானமாமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். நா. வானமாமலை எழுதி நியூ செஞ்சரி புக் ஹவுஸ் பதிப்பகம் வெளியிட்ட வீணாதி வீணன் கதை நூலை படித்தேன். கதைப் பாடல் நூல் இது. தென்பாண்டி சீமையை ஆண்ட, ஐவர் ராசாக்களில் ஒருவரான, குலசேகரனின் கதையின், கிளைக் கதை. வள்ளியூரிலிருந்து, மதுரைக்கு இடம்பெயர்கிறார் குலசேகரன். அப்போது உறவுகளால் ஏமாற்றப்பட்டு உணவுக்கு வழியில்லாத ஒருவன் வள்ளியூர் வருகிறான். பசிக்கு பிச்சை எடுக்கிறான். உணவு கிடைக்கவில்லை. தொழில் செய்ய, விறகு வெட்டுகிறான். அரசின் வரிவிதிப்பு, தொழிலை […]

Read more

நன்றி ஓ ஹென்றி

நன்றி ஓ ஹென்றி, எஸ். சங்கரநாராயணன், பொக்கிஷம் புத்தக அங்காடி, பக். 208, விலை 150ரூ. உலகப்புகழ் கதை சொல்லி ஓ. ஹென்றியின் கதை வடிவத்தால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே நூலுக்கு வைத்துள்ளார் நூலாசிரியர். இது சிறுகதைகளின் தொகுப்பு. சில கதைகளை நகர்த்திக்கொண்டே சென்று, இறுதியில் நெகிழ்ச்சியை ஒரு நெற்றிப் பொட்டாக வைப்பதிலாகட்டும், ஒரு கதையில் கலைஞன் தன் வாழ்க்கையில் சலனம் விலக்குவதற்காக ஏற்படுத்திக்கொள்ளும், சமரசமாகி விடுவதைச் சொல்லி இறுதி ஆணி அடிபப்திலாகட்டும், வயது ஒன்றாத திருமணத்தின் முரண்பட்ட உலர்ந்து உணர்வுகளைச் சொல்லி விரக்தி […]

Read more

கிரவுஞ்சப் பட்சிகள்

கிரவுஞ்சப் பட்சிகள், கன்னட மூலம் வைதேகி, தமிழில் ஜெயந்தி, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 136, விலை 110ரூ. புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரான வைதேகி எழுதிய 10 சிறுகதைகளின் தொகுப்பு.இச்சிறுகதைகள் எல்லாவற்றிலும் விதவிதமான மனிதர்களைச் சந்திக்க முடிகிறது. வாழ்க்கை மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றிவிட்டிருக்கிறது, எத்தகைய மனோபாவங்களுடன் அலைய விட்டிருக்கிறது என்பதை இத்தொகுப்பில்  உள்ள சிறுகதைகளைப் படித்தாலே தெரிந்து கொள்ளலாம். பல ஆண்டுகள் வாழந்து ஒருவர் பெறும் வாழ்க்கை அனுபவங்களை இக்கதைகளைப் படிப்பதன் மூலம் ஒருவர் பெற முடியும். உட்கார இடம் கிடைக்குமா? என்று கேட்கும் […]

Read more

சாதேவி

சாதேவி, ஹரன்பிரசன்னா, மயிலை முத்துக்கள், சென்னை, பக். 360, விலை 300ரூ. வெற்று ஆரவாரங்கள், தேவையற்ற அலங்காரங்கள் இல்லாத சிறுகதைகளின் தொகுப்பு. கதைக்குக் கதை நம் அண்டைவீட்டு நிகழ்வுகளே கருக்கெண்டுள்ளது. மேல்வீடு முதல் தட்டான் வரையான 34 கதைகளும் நம் சக மனிதர்களின் அடையாளங்களைத் தாங்கி வந்துள்ள கதைகள். மேல் வீடு சங்கரியாகட்டும் கௌவியாகட்டும், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பையனாகட்டும் அத்தனை பேரும் இந்த சமூகத்தின் ஏதோ ஒரு சிக்கலில் விடுபட முடியாத புதிர்களாகவே உள்ளனர். சிவபாஸ்கரன், லக்ஷ்மி அக்கா, அனு, விஜயலட்சுமி, சீனிவாசன் […]

Read more

சினிமா சீக்ரெட்

சினிமா சீக்ரெட், கலைஞானம், நக்கீரன் பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. சினிமா உலகில் நீண்ட அனுபவம் உடையவர் கலைஞானம். பட அதிபர், கதாசிரியர், வசன கர்த்தா, டைரக்டர் என்று பல முகம் படைத்தவர். பாதி கதை படமாக்கப்பட்ட பிறகு, சில படங்கள் மேலே நகர முடியாமல் நின்று விடுவது உண்டு. அப்போது கதையை ரிப்பேர் செய்ய பட அதிபர்கள் இவரைத்தான் அழைப்பார்கள். கலைஞானம் தமது அனுபவங்களை சினிமா சீக்ரெட் என்ற தலைப்பில் கட்டுரைகளாக எழுதி வருகிறார். அவற்றை புத்தகங்களாக நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. […]

Read more
1 43 44 45 46 47 80