பஞ்சத்தந்திரக் கதை

பஞ்சத்தந்திரக் கதை, தமிழில் பி.எஸ். ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 496, விலை  200ரூ. ஐந்து வகையான தந்திரங்களை உள்ளடக்கிய கதைகளே பஞ்சதந்திரக் கதைகள். இதன் மூல நூல் ஸம்ஸ்க்ருத மொழியில் இருந்தாலும், இதன் மேன்மையால் உலக மொழிகள் பலவற்றிலும் இது மொழி பெயர்க்கப்பட்டுள்ள சிறப்பைப் பெற்றுள்ளது. இவை சிறுவர்களுக்காக எழுதப்பட்ட பழங்கால நீதிக் கதைகள் என்றாலும், எக்காலத்திற்கும் எல்லா தரப்பினருக்கும் பயன் தரும் கருத்துகளைக் கொண்டவை. மகத நாட்டு மன்னன் சுதர்ஷனுக்கு வெகு காலத்திற்குப் பின் மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்தும்கூட, […]

Read more

வெளிச்சம் விற்க வந்தவன்

வெளிச்சம் விற்க வந்தவன், ராஜா செல்லமுத்து, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 320, விலை 200ரூ. மழை பொழிய ஆரம்பிக்கும் முன்னே வரும் மண்வாசனை மாதிரியான கதைகள் இவை. கதைக்களம், சித்தரிக்கும் மாந்தர்கள், ஊடாடும் விலங்குகள் எல்லாமே நம்முடன் நெருக்கமாக உறவாடியவையே. அன்றாடம் நம் கண்முன் நிகழ்ந்து மறைந்துபோன சம்பவங்களின் நினைவை மீட்டெடுக்கும் கதைகள் அதிகம். ஒரு கதையைப் படித்ததும் அடுத்த கதையையும் படிக்கலாமே என்று ஏங்க வைக்கும் யதார்த்த உந்துதல். இப்படி ராஜா செல்லமுத்துவின் இந்த சிறுகதைத் தொகுப்புக்கு பல சிறப்புகள். ஆடுகளை சுமந்து […]

Read more

ஒரு கதை ஒரு விதை

ஒரு கதை ஒரு விதை, இராம்குமார் சிங்காரம், குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, பக். 112, விலை 90ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024748.html குமுதம் குழுமத்தைச் சேர்ந்த கல்கண்டு இதழில் தொடராக வந்தபோது பெரும் வரவேற்பைப் பெற்ற தன்னம்பிக்கை ஊட்டிய நூல். ஒரு கருத்தைச் சொல்லவும் கேட்பவர், அந்தக் கருத்தைப் புரிந்து கொள்ளவும் உதவுபவை கதைகள். உலகப் பேச்சாளர்கள் யாராக இருந்தாலும் தங்கள் கருத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்ய கதை சொல்வதை ஒரு உத்தியாகவே கொண்டுள்ளனர். இதைத்தான் […]

Read more

விநாடி வினா விடை

விநாடி வினா விடை, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 275ரூ. குழந்தைகள் பயனுள்ள முறையில் பொழுதைப் போக்கவும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் வாண்டு மாமா எழுதியுள்ள நூல். பல்வேறு ஓவியங்கள், அதில் மாறுப்டட ஓவியங்களை குழந்தைகள் அடையாளம் காண வேண்டும் என்பது ஒரு வகை. குறிப்பிட்ட இடத்தை அடைய வழிகாட்ட வேண்டும் என்பது இன்னொரு வகை. இப்படிப் பல போட்டிகளை வைத்து அதற்கான விடைகளையும் கூறுகிறார். மேலும் குழந்தைகள் மனதைக் கொள்ளை கொள்ளும் 84 புதிர் விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 22/7/2015. […]

Read more

எங்கதெ

எங்கதெ, இமையம், க்ரியா, சென்னை, விலை 110ரூ. சாவுற வெளையாட்டு ஆண் பெண் உறவுகளில் இருக்கும் சிக்கல்களை உரத்துப் பேசும் பல கதைகள் தமிழில் வந்துள்ளன. அவற்றில் சிறந்த கதைகளின் வரிசையில் முன்னணியில் வைக்க வேண்டியவற்றில் ஒன்று இமையம் எழுதியிருக்கும் எங் கதெ. இந்த நெடுங்கதையில் திருமணமாகி கணவனை இழந்த ஒரு பெண் மீது ஒருவன் கொண்ட காதல், அந்த ஆணின் பார்வையில் அவனது மொழியில் விவரிக்கப்படுகிறது. இந்த வெளையாட்டுக்கு நானாத்தான் போனேன். அவ கூப்பிடல, அவ இந்த வெளையாட்டுக்கு வல்லன்னுதா சொன்னா. வெளையாட்டுல […]

Read more

ஒரு கதை ஒரு விதை

ஒரு கதை ஒரு விதை, ராம்குமார் சிங்காரம், குமுதம் புத்தகம், பக். 112, விலை 90ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024748.html பொதுவாக 20 பக்கங்கள் எழுதி, அதன் மூலம் புரிய வைக்கக்கூடிய ஒரு கருத்தை, இரண்டே பக்கங்களில் மிக அழகாகப் புரிய வைக்க கதைகள் உதவும். அதைத்தான் நூலாசிரியர் இந்தப் புத்தகத்தில் செய்துள்ளார். கல்கண்டு வார இதழில் தொடராக வெளிவந்து, தற்போது குமுதம் பு(து)த்தகத்தால் நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. முல்லா நஸ்ருதீன் கதை, தெனாலிராமன் கதை, பீர்பால் கதை என, […]

Read more

சாதேவி

சாதேவி, ஹரன் பிரசன்னா, மயிலை முத்துக்கள், சென்னை, விலை 300ரூ. விரியும் அக உலகம்! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023779.html ஹரன் பிரசன்னா எழுதிய 34 சிறுகதைகள் தொகுக்கப்பட்டு சாதேவி என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளன. பெரும்பாலும் சமூகத்தில் வலுவிழந்த மாந்தர்களைப் பற்றியே இக்கதைகள் பேசுகின்றன. மனித உறவுகளின் நுட்பமான இயங்கியலை பதிவு செய்கின்றன. வயதான அம்மாக்கள், குடும்பபாரம் சுமக்கும் மாமிகள், வீட்டு வேலை செய்யும் மாமாக்கள், கணவனை இழந்த விதவைகள், மாற்றுத் திறனாளிப் பெண், மரணத்துக்குப் பிந்தைய குடும்ப […]

Read more

கடல் கிணறு

கடல் கிணறு (சிறுகதைகள்), ரவிக்குமார், மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 79, விலை 60ரூ. கேள்விகளை எழுப்பும் கதைகள் அடக்குமுறையின் மாமிசத்தைப் பிய்த்துத் துப்பும் கதைகள்: வாசிப்பதோடு விவாதிக்கவும் வேண்டியவை. நிர்ப்பந்தங்களுக்கு அப்பால் வாழ்வை அதன் மங்கலான பிம்பங்களில் இருந்து பதிவு செய்வதாய் எழுதப்பட்டிருக்கும் ஒன்பது கதைகளைக் கொண்டிருக்கும் ரவிக்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பான கடல் கிணறு இந்தக் காலகட்டத்தில் வாசிப்பதோடு விவாதிக்கப்படவும் வேண்டிய புத்தகம். மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், கவிதைகள் என வெவ்வேறு தளங்களில் முக்கியமான ஆக்கங்களைத் தந்துள்ள ரவிக்குமாரின் இந்த கதைகள் பெரும்பாலும் […]

Read more

முக்கோணக் கிளிகள்

முக்கோணக் கிளிகள், சி.ஜெயபாரதன்(கனடா), தாரிணி பதிப்பகம், சென்னை, பக். 92, விலை 75ரூ. முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணலாக இருக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இம்முக்கோணக் காதல் கதை படக் கதையாக நூல் வடிவம் பெற்றுள்ளது. கனடா எழுத்தாளர் சி. ஜெயபாரதன், சிவா-சித்ரா-அவள் தாய் புனிதா ஆகியோரின் முக்கோணக் காதலில் ஜெயிப்பது யார்? என்ன காரணம்? அது சரியா? என்பதை சுவைபட எழுதியுள்ளார். ஓவியர் தமிழின் ஓவியங்கள் கதைக்கு உயிரூட்டுகின்றன. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/6/2015.   —- மனஅலசல், க. செல்லப் […]

Read more

எட்டு கதைகள்

எட்டு கதைகள், இராஜேந்திர சோழன், வம்சி புக்ஸ், விலை 100ரூ. சிறந்த சிறுகதைகள் சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை, மேலை நாடுகளிலிருந்துதான் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழில் சுவீகரித்தோம். புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா. போன்ற சாதனையாளர்களின் பங்களிப்பால் தமிழ்ச் சிறுகதை தொடக்க நிலையிலேயே உயிர்ப்பையும் வளத்தையும் நுட்பங்ககளையும் பெற்றுவிட்டது. தமிழின் வளமான சிறுகதை மரபின் தொடர்ச்சியாக, இரோஜந்திர சோழன் எழுதி,  எண்பதுகளில் வெளியான எட்டு கதைகள் சிறுகதைத் தொகுப்பு பேசப்பட்டது. மனிதனின் கோணல்களையும் பிறழ்களையும் நுட்பமாகப் பேசிய அசலான சிறுகதைக்காரர் இராஜேந்திர சோழன். வடக்குத் […]

Read more
1 42 43 44 45 46 80