தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்

தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ.800- 1500), நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட், பக்.84, விலை ரூ.70. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நொபொரு கராஷிமா ஒரு கல்வெட்டியியலாளர்; சமூக வரலாற்று ஆய்வாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்தவர். எ.சுப்பராயலு சமூக வரலாற்று ஆய்வாளர். இவர்களிருவரும் தமிழகத்தில் சோழர் காலத்தில் (பொ.ஆ. 800 -1500) நிகழ்ந்த சமூக மாற்றங்களை ஆய்வு செய்து கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.‘ ‘தமிழ்நாட்டில் தீண்டாதார்‘, ‘புதிய ஓம்படைக்கிளவிகளின் எழுகையும் சாதி உருவாக்கமும்‘ என்ற நொபொரு கராஷிமாவின் […]

Read more

மனிதன் – புரியாத புதிர்

மனிதன் – புரியாத புதிர்,  அலெக்சிஸ் காரெலின், தமிழில்: அ.நடராசன், முல்லை பதிப்பகம், பக்.416, விலை ரூ.250. மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும், சிந்தனைக்கும் காரணமாக அவனுடைய உடல் இயங்கும் தன்மைகளும் உள்ளன என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல். பிரான்சைச் சேர்ந்த மருத்துவர் அலெக்சிஸ் காரெலின் தனது மருத்துவ அறிவின் துணை கொண்டு மனிதனின் உணர்வுகள் மனிதனின் உடலை எவ்விதம் பாதிக்கின்றன என்று ஆராய்கிறார். மனிதனின் இன்றைய வாழ்க்கைமுறை அவனுடைய உடலையும் சிந்தனைகளையும் செயல்களையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் விளக்குகிறார். நவீன தொழில்துறை மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்திருந்தாலும் […]

Read more

கையா உலகே ஒரு உயிர்

கையா உலகே ஒரு உயிர், ஜேம்ஸ் லவ்வாக், தமிழில் சா.சுரேஷ், பாரதி புத்தகாலயம், விலை 160ரூ. இன்றைக்கு அனைத்து நாட்டுத் தலைவர்களும் விவாதிக்கும் பொருளாக புவி வெப்பமயமாதல் மாறியுள்ளது. இந்தப் பூவுலகு ஒற்றை உயிர் போலவே இயங்குகிறது என்கிற கோட்பாட்டை முன்மொழிந்து அதைப் பரவலாக ஏற்கச் செய்தவர்களில் முக்கியமானவர், இந்நூலின் ஆசிரியர். பருவநிலை மாற்றத்தை மாறுபட்ட கோணத்தில் புரிந்துகொள்ள உதவும் இன்னுமொரு புத்தகம் இது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

உயிரி வளமும் காலநிலை மாற்றமும்

உயிரி வளமும் காலநிலை மாற்றமும், கு.வி.கிருஷ்ணமூர்த்தி, உலகத் தமிழ் பண்பாட்டு மையம், விலை 200ரூ. பல்லுயிர் வாழும் பூமியில், இயற்கையின் கொடையைத் தற்காத்துக் கொள்வதே உத்தமம். பல மாற்றங்களுக்கும், சீற்றங்களுக்கும் புவி வெப்பமடைதலே மையக் காரணமாக உள்ளது. புவி வெப்பமடைவதற்கு மனிதச் செயல்பாடுகளே முதன்மைக் காரணமாக உள்ளது. பருவநிலை மாற்றத்தால் சூழலியலில் ஏற்படும் தாக்கம் பற்றி விரிவாகப் பேசுகிறது இந்த நூல். நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு

தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு, சு.சீனிவாசன், தமிழ்ப் பல்கலைக்கழகம், பக். 264, விலை 250ரூ. தமிழ் மொழியின் கட்டமைப்பு – பண்பு உறவுகளை ஆய்வு செய்தல்: ஒரு தகவல் கோட்பாடு அணுகு முறை என்னும் முனைவர் பட்ட ஆய்வேடு, 17 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் வளர்ச்சித் துறையின் வெளியீட்டு நுாலாக வந்துள்ளது. பேராசிரியர் ராம.சுந்தரம் நெறியாளராக இருந்து வழிகாட்டிஉள்ளார்.கணித அறிவியல் அடிப்படையில் தமிழ் மொழியை நுட்பமாகவும், கட்டமைப்பு நோக்கிலும் ஆய்வு செய்துள்ளார். தமிழின் எழுத்துகள், அதன் வரி வடிவங்கள், ஒலி […]

Read more

மூதாய் மரம்

மூதாய் மரம், வறீதையா கான்ஸ்தந்தின், தடாகம் வெளியீடு, விலை 80ரூ. கடல் பழங்குடி வாழ்வின் அடிப்பதைத் தகுதி விழிப்புநிலை. ஒரு பழங்குடி மனிதன் வேட்டைக் களத்தில் தன் முழு உடலையும் புலன்களாக்கிக் கொள்கிறான். களத்தில் தன்னை தற்காத்துக்கொண்டு சிறந்த வேட்டைப் பெறுமதிகளுடன் குடிலுக்குத் திரும்புகிறான். கடலைப் பொழுதுகளின், காட்சிகளின், ஒலிகளின், வாசனைகளின் வரைபடமாய்க் காணக் கற்றுக்கொண்டிருக்கிறான். இறுதி மூச்சு வரை கடலின் மாணவனாக வாழ்கிறான். விழிப்புநிலை தவறவிட்டால் பழங்குடி வாழ்வு பொருளற்றுப் போய்விடுகிறது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

பனை மரமே பனை மரமே

பனை மரமே பனை மரமே, ஆ.சிவசுப்பிரமணியன், காலச்சுவடு பதிப்பகம், விலை 425ரூ. தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மரம் பனை. இம்மரத்தை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழி வழக்காறுகளையும் எழுத்துப் பதிவுகளையும் இந்நூல் கொண்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முந்தைய காலத்தைய தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் தொடங்கி இடைக்கால கல்வெட்டுகள் வரை, தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொடங்கி – வாய்மொழி இலக்கியம் – நவீன இலக்கியம் வரை என பல அரிய தரவுகளின் துணையுடன் இந்நூல் உருவாகியுள்ளது. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

தமிழ்ச்சிப்பி

தமிழ்ச்சிப்பி, முனைவர் இரா.சம்பத், ஜெ.கலைவாணி, ஆர்.அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகம், விலை 500ரூ. “ஆர்” அனைத்திந்திய ஆராய்ச்சிக்கழகம் நடத்திய 13வது பன்னாட்டுக் கருத்தரங்கில் பல தமிழறிஞர்கள் பங்கு கொண்டு, இலக்கியத்தை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து கட்டுரைகளை சமர்ப்பித்தனர். அந்த கட்டுரைகளின் தொகுப்பு நூல். சிறந்த இலக்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 3/1/2018.

Read more

நல்லதங்காள் கதைப்பாடல் – பதிப்பும் ஆய்வும்

நல்லதங்காள் கதைப்பாடல் – பதிப்பும் ஆய்வும்,  ஓ.பாலகிருஷ்ணன், அய்யா நிலையம்,  பக். 136, விலை ரூ.130. சாதாரண மக்களின் வாழ்க்கை, பண்பாடு, பழக்க, வழக்கங்கள் நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பிரதிபலிப்பவை நாட்டுப்புற இலக்கியங்கள். மன்னரின் மகளாக, மன்னரின் மனைவியாக இருந்த நல்லதங்காளின் வாழ்க்கைக் கதை என்றாலும், சாதாரண மக்களின் வாழ்க்கையையே நல்லதங்காள் கதைப்பாடல் சொல்கிறது. தொடர்ந்து 12 ஆண்டுகள் மழை பெய்யாததால், பஞ்சம் ஏற்பட்டு, இருக்கும் பொருட்களை எல்லாம் விற்றுத் தின்று, இனி கூலி வேலை செய்தாவது பிழைப்போம் என்றநிலை மன்னர் குடும்பத்துக்கு வர வாய்ப்பில்லை. தனது […]

Read more

குமரி நாட்டில் சமணம் தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி

குமரி நாட்டில் சமணம் – தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி, சிவ.விவேகானந்தன், காவ்யா, பக்.615, விலைரூ.650. தமிழகத்தின் பழங்கால சமயங்களில் சமணமும் ஒன்று. சமண சமயத்தைச் சேர்ந்த அகத்திய முனிவர் பதினெண்குடி வேளிர், அருவாளர்களோடு தென்னகத்திற்கு வந்து, காடுகளை அழித்து நாடுகளாக்கி மக்களைக் குடியேற்றினார் என்பதும், வடக்கிலிருந்து பத்திரபாகு என்ற சமண முனிவர் மைசூர் நாட்டில் உள்ள சிரவணபௌகெள குகையில் தங்கி, அவருடைய சீடரான விசாக முனிவரை சமண மதத்தைப் பரப்புவதற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பதும் சமண மதம் வடக்கிலிருந்து தமிழகத்துக்கு வந்தது என்பதையே சொல்கின்றன. […]

Read more
1 22 23 24 25 26 84