கீரைக்களூர் ஆதித்தேஸ்வரர் திருக்கோவில்

கீரைக்களூர் ஆதித்தேஸ்வரர் திருக்கோவில், சீ. வசந்தி, கோ. சசிகலா, ஹெரிடேஷ் டிரஷர் வெளியீடு, விலை 65ரூ. சோழர் கலைக்கோவில்கள் என்ற வரிசையில் திருச்சென்னம் பூண்டி சடையார்கோவில், கீரைக்களூர் ஆதித்தேஸ்வரர் திருக்கோவில் ஆகியவை பற்றி தொல்லியல் ஆய்வாளர்களான சீ. வசந்தி, கோ. சசிகலா ஆகியோர் இணைந்து இரு புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். ஆசிரியர்கள் இருவரும் தொல்லியல் ஆய்வாளர்கள் என்பதால் இந்த கோவில்களின் சிறப்பை வரலாற்று ஆதாரங்களுடனும் அபூர்வ படங்களுடனும் தந்து இருப்பதால் வரலாற்றை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இவை பெரிதும் துணையாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 11/5/2016. […]

Read more

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம், இந்திரா சவுந்தர்ராஜன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 272, விலை 150ரூ. அபிமன்யு பெயர்க்காரணம் தெரியுமா? மகாபாரதம் மாபெரும் கடல். வியாசர், விநாயகருக்கப் பிறகு அதில் மூழ்கி முத்தெடுத்து மாலையாகக் கோர்த்தவர்கள் அநேகம் பேர். அதில் இந்திரா சவுந்தர்ராஜனும் ஒருவர். தான் கண்டெடுத்த முத்துக்களை அழகான மாலையாக கோர்த்திருக்கிறார், இந்த நூல் வழியாக. மலர்கள் தனித்தனியாக இருப்பது அழகுதான். அதே மலர்களை மாலையாக தொடுத்தால் இன்னும் கூடுதல் அழகு பெறுகிறது அல்லவா! அப்படி ‘தினமலர்’ ஆன்மிக […]

Read more

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம், ஆர். பாலகிருஷ்ணன், பாரதி புத்தகாலயம், பக். 178, விலை 150ரூ. திராவிடர்களின் பூர்வீகம் சிந்துசமவெளி! நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு, தான் சேகரித்த தரவுகளைக் கொண்டு, அறிவியல்பூர்வ ஆய்வு முறையை கைக்கொண்டு, சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளத்தை இந்த நூலில் நிறுவ முயன்றுள்ளார், நுாலாசிரியர். இந்திய ஆட்சிப் பணியின் (ஐ.ஏ.எஸ்.,) மூத்த அலுவலரான இவர், தன் கடும் அலுவல்களுக்கிடையில் கடந்த, 25 ஆண்டு கால உழைப்பில் கண்ட உண்மைகளை நுாலாக்கி தந்துள்ளார். இவரது ‘மாற்றி யோசிக்கும்’ ஆய்வுமுறை, சிந்துவெளி பண்பாடு […]

Read more

உங்களில் ஒருவன்

உங்களில் ஒருவன், மாமணி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128, விலை 60ரூ. வறுமையில் வென்று, முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு தூண்டுதலாய் இருக்கும் தன் வரலாற்று நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 27/4/16.   —- முதல் மனித வெடிகுண்டு: பி. சந்திரசேகரன், தமிழில் ராஜசியாமளா, குமுதம் பு(து)த்தகம், பக். 272, விலை 580ரூ. பெண் ஒருத்தி மனித வெடிகுண்டாக மாறி உலகத் தலைவர்களில் ஒருவரான ராஜீவ்காந்தியைக் கொலை செய்த பின்னணியை அலசி ஆராய்ந்து உண்மையை உலகுக்கு உணர்த்திய முதல் நூல். இந்த வழக்கில் தடயவியல் […]

Read more

குமரி மாவட்டத் தமிழ் வழக்கு

குமரி மாவட்டத் தமிழ் வழக்கு, ச. சுஜாதா, சேகர் பதிப்பகம், பக். 240, விலை 180ரூ. நூலின் முன்னுரை, குமரி மாவட்டத்தின் பூகோளம், வரலாறு, நாடார் மக்கள் சமூக வரலாறு, மொழியின் இயல்பு போன்றவற்றை விளக்குவதாகவும், ஆய்வு அடிப்படையை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. ‘கன்னியாகுமரி மாவட்ட மொழிச்சூழல்’ என்னும் தலைப்பில் அங்கு வழங்கும் தமிழ், மலையாளம், சில பழங்குடி மக்கள் பேசும் மொழிகள் போன்றவற்றின் மொழி இயல்புகள் விளக்கப்படுகின்றன. ஹசிறிஸ்தவ நாடார் வட்டார வழக்கின் இயல்புகள்’ என்னும் தலைப்பில், மொழி இயல்புகள், இரட்டை வழக்கு, வட்டார […]

Read more

பேராசிரியர் ந. சஞ்சீவியின் இலக்கிய நூல்

பேராசிரியர் ந. சஞ்சீவியின் இலக்கிய நூல், ந.சஞ்சீவி, காவ்யா, விலை 1500ரூ. மொழி என்பது வெறும் சப்தங்களும், அர்த்தங்களும் அல்ல. புள்ளிகளும் கோடுகளும் அல்ல, இது ஓர் இனத்தின், அதன் பண்பாட்டின், அதன் வாழ்வியல் நெறியின் ஆணிவேர். அறிவுச் சேகரம், அறச்சின்னம். பேராசிரியர் ந. சஞ்சீவி, கணினி இல்லாத காலக்கட்டத்திலேயே, மடிக்கணினியாக வாழ்ந்தவர். எதையும் தொகுத்து, பகுத்தும், வகுத்தும் பார்ப்பது அவரது வழக்கம். தமிழ் ஆய்வுக்கு ஓயாது உழைத்தவர். அவர் எழுதிய “செவ்வியல் இலக்கிய அடை” என்ற இந்த நூல், அவரது சிறந்த ஆராய்ச்சிக்கு […]

Read more

சிங்கப்பூரில் மக்கள் தொடர்பு சாதனங்கள்

சிங்கப்பூரில் மக்கள் தொடர்பு சாதனங்கள், முனைவர் சீதாலட்சுமி, காவ்யா, விலை 500ரூ. தமிழ் மொழி இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு தமிழ் இலக்கிய வளர்ச்சி எனும்போது, இலக்கியத்தை நுகர்தல், இலக்கியத்தைப் படைத்தல், இலக்கியத்தை ஆய்தல் என்ற நிலைகளில் மக்களிடையே இலக்கியத்தை நிலைபெறச் செய்வதில் மக்கள் தொடர்புச் சாதனங்கள் அற்றிய பங்கு குறித்து இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தமிழ் நாளிதழ், வானொலி ஆகிய இரண்டுடன் ஒப்பிடும்போது தொலைக்காட்சி இலக்கிய வளர்ச்சியில் சற்றுக் குறைவாகவே தனது பங்கை ஆற்றியுள்ளது என்பதை அறிய முடிகிறது. சிங்கப்பூரில் 25 ஆண்டுகள் […]

Read more

வழிகாட்டும் வள்ளுவம்

வழிகாட்டும் வள்ளுவம், வானதி பதிப்பகம், விலை 170ரூ. திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும் புதுப்புது தகவல்களைக் கூறும் அரிய நூல் இது. பேராசிரியர் இரா. மோகன், அவர் மனைவி பேராசிரியர் நிர்மலா மோகன் இருவரும் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளனர். திருக்குறளுக்கு அறிஞர் – பெருமக்கள் எழுதிய உரைகளை ஆராய்ந்து, நாமக்கல் கவிஞர் சில குறள் பாக்களுக்கு எழுதியுள்ள நுட்பமான உரையை சுட்டிக்காட்டுகிறார்கள். திருவள்ளுவருக்கும், சீன அறிஞர் கன்பூசியசுக்கும் (கி.மு.551 – கி.மு.479) உள்ள ஒற்றுமைகள் பற்றியும் எடுத்துக் கூறுகிறார்கள். சுருக்கமாகக் கூறினால், திருவள்ளுவர் […]

Read more

சங்க காலத்து தமிழ் நாணயங்கள்

சங்க காலத்து தமிழ் நாணயங்கள், இரா. கிருஷ்ணமூர்த்தி, விலை 400ரூ. ‘தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள சங்ககால தமிழ் நாணயங்கள் மற்றும் பழங்கால வெளிநாட்டு நாணயங்கள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆங்கிலநூலை, நாணவியல் ஆராய்ச்சியில் முத்திரை பதித்துள்ள தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ணமூர்த்தி எழுதி உள்ளார். இந்த நூலை படித்தால் பழங்கால நாணயங்கள் மட்டும் அல்லாமல் பண்டைய காலங்களிலும் நாணய புழக்கத்தை கையாண்டு உள்ள தமிழர்களின் பெருமையை நன்கு அறிய முடிகிறது. அபூர்வமான நாணயங்களின் படங்களும் இடம் பெற்றிருப்பது நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. ஆராய்ச்சியாளர்கள் […]

Read more

ஆயிரம் கவிதைகள் மலரட்டும்

ஆயிரம் கவிதைகள் மலரட்டும், மு. முருகேஷ், மேன்னை வெளியீடு, பக். 180, விலை 120ரூ. சிற்றிதழாளர்கள், அவர்களின் கவிதைகள் ஆகியவற்றைப் பற்றி நூலாசிரியர் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு. நல்ல கவிஞர்களும் நல்ல கவிதைகளும் நாள்தோறும் பூக்க வேண்டும் என்பது நூலாசிரியர் விருப்பம். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —- ஷேக்ஸ்பியரின் சிந்தனைகள், டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வுமையம், பக். 196, விலை 70ரூ. நாடகங்களில் ஷேக்ஸ்பியர் வெளிப்படுத்தும் சிந்தனைகளை மட்டும் தனியாக தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். இதனை கற்பவர்கள் […]

Read more
1 35 36 37 38 39 84