மார்க்சின் மூலதனம் ஒரு பொறியாளனின் இன்றைய பார்வையில்

மார்க்சின் மூலதனம் ஒரு பொறியாளனின் இன்றைய பார்வையில், ப. பார்த்திபன், வாசகன் பதிப்பகம், பக். 224, விலை 150ரூ. சாதாரண மனிதனும் தன்னுடைய பொருளாதார அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் நூல். மார்க்சின் மூலதனத்தை இன்றைய வாழ்வியலோடு பொருத்திப் பார்த்து நம்மை தெளிவுபடுத்தும் நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 7/9/2016.

Read more

மக்கள் தகவல் தொடர்பியல்

மக்கள் தகவல் தொடர்பியல், பேராசிரியர் ராஜா வரதராஜா, மு. வரதராஜன், ஆரா பதிப்பகம், விலை 150ரூ. 1450-ம் ஆண்டு அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இதழ்கள் வாயிலாக தகவல் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. இதழியலின் தோற்றம், வளர்ச்சி குறித்து இந்த நூல் விவரிக்கிறது. உலக அளவில் முதலில் தோன்றிய நூல், இந்தியாவில் முதல் அச்சகம், முதலில் தோன்றிய நூல் மற்றும் தமிழில் முதன் முதலில் அச்சான நூல் என்பது தொடங்கி அனைத்து தகவல்களையும் இந்த நூல் தன்னகத்தே கொண்டுள்ளது. இதழ்களோடு நின்று விடாமல் வானொலி, […]

Read more

தமிழ் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு

தமிழ் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு, தொகுப்பாசிரியர் ரவி. வைத்தீஸ்வரன், ரா. ஸ்தனிஸ்லால், மேன்மை வெளியீடு, பக். 336, விலை 250ரூ. சமய ஆய்வின் பயிற்சிக் கையேடு! இந்திய சமூக வரலாற்றில் சமயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், சமயம், ஜாதி ஆகியவற்றைக் குறித்த பாடத்துறையோ, ஆய்வுக் கழகமோ தமிழகம் மட்டுமல்ல இந்தியக் கல்விச் சூழலில் இல்லை. இதனால், சமூகவியல் ஆய்வில் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்ப, இந்தியா – இலங்கை – கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் […]

Read more

கந்தர்வன் காலடித் தடங்கள்

கந்தர்வன் காலடித் தடங்கள், புலவர் வை. சங்கரலிங்கம், ஏ.ஆர். பப்ளிகேஷன்ஸ், விலை 140ரூ. மானுடம் பாடிய கவிஞர்! கவிஞர் என்று மட்டுமே பரவலாக அறியப்பட்ட கந்தர்வன் சம அளவில் சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். ஒரு கதையை எழுதி முடித்ததும் அதைத் தன் மனைவி, மகள்கள், மருமகன்கள் என்று அனைவரிடம் படிக்கத் தந்து விமர்சனம் பெற்ற பிறகே பத்திரிக்கைக்கு அனுப்புவாராம். எத்தனை பேருக்கு இத்தகைய மனவளமும் நம்பிக்கையும் வாய்க்கும்? ‘மண் பொய் பேசுவதில்லை.மிதிக்கிறோம், மரங்கள் பொய் பேசுவதில்லை.வெட்டுகிறோம், மந்திரி பொய் பேசுகிறார். மாலை போடுகிறோம்’ என்று பாடுவார். […]

Read more

கொங்கு நாட்டுப்புற இசைக்கருவிகள்

கொங்கு நாட்டுப்புற இசைக்கருவிகள், முனைவர் பெ. சுப்பிரமணியன், ராம்குமார் பதிப்பகம், விலை 300ரூ. முனைவர் பெ. சுப்பிரமணியன், அருள்மிகு பழனியாண்டவர் கலை, பண்பாட்டுக் கல்லூரித் தமிழ்த் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நாட்டுப்புறவியலில் நாட்டமும் மானிடவியலில் நேசமும் கொண்டவர். இந்நூல் கொங்கு நாட்டுப்புறங்களில் புழக்கத்தில் உள்ள இசைக் கருவிகளைப் பற்றியது. பானைத்தாளத்துடன் தொம்மாங்கும், உடுக்கை ஒலியுடன் கதைப்பாட்டுகளும், கொம்பும் மொடா மேளமும் முழங்கும் விழாக்களும் கொங்கு நாட்டில் பிரபலம். பம்மை, உறுமி, திடும், நகார், தப்பு, பேரிகை, நாகசுரம், சங்கு, சத்தக்குழல், […]

Read more

தொல்தமிழியச் சிந்து நாகரிகம்

தொல்தமிழியச் சிந்து நாகரிகம், பி. இராமநாதன், தமிழ்மண், விலை 125ரூ, 90ரூ. தொல்தமிழியச் சிந்து நாகரிகமும் பன்னாட்டு அறிஞர்கள் பார்வையில் தமிழும் தமிழரும் இவ்விரு நூல்களும் ‘தமிழ்மண்’ணில் விளைந்தவை. இவ்விரண்டும் முறையே 2012 இலும், 2014இலும் வெளிவந்தவை. பி. இராமநாதன் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் வழிநிலை ஆய்வறிஞர். வரலாற்றுத் துறையிலும் ஆழங்கால்பட்டவர். தமிழிய ஆய்வுப் புலங்கள் பலவற்றிலும் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருபவர். எக்கருத்தையும் உரிய ஆதாரங்களுடன் நடுவுநிலையில் அறிவுலகத்தின் முன்வைப்பவர். மாந்த இனத்தின் தொல் வரலாறு – சிந்து […]

Read more

மீண்டும் ஆசிரியரைத் தேடி

மீண்டும் ஆசிரியரைத் தேடி, த. தங்கவேல், சமூக இயங்கியல் ஆய்வு மையம், விலை 240ரூ. ஆசிரியர் வருகை : ஒரு விவாதம் ஆசிரியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? வந்தார்களா, சென்றார்களா? என்ற விவாதம் பல காலமாக நடக்கிறது. அந்த விவாதத்தின் கேள்விகளையும் பதில்களையும் நம்முன் வைத்து விவாதிக்கும் நூல். பல நாடுகளில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் முதலாக மனிதர்களின் மரபணு ஆய்வுகள் வரை பலதரப்பட்ட ஆராய்ச்சிகளைத் தொகுத்து விவாதிக்கிறது இந்த நூல். விருப்பு வெறுப்பில்லாத வாதம், தமிழகத்தில் அரசியலாக்கப்பட்டுள்ள ஒரு கருத்தை அறிவியல் […]

Read more

திருவாசக ஆய்வுரைக் களஞ்சியம்

திருவாசக ஆய்வுரைக் களஞ்சியம் -(51 பகுதிகள்- 51 ஆய்வுரைகள்) , பதிப்பாசிரியர்கள் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், குன்றக்குடி பெரியபெருமாள், தா.மணி, திலகவதியார் திருவருள் ஆதீனம், பக்.256. விலை ரூ.100. 2002ஆம் ஆண்டில் கோட்டை- 1; முதல் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூல், தற்போது இரண்டாவது(2016) பதிப்பு கண்டிருக்கிறது. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் உள்ள 51 பதிகங்களுக்கும், 51 சமயத் தமிழறிஞர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு. தவத்திரு ஊரன் அடிகள், சாந்தலிங்க இராமசாமி அடிகளார், வை.இரத்தினசபாபதி, தமிழண்ணல், கலைமாமணி விக்கிரமன், ச.வே.சுப்பிரமணியன், அய்க்கண், கு.வெ. பாலசுப்பிரமணியன், […]

Read more

தமிழர் சமூக வாழ்வு

தமிழர் சமூக வாழ்வு, இர. ஆலாலசுந்தரம், தமிழில் ம. இளங்கோவன், பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 260ரூ. தமிழர்களின் மூத்த குடிகள் – மூதாதையர் பற்றிய அடையாளங்களை இந்த நூல் வாயிலாக அறிந்து கொள்ளும் வகையில் பல அறிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- 1000 செய்திகள், முக்தா சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், விலை 100ரூ. பட அதிபர் “முக்தா” சீனிவாசன், 1000 செய்திகளை (தகவல்கள்) தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டு, ஏற்கனவே முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார். 2-வது, 3-வது , […]

Read more

சங்க இலக்கிய ஐயங்களும் தெளிவுகளும்

சங்க இலக்கிய ஐயங்களும் தெளிவுகளும், முனைவர் வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், பக். 112, விலை 110ரூ. மன்னரிடமோ, வள்ளல்களிலிடமோ பரிசில் பெற்ற கூத்தர், பாணர், பொருநர், விறலியர் முதலான இரவலர்கள் தம்மைப்போன்ற இரவலர் பசியாலும், வறுமையாலும் துன்புற்ற நிலையில் வழியில் எதிர்ப்படும்போது, தான் பரிசிலாகப்பெற்ற பெருவளத்தைக் கூறி அவர்களையும் அப்புரவலரிடத்துச் சென்று பரிசில் பெறுமாறு வழிகாட்டுதலே ஆற்றுப்படை இலக்கணம். ஆற்றுப்படுத்தப் பெற்றவர் பெயராலேயே ஆற்றுப்படை இலக்கியங்கள் எல்லாம் அமைந்திருக்க, திருமுருகாற்றுப்படை மட்டும் பாட்டுடைத் தலைவன் முருகன் பெயரால் அமைந்தமை ஏன்? இவ்வினா […]

Read more
1 32 33 34 35 36 84